என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்பேத்கர்"

    • தூய்மை பணியாளர்கள் என்பதை விட தூய்மை உள்ளம் கொண்ட பணியாளர்கள் என கூற வேண்டும்.
    • மத பிரிவினை, சாதி பிரிவினை எண்ணங்கள் பெரியார் மண்ணில் ஒரு போதும் ஈடேறாது.

    சென்னை:

    சென்னை எழும்பூரில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்கீழ் 128 பயனாளிகளுக்கு கடனுதவிக்கான ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * தூய்மை பணியாளர்கள் என்பதை விட தூய்மை உள்ளம் கொண்ட பணியாளர்கள் என கூற வேண்டும்.

    * களப்பணியில் அரசுக்கு நல்ல பெயர் கிடைக்க முழு முதல் காரணம் தூய்மை பணியாளர்கள் தான்.

    * தூய்மை பணியாளர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.

    * மத பிரிவினை, சாதி பிரிவினை எண்ணங்கள் பெரியார் மண்ணில் ஒரு போதும் ஈடேறாது.

    * இதுதான் பெரியார் மண்ணா? இதுதான் அம்பேத்கர் மண்ணா என்று கேள்வி எழுப்புகின்றனர்.

    * சாதி, மதமற்ற சமத்துவ சமூகத்தை படைப்பதுதான் திமுகவின் இலக்கு என்று அவர் கூறினார்.

    • சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், அண்ணல் அம்பேத்கர் அவர்களது நினைவு தினம் இன்று.
    • சகோதரத்துவம் காப்போம். ஜெய் பீம்!

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இந்திய அரசியல் அமைப்பின் தலைமைச் சிற்பி, சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், அண்ணல் அம்பேத்கர் அவர்களது நினைவு தினம் இன்று.

    நாட்டின் மிகப்பெரும் சமூக சீர்திருத்தவாதியான அண்ணல் அம்பேத்கர் அவர்களது சமத்துவ நோக்கங்கள் அனைத்தும் நிறைவேற உழைப்போம். சகோதரத்துவம் காப்போம். ஜெய் பீம்! என்று தெரிவித்துள்ளார்.

    • தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு வித்திட்ட செம்மல்.
    • எல்லோர்க்கும் சம உரிமைகளை பெற்று தந்திட்ட புரட்சியாளர்.

    அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இந்தியாவின் மாண்பிற்குரிய அரசியலமைப்பு சாசனத்தின் தந்தை, தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு வித்திட்ட செம்மல், எல்லோர்க்கும் சம உரிமைகளை பெற்று தந்திட்ட புரட்சியாளர், அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் நினைவுநாளில் அவர்தம் தியாகத்தை நினைவுகூறி போற்றி வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அம்பேத்கரின் புகழை பாடுவதில் இரும்பாக நின்று உறுதியாக இருக்க வேண்டாமா?
    • முதலமைச்சருக்கு பயந்துதான் திருமாவளவன் அம்பேத்கரை ஆராதிக்க மறுக்கிறார்.

    சென்னையில் இன்று நடைபெறும் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயுடன் பங்கேற்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

    இதுதொடர்பாக பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:

    * கருவியாக காய் நகர்த்தும் அளவிற்கு திருமாவளவன் பலவீனமானவராக இருக்கிறாரா?

    * அம்பேத்கரின் புகழை பாடுவதில் இரும்பாக நின்று உறுதியாக இருக்க வேண்டாமா?

    * அம்பேத்கரின் பெயரை வைத்து தன்னை காய் நகர்த்துகிறார்கள் என்றால் காய் நகர்த்தும் அளவிற்கு தான் பலவீனமாக இருக்கிறேன் என்று திருமாவளவன் சொல்கிறாரா?

    * இன்று திருமாவளவனின் அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய கரும்புள்ளி. அவர் அம்பேத்கரை சிறப்பு செய்கிறாரா? இல்லை கூட்டணியை சிறப்பு செய்கிறாரா?

    * நாம் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்று முதலமைச்சர் அவரை அனுப்பி வைத்திருக்க வேண்டும்.

    * எப்படி பிரதமர் மோடி ராஜ்நாத் சிங்கை அனுப்பி வைத்தாரோ அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமாவளவனை அனுப்பி வைத்திருக்க வேண்டும்.

    * முதலமைச்சருக்கு பயந்துதான் திருமாவளவன் அம்பேத்கரை ஆராதிக்க மறுக்கிறார்.

    * 2 பேரையுமே தவறிழைத்தவர்களாக தான் நான் பார்க்கிறேன் என்று கூறினார்.

    • த.வெ.க. தலைவர் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
    • புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும் நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    விழாவில் கலந்து கொள்ள முன்கூட்டியே அரங்கிற்கு வந்திருந்த த.வெ.க. தலைவர் விஜய், விழா அரங்கில் அமைக்கப்பட்டு இருந்த அம்பேத்கர் சிலையுடன் அமர்ந்து செல்பி எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    இதைத் தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டு இருந்த அம்பேத்கர் சிலைக்கு த.வெ.க. தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். 

    • எந்த சூழலில் அங்கு போய் படித்தார் என்பது தான் மிகப்பெரிய விஷயம்.
    • நம் நாட்டில் இருக்கும் எல்லாருக்கும் பெருமை தேடிக் கொடுத்தவர்.

    சென்னையில் நடைபெற்ற "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" நூல் வெளியீட்டு விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய் அத்தனை சக்திகளும் தடையாக இருந்த போது 100 ஆண்டுகளுக்கு முன்னரே நியூ யார்க் சென்று சாதித்தவர் அம்பேத்கர் என்று தெரிவித்தார். மேலும் எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன் என்று கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், "இன்னைக்கும் நிறைய பேரிடம் உங்களுக்கு பிடித்த சுற்றுலா இடம் எது என்றால் நியூ யார்க் என்று தான் கூறுவார்கள். ஆனால் நூறு ஆண்டுக்கு முன்பே நியூ யார்க் சென்று உலக புகழ் பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்து டாக்டர் பட்டம் பெற்று சாதித்த அசாத்தியமானவர் இருந்தார். அவர் எந்த சூழலில் அங்கு போய் படித்தார் என்பது தான் மிகப்பெரிய விஷயம்."

    "அன்றைக்கு அந்த மாணவரிடம், நீ இந்த சாதியில் பிறந்திருக்கிறாய் உனக்கெல்லாம் படிக்க தகுதியில்ல, நீயெல்லாம் ஏன் பள்ளிக்கூடம் வருகிறாய் என்று அவர் பிறந்த சமூகமே அவரை தடுத்தது. அதைமீறி பள்ளிக்கூடம் சென்றாலும் சக மாணவர்களோடு உட்கார்ந்து படிக்க அவருக்கு அனுமதியில்லை. தாகம் எடுத்தால் குடிக்க தண்ணீர் கூட இல்லை. அப்படி அத்தனை சக்திகள் அவருக்கு எதிராக இருந்தது."

    "ஆனால் ஒரே சக்தி மட்டும் தான் நீ தொடர்ந்து படி என்று கூறிக் கொண்டே இருந்தது. அது தான் அந்த மாணவருக்குள் இருந்த வைராக்கியம். எப்படி அந்த சின்ன வயதில் அந்த மாணவருக்கு அந்த வைராக்கியம் வந்தது என்பதை நினைத்து பிரம்மிப்பாக இருந்தது. அந்த வைராக்கியம் தான் அந்த மாணவரை பிற்காலத்தில் இந்த நாட்டின் மிகப்பெரிய ஆளுமையாக மாறுவதற்கும் காரணமாக இருந்தது."

    "எனக்கு தெரிந்து உலக வரலாற்றில் யாரும் இப்படியொரு மாற்றத்தை கண்டிருக்க மாட்டார்கள். அந்த மாணவர் வேறு யாருமில்லை, நம்முடைய அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தான். வன்மத்தை மட்டுமே காட்டிய இந்த சமூகத்திற்கு திரும்பி அவர் என்ன செய்தார் என்பதை படித்து பார்க்கும் போது, அது என்னை மெய்சிலிர்க்க வைத்தது."

    "பிறப்பால் நாம் அனைவரும் சமம், நீ எந்த சாதியில் பிறந்து இருந்தாலும், எந்த மதத்தை நீ பின்பற்றினாலும், சட்டத்தின் முன் நாம் அனைவரும் சமம் என்ற உயரிய கோட்பாட்டை உறுதி செய்யும் நம் அரசியல் சாசனத்தை வழங்கி நம் நாட்டில் இருக்கும் எல்லாருக்கும் பெருமை தேடிக் கொடுத்தவர்."

    "இன்னைக்கு வெளியாகும் "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" என்ற இந்த புத்தகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள், நேர்காணல்கள் எல்லாமே இருக்கிறது. அதில் என்னை மிகவும் யோசிக்க வைத்தது அவர் எழுதிய சுயசரிதை தான். அதற்கு தலைப்பு "வெயிடிங் ஃபார் ஏ விசா" என்று வைத்திருந்தார். அதில் அவர் வாழ்க்கையில் எதிர்கொண்ட விஷயங்கள், அவரை பாதித்த விஷயங்கள் என ஆறு சம்பவங்களை குறிப்பிட்டு இருந்தார். அதில் இரு விஷயங்கள் என்னை பாதித்தது," என்று தெரிவித்தார்.

    • எதையும் கண்டுக் கொள்ளாமல் ஒரு அரசு மேலிருந்து நம்மை ஆட்சி செய்கிறது.
    • அம்பேத்கர் அவர்கள் பார்த்தால் வெட்கப்பட்டு தலைகுனிந்து போவார்.

    சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய த.வெ.க. தலைவர் விஜய், சம்பிரதாயத்திற்காக மழைநீரில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்தார்.

    இது குறித்து பேசிய அவர், "இன்று மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவை எதையும் கண்டுக் கொள்ளாமல் ஒரு அரசு மேலிருந்து நம்மை ஆட்சி செய்கிறது. அங்கு தான் அரசு அப்படி இருக்கிறது என்றால், இங்கு இருக்கும் அரசு எப்படி இருக்கிறது?"

    "இங்க நம் வேங்கைவயல் என்ற ஊரில் என்ன நடந்தது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். சமூகநீதி பேசும் இங்குள்ள அரசு அதற்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இத்தனை வருடங்கள் கழித்தும் ஒரு துரும்பையும் கிள்ளி போடவில்லையே. இதையெல்லாம் இன்று அம்பேத்கர் அவர்கள் பார்த்தால் வெட்கப்பட்டு தலைகுனிந்து போவார்."

    "இன்று நடக்கும் பிரச்சினைகள், கொடுமைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும். ஆனால் நடக்கும் பிரச்சினைகள் ஒன்றா, இரண்டா? பெண் குழந்தைகளுக்கு எதிராக, பெண்களுக்கு எதிராக, ஏன் மனித உயிர்களுக்கு எதிராக. இதையெல்லாம் நாம் படிக்கிறோம், பார்த்து, மற்றவர்களிடம் இருந்து கேட்டு தெரிந்து கொள்கிறோம்."

    "இவை எல்லாவற்றுக்குமான தீர்வு என்ன தெரியுமா? நம் தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பாதுகாப்புடன், முறையாக, முழுமையாக அளிக்கும், மக்களை உண்மையாகவே நேசிக்கும் ஒரு நல்ல அரசு. இது அமைந்தாலே போதும், இதைத் தான் மிகவும் எளிமை என்று கூறினேன்."

    "இங்கு தினந்தோரும் நடக்கும் பிரச்சினைகளுக்கு சம்பிரதாயத்திற்காக ட்வீட் போடுவதும், சம்பிரதாயத்திற்காக அறிக்கை விடுவதும், சம்பிரதாயத்திற்காக நானும் மக்களோடு மக்களாக இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதும், சம்பிரதாயத்திற்காக மழை நீரில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதும் என்று எனக்கு அதில் கொஞ்சமும் உடன்பாடு இல்லை. ஆனால், நாமும் சில சமயங்களில் சம்பிரதாயத்திற்காக இதையெல்லாம் சில நேரங்களில் செய்ய வேண்டியதாகி விடுகிறது."

    "மக்கள் உரிமைகளுக்காகவும், அவர்களோடு உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டும். என்னை அவர்களின் குடும்பத்தில் ஒருத்தராக நினைக்கும் ஒவ்வொருத்தருக்கும், தமிழ்நாட்டில் அவர்களுக்கு எங்கு, என்ன பிரச்சினை நடந்தாலும் அவர்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் உணர்வுப்பூர்வமாக இருப்பேன்," என்று தெரிவித்தார்.

    • என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை.
    • எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடியும்.

    சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய த.வெ.க. தலைவர் விஜய், கூட்டணி கணக்குகளை 2026 ஆம் ஆண்டு மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள் என்று தெரிவித்தார்.

    இது குறித்து பேசிய அவர், "மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்களுக்கு அடிப்படை சமூகநீதியான பாதுகாப்பை கூட உறுதி செய்ய இயலாத கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை. நீங்க உங்கள் சுயநலத்திற்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் கூட்டணி கணக்குகள் அனைத்தும் 2026-ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்."

    "கடைசியாக ஒரு விஷயம். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவர்களால் இன்று வரமுடியாமல் ஆகிவிட்டது. அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவுக்கு கூட அவரால் கலந்துகொள்ள முடியாத அளவுக்கு அவருக்கு கூட்டணி கட்சிகள் சார்ந்து எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தாலும், நான் இப்போ சொல்கிறேன். அவரின் மனம் முழுமையாக இன்று நம்மோடு தான் இருக்கும்," என்று தெரிவித்தார். 

    • அழுத்தம் கொடுத்தால் இணங்கக்கூடிய அளவுக்கு நானோ, விசிகவோ பலவீனமாக இல்லை.
    • திமுகவுக்கு எதிராக ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என்றார்.

    திருச்சி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திருச்சிராப்பள்ளி விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    அப்போது, கூட்டணி அழுத்தம் காரணமாக அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவனால் கலந்துகொள்ள முடியவில்லை என த.வெ.க. தலைவர் விஜய் பேசியதற்கு மறுப்பு தெரிவித்தார்.

    எனக்கு எந்த அழுத்தமும் இல்லை.

    அழுத்தம் கொடுத்தால் இணங்கக்கூடிய அளவுக்கு நானோ, விசிகவோ பலவீனமாக இல்லை.

    அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு அவர் மட்டுமே பொறுப்பு. கட்சி பொறுப்பல்ல.

    திமுகவுக்கு எதிராக ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு அவரிடம் விளக்கம் கேட்கப்படும்.

    அவரது விளக்கத்தைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • கர்நாடகா என்றால் பசவண்ணா என்று சொல்லுவோம்.
    • மகாராஷ்டிரா என்றால் அம்பேத்கர், பூலே என்று சொல்லுவோம்.

    மக்களவையில் இன்று அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு பற்றி கேட்டால் நாங்கள் பெரியார் என்று சொல்லுவோம். கர்நாடகா என்றால் பசவண்ணா என்று சொல்லுவோம். மகாராஷ்டிரா என்றால் அம்பேத்கர், பூலே என்று சொல்லுவோம். குஜராத் என்றால் காந்தி என்று சொல்லுவோம். சமூக மாற்றங்களுக்கு வித்திட்டவர்களே தங்களுக்கு முன்மாதிரி" என்று தெரிவித்தார்.

    மேலும் பேசிய அவர், துரோணாச்சாரியார் எப்படி ஏகலைவனின் விரலை வெட்டினாரோ, அதேபோல நீங்களும் இந்த தேசத்தின் விரலை வெட்டிவிட்டீர்கள்.

    அதானிக்கு தாராவியை தாரைவார்த்து விட்டீர்கள். தாராவி பகுதியில் உள்ள சிறு வணிகர்களின் விரல்களை வெட்டி விட்டீர்கள். அக்னிவீர் திட்டத்தை கொண்டு வந்து இளைஞர்களின் விரல்களை துண்டித்து விட்டீர்கள்.

    நாட்டில் 70 முறை வினாத்தாள் கசிவுகள் நடைபெற்றுள்ளது. வினாத்தாள் கசிவின் மூலம் நாட்டில் உள்ள இளைஞர்களின் விரல்களை துண்டித்துவிட்டீர்கள்" என்று தெரிவித்தார்.

    • போராட்டங்களில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்ட்டனர்.
    • சூரியவனாக்ஷியின் குடும்பத்தினர் முதலில் மாவட்டத்துக்குள் நுழைய விடாமல் போலீசால் தடுக்கப்பட்டனர்.

    மகாராஷ்டிர மாநிலம் பர்பானி [Parbhani] நகரில் கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி ரெயில்வே நிலையத்துக்கு அருகே உள்ள அம்பேத்கர் சிலை முன்பாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அரசியலமைப்பு பிரதியை எரிதத்தை தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது.

     

    பகுஜன் அகாடி (VBA) கட்சியினர் உட்பட பலர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் டிசம்பர் 11 ஆம் தேதி இரவு கலவரத்தில் ஈடுபட்டு சொத்துகளை சேதப்படுத்தியதாக [vandalism] 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

     

    அவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 35 வயதான பகுஜன் அகாடி (VBA) தலித் செயல்பாட்டாளர் சோம்நாத் வெங்கட் சூர்யவன்ஷி என்பவரும் அடங்குவார். பர்பானி மாவட்ட மத்திய சிறைச்சாலையில் நீதிமன்றக் காவலில் அவர் சிறை வைக்கப்பட்டிருந்தார்.

    இந்நிலையில் கடந்த டிசம்பர் 15 [ஞாயிற்றுக்கிழமை] காலையில் அவர் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்தார். நெஞ்சுவலி காரணமாக சூர்யவன்ஷி உயிரிழந்ததாக போலீஸ் தெரிவித்தது. ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில் சூர்யவன்ஷியின் மரணம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மாஜிஸ்திரேட் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

    மேலும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சத்ரபதி சாம்பாஜிநகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    வீடியோ பதிவுடன் நடத்தப்பட்ட அவரது பிரதேச பரிசோதனையில் சூர்யவன்ஷியின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததும், அந்த காயங்களால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவர் உயிர் பிரிந்துள்ளது என்றும் மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். எனவே போலீஸ் கஸ்டடியில் சித்திரவதை செய்யப்பட்டு அவர் உயிரிழந்தது உறுதியான நிலையில் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளது.

     

    நாடோடி இனமான வடார் இனத்தைச் சேர்ந்த சூர்யவன்ஷி, படிப்பு செலவுக்காக சிறு சிறு வேலைகளைச் செய்து வந்தவர். இவரது சகோதரரும் தாயும் புனேவில் உள்ள சாக்கனில் கூலி வேலை செய்து வந்தனர்.

    பகுஜன் அகாடி கட்சியுடன் இணைந்து உள்ளூர் செயல்பாட்டாளராக சூர்யவன்ஷி இருந்துள்ளார்.இந்நிலையில் அவரது மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் சூரியவனாக்ஷியின் குடும்பத்தினர் முதலில்  மாவட்டத்துக்குள் நுழைய விடாமல் போலீசால் தடுக்கப்பட்டனர்.

    பின்னர், அவரது உடலை பர்பானிக்கு கொண்டு வருவதற்கு பதிலாக லத்தூரில் உள்ள அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்லுமாறு போலீசார் வலியுறுத்தினர். ஆனால் பகுஜன் அகாடி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர், மற்றும் போராட்டக்காரர்களின் எதிர்பால் போலீஸ் பின்வாங்கியுள்ளது.

    காவல்துறை வேண்டுமென்றே தலித் குடிசைகளுக்குள் நுழைந்து சொத்துக்களை அழிப்பதை உள்ளூர் வாசிகளால் பதிவுசெய்யப்பட்ட பல வீடியோக்கள் காட்டுகிறது.

    பர்பானிக்கு மாவட்டத்தில் தலித்-பகுஜன் அம்பேத்கரிய இளைஞர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையின் அளவை சூர்யவன்ஷியின் மரணம் எடுத்துக்காட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

     

     

    இந்த விவகாரத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முற்றிலும் தோற்றுப் போயுள்ளார் என்று உத்தவ் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார். 

    • மனுதர்மத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு அம்பேத்கர் பிரச்சனையாகத்தான் தெரிவார்
    • அம்பேத்கர் மீதான அவரது வெறுப்பையே இப்பேச்சு வெளிப்படுத்துகிறது

    பாராளுமன்றத்தில் அம்பேத்கரை அவமதித்ததாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டிஸ் கொடுத்துள்ளார்.

    நேற்று கூட்டத்தொடரின்போது பேசிய அமித்ஷா, 'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது.

    இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார்.

    இது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் ராகுல் காந்தி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மனுதர்மத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு அம்பேத்கர் பிரச்சனையாகத்தான் தெரிவார் என்று ராகுல் அமித்ஷாவை விமர்சித்தார்.

    இந்நிலையில் மதவாத சிந்தனை கொண்டவர் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா என்பது அனைவருக்கும் தெரியும், அம்பேத்கர் மட்டுமல்லாது அவரை பின்பற்றும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை அமித்ஷா புண்படுத்தியுள்ளார்.

    அம்பேத்கர் மீதான அவரது வெறுப்பையே இப்பேச்சு வெளிப்படுத்துகிறது என்று விமர்சித்துள்ள காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் இதுகுறித்து விவாதிக்க மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டிஸை தாக்கல் செய்துள்ளார். 

    ×