என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தடை செய்யப்பட்ட"
- தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- பெட்டி கடைகள் மற்றும் மளிகை கடைகள் உள்பட பல கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்தது.
சேலம்:
தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் பெட்டி கடைகள் மற்றும் மளிகை கடைகள் உள்பட பல கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்தது.
தீவிர நடவடிக்கை
இதையடுத்து உணவு பாதுகாப்பு ஆணையர் தலைமையில் சென்னையில் நடந்த கூட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தீவிரமாக கண்காணித்து சீல்வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
அதன்படி சேலம் மாவட்டத்தில் தனிப்படை போலீசார் புகையிலை பொருட்கள் விற்கப்படும் கடைகளை கண்காணித்து சமீபத்தில் அதிரடி சோதனை செய்தனர். அதில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த 13 கடை உரிமை யாளர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த கடைகளுக்கு சீல் வைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் சேலம் உணவு பாதுகாப்பு அலுவலருக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து ஆட்டையாம்பட்டியில் ஒரு மளிகை கடை, ஓமலூர் அருகே செலவடையில் ஒரு மளிகை கடை, எடப்பாடி, ஜலகண்ட ாபுரம் பிரதான சாலையில் ஒரு மளிகை மற்றும் ஒரு பீடா கடை, பெரியசோரகை மாட்டுக்காரன் வளைவில் 2 பெட்டிக்கடைகள், நங்கவள்ளியில் ஒரு பெட்டிக்கடை உள்பட 13 பெட்டி கடைகளுக்கும் சீல் வைக்கும் நடவடிக்கையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
இன்றும், நாளையும் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற உள்ள தால் தற்போது அந்த பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதையடுத்து நாைள மறுநாள் திங்கட் கிழமை முதல் இந்த 13 கடைகளும் சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரி பேட்டி
இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி கதிரவன் கூறுகையில், கடந்த 2022-2023-ம் ஆண்டில் 33 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை 800 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் புகையிலை விற்று கடை உரிமையாளர்கள் சிக்கினால் அந்த கடைகள் சீல் வைக்கப்படுவதுடன், கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும், அதன் தொடர்ச்சியாக நாளை மறுநாள் 13 கடைகள் சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . இவ்வாறு அவர் கூறினார்.
- வெளி மாநில லாட்டரி விற்பனை செய்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- வெளி மாநில லாட்டரிகள் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
தமிழ் நாட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கனிராவுத்தர் குளம், சூளை உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக ஈரோடு வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் குறிப்பிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பொதுமக்களை ஏமாற்றி வெளி மாநில லாட்டரி விற்பனை செய்த வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த சவுந்தர் (24), பெரிய அக்ரஹாரம், கதவணை மின் நிலையம் பகுதியை சேர்ந்த உதயசந்திரன் (63), சூளை முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த பாலு (48) ஆகிய 3 பேரையும் கையும், களவுமாக பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து எண்கள் எழுத்தப்பட்டிருந்த வெள்ளைத்தாள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரிகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
- டீ கடை ஒன்றில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
- தப்பியோடிய பாலசுப்பிரமணியம் என்பவரை தேடி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு அரசு மருத்துவ மனை போலீஸ் நிலைய போலீசார் நசியனூர் ரோடு பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது அங்குள்ள டீ கடை ஒன்றில் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அங்கிருந்த நபர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். இருப்பினும் ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.
விசாரணையில் அங்கு கேரள மாநில லாட்டரி விற்பனையில் ஈடுப்பட்டிருந்தது ஈரோடு, மரப்பாலம் பகுதியை சேர்ந்த கர்ணன் (30), கைகாட்டி வலசு பகுதியை சேர்ந்த விக்னேஷ் (24) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள் 71 மற்றும் எண்கள் எழுதப்ப ட்டிருந்த வெள்ளைத் தாள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தப்பியோடிய பாலசுப்பிரமணியம் என்பவரை தேடி வருகின்றனர்.
- தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா போன்ற புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக வெப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- போலீசாரை கண்டதும் வீட்டில் இருந்த வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் தப்பி ஓடி விட்டனர்.
நாமக்கல்,ஏப்.23-
பள்ளிப்பாளையம் அருகே வெப்படையில் உள்ள ஒரு வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா போன்ற புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக வெப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையொட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் உத்தரவின் பேரில், எஸ்.ஐ.க்கள் மலர்விழி, சண்முகம் மற்றும் ஏட்டுகள் பிரவீன், சரவணன் ஆகி யோர் சின்னார்பாளையம் அருகே, புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒருவீட்டுக்கு சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் வீட்டில் இருந்த வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் தப்பி ஓடி விட்டனர்.
பின்னர் போலீசார் வீட்டில் சோதனை செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான்பராக், குட்கா போன்ற புகையிலைப் பொருட்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.இது சம்மந்தமாக, வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
விசாரணையில் வடமா நிலத்தை சேர்ந்த வாலி பர்கள் வெப்படை பகுதி யில், வீடு வாடகை எடுத்து தங்கி இருந்தது தெரிய வந்தது. மேலும் வீட்டு உரிமையாளர் முருகேஸ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமு தல் செய்யப்பட்ட 2 டன் புகையிலை பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். அதனை பதுக்கி வைத்த வட மாநில வாலி பர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
- அதன் பேரில் போலீசார் இண்டியம்பாளையம் அடுத்த தொப்பம்பட்டி பகுதியில் ஆய்வு செய்து சோதனை செய்தனர்.
- சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த ரவி (46) என்றும், அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் அனுமதியின்றி மது விற்பனை செய்தது தெரிய வந்தது.
கோபி
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள இண்டியம் பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி மற்றும் மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் இண்டியம்பாளையம் அடுத்த தொப்பம்பட்டி பகுதியில் ஆய்வு செய்து சோதனை செய்தனர்.
அப்போது அந்த பகுதியில் ஒருவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்தார். தொடர்ந்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த ரவி (46) என்றும், அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் அனுமதியின்றி மது விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 50 மது பாட்டில்கள் மற்றும் லாட்டரி சீட்டுகளை பறி முதல் செய்தனர்.
- வெள்ளைத் தாளில் எண்களை எழுதி, அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரியை ஏமாற்றி விற்பனை செய்துள்ளார்.
- இதையடுத்து, மொடக்குறிச்சி போலீசார் சண்முகராஜா மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே உள்ள லக்காபுரம், கொமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரன் (46). இவர், கரூர் மெய்ன்ரோட்டில் உள்ள சோலார்பகுதியில், பாஸ்ட் புட் கடை ஒன்றின் அருகே நேற்று நின்று கொண்டிருந்தார்.
அப்போது, ஒரு நபர் அவரிடம், வெள்ளைத் தாளில் எண்களை எழுதி, அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரியை ஏமாற்றி விற்பனை செய்துள்ளார்.
இதுகுறித்து, உமா மகேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று அங்கு லாட்டரி விற்பனை செய்த நபரை மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில் அவர் சோலார் புதூர், பாலுசாமி நகரைச் சேர்ந்த சண்முகராஜா ( 40) என்பது தெரியவந்தது. இதையடுத்து, மொடக்குறிச்சி போலீசார் சண்முகராஜா மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மேலும் அவரிடமிருந்து 20 லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
- மாநகராட்சி அதிகாரிகள் பிளாஸ்டிக் குடோனில் ஆய்வு செய்ய நேரில் சென்றனர்.
- இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அந்த குடோனுக்கு சீல் வைத்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சி 2-வது மண்டலத்தில் உள்ளது கந்தசாமி 2-வது வீதி. இங்குள்ள ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் அந்த குடோனில் ஆய்வு செய்ய நேரில் சென்றனர். அப்போது குடோன் பூட்டப்பட்டிருந்தது.
இதையடுத்து அதிகாரிகள் முன்னிலையில் தான் அந்த குடோனை திறக்க வேண்டும் எனக்கூறி மாநகராட்சி அதிகாரிகள் அந்த குடோனுக்கு சீல் வைத்தனர்.
மேலும் அறிவிப்பை மீறி குடோனை திறந்தால் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற எச்சரிக்கை நோட்டீசும் குடோன் முகப்பில் ஒட்டப்பட்டது.
- பவானி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள மீன் மார்க்கெட் பகுதியில் பவானி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- அப்போது அங்கு இருந்த மணி என்பவரது டீக்கடையில் சோதனை செய்தனர்.
பவானி:
பவானி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள மீன் மார்க்கெட் பகுதியில் பவானி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு இருந்த மணி என்பவரது டீக்கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு 3.264 கிலோ எடை கொண்ட ரூ.2496 மதிப்பிலான தடை செய்யப்பட்ட போதை வஸ்து பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்திருப்பது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பவானி போலீசார் பவானி தாசில்தாருக்கு டீக்கடைக்கு சீல் வைக்க கோரி தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பவானி தாசில்தார் ரவிச்சந்திரன் உத்தரவுப்படி வருவாய் அலுவலர் விஜய கோகுல், வி.ஏ.ஓ. குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் அசோக், சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் டீக்கடைக்கு வருவாய்த்துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.
இதேபோல் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக பவானி சீனிவாசபுரம் எக்ஸ்டென்ஸ் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் (46) என்பவரை கைது செய்தனர்.
இதேபோல் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சின்னப் பருவாச்சிபகுதி கடையில் ஹான்ஸ் விற்கப்படுவதாக அந்தியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமையிலான போலீசார் அந்த கடைக்கு சென்று சோதனை செய்ததில் 10 பாக்கெட் ஹான்ஸ் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து அந்தக் கடையின் உரிமையாளர் சதாசிவம் (49) என்பவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் பருவாச்சி பகுதியில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்வதாக கொடுத்த தகவலின் பேரில் அங்கிருந்து சதாசிவம் உடன் பருவாச்சிஅண்ணா நகர் பகுதியில் சோதனை செய்தனர்.
அங்கு ஏராளமான போதை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்த விருதுநகர் ஈரெட்டிப்பட்டியை சேர்ந்த காளிராஜ் (24) என்பவரையும் கைது செய்தனர். இந்த குட்காவின் மதிப்பு 39 ஆயிரம் 500 ரூபாய் ஆகும்.
- கோபியில உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- இதில் மக்கும் கழிவுகளை கையாளும் முறை குறித்த தொழில்நுட்ப வழிகாட்டுதல் கையேடு வெளியிடப்பட்டது.
கோபி:
கோபியில உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நகர் மன்ற தலைவர் என். ஆர்.நாகராஜ் தலைமை தாங்கினார்.ஆணையாளர் பிரேம் ஆனந்த் முன்னிலை வகித்தார்.
திருப்பூர் பாதுகாப்பு இயக்க நிறுவனர் மற்றும் செயலாளர் டாக்டர். கே வீரபத்மன் அவர்களால் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நகரில் உள்ள வணிக நிறுவனங்களைச் சேர்ந்த பிரமுகர்கள், மருத்துவமனை நிர்வாகத்தினர், ஓட்டல் உரிமையாளர்கள், லாட்ஜ் உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எரியும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு மாற்றாக கிழங்கு மாவு மற்றும் கரும்பு சக்கை மூலம் தயாரிக்கப்பட்ட டம்ளர்கள், தட்டுகள், ஸ்பூன் மற்றும் பைகள் காட்சிப்படுத்தபட்டது.
இதில் மக்கும் கழிவுகளை கையாளும் முறை குறித்த தொழில்நுட்ப வழிகாட்டுதல் கையேடு வெளியிட–ப்பட்டது. இதன் முதல் பிரதியை நகர் மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியின் இறுதியில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் நன்றி தெரிவித்தார்.
நகராட்சியின் சுகாதார அலுவலர் சோழராஜ், சுகாதார ஆய்வாளர் சவுந்தரராஜன், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை பாரத திட்ட பரப்புரையாளர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.
- தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள ஒரு கடையில் 129 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவு பேரில் மாவட்டம் முழுவதும் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை, ஹான்ஸ், பான் மசாலா பொருட்கள் விற்கப்படுகிறதா? என போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த அதிரடி சோதனை யில் தடை செய்யப்பட்ட புகையிலை பொரு ட்களையும் போலீசார் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வெள்ளோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீராமன் தலைமையிலான போலீசார் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடையில் விற்கப்படுகிறதா? என சோதனையிட்டனர்.
அப்போது வெள்ளோடு அடுத்த ஞானிபாளையம், தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்தபோது அந்த கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான பான் மசாலா, ஹான்ஸ் பாக்கெட்டுகள் என மொத்தம் 129 பாக்கெட்டு களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி (48) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் பங்களாபுதூர், சென்னி மலை, அம்மாபேட்டை, வீரப்பன்சத்திரம், தாலுகா, சூரம்பட்டி போன்ற பல்வேறு பகுதிகளில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ப னைக்கு வைத்திருந்ததாக மாவட்டம் முழுவதும் 9 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர்.
மேலும் அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்