என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "7 பேர் கைது"

    • காந்திநகர் பண்ணாரி அம்மன் கோவில் அருகே போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
    • 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    கோவை,

    கோவை மாநகரில் போதைப்பொருள், கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போதைக்கு அடிமையான இளைஞர்கள் சிலர் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி அதனை நீரில் கரைத்து ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தி போதை ஏற்றி வருகின்றனர். மேலும் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை மருந்து கடைகளில் விற்க கூடாது எனவும் போலீசார் அறுவுறுத்தி உள்ளனர்.

    இந்நிலையில், நேற்று கோவை கடைவீதி அருகே காந்திநகர் பண்ணாரி அம்மன் கோவில் அருகே ஒரு கும்பல் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடுவதாக கடைவீதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், கடைவீதி போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த 4 பேர் கும்பலை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். சந்தேகமடைந்த போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது அந்த கும்பல் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் போதை மாத்திரை விற்பனை கும்பலை சேர்ந்த வேலாண்டி பாளையத்தை சேர்ந்த கணேஷ் பாபு (வயது24), பீளமேடு ஆவாரம் பாளையம் இளங்கோ நகரை சேர்ந்த சரவணன் (31), இடையர்பாளையத்தை சேர்ந்த கணேஷ்குமார் (21), திருச்சி ரோடு ஹைவே காலனியை சேர்ந்த ஜான் ஜோசப் (31) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 85 போதை மாத்திரைகள், 4 செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இதேபோல், பீளமேடு ஆவாரம்பாளையம் சோபா நகர் மாநகராட்சி பூங்கா அருகே போதை மாத்திரை விற்பனை செய்த ஆவாரம்பாளையம் இளங்கோ நகரை சேர்ந்த சுஜித் (25), ஜெகநாதபுரத்தை சேர்ந்த சிவசூரியன் (23) மற்றும் புலியகுளம் மருதாச்சலம் தெருவை சேர்ந்த வெங்கடேஷ்குமார் (22) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 3 பேரையும் ஜெயிலில் அடைத்தனர்.

    • மதுரை அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ரூ. 27 ஆயிரத்து 580 ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை

    மதுரையை அடுத்துள்ள பசுமலை தியாகராஜர் காலனி பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக திருப்பரங்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் சம்பவத்தன்று போலீசார் அந்தப்பகுதியில் ரோந்து மேற்கொண்டனர்.

    அப்போது அங்குள்ள ஒரு கட்டிடத்தில் பணம் வைத்து சூதாடிய 7 பேர் கும்பலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தியதில், அவர்கள் கோவிந்தராஜ் (வயது63), கதிரேசன் (54), பைபாஸ் ரோடு நேரு குறுக்கு தெரு சுரேஷ்பாபு (38), ராஜபாளையம் போத்திராஜ் (57), பசுமலை ராஜா (49), ஈஸ்வரன் (57), திருநகர் கணேசன் (54) என்று தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ரூ. 27 ஆயிரத்து 580 ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • பெரியமோட்டூர் பகுதியில் கிருஷ்ணகிரி டேம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே பெரியமோட்டூர் பகுதியில் கிருஷ்ணகிரி டேம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.

    அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்ததில், அதேபகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது29), தமிரசன் (29), அசோக்குமார் (30), செவத்தன் (39) ஆகியோர் என்பது தெரியவந்தது. 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    இதேபோன்று பேரிகை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பணம் வைத்து சூதாடிய திம்மராயன் உள்பட 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.8 ஆயிரம் பணம் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்தனர்.

    • சக்திவேல் பரமசிவம் என்பவரிடம் ஜேசிபி எந்திர டிைரவராக வேலை செய்து வந்தார்.
    • ஜே.சி.பி எந்திர டிரைவர் சக்திவேலை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கூகையூர் போயர் தெருவை சேர்ந்தவர் ராமசாமி இவரது மனைவி வள்ளியம்மாள்(வயது 58), கூலிவேலை செய்து வருகின்றனர். இவருக்கு இந்திரா என்ற மகளும், சக்திவேல் என்ற மகனும் உள்ளனர். மகளை நைனார் பாளையத்தில் திருமணம் செய்து வைத்துள்ளனர். சக்திவேலுக்கு சென்னையை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர்.

    சக்திவேலின் மனைவி மற்றும் பிள்ளைகள் சென்னையில் அவரது பெற்றோருடன் தங்கி வருகின்றனர். சக்திவேல் கடந்த 4 ஆண்டுகளாக கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா புலிக்கரம்பூர் கிராமத்தை சேர்ந்த பரமசிவம்(43) என்பவரிடம் ஜேசிபி எந்திர டிைரவராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் சக்திவேலுக்கு சரிவர சம்பளம் தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் தற்போது சக்திவேல் டிரைவர் வேலைக்கு செல்லவில்லை. மேலும் சக்திவேல், பரமசிவம் ஆகியோர்களுக்குள் கொடுக்கல், வாங்கல் பிரசினையும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது .

    இந்நிலையில் கடந்த 4-ம் தேதி காலை 10.30 மணியளவில் சக்திவேல் தன் வீட்டில் இருந்தபோது, 2 மோட்டார்் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 4 பேர் லஷ்மணபுரம் சாலையில் ஜேசிபி எந்திரம் கவிழ்ந்து விட்டது. அதனால் ஜே.சி.பி எந்திர டிரைவர் சக்திவேலை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதை நம்பிய சக்திவேல் அவர்களுடன் மோட்டார்் சைக்கிளில் சென்றுள்ளார். அதன் பின்னர் சில மணி நேரம் கழித்து சக்திவேலின் தாய்க்கு வந்த போனில் சக்திவேலை கடத்தி விட்டதாகவும், ரூ. 5 லட்சம் பணம் தந்துவிட்டு சக்திவேலை மீட்டு செல்லுங்கள் என தெரிவித்துள்ளனர். மேலும் பணம் கொடுக்கவில்லை என்றால் சக்திவேலை கொலை செய்து விடுவோம் என மிரட்டி உள்ளனர்.

    இதுகுறித்து வள்ளியம்மாள் கீழ்குப்பம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ தலைமையில் தனிப்படை அமைத்து கடத்தப்பட்ட சக்திவேலை தேடி வந்தனர். இந்நிலையில் செல்போன் டவர் மூலம் திட்டக்குடி அருகே புலிக்க ரும்பூர் பரமசிவம் என்பவரது மாடி யில் இருந்த சக்திவேலை மீட்டனர். மேலும் இந்த வழக்கில் ஜேசிபி இயந்திர உரிமையாளர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்த பரமசிவம்(43), அவரது டிரை வர் சுப்ரமணி மகன் ரமேஷ்(36), ஜெயகுமார் மகன் ஜெகதீஷ்(23), ராஜா மகன் ரவி(19), முத்துகிருஷ்ணன் மகன் பெரியசாமி(23), பழனிவேல் மகன் வெற்றிசெல்வன்(19), சவுந்தர்ராஜன் மகன் சந்திரன்(20) மற்றும் பென்னாடம் பகுதியைச் சேர்ந்த தனபால் மகன் தனராஜ் (42) உள்ளிட்ட 8பேரை கீழ்குப்பம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் சின்னசேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குரும்பபட்டி முத்தாலம்மன் கோவில் பின்புறம் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
    • சாணார்பட்டி போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தனர்.

    குள்ளனம்பட்டி:

    சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் தலைமையில் ஏட்டுகள் தோமனிக்,கோவிந்தராஜ் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது கூவனூத்து குரும்பபட்டி முத்தாலம்மன் கோவில் பின்புறம் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் கூவனூத்து குரும்பபட்டியை சேர்ந்த ரத்தினகிரி (வயது 67),காலனி தெருவை சேர்ந்த முத்துக்குமார் (45),வடக்கு தெருவை சேர்ந்த ராமசாமி (70),குரும்பபட்டியைச் சேர்ந்த ரவி (54),முருகேசன் (62) நொச்சி ஓடைப்பட்டியைச் சேர்ந்த முனியாண்டி (60) ஆர்.எம்.டி.சி.காலனியைச் சேர்ந்த சுப்ரமணி (52)என்பது தெரியவந்தது.

    இதையடுத்து சாணார்பட்டி போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள், ரூ.5020 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • 4 பேர் ஒரு ஜோடி யானை தந்தங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
    • 2 பேர் தலைமறைவாகிவிட்டனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் இ.எஸ்.ஐ. ரிங் ரோடு மத்தம் சர்க்கிள் பகுதியில் நேற்று பிற்பகல் 2.45 மணி அளவில் யானை தந்தங்கள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஸ் சுதாகர் உத்தரவின் பேரில் ஓசூர் வனச்சரக அலுவலர் பார்த்தசாரதி தலைமையில் வனத்துறையினர் அங்கு சென்று அதிரடியாக சோதனை நடததினார்கள். அதில் 4 பேர் ஒரு ஜோடி யானை தந்தங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

    அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் அதை வைத்திருந்த தேன்கனிக்கோட்டை தாலுகா இருதுகோட்டை அருகே அனுமந்தபுரம் பக்கமுள்ள திப்பனூரை சேர்ந்த வெங்கடேஷ் (27), கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டம் ஆனேக்கல் தாலுகா சம்மந்தூர் பக்க முள்ள மாரநாயக்கன அள்ளியை சேர்ந்த விஜயகுமார் (25), ஊத்தங்கரை தாலுகா நடுப்பட்டி அருகே உள்ள ஒந்தியம்புதூரை சேர்ந்த ஹரிபூபதி (39), ஊத்தங்கரை நாராயண நகரை சேர்ந்த பரந்தாமன் (27) ஆகிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு ஸ்கூட்டரும், 4 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில், இதில் தொடர்புடைய தேன்கனிக்கோட்டை தாலுகா அய்யூரை சேர்ந்த முனிராஜ் (29), பெட்டமுகிலாளம் அருகே உள்ள தொளுவபெட்டா பழையூரை சேர்ந்த லிங்கப்பா (39), பசலிங்கப்பா (42) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    இதில் தொடர்புடைய பெட்டமுகிலாளம கிராமம் போப்பனூரை சேர்ந்த பசப்பா (40), ஜெயபுரத்தை சேரந்த மத்தூரிகா (39) ஆகிய 2 பேர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை வனத்துறையினர் தேடி வருகிறார்கள்.

    கைதான 7 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஓசூர் சிறையில் அடைத்தனர்.

    • உண்ணாவிரதம் இருந்த முதியவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்
    • பள்ளி வளாகத்தில் ஊராட்சி அலுவலகம் திறப்பதை கண்டித்து

    அரியலூர்:

    அரியலூர் அடுத்த தாமரைக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில், ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழா காணாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.

    இந்நிலையில், அந்த ஊராட்சி அலுவலக கட்டடத்தை பள்ளிக்கே வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து பலமுறை அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன் பாடு ஏற்படவில்லை.

    இந்நிலையில், இந்த ஊராட்சி அலுவலகம் நேற்று திறக்கப்படவுள்ளதாக அறிவித்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த 80 வயது முதியவர் தமிழ்மணி மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி அலுவலகம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

    இவருக்கு ஆதரவாக முன்னாள் மாணவர் சங்க தலைவர் தமிழ்களம் இளவரசன், செயலர் நீலமேகம் மற்றும் ஆ.ராஜா, ராஜேந்திரன், வடிவேல், பாரிவள்ளல் ஆகியோரும் உண்ணாவிரதம் இருந்தனர்.

    தகவலறிந்து வந்த அரியலூர் காவல் துறையினர், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக மேற்கண்ட 7 பேரையும் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    • கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
    • இதையடுத்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் சட்டம் - ஒழுங்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு அனுமதியன்றி மது விற்ற 7 பேரை கைது செய்தனர்.

    கரூர் :

    கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் சட்டம் - ஒழுங்கு போலீசார், குளித்தலை, அரவக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக மலர், ரவி, தங்கராசு, மாரியம்மாள், மணி, சண்முகம், ராமச்சந்திரன் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும், அவர்களிடமிருந்து 55 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்ட விரோத மது விற்பனையை தடுக்க போலீசார் தொடர்ந்து ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர்.

    • வீட்டிற்கு தீ வைத்ததாக சிறை வார்டன் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
    • இவ்வழக்கை விசாரித்தவர் கடலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி வனஜா.

    கடலூர்:

    கடலூர் கேப்பர் மலை மத்திய சிறை உதவி ஜெயிலர் மணிகண்டன் வீட்டில் கடந்த மாதம் 28 - ந்தேதி மர்ம கும்பல் தீ வைத்து குடும்பத்துடன் கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் வீட்டிற்கு தீ வைத்ததாக சிறை வார்டன் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதனை தொடர்ந்து எண்ணூர் தனசேகரனிடம் இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் மூன்று நாட்கள் போலீஸ் காவல் கேட்டு கடலூர் முதுநகர் போலீசார் கடலூர் நீதி மன்றத்தில் மனு அளித்தனர். இதற்காக மத்திய சிறையில் இருந்து கைதி பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரனை போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் இவ்வழக்கை விசாரித்த கடலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி வனஜா, எண்ணூர் தனசேகரனை ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

    ×