என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போதைப்பொருள் கடத்தல்"
- போதைப்பொருள் தடுப்பு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கடந்த 3 மாதங்களில் 48 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுடெல்லி:
டெல்லியில் சமீப காலமாக போதைப்பொருள் கடத்தல் அதிகளவில் அரங்கேறி வருகிறது. குறிப்பாக கிரிப்டோ கரன்சி, டார்க் வெப் மற்றும் போலி ஆவணங்கள் மூலம் சர்வதேச கடத்தல் கும்பல்கள் இதில் ஈடுபடுவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. எனவே இதனை கட்டுப்படுத்த போதைப்பொருள் தடுப்பு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி கடந்த 3 மாதங்களில் 48 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் சந்தை மதிப்பு சுமார் ரூ.25 கோடி ஆகும். இதனையடுத்து சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட லோகேஷ் திங்ராவை டெல்லி போலீசார் குருகிராமில் வைத்து கைது செய்தனர்.
- கடந்த 2023 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளை விட இது மூன்று மடங்கு அதிகமாகும்
- சூடான், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து தலா 3 பேருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது..
வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரங்களுக்காக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து மத்திய கிழக்கில் செல்வச்செழிப்பான நாடக விளங்கும் சவூதி அரேபியாவில் பலர் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு மட்டும் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டினருக்குச் சவுதி அரேபிய அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதைப்பொருள் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஏமன் நாட்டவர் ஒருவருக்கு சனிக்கிழமையன்று சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து இந்த வருட மரண தண்டனை எண்ணிக்கை குறித்த தரவுகள் வெளியாகி உள்ளது.
அதன்படி இந்த ஆண்டில் [2024 இல்] இதுவரை மொத்தமாக 274 பேருக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதில் 101 வெளிநாட்டவர்கள் ஆவர். இது கடந்த 2023 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளை விட இது மூன்று மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தானைச் சேர்ந்த 21 பேர், ஏமன் - 20 பேர், சிரியா - 14 பேர், நைஜீரியா - 10, எகிப்து - 9 பேர், ஜோர்டான் - 8 பேர், எத்தியோப்பியா - 7 பேர், சூடான், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து தலா 3 பேர், இலங்கை, எரித்திரியா மற்றும் பிலிப்பைன்ஸில் இருந்து தலா ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடந்தால் தொடர்பாக வழக்குகள் இந்த ஆண்டு மரண தண்டனை எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு போதைப்பொருள் வழக்குகளில் 92 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அதில் 69 பேர் வெளிநாட்டவர்கள். ஒரு வருடத்தில் இந்த அளவிலான எண்ணிக்கையில் வெளிநாட்டவர்களுக்கு சவுதி அரேபியா மரண தண்டனை நிறைவேற்றுவது இதுவே முதல் முறை.
முன்னதாக 2023ல் சீனா மற்றும் ஈரானுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான மரண தண்டனையை நிறைவேற்றிய நாடாக சவுதி அரேபியா இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே இந்த மரண தண்டனைகள் சர்வதேச அரங்கில் கவலையளிப்பதாக உள்ளது.
- உடைந்த நிலையில் கிடந்த டிரோன் ஒன்றை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பறிமுதல் செய்தனர்.
- எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு போதைப்பொருள் கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளனர்.
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லைப் பகுதி அருகே சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு டிரோன் பறந்ததாக எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளுகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எல்லைப் பகுதி அருகே உள்ள வயல்வெளிகளில் எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது, தனோ குர்த் கிராமத்தின் அருகே உடைந்த நிலையில் கிடந்த டிரோன் ஒன்றை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தானோ காலன் என்ற கிராம் அருகே, சுமார் 540 கிராம் எடை கொண்ட போதைப்பொருள் பாக்கெட் ஒன்றை அதிகாரிகள் கண்டெடுத்தனர். எல்லை அருகே அடிக்கடி போதைப்பொருள் முயற்சிகள் நடந்து வரும் நிலையில், எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இன்று போதைப்பொருள் கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளனர்.
- போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் இந்த கொக்கெய்ன் போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் உள்ளது.
தலைநகர் டெல்லியில் இன்று நடந்த மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தலில் 500 கிலோவுக்கும் அதிகமான ரூ. 2,000 கோடி மதிப்புள்ள கோகோயின் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தெற்கு டெல்லியில் நடந்த சோதனைக்குப் பிறகு சர்வதேச கடத்தல் போதைப்பொருள் கும்பலை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தெரிவித்த போலீசார், சர்வதேச போதைப்பொருள் மற்றும் பயங்கரவாத கும்பலுக்கு தொடர்பா ? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாக டெல்லி சிறப்பு காவல் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக, 400 கிராம் ஹெராயின் மற்றும் 160 கிராம் கோகோயின் போதைப்பொருளை கைப்பற்றிய இரண்டு ஆப்கானிஸ்தான் பிரஜைகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தேசிய தலைநகரில் போதைப்பொருள் கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- போதைப்பொருட்களின் கேந்திரமாக தமிழகம் மாற்றப்பட்டுள்ளதற்கு காரண கர்த்தாக்கள் யார்?
- போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் மீது சம்பந்தப்பட்ட மத்திய, மாநில காவல்துறை அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
சென்னை துறைமுகத்தில் 110 கோடி ரூபாய் மதிப்புள்ள 112 கிலோ சூடோ எபிட்ரின் என்ற போதைப்பொருளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் என்ற செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன.
போதைப்பொருட்களின் கேந்திரமாக தமிழகம் மாற்றப்பட்டுள்ளதற்கு காரண கர்த்தாக்கள் யார்? சூத்ரதாரிகள் யார்-யார்?
என்பது நன்கு தெரிந்திருந்தும், ஆணிவேர் எங்கிருக்கிறது என்று தெரிந்திருந்தும், அவர்கள் மீது சட்டத்தின் இரும்புப்பிடி நீளாமல், கடத்தலில் ஈடுபடும், குருவிகள் என்றழைக்கப்படும், சிறுசிறு கடத்தல் வேலை செய்யும் ஒருசிலரை மட்டும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் பிடிக்கும் மர்மம் என்ன?
தொடர்ந்து இதுபோன்ற போதைப்பொருள் கடத்தல், விற்பனை தொடர்ந்தால், தமிழக இளைஞர்கள் மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்காலமே பாழாகும் என்பதை நினைவில் நிறுத்தி போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் மீது சம்பந்தப்பட்ட மத்திய, மாநில காவல்துறை அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை துறைமுகத்தில் 110 கோடி ரூபாய் மதிப்புள்ள 112 கிலோ #Pseudoephedrine என்ற போதைப் பொருளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் என்ற செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன. போதைப் பொருட்களின் கேந்திரமாக தமிழகம் மாற்றப்பட்டுள்ளதற்கு காரணகர்த்தாக்கள் யார்… pic.twitter.com/jCrtmGS7sy
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) September 27, 2024
- டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜாபர் சாதிக்கை காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
- சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது ஆலீம் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சென்னை:
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு உணவு பொருட்கள் என்ற பெயரில் 'சூடோபெட்ரைன்' என்ற போதைப்பொருளை கடத்திய வழக்கில் தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். விசாரணையில் அவர், போதைப்பொருள் கடத்தல் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் பணத்தை ஈட்டியதும், சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் இறங்கினார்கள். டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜாபர் சாதிக்கை காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
இதற்கிடையே ஜாபர் சாதிக் உள்பட இந்த வழக்கில் கைதான நபர்கள் மீது டெல்லி சிறப்பு கோர்ட்டில் மத்திய போதைப்பொருள் போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். மேலும் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது ஆலீம் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மத்திய போதைப்பொருள் தடுப்பு போலீசாரும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் கைக்கோர்த்து இந்த வழக்கில் தொடர் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான ரூ.55.30 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஜாபர் சாதிக், சட்டவிரோத பண பரிமாற்றத்தின் மூலம் ஈட்டிய பணத்தை திரைப்பட தயாரிப்பு, ஓட்டல்கள், சரக்கு நிறுவனம் போன்ற தொழில்களில் முதலீடு செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே அவருடைய பெயரில் இருந்த அசையும், அசையா சொத்துகள், மனைவி அமீனா பானு மற்றும் பினாமிகள் மைதீன் கானி, முகமது முஸ்தபா, ஜாமல் முகமது ஆகியோரின் பெயரில் இருந்த சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.
ஜே.எஸ்.எம். சொகுசு ஓட்டல் (புரசைவாக்கம்), ஆடம்பர பங்களா வீடு உள்பட 14 அசையா சொத்துகள், 7 சொகுசு கார்கள் உள்பட மொத்தம் ரூ.55.30 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஐதராபாத்தில் 2.6 கிலோ கோகோயின் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது.
- போலீஸ் குழு போதைப்பொருள் கடத்தல் முயற்சியை முறியடித்தது.
போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் அமன் ப்ரீத் சிங் உள்பட 5 பேரை ஐதராபாத் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் 2.6 கிலோ கோகோயின் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டதை அம்மாநில போதைப்பொருள் தடுப்புத் துறைக்கு தகவல் தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸ் குழு போதைப்பொருள் கடத்தல் முயற்சியை முறியடித்தது. இந்த சம்பவத்தில், அமன் மற்றும் மற்ற குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
மேலும், 30 கடத்தல் வாடிக்கையாளர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட அமன் ப்ரீத் சிங், அனிகேத் ரெட்டி, பிரசாத், மதுசூதன் மற்றும் நிகில் தமன் ஆகிய 5 பேரும் தற்போது போலீஸ் காவலில் உள்ளனர். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ராஜேந்திர நகர் மண்டலத்தின் சைபராபாத் காவல்துறையின் டிசிபி ஸ்ரீனிவாஸ் கூறுகையில், " நுகர்வோர்கள் ஐந்து பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தோம். அவர்ளுக்கு சிறுநீர் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அனைவரும் போதைப்பொருள் எடுத்துக்கொண்டது உறுதியானது.
பிறகு, அவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். நாங்கள் இப்போது அவர்களை விரிவான மருத்துவ பரிசோதனைக்கு அனுப்புகிறோம்" என்றார்.
2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் நுகர்வு வழக்கு தொடர்பாக ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கூட அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கடந்த மே மாதம் 8-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை திகார் சிறைக்குள் சென்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
- வாக்குமூலத்தை பதிவு செய்ய மடிக்கணினி மற்றும் பிரிண்டர்களும் எடுத்துச்செல்லப்பட்டன.
புதுடெல்லி:
ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தமிழகத்தை சேர்ந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த வழக்கில் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட மறுநாள் அமலாக்கத்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்தது.
அதன் பின்னர் ஜாபர் சாதிக்கின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டன. குடோன்களிலும் சோதனை நடந்தது. ஜாபர் சாதிக்கின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரிடம் அமலாக்க அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது வழக்கு சம்பந்தப்பட்ட பல ஆவணங்களும், வாக்குமூலங்களும் பெறப்பட்டன.
இதற்கிடையே கடந்த மே மாதம் 8-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை திகார் சிறைக்குள் சென்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருட்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் பட்டியாலா சிறப்பு கோர்ட்டில் நீதிபதி சுதிர்குமார் சிரோஹி அனுமதியை பெற்று இந்த விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அப்போது விசாரணை முழுமையாக முடிக்கப்படவில்லை.
இதனால் விசாரணையை மீண்டும் நடத்த அதே கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் அனுமதி பெற்றனர். ஜூன் 25 மற்றும் 26-ம் தேதிகளில் விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்தது. பணமோசடி தடுப்புச்சட்டம் பிரிவு-50-ன் கீழ் வழங்கப்பட்ட அந்த அனுமதியின்பேரில் அதிகாரிகள் திகார் சிறைக்கு சென்று ஜாபர் சாதிக்கிடம் மீண்டும் விசாரணை நடத்தினார்கள்.
வாக்குமூலத்தை பதிவு செய்ய மடிக்கணினி மற்றும் பிரிண்டர்களும் எடுத்துச்செல்லப்பட்டன. இந்த விசாரணையைத் தொடர்ந்து வாக்குமூலம் பதிவு ஆவணங்களில் அவரிடம் கையெழுத்தும் பெறப்பட்டு உள்ளது.
இதனைத்தொடர்ந்து ஜாபர் சாதிக்கை அமலாக்க அதிகாரிகள் கைது செய்து கோர்ட்டுக்கு தகவல் தெரிவித்தனர்.
- போதைப்பொருட்களை கடத்திய வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
- ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் நேற்று 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
சென்னை:
டெல்லியில் இருந்து போதைப்பொருட்களை கடத்திய வழக்கில் தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகியான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையினரும் விசாரித்து வருகிறார்கள்.
ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் நேற்று 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஜாபர் சாதிக்கின் தம்பி சலீம் இன்று சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- ஜாபர் சாதிக்கின் மனைவி ஹமீனாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
- சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
சென்னை:
ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜாபர் சாதிக்கின் மனைவி ஹமீனாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் சகோதரருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காலை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
- விசாரணையின் போது வெற்று காகிதங்களில் கையெழுத்திட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.
- 5-வது குற்றவாளியான சதானந்தத்துக்கு சர்க்கரை நோய் உள்ளதால் அவர் மயக்கம் அடைந்துள்ளார். அவரையும் அதிகாரிகள் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
டெல்லியில் இருந்து ரூ.2 ஆயிரம் கோடி போதைப் பொருட்களை கடத்தியதாக கைது செய்யப்பட்ட தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகி ஜாபர்சாதிக் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சிறையில் வைத்து இன்று 3-வது நாளாக வாக்குமூலத்தை பதிவு செய்தனர். நேற்று வாக்குமூலம் வாங்கிய போது ஜாபர்சாதிக் தாக்கப்பட்டு மிரட்டியதாக பரபரப்பான குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன.
இது தொடர்பாக டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் ஜாபர்சாதிக் தரப்பில் அவரது வக்கீல் பிரபாகரன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
அமலாக்கத்துறை விசாரணையின் போது ஜாபர் சாதிக் அச்சுறுத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். விசாரணையின் போது வெற்று காகிதங்களில் கையெழுத்திட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்ததால் அடித்து உள்ளனர்.
5-வது குற்றவாளியான சதானந்தத்துக்கு சர்க்கரை நோய் உள்ளதால் அவர் மயக்கம் அடைந்துள்ளார். அவரையும் அதிகாரிகள் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்குமாறு அமலாக்கத் துறையினருக்கு பாட்டியாலா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- வருகிற 8, 9, 10-ந்தேதிகளில் ஜாபர் சாதிக்கிடமும், அவருக்கு உதவியாக இருந்த மேலும் 4 பேரிடமும் வாக்குமூலம் பெறப்படுகிறது.
- திகார் ஜெயிலுக்குள் லேப்டாப் உள்ளிட்ட கருவிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்துச் செல்லலாம்.
புதுடெல்லி:
சென்னையில் இருந்து டெல்லி வழியாக வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தியதாக தி.மு.க. நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் போதைப்பொருள் கடத்தி இருப்பதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
கைதான ஜாபர்சாதிக்கிடம் சென்னை அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. பிறகு அவர் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் வாக்குமூலம் பெற அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.
இதற்காக டெல்லி சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த டெல்லி சிறப்பு கோர்ட்டு ஜாபர்சாதிக்கிடம் திகார் ஜெயிலில் வாக்குமூலம் பெறலாம் என்று அனுமதி வழங்கி உள்ளது.
அதன்படி வருகிற 8, 9, 10-ந்தேதிகளில் ஜாபர் சாதிக்கிடமும், அவருக்கு உதவியாக இருந்த மேலும் 4 பேரிடமும் வாக்குமூலம் பெறப்படுகிறது. இதற்காக திகார் ஜெயிலுக்குள் லேப்டாப் உள்ளிட்ட கருவிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்துச் செல்லலாம் என்று சிறப்பு கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.
வாக்குமூலம் பெறப்பட்ட பிறகு ஜாபர்சாதிக் மீதான நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த அமலாக்கத்துறை முடிவு செய்து உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்