search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தர்கள் குவிந்தனர்"

    • விடுமுறை நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் வருவதால் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.
    • மலைக்கோவிலில் ஏராளமானோர் திரண்டனர்.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.

    தைப்பூசம், வைகாசி விசாகம், சூரசம்ஹாரம் உள்பட முக்கிய திருவிழாவின் போது ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிகின்றனர்.

    மேலும் விடுமுறை நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் வருவதால் வருடம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.


    காலாண்டு விடுமுறை இன்றுடன் முடிவடைந்து நாளை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏராளமானோர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய பழனிக்கு படையெடுத்தனர்.

    இதனால் பஸ்நிலையம், அடிவாரம், கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் படிப்பாதை, யானைப்பாதை, வின்ச்நிலையம், ரோப்கார் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    மலைக்கோவிலில் ஏராளமானோர் திரண்டனர். பொது தரிசனம், சிறப்பு தரிசனங்களிலும் நீண்ட வரிசை காணப்பட்டது. நீண்ட நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    மலைக்கோவிலில் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு உதவி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று பாதவிநாயகர் கோவில் அருகே தகவல் மையம், முதல் உதவி மையம், குழந்தைகள் பாலூட்டும் அறை பூஜை செய்து திறக்கப்பட்டது.

    இந்த வசதிகளை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

    நவராத்திரி விழாவை யொட்டி பெரிய நாயகியம்மன் கோவில், சண்முகபுரம் சித்தி விநாயகர் கோவிலில் கொலு வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். 

    • சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது.
    • பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    திருச்செந்தூர்:

    முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது.

    இங்கு நாள் தோறும் பொது மக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், நடிகர்கள் என பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இன்று (ஞாயிற்றுக் கிழமை) விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.


    விடுமுறை நாட்களில் ஏராளமான கூட்டம் அலைமோதுவது வழக்கம். அந்த வகையில் இன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதனால் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்

    வழக்கம் போல் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 விஸ்வரூப தரிசனம்,6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.

    • ஜனவரி 1-ந்தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
    • லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி மலையில் குவிந்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு நேற்று காலை பரமபத வாசல் எனும் வைகுண்ட வாசல் திறக்கப்பட்டது.

    இதன் வழியாக ஜனவரி 1-ந்தேதி வரை தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். பக்தர்கள் சிரமம் இன்றி ஏழுமலையானை தரிசிப்பதற்காக ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் மற்றும் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு உள்ளன. 9 இடங்களில் இலவச தரிசன டோக்கன் வழங்கபடுகிறது.

    இந்த நிலையில் வைகுண்ட வாசல் வழியாக ஏழுமலையானை தரிசிப்பதற்காக நேற்று முன்தினம் இரவு முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி மலையில் குவிந்தனர். திருப்பதி மலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது. திருப்பதியில் தற்போது அதிக அளவில் பனிப்பொழிவு உள்ளதால் பக்தர்கள் குளிரில் நடுங்கியபடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    வைகுண்ட வாசல் திறப்பையொட்டி நேற்று இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமயதராய் ஏழுமலையான் தங்க தேரில் 4 மாட வீதிகளில் உலா வந்தார்.

    • பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    திருச்செந்தூர்:

    மார்கழி மாதப்பிறப்பை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

    அதிகாலை 3.30 மணிக்கு விஸ்வ ரூபம், 4 மணிக்கு உதயமார் த்தாண்ட அபிஷேகம், 4.30 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை, 5.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 7.30 மணிக்குள் கால சந்தி தீபாராதனை, 7.30 மணிக்கு மேல் உச்சிக்கால அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் பல்வேறு இடங்களில் பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 5 மணிக்கு தங்கத்தேர் கிரிவீதி உலா, மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், இரவு 7 மணிக்கு ராக்கால தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8-8.30 மணிக்குள் பள்ளியறை தீபாராதனை நடைபெற்று கோவில் நடை திருக்காப்பிடப்படும்.

    முக்கிய விழா நாட்களான வருகிற 27-ந் தேதி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கோவில் அதிகலை 2 மணிக்கும், ஜனவரி 1-ந் தேதி ஆங்கில புத்தாண்டு மற்றும் ஜனவரி 15-ந் தேதி (திங்கள்கிழமை) தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு கோவில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

    அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும்நடைபெறுகிறது.

    • தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது.
    • பல்வேறு வேடங்கள் அணிந்து அம்மனை வழிபடுவது தனிச்சிறப்பு

    குலசேகரன்பட்டினம்:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக நேற்று தொடங்கியது. விழாவையொட்டி கடற்கரையில் குவிந்த பக்தர்கள் புனிதநீர் எடுத்து சென்று வழிபட்டனர்.

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவது தனிச்சிறப்பு வாய்ந்தது ஆகும்.

    கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் அலங்கரிக்கப்பட்ட யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து சுவாமி-அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    காலை 9.21 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது கூடியிருந்த திரளான பக்தர்கள் 'ஓம் காளி, ஜெய் காளி' என்று விண்ணதிர பக்தி கோஷங்களை முழங்கி வழிபட்டனர். தொடர்ந்து கொடிமர பீடத்துக்கு மஞ்சள், பால், தயிர், குங்குமம், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் கொடிமர பீடம் தர்ப்பை புற்களாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

     விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, உடன்குடி யூனியன் தலைவர் பாலசிங், உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் இளங்கோ, உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவர் மால் ராஜேஷ் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பல்வேறு நாட்களாக விரதம் மேற்கொண்ட பக்தர்களின் கைகளில் மஞ்சள் கயிற்றாலான காப்புகளை கோவில் அர்ச்சகர்கள் அணிவித்தனர். தசரா குழுவினர் மொத்தமாகவும் காப்புகளை வாங்கி சென்று, தங்களது ஊர்களில் விரதமிருக்கும் பக்தர்களுக்கு வழங்கினர்.

    காப்பு அணிந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து, விழா நிறைவில் கோவிலில் செலுத்துவார்கள். தசரா குழுவினரும் பல்வேறு ஊர்களுக்கு சென்று கலைநிகழ்ச்சி நடத்தி காணிக்கை வசூலித்து கோவிலில் செலுத்துவார்கள்.

    விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் செவ்வாடை அணிந்து திரளான பக்தர்கள் கார், வேன், பஸ்களில் கோவிலுக்கு வந்தனர். கடலில் புனித நீராடிய பக்தர்கள், தாங்கள் விரதம் இருக்கும் தசரா பிறையில் தெளிப்பதற்காக புனிதநீரை எடுத்து கோவிலுக்கு வந்து வழிபட்டனர். கோவிலில் பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர்.

    இரவில் அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 2-ம் நாளான இன்று (திங்கட்கிழமை) இரவில் கற்பக விருட்ச வாகனத்தில் விசுவகர்மேசுவரர் திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.

    விழா நாட்களில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளும், மாலையில் சமய சொற்பொழிவு, பல்சுவை நிகழ்ச்சிகளும், இரவில் அம்மன் வீதி உலாவும் நடைபெறுகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 10-ம் திருநாளான வருகிற 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு நடக்கிறது.

    விழாவையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்தும் குலசேகரன்பட்டினத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், தக்கார் சங்கர் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • ஆண்டு தோறும் மாசி மாத பவுர்ணமியை யொட்டி 3 நாட்கள் பொங்கல் விழா நடந்து வருகிறது.
    • அடர்ந்த வனப்பகுதியில் ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து கருவண்ணராயர், ெபாம்மா தேவியை வழி பட்டனர்.

    சத்தியமங்கலம்,

    சத்தியமஙகலம் புலிகள் காப்பகத்துக்குட் பட்ட பவானிசாகர் வனப்பகுயில் தெங்குமரகடா செல்லும் வழியில் அடர்ந்த வன ப்பகுதியில் கெஜலெட்டி பகுதி அமைந்துள்ளது.

    இந்த அடர்ந்த வனப்பகுதி யில் பிரசித்தி பெற்ற ஆதி கருவண்ண ராயர், பொம்மா தேவி கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவில் உப்பிலி நாய்க்கர் சமுதாய மக்களின் குல தெய்வமாக இருந்து வருகிறது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாத பவுர்ணமியை யொட்டி 3 நாட்கள் பொங்கல் விழா நடந்து வருகிறது. இந்த கோவில் விழாவையொட்டி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கர்நாடகா மாநில ங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்வார்கள்.

    இதையொட்டி இந்தா ண்டுக்கான ஆதி கருவண்ண ராயர் பொம்மா தேவி கோவில் 3 நாள் மாசி மாத பொங்கல் விழா நேற்று மதியம் கணபதி ேஹாமம் செய்யப்பட்டு தொடங்கியது. விழாவையொட்டி நேற்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வர தொடங்கி னர்.

    தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி மற்றும் கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அவர்கள் பஸ், லாரி, கார், வேன் மற்றும் பல்வேறு வாகனங்களில் வந்த வண்ணம் உள்ளனர். சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்து வருகிறார்கள்.

    இதையொட்டி பவானி சாகர் வனத்துறை சார்பில் வன சரகர் சிவகுமார் தலை மையில் காராச்சி கொரை வன சோதனை சாவடியில் வாகனங்கள் தீவிர சோத னைக்கு பிறகே அனு மதிப்பட்டு வருகிறார்கள்.

    இதைெயாட்டி இன்று (திங்கட்கிழமை) காலை பொங்கல் விழா நடந்து வருகிறது. இதில் அடர்ந்த வனப்பகுதியில் ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து கருவண்ணராயர், ெபாம்மா தேவியை வழி பட்டனர்.

    இதை ெதாடர்ந்து இன்று மாலை முதல் கிடா வெட்டு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஆடு, கோழிகளை பக்தர்கள் பலியிட்டு வழிபடுகிறார்கள். தொடர்ந்து இன்று மாலை முதல் விடிய, விடிய கிடா வெட்டு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக பக்தர்கள் ஏராளமானோர் ஆடு, கோழிகளை கொண்டு வந்திருந்தனர். அவற்றை வனப்பகுதியில கட்டி பராமரித்து வரு கிறார்கள்.

    இதை தொடர்ந்து சுவாமிக்கு பலியிடப்பட்ட ஆடு, கோழிகளை அடர்ந்த வனப்பகுதியில் சமைத்து சாப்பிடுகிறார்கள். இதை யடுத்து நாளை காலை சிறப்பு பூஜை நடக்கிறது.

    மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லாத வாறு வனத்துறையினர் மற்றும் பவானிசாகர் போலீ சார் தொடர்ந்து கண்கா ணித்து வருகிறார்கள்.

    • புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை ஆதலால் இன்று பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர், மகாவிஷ்ணு கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு அபிேஷகம் மற்றும் வழிபாடு, பஜனைகள் நடந்தது.
    • சென்னிமலை பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    ஈரோடு:

    புரட்டாசி மாதம் பெருமாள் மற்றும் ஆஞ்ச நேயர், மகா விஷ்ணுவிற்கு உகந்த மாதமாக கருதி பெருமாள் வழிபாடு செய்வர். பலரும் விரதமி ருந்து பெருமாளை வழிபாடு செய்வது வழக்கம், புரட்டாசியில் வரும் சனிக்கிழமை மேலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இன்று இந்த வருடத்தில் புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை ஆதலால் இன்று பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர், மகாவிஷ்ணு கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு அபிேஷகம் மற்றும் வழிபாடு, பஜனைகள் நடந்தது. இதனால் சென்னிமலை பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    சென்னிமலை அடுத்துள்ள மேலப்பாளையம் ஆதிநாரயணப்பெருமாள் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று பெருமாளை தரிசித்தனர்.

    முருங்கத்தொழுவு கிராமம் வடுகபாளையம் அடுத்துள்ள மலை மீது அமைந்துள்ள அணியரங்கப்பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    வெள்ளோடு பெருமாள் கோவில், தண்ணீர்பந்தல் கிருஷ்ண பெருமாள் கோவில், கவுண்டம் பாளையம் வெங்கடேஷ பெருமாள் கோவில் மற்றும் சென்னிமலை டவுன், ஈங்கூர் ரோட்டில் உள்ள செல்வ ஆஞ்சநேயர் மற்றும் விஸ்வ ரூப மகா விஷ்ணு ஆலயத்தில் காலை 7 மணிக்கு ஆஞ்சநேயர் மற்றும் மகாவிஷ்ணு விற்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.

    அதை தொடர்ந்து அலங்கார பூஜைகள் நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானமும் வழங்கப்பட்டது.

    ஈரோடு கோட்டை பெருமாளுக்கு புரட்டாசி முதல் சனிக்கிழமையை யொட்டி இன்று அதிகாலை சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டு இருந்தது. இதை யொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்தி ருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பவானி அருகே உள்ள பெருமாள் மலை பகுதியில் மலை மேல் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி மங்களகிரி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடை பெற்றது.

    முன்னதாக மங்களகிரி பெருமாளுக்கு பால், தயிர், இளநீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபுஷேகம் செய்ய ப்பட்டது.

    இதையொட்டி இன்று காலை பவானி, ஈரோடு, சித்தோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பலர் வந்து மலை மீது வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    அதேபோல் சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஆதி கேசவப் பெருமாள் சன்னதியில் உள்ள உற்சவர் மற்றும் மூலவருக்கு இன்று சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    புரட்டாசி முதல் சனிக்கிழ மையையொட்டி கோபி செட்டிபாளையம் அருகே உள்ள மூல வாய்க்கால் மலை ஸ்ரீதேவி பூதேவி கரி வரதராஜ பெருமாள் கோவிலில் காலை 7 மணி அளவில் பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவி யங்கள் அடங்கிய அபி ஷேகங்கள் நடைபெற்றன.

    அதை தொடர்ந்து சுவாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடை பெற்றன. அதை தொடர்ந்து மலையை சுற்றி சிறிய தேர் மூலம் சுவாமி திருவீதி உலா வந்தது.

    மேலும் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவில், கோபி வரதராஜ பெருமாள் கோவில், மேட்டு வளவு பெருமாள் கோயில், மொடச்சூர் பெருமாள் கோவில்,கூகலூர் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடை–பெற்றன.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டு சென்றனர். மேலும் அந்தியூர் பேட்டை பெருமாள் கோவி லில் இன்று பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்ய ப்பட்டு திருப்பதி அலங்கா ரம் செய்யப்பட்டு இருந்தது.

    இதே போல் அந்தியூர் அழகுராஜ பெருமாள், தவிட்டு பாளையம் வரத ராஜ பெருமாள், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள வீரநாராயண பெருமாள், பெருந்துறை பிரசன்ன வெங்கட்ட ரமண பெருமாள், சத்தியமங்கலம் கேகாட்டு வீராம்பாளையம் பெருமாள், ஈரோடு சத்தி ரோடு கொங்கு பெருமாள் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு அலங்காரம் செயய்ப்பட்டு இருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டது.

    ×