என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கட்சியினர் ஆர்ப்பாட்டம்"
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வேலூர் தெற்கு செயலாளர் செல்வி தலைமை தாங்கினார். வேலூர் வடக்கு செயலாளர் பாண்டுரங்கன், காட்பாடி செயலாளர் சுடரொளியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் சங்கரி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் தயாநிதி கலந்து கொண்டு பேசினார். இதில் அணைக்கட்டு அடுத்த அத்திமரத்துக்கொல்லை மலை கிராமத்தில் பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும்.
மலை கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பகுதிநேர ரேசன் கடை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நாராயணன், சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி கோவை உக்கடத்தில் நடந்தது.
- பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற னர்.
கோவை,
பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி கோவை உக்கடத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் பாசிச எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முஸ்தபா தலைமை தாங்கினார். இதில் மாநிலத் துணைத் தலைவர் அப்துல் ஹமீத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்தும், அந்த இடத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ராமர் கோவில் கட்டப்பட்டதை நினைவுபடுத்தும் விதமாக மத்திய அரசை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. நாட்டிலுள்ள மதசார்பற்ற அரசுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அந்த இடத்தை மீட்டு தர குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திக் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற னர்.
- அந்தியூர் தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
- இதில் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், பர்கூர் மலை பகுதி மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அந்தியூர்:
அந்தியூர் தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி சார்பில் அந்தியூர் தாலுகா செய லாளர் தேவராஜ், பர்கூர் வட்டார குழு செயலாளர் கணேசன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் கோவில் நத்தம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். மாற்றுத்திறனாளி. அவரது வீட்டிற்கு புகுந்து அவரது உறவினர்கள் செல்வத்தை தாக்கி அவரை கொலை செய்ய முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது.
அதை தடுத்த அவரது மனைவி மாதேவியையும் அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. எனவே அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
இதில் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், பர்கூர் மலை பகுதி மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்