search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலிண்டர் வெடிப்பு"

    • இசக்கியம்மாள் தண்ணீர் பிடிப்பதற்காக வீட்டிற்கு வெளியே சென்றுள்ளார்.
    • சிலிண்டர் வெடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள கீழச்செழியநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி (70). விவசாயி. இவரது மனைவி விஜயா (60). இவர்களுக்கு இசக்கியம்மாள் (28), சுடலை மணி (20) உள்ளிட்ட 9 மகன், மகள் உள்ளனர்.

    இசக்கியம்மாள் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். அவருக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ள நிலையில் அவரது கணவர் அவர்களை விட்டு சென்று விட்டார்.

    இதனால் இசக்கியம்மாள் தனது குழந்தைகளுடன் அவரது பெற்றோர் வீட்டின் அருகிலேயே வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு இசக்கியம்மாள் வீட்டில் உள்ள கியாஸ் அடுப்பில் சமையல் செய்துள்ளார்.

    அவரது குழந்தைகள் பக்கத்தில் உள்ள தாத்தா கணபதி வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனிடையே இசக்கியம்மாள் தண்ணீர் பிடிப்பதற்காக வீட்டிற்கு வெளியே சென்றுள்ளார்.

    அப்போது சமையலறையில் இருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. அதே போல் மற்ற சுவர்களும் விரிசல் ஏற்பட்டு மேற்கூரையும் பலத்த சேதம் அடைந்தது.

    இந்த சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கியாஸ் அடுப்பில் கசிவு ஏற்பட்டு அதனால் சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின்போது இசக்கியம்மாள் வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

    மேலும் சிலிண்டர் வெடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இன்று காலை கிரஷருக்கு பயன்படுத்தும் சிலிண்டரை வண்டியில் இருந்து தொழிலாளர்கள் சிலர் இறக்கி கொண்டிருந்தனர்.
    • தாசநாயக்கன் பாளையத்தை சேர்ந்த டிரைவர் சதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான கிரஷர் நிறுவனம் உள்ளது.

    இந்தநிலையில் இன்று காலை கிரஷருக்கு பயன்படுத்தும் சிலிண்டரை வண்டியில் இருந்து தொழிலாளர்கள் சிலர் இறக்கி கொண்டிருந்தனர். அப்போது சிலிண்டர் வெடித்து திடீரென பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் தாசநாயக்கன் பாளையத்தை சேர்ந்த டிரைவர் சதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த 2 பேரையும் மீட்டு சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். உயிரிழந்த சதீஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் வீட்டில் இருந்த பொருட்கள் தீப்பற்றி எரிந்தது.
    • கியாஸ் சிலிண்டரில் இருந்த ரெகுலேட்டர் பழுதானதால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதிதாக வாங்கி மாட்டி உள்ளனர்.

    திருநின்றவூர்:

    ஆவடியை அடுத்த கோவில்பதாகையை சேர்ந்தவர் ரோஜா (வயது 52). இவரது மகன் சங்கர்ராஜா. இவர் அதே பகுதி பிருந்தாவன் நகரில் டீக்கடை வைத்து உள்ளார். இவரது மனைவி அனிதா. இவர்களது மகள் கீர்த்திகா (11), மகன் கவுதம் (9) அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள்.

    நேற்று இரவு ரோஜா சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது சிலிண்டரில் இருந்து கசிந்து இருந்த கியாஸ் தீப்பற்றியது. மேலும் கியாஸ் சிலிண்டரும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    இதில் ரோஜா அவரது மகன் சங்கர் ராஜா மற்றும் சங்கர்ராஜாவின் மகள் கீர்த்திகா, மகன் கவுதம் ஆகிய 4 பேரும் உடல் கருகினர். அனிதா மற்றொரு சமையல் அறையில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

    கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் வீட்டில் இருந்த பொருட்கள் தீப்பற்றி எரிந்தது. அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து ஆவடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    உடல் கருகிய ரோஜா உள்பட 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரோஜா இன்று மதியம் பரிதாபமாக இறந்தார். அவரது மகன் உள்பட 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கியாஸ் சிலிண்டரில் இருந்த ரெகுலேட்டர் பழுதானதால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதிதாக வாங்கி மாட்டி உள்ளனர். ஆனால் அது சரியாக பொருந்தாமல் தொடர்ந்து கியாஸ் கசிந்து உள்ளது.

    இதனை கவனிக்காமல் சமையல் செய்ய கியாஸ் அடுப்பை பற்ற வைத்தபோது கியாஸ் சிலிண்டர் வெடித்து ரோஜா பலியாகி விட்டார்.

    இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கியாஸ் கசிந்ததால் குபீரென தீப்பிடித்தது. இதில் வீட்டின் சுவர்களும் இடிந்து விழுந்தது.
    • தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் கார்மேகம், மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

    சேலம்:

    சேலம் பொன்னம்மாப்பேட்டை அண்ணாநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது வீட்டின் முதல் மாடியில் மாணிக்கம் (வயது 63) என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இவரது மனைவி ராஜேஷ்வரி.

    இவர் இன்று காலை வீட்டில் காபி போடுவதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது கியாஸ் கசிந்ததால் குபீரென தீப்பிடித்தது. இதில் வீட்டின் சுவர்களும் இடிந்து விழுந்தது.

    இந்த விபத்தில் வீட்டில் இருந்த மாணிக்கம் (63), ராஜேஷ்வரி (59) மற்றும் இவர்களது மகள்கள் பிரியா (36), பானுமதி (33) மற்றும் இவர்களது குழந்தைகள் அவினேஷ் (8), சச்சின் (5) உள்பட பேருக்கும் தீக்காயம் மற்றும் சுவர் இடிபாடுகளுக்குள் சிக்கியதால் ரத்த காயமும் ஏற்பட்டது. இதனால் வலியால் அலறி துடித்தனர். இதனை அறிந்த அந்த பகுதியினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    தகவல் அறிந்த அமாப்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று 7 பேரையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் கார்மேகம், மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் விபத்துக்கான காரணம் கு றித்தும் கேட்டறிந்தனர். தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் பார்த்து ஆறுதல் கூறியதுடன் உடல் நலம் விசாரித்தனர். அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார்.

    • சிலிண்டர் விபத்தில் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம் மற்றும் அவரது 3 மகள்களும் பலியாகி விட்டனர்.
    • சிலிண்டர்கள் வெடித்த நாள் அன்று ஜீவானந்தத்தின் மனைவி உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக வெளியில் சென்று இருந்தார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே உள்ள தேவேரியம்பாக்கத்தில் கியாஸ் சிலிண்டர் குடோன் இருந்தது. இதனை அதே பகுதியை சேர்ந்த ஜீவானந்தம் என்பவர் நடத்தி வந்தார்.

    இதில் கடந்த மாதம் 28-ந் தேதி இரவு திடீரென சிலிண்டர்கள் வெடித்து சிதறின. இதில் குடோன் முழுவதும் பற்றி எரிந்தது. அருகில் இருந்த வீடுகளுக்கும் தீ பரவியது. இந்த விபத்தில் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம், அவரது மகள்கள் நிவேதிதா (வயது24), சந்தியா, பூஜா மற்றும் ஊழியர்கள் உள்பட 12 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

    அவர்கள் அனைவரும் செங்கல்பட்டு மற்றும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த குடோன் உரிமையாளர் ஜீவானந்தம் அவரது மகள்கள் பூஜா, சந்தியா உள்பட 10 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

    ஜீவானந்தத்தின் மூத்த மகள் நிவேதிதாவுக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை நிவேதிதாவும் பரிதாபமாக இறந்தார்.

    இதனால் சிலிண்டர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. பலியான நிவேதிதா சென்னையில் உள்ள கல்லூரியில் பி.எச்.டி. படித்து வந்தார். இதேபோல் இறந்த அவரது சகோதரிகள் பூஜாவும், முதுநிலை படிப்பும், சந்தியா இளநிலை பட்டப்படிப்பும் படித்து வந்துள்ளனர்.

    சிலிண்டர் விபத்தில் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம் மற்றும் அவரது 3 மகள்களும் பலியாகி விட்டனர். ஒரே குடும்பத்தில் 4 பேர் பலியான சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சிலிண்டர்கள் வெடித்த நாள் அன்று ஜீவானந்தத்தின் மனைவி உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக வெளியில் சென்று இருந்தார். இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கிறார்.

    மேலும் இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த கும்பகோணத்தை சேர்ந்த ஊழியரான சக்திவேல் என்பவர் மட்டும் உயிர் தப்பினார். அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளார்.

    • கியாஸ் சிலிண்டர் குடோனில் கடந்த மாதம் 28-ந்தேதி திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
    • 12 பேரும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    படப்பை:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த தேவரியம்பாக்கம் பகுதியில் தனியார் கியாஸ் சிலிண்டர் குடோனில் வீட்டுக்கு பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டர்கள் வைக்கப்பட்டிருந்தது.

    இந்த கியாஸ் சிலிண்டர் குடோனில் கடந்த மாதம் 28-ந்தேதி திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கியாஸ் சிலிண்டர்கள் வெடிக்க தொடங்கியதில், மொத்தம் 12 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த 12 பேரும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் அவர்களில் சிகிச்சை பலனின்றி ஆமோத்குமார் (வயது 25), சந்தியா (21), ஜீவானந்தம் (50), குடவாசல் பகுதியை சேர்ந்த குணால் (22), தேவரியம்பாக்கம் பகுதியை சேர்ந்த கிஷோர் (13), சண்முகப்பிரியன் (17), கோகுல் (22), குடவாசல் பகுதியை சேர்ந்த அருண் (23), தேவரியம்பாக்கம் பகுதியை சேர்ந்த தமிழரசன் (11) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த நிலையில் தீ விபத்தில் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தேவரியம்பாக்கம் பகுதியை சேர்ந்த பூஜா (வயது 11) என்ற சிறுமி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில், கியாஸ் குடோன் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

    • கியாஸ் சிலிண்டர் குடோனில் கடந்த மாதம் 28-ந்தேதி தீ விபத்து ஏற்பட்டது.
    • தீ விபத்தில் கியாஸ் சிலிண்டர்கள் வெடிக்க தொடங்கியது. இந்த தீ விபத்தில் மொத்தம் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

    படப்பை:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த தேவரியம்பாக்கம் பகுதியில் தனியார் கியாஸ் சிலிண்டர் குடோனில் வீட்டுக்கு பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டர்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த கியாஸ் சிலிண்டர் குடோனில் கடந்த மாதம் 28-ந்தேதி தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த தீ விபத்தில் கியாஸ் சிலிண்டர்கள் வெடிக்க தொடங்கியது. இந்த தீ விபத்தில் மொத்தம் 12 பேர் படுகாயம் அடைந்தனர். 12 பேரில் சிகிச்சை பலனின்றி ஆமோத்குமார் (வயது25), சந்தியா (21), ஜீவானந்தம் (50), குடவாசல் பகுதியை சேர்ந்த குணால் (22), தேவரியம்பாக்கம் பகுதியை சேர்ந்த கிஷோர் (13), சண்முகப்பிரியன் (17), கோகுல் (22), குடவாசல் பகுதியை சேர்ந்த அருண் (23) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த நிலையில் தீ விபத்தில் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தேவரியம்பாக்கம் பகுதியை சேர்ந்த தமிழரசன் (11), நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கியாஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது.

    • குடும்பத்தினர் ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை பொருட்களை வியாபாரம் செய்வதற்காக சென்றுள்ளனர்.
    • அந்த நேரத்தில் சண்முகசுந்தரம் வீட்டின் வெளியே அமர்ந்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    திண்டிவனம் ரொட்டிக்கார தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். அவரது மகன் சந்தோஷ். இவர் பெருமாள் கோவில் எதிரில் முட்டைக்கடை வைத்துள்ளார்.இவரது குடும்பத்தினர் ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை பொருட்களை வியாபாரம் செய்வதற்காக சென்றுள்ளனர். அப்போது வீட்டில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு, மின் வயர்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது.

    இதனால் சமையலறையில் இருந்த காஸ் சிலிண்டரும் எரிந்து பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. அந்த நேரத்தில் சண்முகசுந்தரம் வீட்டின் வெளியே அமர்ந்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் வீட்டிலிருந்த சுமார் 4 லட்சம் மதிப்பிலான மின்சாதன பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. மக்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ள பகுதியில் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடோன் உரிமையாளர் ஜீவானந்தம், அவரது மகள் சந்தியா, மற்றும் ஆமோத்குமார் ஆகியோர் பலியானார்கள்.
    • வட்டாட்சியர் லோகநாதன் தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள் இன்று அதிகாலை கியாஸ் குடோனுக்கு வந்து ஆய்வு செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    ஒரகடம் அடுத்த தேவரியம்பாக்கத்தில் உள்ள கியாஸ்குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 பேர் உடல் கருகினர். இதில் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம், அவரது மகள் சந்தியா, மற்றும் ஆமோத்குமார் ஆகியோர் பலியானார்கள். மேலும் 9 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நேற்று இரவு கியாஸ் ஏஜென்சி அலுவலர்கள் முன்னிலையில் குடோனில் இருந்த அனைத்து சிலிண்டர்களும் வெளியே கொண்டு செல்லப்பட்டது. இதில் ஏராளமான கியாஸ் சிலிண்டர்கள் தீயில் கருகி இருந்தன.

    இந்த நிலையில் வட்டாட்சியர் லோகநாதன் தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள் இன்று அதிகாலை கியாஸ் குடோனுக்கு வந்து ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் குடோனுக்கு சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த நிறுவனத்தின் கியாஸ் உரிமம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும், மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமையில் தீயணைப்பு, வருவாய்த்துறை, தடயவியல் துறை உள்ளிட்ட 5 துறையைச் சேர்ந்த குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தனர்.

    • செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கியாஸ் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம் இன்று காலை இறந்தார்.
    • கியாஸ் குடோன் தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்து உள்ளது.

    காஞ்சிபுரம்:

    ஒரகடம் அடுத்த தேவேரியம் பாக்கத்தில் உள்ள தனியார் கியாஸ் குடோனில் நேற்று முன்தினம் மாலை பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த சிலிண்டர்கள் வெடித்து அருகில் இருந்த வீடுகளுக்கும் தீ பரவியது.

    இந்த விபத்தில் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம் (வயது 51), அவரது மகள்கள் சந்தியா (21), பூஜா, நிவேதா, பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஆமோத்குமார் (25), குணால், சக்திவேல், அருண், கோகுல், தமிழரசன் உள்பட 12 பேர் உடல் கருகினர்.

    அவர்கள் அனைவரும் செங்கல்பட்டு மற்றும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி ஆமோத்குமார், செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சந்தியா ஆகிய 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

    இதற்கிடையே செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கியாஸ் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம் இன்று காலை இறந்தார்.

    இதனால் கியாஸ் குடோன் தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்து உள்ளது.

    மேலும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் 5 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 4 பேரும் தொடர்ந்து தீவிர சிகிச்சையில் உள்ளனர். அவர்களது உடல் நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். கியாஸ் குடோன் தீ விபத்து தொடர்பாக பலியான கியாஸ் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம், ஊராட்சி தலைவர் அஜய் உள்பட 5 பேர் மீது ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×