search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உதவியாளர்"

    • சட்ட விரோத பரிவர்த்தனை வழக்கின் கீழ் இஸ்வர்லால் ஜெயினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
    • பினாமி சொத்துக்கள் தவிர ரூ.50 கோடிக்கும் அதிகமான 60 சொத்துக்களும் பற்றிய விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

    மும்பை:

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொருளாளர் இஸ்வர்லால் ஜெயின். இவர் சரத்பவாரின் உதவியாளர் ஆவார்.

    வங்கியில் ரூ.353 கோடி கடன் வாங்கி விட்டு அதை செலுத்தாமல் மோடி செய்து விட்டதாக முன்னாள் எம்.பி.யான இஸ்வர்லால் ஜெயின் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

    சட்ட விரோத பரிவர்த்தனை வழக்கின் கீழ் இஸ்வர்லால் ஜெயினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    ஜல்கான், நாசிக், தானே ஆகிய பகுதிகளில் 13 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர் மற்றும் அவரது குடும்பத்தார் மற்றும் அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

    இந்த சோதனையில் ரூ.25 கோடி மதிப்புள்ள 39 கிலோ தங்க வைர நகைகள் மற்றும் ரூ.1.1 கோடி ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அமலாக்கத்துறை இதை தெரிவித்துள்ளது.

    இந்த சோதனையின் போது பினாமி சொத்துக்கள் தவிர ரூ.50 கோடிக்கும் அதிகமான 60 சொத்துக்களும் பற்றிய விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

    • வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி சிறுமியை அடிக்கடி பலாத்காரம் செய்து வந்தார்.
    • போலீஸ் உதவி கமிஷனர் விவேகானந்தன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், கஞ்சர பாலத்தை சேர்ந்தவர் கடற்படை அதிகாரி. இவரது மகள் அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த பள்ளியில் உதவியாளராக இருப்பவர் சத்யா ராவ் (வயது 40). சிறுமி வசிக்கும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் சத்யா ராவ் வசித்து வருகிறார்.

    இருவரும் ஒரே குடியிருப்பில் வசித்து வருவதால் மாணவிக்கு பாடம் கற்றுக் கொடுக்கவும், ஓவியம் வரைய கற்றுக் கொடுக்கவும் சத்யா ரா வ் மாணவியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார்.

    மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவியை சத்யா ராவ் வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார். அதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

    வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி சிறுமியை அடிக்கடி பலாத்காரம் செய்து வந்தார்.

    வீட்டில் அவரது பெற்றோர் இருக்கும் நேரத்தில் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தார்.

    மேலும் மாணவியின் நிர்வாண வீடியோவை தனது நண்பர்கள் 3 பேருக்கு அனுப்பி வைத்தார். அவர்களும் வீடியோவை காட்டி மாணவியை பணிய வைத்து கட்டாயமாக பலாத்காரம் செய்தனர்.

    கடந்த மாதம் 3-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை பலமுறை மாணவியை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

    கடந்த 6-ந் தேதி மாணவி மிகவும் சோர்வாக காணப்பட்டார். இதனை கண்ட அவரது தாய் மாணவியிடம் விசாரித்தார். அப்போது நடந்த சம்பவம் அனைத்தையும் தனது தாயிடம் மாணவி தெரிவித்தார்.

    இதையடுத்து மாணவியின் தாய் விசாகப்பட்டினம் விமான நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீஸ் உதவி கமிஷனர் விவேகானந்தன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சத்யாராவ் மாணவியை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டு சத்யாராவை போக்சோ சட்டத்தில் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.1,500 வேலையளிக்கும் முகமைக்கு விடுவிக்கப்படும்.
    • மேற்குறிப்பிட்ட நாளுக்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்ட கிராம ஊராட்சிகளில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டப்பணிகளை கண்காணிப்பதற்காக வெளிமுகமை முறையில் 100 எண்ணிக்கையிலான தொழில்நுட்ப உதவியாளர்கள் முற்றிலும் தற்காலிகமாக ஊக்க ஊதியம் அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.

    இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இப்பணியிடத்திற்கான கல்வி தகுதிகள் டிப்ளமோ / பொறியியல் படிப்பில் சிவில் என்ஜினீயரிங் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் கட்டுமான பணியில் குறைந்தபட்சம் 2 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

    5 வருடத்திற்கு மேலான அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    வயது முதிர்வின் காரணமாக பணிஓய்வு பெற்றுள்ள உதவி பொறியாளர்கள் / பணி மேற்பார்வையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    ஊதியமுறைகளானவை பயனாளிகளின் வீட்டின் நிலைகளுக்கு ஏற்ப தவணை தொகைகள் விடுவிப்பதன் அடிப்படையில் மட்டுமே ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    ஒரு வீட்டிற்கான 4 நிலைகளில், ஊக்க த்தொகையாக பேஸ்மண்ட் நிலைக்கு 30 சதவீத தொகை ரூ.450-ம், ஜன்னல் மட்டம் நிலைக்கு 30 சதவீத தொகை ரூ.450-ம், கூரை மட்டம் நிலைக்கு 20 சதவீத தொகை ரூ.300-ம், பணி முடிவுற்ற நிலைக்கு 20 சதவீத தொகை ரூ.300-ம் ஆக கூடுதலாக ரூ.1,500 வேலையளிக்கும் முகமைக்கு விடுவிக்கப்படும்.

    இப்பணிக்காக ஊதியம் ஏதும் தனியாக வழங்கப்பட மாட்டாது.

    நிபந்தனை களானவை, நிலுவையிலுள்ள வீடுகள் "அனைவருக்கும் வீடு" மொபைல் செயலி மூலம் ஒவ்வொரு தொழில்நுட்ப உதவியா ளருக்கும் இணைக்கப்படும். பணியில் சேரும் தொழில்நுட்ப உதவியாளர்கள் வேலை யளிக்கும் முகமையின் கீழ் வந்ததாக கருதப்படுவர்.

    தனியார் எந்த வகையிலும் அரசுப்பணியில் உரிமை கோர இயலாது. (PMAY(G)) திட்டம் செயலாக்கம் முடிவுற்றதும் பணியிலிருந்து விடுவிக்கப்படுவர்.

    உரிய கல்விச்சான்று நகல் மற்றும் அனுபவ சான்று நகல் ஆகிய வற்றுடன் விண்ணப்பத்தை நேரடியாகவோ (அ) அஞ்சல் வழியாகவோ நாளை (05-ந் தேதிக்குள்) மேலாளர், மாவட்ட முகமை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், திருவாரூர் என்ற முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

    மேற்குறிப்பிட்ட நாளுக்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 108 ஆம்புலன்சு உதவியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • வச்சகாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள முதலிப்பட்டிைய சேர்ந்தவர் சமுத்திரகனி. இவரது மகன் சண்முககனி(வயது29). இவர் 108 ஆம்புலன்சில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சண்முககனி தான் ஒரு பெண்ணை காதலிப்ப தாகவும் திருமணம் செய்து வைப்பதாகவும் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

    அதற்கு அவர்கள் சிறிது காலத்திற்கு பின் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த சண்முககனி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து வச்சகாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக கார்த்திகேயன் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
    • தஞ்சை சத்திரம் நிர்வாக தனி தாசில்தாராக ஜெயலெட்சுமி பணிமாறுதல் பெற்றுள்ளார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் வருவாய் துறையில் பணியாற்றி வரும் 22 தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

    அதன் விவரம் வருமாறு:-

    திருவிடைமருதூரில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணிபுரிந்து வந்த ஜானகிராமன், பூதலூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    அங்கு பணியாற்றி வந்த தாசில்தார் புண்ணியமூர்த்தி, கும்பகோணம் நகர நிலவரித்திட்ட தனிதாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றி வந்த ரவிச்சந்திரன், திருவிடைமருதூர் சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    இங்கு பணியாற்றி வந்த சித்ரா, கும்பகோணம் கலால் மேற்பார்வை அலுவலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றிய கார்த்திகேயன், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

    தஞ்சை அரசு கேபிள் டி.வி. நிறுவன தனி தாசில்தார் முருககுமார், பாபநாசம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பாபநாசத்தில் பணியாற்றி வந்த சுஜாதா, தஞ்சை வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    அங்கு பணியாற்றிய சிவக்குமார், ஒரத்தநாடு வட்ட வழங்கல் அலுவலராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றி வந்த சுமதி, பட்டுக்கோட்டை கோட்ட கலால் அலுவலராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

    பட்டுக்கோட்டை கோட்ட கலால் அலுவலர் ரீட்டா ஜெர்லின், கும்பகோணம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றி வந்த இளமாருதி, ஒரத்தநாடு சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றிய தமிழ்ஜெயந்தி, தஞ்சை மாவட்ட ஆய்வுக்குழு அலுவலக துணை அலுவலராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

    நாகை அலகு முத்திரை கட்டண தனிதாசில்தாராக பணிபுரிந்த கஜேந்திரன், தஞ்சை கலால் மேற்பார்வை அலுவலராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய மலர்குழலி, பட்டுக்கோட்டை அலகு முத்திரை தான் கட்டண தனி தாசில்தாராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

    இங்கு பணியாற்றி வந்த மல்லிகா தேவி, தஞ்சை கலால் அலுவலக மேலாளராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றி வந்த சுரேஷ், ஒரத்தநாடு தாசில்தாராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார். தஞ்சை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணிபுரிந்த ஜெயலெட்சுமி, தஞ்சை சத்திரம் நிர்வாக தனி தாசில்தாராக பணிமாறுதல் பெற்றுள்ளார்.

    தஞ்சை சத்திரம் நிர்வாக தனி தாசில்தாராக இருந்த சக்திவேல், தஞ்சை தாசில்தாராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார். தஞ்சை தாசில்தாராக பணியாற்றிய மணிகண்டன், நாகை அலகு முத்திரைத்தாள் கட்டண தனி தாசில்தாராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

    தஞ்சை டாஸ்மாக் நிறுவன உதவி மேலாளர் வெங்கடேஸ்வரன், கும்பகோணம் தாசில்தாராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார். கும்பகோணம் தாசில்தார் தங்கபிரபாகரன், தஞ்சை டாஸ்மாக் நிறுவன உதவி மேலாளராக பணி மாறுதல் பெற்றுளார்.

    பேராவூரணி தாசில்தார் அலுவலக கூடுதல் தலைமை இடத்து துணை தாசில்தார் சமத்துவராஜ், தஞ்சை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலக தலைமை உதவியாளராக பணியிடை மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×