என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மலர் அஞ்சலி"
- தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்ட மன்ற கட்சி தலைவர் ராஜேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.
- ராஜீவ்காந்தி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்படுகிறது.
சென்னை:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 33-வது ஆண்டு நினைவு நாள் நாளை கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில நாளை காலை 7 மணிக்கு ராஜீவ்காந்தி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்படுகிறது. பின்னர் ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சிகளில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்ட மன்ற கட்சி தலைவர் ராஜேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.
இதன் பிறகு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு தண்ணீர் பந்தலும் திறந்து வைக்கப்படுகிறது.
காலை 9 மணி அளவில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்படுகிறது. கர்நாடகா மற்றும் கேரளாவில் இருந்து யாத்திரையாக கொண்டு வரப்படும் ராஜீவ் நினைவு ஜோதியை பெற்றுக் கொள்ளும் நிகழ்ச்சியும் நினைவேந்தல் உரையும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியிலும் காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த தகவலை தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவரும், ஊடக பொறுப்பாளருமான கோபண்ணா தெரிவித்துள்ளார்.
- குமரிமுனை திருக்குறள் திருவிழாவையொட்டி நடந்தது
- அறக்கட்டளை பொறுப்பாளர் ராமன் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி திருவள்ளுவர் அறக்கட் டளை சார்பில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் 1-ந்தேதி குமரிமுனை திருக்குறள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.
அதேபோல வைகாசி மாத பிறப்பான நேற்று 17-வது ஆண்டு குமரி முனை திருக்குறள் திருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கன்னியா குமரி முக்கடல் சங்கமம் சங்கிலித்துறை கடற்கரையில் அமைந்துள்ள திருக்குறள் ஒண்சுடர் தூணில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.
தமிழ் அறிஞர் செந்தூர் பாரி சுடர் ஏற்றி வைத்தார். பின்னர் திருவள்ளுவர் அறக்கட்டளை செயல் பொறுப்பாளர் தாகூர் மற்றும் தமிழ் அறிஞர் கணேஷ் ஆகியோர் முன்னிலையில் திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு திருவள்ளுவர் அறக்கட்டளை பொறுப்பாளர் கதிர் முத்தையன் தலை மையில் தமிழ் அறிஞர்கள் படகில் புறப்பட்டு சென்று திருவள்ளுவர் சிலையின் கால் பாதத்தில் மலர் தூவி வழிபட்டனர். மாலையில் லீபுரம் சந்திப்பில் இருந்து திருக்குறளூருக்கு தமிழ் அறிஞர்கள் திருவள்ளுவர் அறக்கட்டளை பொறுப்பாளர் ராமன் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.
இந்த ஊர்வலத்தை புனிதா கணேசன் தொடங்கி வைத்தார். பின்னர் இரவு திருக்குறளூரில் பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு திருவள்ளுவர் அறக்கட்டளை ஆட்சி பொறுப்பாளர் தமிழ் முகிலன் தலைமை தாங்கி னார். லீபுரம் பஞ்சாயத்து தலைவி ஜெயக்குமாரி லீன், துணை தலைவர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை பொறுப்பாளர் பாண்டியராஜன் வரவேற்று பேசினார்.
இதில் திருவள்ளுவர் அறக்கட்டளை பொருளாளர் இறையடிகன், பொறுப் பாளர் உதயகுமார் ஆகி யோர் வாழ்த்தி பேசினர். திருக்குறள் தொண்டர் கருப்பசாமியை பாராட்டி இணை செயற்பொறுப்பா ளர் நெடுஞ்சேர லாதன் நினைவு பரிசு வழங்கினார். பின்னர் அறக்கட்டளை பொறுப்பாளர் விமுனா மூர்த்தி, உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை நிறுவனர் குறளமிழ்தன் ஆகியோர் திருக்குறள் திறப்பாடு போட்டி நடத்தினார்கள். முடிவில் அறக்கட்டளை பொறுப்பாளர் நற்றேவன் நன்றி கூறினார்.
- மகாத்மா காந்தியின் 76-வது நினைவு நாளையொட்டி மரியாதை
- பெண்கள் ராட்டையில் நூல் நூற்கும் நூற்பு வேள்வி நடத்தினர்
கன்னியாகுமரி:
மகாத்மா காந்தியின் 76-வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
இதையொட்டி கன்னியா குமரி காந்தி நினைவு மண்டபத்தில் உள்ள காந்தியின் அஸ்தி கட்டத்தின் (நினைவிடம்) முன்பு காந்தி யின் உருவப் படம் பொதுமக்கள் அஞ்சலிக்காக மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.அவரதுஉருவப்படத்துக்கு குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் நாகர் கோவில் ஆர்.டி.ஓ. சேது ராமலிங்கம், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜான் ஜெகத்பிரைட், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் செயல் அலுவலர் ஜீவ நாதன், பேரூராட்சி துணைத் தலைவர் ஜெனஸ்மைக்கேல், சுகாதார அதிகாரி முருகன், சுகாதார மேற்பார்வை யாளர் பிரதீஷ், பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள்ஆனி ரோஸ்தாமஸ், சகாய ஜூடு அல்பினோ ஆனந்த், முன்னாள் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் தாமஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
காந்தி நினைவுநாளை யொட்டி சர்வோதய சங்கத் தைச் சேர்ந்த பெண்கள் ராட்டையில் நூல் நூற்கும் நூற்பு வேள்வி நடத்தி னார்கள். இந்த நூற்பு வேள்வி கன்னியாகுமரி கடலில் காந்தியின்அஸ்தி கரைத்த நினைவுநாளான பிப்ரவரி மாதம் 12-ந் தேதி வரை 14 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.
- 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் போராளி குயிலி நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
- ஆங்கிலேயர்கள் குவித்து வைத்திருந்த ஆயுதக்கிடங்குக்குள் தன் உடல் முழுவதும் எண்ணெய் தடவி தீ வைத்துக்கொண்டு குதித்தார்.
சிவகங்கை
சிவகங்கையில் 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் போராளி குயிலி என்பவர் நவராத்திரி விழாவின் கடைசி நாளான விஜயதசமி தினத்தன்று சிவகங்கை அரண்மனைக்குள் ஆங்கிலேயர்கள் குவித்து வைத்திருந்த ஆயுதக் கிடங்குக்குள் தன் உடல் முழுவதும் எண்ணெய் தடவி தீ வைத்துக்கொண்டு குதித்தார். இதனால், ஆங்கிலேயர்களின் ஆயுதக்கிடங்கு முழுவதுமாக அழிக்கப்பட்டது.
குயிலி ஆயுதக்கிடங்கை அழித்த 242-வது நினைவு தினத்தை முன்னிட்டு வேலுநாச்சியார் மணிமண்டபத்தில் அமைந்துள்ள குயிலியின் நினைவுத் தூணுக்கு அனைத்து சமுதாய தலைவர்களும், அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வான செந்தில்நாதன் தலைமையில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன், நகரசெயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், ஸ்டீபன், சிவாஜி, கோபி, ஸ்ரீதர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், தகவல் தொழில்நுட்ப மண்டல இணை செயலாளர் தமிழ்செல்வன், சங்கர் ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்