search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குயிலி நினைவிடத்தில் மலர் அஞ்சலி
    X

    குயிலி நினைவிடத்தில் மலர் அஞ்சலி

    • 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் போராளி குயிலி நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • ஆங்கிலேயர்கள் குவித்து வைத்திருந்த ஆயுதக்கிடங்குக்குள் தன் உடல் முழுவதும் எண்ணெய் தடவி தீ வைத்துக்கொண்டு குதித்தார்.

    சிவகங்கை

    சிவகங்கையில் 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் போராளி குயிலி என்பவர் நவராத்திரி விழாவின் கடைசி நாளான விஜயதசமி தினத்தன்று சிவகங்கை அரண்மனைக்குள் ஆங்கிலேயர்கள் குவித்து வைத்திருந்த ஆயுதக் கிடங்குக்குள் தன் உடல் முழுவதும் எண்ணெய் தடவி தீ வைத்துக்கொண்டு குதித்தார். இதனால், ஆங்கிலேயர்களின் ஆயுதக்கிடங்கு முழுவதுமாக அழிக்கப்பட்டது.

    குயிலி ஆயுதக்கிடங்கை அழித்த 242-வது நினைவு தினத்தை முன்னிட்டு வேலுநாச்சியார் மணிமண்டபத்தில் அமைந்துள்ள குயிலியின் நினைவுத் தூணுக்கு அனைத்து சமுதாய தலைவர்களும், அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வான செந்தில்நாதன் தலைமையில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன், நகரசெயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், ஸ்டீபன், சிவாஜி, கோபி, ஸ்ரீதர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், தகவல் தொழில்நுட்ப மண்டல இணை செயலாளர் தமிழ்செல்வன், சங்கர் ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×