என் மலர்
நீங்கள் தேடியது "மகேந்திரசிங் தோனி"
- மிகவும் ஊக்கமளிக்கக்கூடிய கேப்டனாக தோனியை பார்க்கிறேன்.
- தோனி போல பதிலடி கொடுக்கக் கூடியவர்கள் சிலர் மட்டுமே இருக்கிறார்கள்.
இந்திய அணியின் தலைசிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக திகழந்தவர் யுவராஜ் சிங். இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும் திகழ்ந்தார். இந்திய அணி 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கும், 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்வதற்கும் யுவராஜ் சிங் முக்கிய பங்காற்றினார்.
யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் தொடர்ந்து எம்.எஸ். டோனியை விமர்சித்து வருகிறார். தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்தவர் என வெளிப்படையாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் திடீரென எம்.எஸ். டோனியை புகழ்ந்து யோக்ராஜ் சிங் பேசியுள்ளார்.
டோனி பற்றி பேசிய யோக்ராஜ் சிங், "மிகவும் ஊக்கமளிக்கக்கூடிய கேப்டனாக டோனியை பார்க்கிறேன். அவரிடம் பிடித்ததே, எப்படி பந்து வீசினால் விக்கெட் விழும் என்பதை அறிந்து பவுலரிடம் அப்படியே சொல்லி விக்கெட் எடுத்ததுதான்.
டோனி பயமற்றவராக இருக்கிறார். ஒருமுறை ஆஸ்திரேலியாவில் மிட்சேல் ஜான்சன் அவரை பணத்தால் அதற்கு அடுத்த பந்திலேயே டோனி சிக்சர் அடித்தார். டோனி போல பதிலடி கொடுக்கக் கூடியவர்கள் சிலர் மட்டுமே இருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
- தமிழில் திரைப்படத் தயாரிப்பில் களம் இறங்கிய இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திரா சிங் தோனி.
- தோனி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் முதல் படத்தை தமிழில் தயாரிக்கின்றனர்.
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி திருமதி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து 'தோனி என்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இந்நிறுவனம் மூலம் தமிழில் திரைப்படம் ஒன்றை தயாரிக்கின்றனர். திருமதி சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு படமாக தயாராகும் இப்படம் விரைவில் தொடங்குகிறது.
இந்நிறுவனம் அனைத்து மொழிகளிலும் பொழுதுபோக்கு அம்சம் உள்ள திரைப்படங்களை தயாரிப்பதற்காக களம் இறங்கி இருக்கிறது. இதற்கான பல கட்ட தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய ஐபிஎல் போட்டிகளை அடிப்படையாகக் கொண்டு பிரபலமான 'ரோர் ஆஃப் தி லயன்' எனும் ஆவணப் படத்தை தயாரித்து வெளியிட்டிருக்கிறது. 'வுமன்'ஸ் டே அவுட்' என்ற பெயரில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தையும் தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்திருக்கிறது.

தோனி என்டர்டெயின்மெண்ட்
இவர்களின் முதல் திரைப்படத்தை 'அதர்வா- தி ஆர்ஜின்' எனும் கிராஃபிக் நாவலை எழுதிய ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். தமிழில் தோனி என்டர்டெய்ன்மெண்ட்டின் முதல் தயாரிப்பை இயக்கும் வாய்ப்பை பெற்றிருக்கும் ரமேஷ் தமிழ்மணி பேசுகையில், ''சாக்ஷி தோனி எழுதிய கதையின் கருவைப் படிக்கும்போதே இதன் தனித்துவத்தை என்னால் உணரமுடிந்தது. புத்தம் புதிதாய் இருந்த இந்த கதை குடும்பங்களை மகிழ்வூட்டி, சிரிக்கவைத்து சிந்திக்கவைக்கும் என்று நம்பினேன். இந்தக் கருவைத் திரைக்கதையாக்கி திரைப்படமாக்கும் வாய்ப்பை அவர் எனக்கு வழங்கியதைப் பெருமையாகக் கருதுகிறேன். இந்தப் பயணத்தில் பங்கேற்பதில் ஒட்டுமொத்தக் குழுவும் முழு ஆர்வத்தில் இணைந்துள்ளது. ஒரு சிறந்த திரைப்படத்தை மக்களுக்குக் கொடுக்கப்போகிறோம் என்ற நம்பிக்கையில் துளிர்க்கும் ஆர்வம் அது" என்று ரமேஷ் தமிழ்மணி கூறியுள்ளார்.
இப்படத்தில் பணியாற்றும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளனர்.
- எம்.எஸ்.டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனாக உள்ளார்.
- கிரிக்கெட்டில் தனது ரோல் மாடல் எப்போதுமே சச்சின்தான் என உருக்கத்துடன் கூறினார்.
புதுடெல்லி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூரில் உள்ள டோனிக்குச் சொந்தமான எம்.எஸ்.டோனி குளோபல் ஸ்கூல் அமைக்கப்பட்ட கிரிக்கெட் மைதானம் திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்த பொதுமக்களுடன் டோனி கலந்துரையாடினார் தோனி. அப்போது ஒருவர், உங்களுடைய கிரிக்கெட் ரோல் மாடல் யார்? எனக் கேட்டார். அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:
கிரிக்கெட்டில் எனது ரோல் மாடல் எப்போதும் சச்சின் டெண்டுல்கர்தான். உங்களைப் போலவே நானும் சச்சின் விளையாடுவதைப் பார்த்து, எப்போதும் அவரைப் போல விளையாட வேண்டும் என நினைத்தேன். பின்னர்தான் நான் உணர்ந்தேன். என்னால் அவரைப் போல விளையாட முடியாது என்று. என் இதயத்தில் அந்த ஆசை எப்போதும் இருக்கும் என தெரிவித்தார்.
- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் அடுத்த படமான தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார்.
- இதற்கான பணிகளில் லோகேஷ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இதில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விஜய் நடிப்பில் உருவாகவிருக்கும் 'தளபதி 70' படத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டோனிக்கு '7' விருப்பமான எண் என்பதால் விஜய்யின் 70வது படத்தை தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
- சென்னை, சேலத்தில் கிரிக்கெட் அகாடமிகள் செயல்பட்டு வருகின்றன.
- ஒசூர் அகாடமி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது.
ஓசூர்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சார்பில் சென்னை துரைப்பாக்கம், சேலம் வாழப்பாடியில் கடந்த ஏப்ரல் மாதம் கிரிக்கெட் பயிற்சி அகாடமிகள் தொடங்கப்பட்டன. இளம் வீரர்கள் இதில் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் எம்.எஸ்.தோனி குளோபல் பள்ளியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அகாடமி அமைக்கப்படுகிறது.

இதற்கான தொடக்க விழா நேற்று நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இங்குள்ள மைதானத்தில் மொத்தம் 8 ஆடுகளங்கள் உருவாக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த பயிற்சி முகாம் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி.
- இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் படங்கள் தயாரிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி தற்போது திரைப்பட உலகில் நுழைவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருகிறார். பல தொழில்களில் பிசியாக இருக்கும் இவர் 'தோனி என்டர்டைன்மெண்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

மகேந்திர சிங் டோனி
இதற்கு முன்பு இவரது தயாரிப்பில் 'ரோர் ஆப்தி லையன்' என்ற ஆவண படம் ஹாஸ்டாரில் வெளியாகியிருந்தது. இதைத்தொடர்ந்து 2011ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதை அடிப்படையாகக் கொண்டு ஆவணப்படம் ஒன்றையும் புராணத்தை அடிப்டையாகக் கொண்டு திரில்லர் படம் ஒன்றையும் தோனி பட நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

மகேந்திர சிங் டோனி
இந்நிலையில் தோனி, தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் படங்கள் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- டோனி ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலக போவதாக சிலர் பதிவிட்டனர்.
- இதுதான் உற்சாகமான செய்தியா..? என ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி, திடீரென தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் இன்று மதியம் 2 மணிக்கு உங்கள் அனைவருடனும் சில உற்சாகமான தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறி இருந்தார். பேஸ்புக்கில் நேரலையில் ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். இதனால் ஏதோ புதிய அறிவிப்பை வெளியிடப்போகிறார் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.
டோனி வெளியிடும் முக்கிய தகவல் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதிக்கத் தொடங்கினர். டோனி ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலக போவதாக சிலர் பதிவிட்டனர். டோனி புதிய தொழில் தொடங்குவது அல்லது சினிமா படம் தயாரிப்பது பற்றி தகவல் தெரிவிப்பார் என்றும் தகவல் வெளியானது. மேலும் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு டோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் அதை பற்றி தெரிவிப்பார் என்றும் சில ரசிகர்கள் கணித்தனர்.
ஆனால் இந்த யூகங்களுக்கு எல்லாம் மாறாக, பேஸ்புக் நேரலையில் அவர் அறிவித்த விஷயம், இதெல்லாம் ஒரு விஷயமா? என்று ரசிகர்களை பேச வைத்தது. சொன்னபடி பகல் 2 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட டோனி, ஓரியோ பிஸ்கட் ஒன்றை அறிமுகம் செய்துவிட்டு எழுந்து சென்றார். இதனால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்தியாவில் டோனி மீண்டும் ஓரியோவை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த பிராண்ட் முன்னதாக 2011 இல் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த ஆண்டு இந்தியா உலகக் கோப்பையை வென்றது. இன்றைய பிராண்ட் விளம்பரத்தில், முந்தைய வெளியீடு மற்றும் உலகக் கோப்பை வெற்றியை தற்போதைய சூழ்நிலையுடன் ஒப்பிட்டார். இந்தியா மீண்டும் உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்றும் தெரிவித்தார்.
இதுதான் உற்சாகமான செய்தியா..? என ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். தனது பிராண்ட் விளம்பரத்திற்காக, தன்னை பின்தொடரும் கோடிக்கணக்கான ரசிகர்களை பயன்படுத்தியிருப்பதாகவே நினைக்கத் தோன்றுகிறது. இதற்காக ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.
- எம்.எஸ்.டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக உள்ளார்.
- டோனி ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலக போவதாக சிலர் பதிவிட்டனர்.
ராஞ்சி:
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி. சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்ட அவர் ஐ.பி.எல் போட்டியில் விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக உள்ளார்.
இந்த நிலையில் டோனி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் இன்று (25-ந்தேதி) மதியம் 2 மணிக்கு உங்கள் அனைவருடனும் சில உற்சாகமான தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறி இருந்தார்.
பேஸ்புக்கில் நேரலையில் ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். இதனால் ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. டோனி வெளியிடும் முக்கிய தகவல் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்தனர். டோனி ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலக போவதாக சிலர் பதிவிட்டனர்.
டோனி புதிய தொழில் தொடங்குவது அல்லது சினிமா படம் தயாரிப்பது பற்றி தகவல் தெரிவிப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு டோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் அதை பற்றி தெரிவிப்பார் என்றும் ரசிகர்கள் கணித்து இருக்கிறார்கள்.
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் டோனி விளையாடுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்து இருந்தது. உள்ளூர் ரசிகர்கள் முன்பு விடைபெற விரும்புகிறேன் என்று டோனியும் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த பிரச்சினைகளுக்கு முதல் காரணம் சமூகவலைதளம் தான்.
- ஊடகங்கள் ஒருவரை தொடர்ந்து கொண்டாடும் போது காலப்போக்கில் அது பிராண்டாக மாறிவிடும்.
புதுடெல்லி:
ஒருவரை மட்டும் ஹீரோவாக கொண்டாடும் கலாச்சாரத்தில் இருந்து இந்தியா வெளிவர வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் நேர்காணல் ஒன்றில் அவர் கூறியதாவது:-
விராட் கோலி சமீபத்தில் சதம் அடித்தபோது அவரை நாடே கொண்டாடியது. அதே போட்டியில் சிறிய நகரமான மீரட்டில் இருந்து வந்த புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்களை எடுத்தார். ஆனால், கமெண்டரியில் என்னைத் தவிர யாரும் அவரைப் பற்றி பேசவில்லை. கோலி சதத்தை மட்டும் தான் நாடே கொண்டாடியது. ஹீரோவாக ஒருவரை கொண்டாடுவதில் இருந்து இந்தியா வெளிவர வேண்டும்.
ஊடகங்கள் ஒருவரை தொடர்ந்து கொண்டாடும் போது காலப்போக்கில் அது பிராண்டாக மாறிவிடும். அதுதான் 1983ல் நடந்தது. 2007 மற்றும் 2011லும் நடந்தது" எனக் கூறியுள்ளார். இந்த பிரச்சினைகளுக்கு முதல் காரணம் சமூகவலைதளம் தான். அதிகப்படியான பாலோவர்கள் இருந்தால் அதுவே ஒரு பிராண்டை உருவாக்குகிறது.இரண்டாவதாக, ஊடகங்கள் மற்றும் ஒளிபரப்பாளர்களால்.
ஒருவரைப் பற்றி தினம் தினம் பேசிக்கொண்டே இருந்தால், அது நாளடைவில் ஒரு பிராண்டாக மாறிவிடும் இது 1983 இல் தொடங்கியது. இந்தியா முதல் உலகக் கோப்பையை வென்றபோது, எல்லாம் கபில்தேவ் பற்றியது. 2007 மற்றும் 2011ல் உலக்கோப்பை வென்றபோது தோனி பற்றியது. இதுபோல் உருவாக்கியது யார்? வீரர்கள் யாரும் செய்யவில்லை. பிசிசிஐயும் செய்யவில்லை. செய்தி சேனல்களும் ஒளிபரப்பாளர்களும் இந்திய கிரிக்கெட் பற்றி எப்போதாவது பேசியதுண்டா? என்று அவர் கூறினார்
- கல்லூரி மாணவர்களின் ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி, டோனி புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
- இதுதொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் கூறினார்.
பாட்னா:
பீகார் மாநிலத்தின் தர்பாங்கா மாவட்டத்தில் லலித் நாராயணன் மிதிலா பல்கலைக்கழகம் உள்ளது. அதனுடன் இணைந்த 3 கல்லூரிகளில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான ஹால் டிக்கெட் ஆன்லைன் மூலம் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பி.ஏ. 3-ம் ஆண்டு படிக்கும் சில மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டில் பிரதமர் நரேந்திர மோடி, நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி, பீகார் மாநில கவர்னர் பாகு சவுகான் ஆகியோரது புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. மாணவர்களும் அதை பதிவிறக்கம் செய்து வைத்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக, பல்கலைக்கழக பதிவாளர் முஷ்டாக் அகமது கூறுகையில், மாணவர்கள்தான் தங்களது புகைப்படம் மற்றும் இதர தகவல்களைப் பதிவேற்றம் செய்யவேண்டும். அவற்றை பரிசீலித்து, பல்கலைக்கழகம் ஆன்லைனில் அனுமதி சீட்டை வெளியிடும். சில குறும்புக்கார மாணவர்கள் பிரதமர் மோடி உள்ளிட்டோரின் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்துள்ளனர். இதை தீவிரமாக எடுத்துக்கொண்டு, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வழக்கும் பதிவு செய்யப்படலாம் என தெரிவித்தார்.
- எனது போன் நம்பர் பலரிடம் இருக்கிறது.
- டோனியுடனான மரியாதையும் தொடர்பும் உண்மையானது.
பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் முன்னாள் கேப்டன் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 60 ரன் எடுத்தார். ஆனால் அது பலன் இல்லாமல் போனது.
போட்டியின் முடிவில் விராட் கோலி நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியதும், எம்எஸ் தோனி மட்டுமே எனக்கு மெசேஜ் செய்தார். நிறைய பேரிடம் எனது எண் உள்ளது, ஆனால் யாரும் எனக்கு செய்தி அனுப்பவில்லை. அவருடனான மரியாதையும் தொடர்பும் உண்மையானது.
பாகிஸ்தானுடன் போட்டி கூடுதல் நெருக்கடியாகும். இதனால் இந்த ஆட்டத்தில் யாருக்கும் தவறு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விராட் கோலி நீண்ட நாட்களுக்கு பின் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.
- ஆசிய தொடருக்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி துபாயில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
6 நாடுகள் மோதவுள்ள ஆசிய கோப்பை தொடர் நாளை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. இந்த தொடருக்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி துபாயில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நீண்ட நாட்களுக்கு பின் அணிக்கு திரும்பியுள்ளதால் அவர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் எம்எஸ் டோனி குறித்து இன்ஸ்டாகிராமில் விராட் கோலியின் பதிவு ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
அந்த பதிவில்:- டோனியுடன் துணைக்கேப்டனாக பணியாற்றிய காலங்கள் தான் எனது கிரிக்கெட் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாட்கள் ஆகும். டோனியும் நானும் அமைத்த பார்ட்னர்ஷிப்கள் தான் என்றுமே எனக்கு மிக சிறப்பான ஒன்று. மேலும் 7 + 18 என இருவரின் ஜெர்ஸி நம்பர்களையும் பதிவிட்டு நெகிழ்ச்சியடைந்துள்ளார்.
டோனி மற்றும் விராட் கோலி அமைத்த பார்ட்னர்ஷிப்கள் அதிகப்படியான வெற்றிகளை தேடி தந்துள்ளது. இதனால் ரசிகர்கள் அதனை நினைவுக்கூர்ந்து வருகின்றனர்.
ஆசிய கோப்பை நடைபெறும் சூழலில் விராட் கோலி டோனியுடன் மகிழ்ச்சியாக இருந்தேன் என ஏன் பதிவிட்டார் என்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.