என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சமூக நல்லிணக்கம்"
- சமூக நல்லிணக்க கூட்டம் ஊராட்சி தலைவர் வக்கீல் ராமராஜ் தலைமையில் நடைபெற்றது.
- சட்ட ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது.
சிவகிரி:
சிவகிரி அருகே தேவிபட்ட ணம் ஊராட்சியில் சமூக நல்லிணக்க கூட்டம் ஊராட்சி தலைவர் வக்கீல் ராமராஜ் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலை வர் மாடக்கண்ணு முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் சமூக நல்லிணக்கம் கருதியும், சட்ட ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டும் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது.
மேலும் பஸ் வரும் வழியிலும், பழைய பஸ் நிறுத்தம் (மந்தை மைதானம்) அருகே உள்ள ஆக்கிரமிப்பு களையும் அகற்றுவதற்கு தனியாக அனைத்து சமூகம் மற்றும் அனைத்து கட்சி கொண்ட குழு அமைக்கப்படும் என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து சமுதாய பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- நாட்டுமக்கள் நலமுடன் வாழவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
- நல்லிணக்கத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் சமூக நல்லிணக்க ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி காந்திநகர் ஈ.பி.காலனியில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.நாகராஜ் தலைமை தாங்கினார். மாநகர இளைஞரணி துணை செயலாளர் நாசர்அலி முன்னிலை வகித்தார்.
மாவட்ட பிரதிநிதி முகமது சைபுதீன் வரவேற்றார். மாநகர் மாவட்ட அவைத்தலைவர் நேமிநாதன், பொருளாளர் நல்லூர் மணி, மாநில மகளிரணி துணைச் செயலாளர் சாந்தாமணி, 20-வது வார்டு கவுன்சிலர் குமார், மங்கலம் பகுதி ம.தி.மு.க. நிர்வாகிகள் பாபுசேட் பஷீர் அகமது, 28-வது வார்டு பிரதிநிதி அக்பர் அலி ஆகியோர் வாழ்த்து பேசினர்.
இதில் ஜி.கே.கார்டன் பள்ளி தலைமை இமாம் ஹாஜி மவுலவி முகமது அப்துல் கனி பிரார்த்தனை செய்து நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சாமுண்டிபுரம் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசலின் தலைவர் நாசர், பொருளாளர் முகம்மது இஸ்மாயில், செயலாளர் ஹிதாயத்துல்லா, முத்தவல்லி ஜமாலுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக சமூக ஒற்றுமை வேண்டியும், நாட்டுமக்கள் நலமுடன் வாழவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மும்மதத்தினரும் சமூக நல்லிணக்கத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
முடிவில் மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜ் ஏற்பாட்டின் பேரில் நலஉதவிகள் வழங்கப்பட்டது. இதில் ம.தி.மு.க. பகுதி செயலாளர்கள் குமரவேல், திருநாவுக்கரசு, ஆனந்தகுமார், தளபதி பிரபு, செந்தில்குமார், நல்லூர் ராஜு, மாநகர துணை செயலாளர் பூபதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரத்தில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது.
- முடிவில் த.மு.மு.க நகர தலைவர் முகமது அமீன் நன்றி கூறினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் த.மு.மு.க, ம.ம.க. சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது. த.மு.மு.க மாநில துணை பொதுச்செயலாளர் சலிமுல்லாஹ்கான் தலைமை தாங்கினார். இதில் ஹூசைன் ஆலிம் சிறப்புரையாற்றினார். அவைத்தலைவர் சைபுதீன், ராமநாதபுரம் நகரசபைத்தலைவர் ஆர்.கே.கார்மேகம், துணைத்தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம், நகர்மன்ற உறுப்பினர் காதர் பிச்சை, ஆற்றாங்கரை ஊராட்சி மன்ற தலைவர் முகமது அலி ஜின்னா, த.மு.மு.க மாவட்ட தலைவர் பிரிமியர் இப்ராகீம், செயலாளர் அப்துல் ரஹீம், நகர செயலாளர் முகமது தமீம், நகர் தலைவர் முகமது அமீன், மாவட்ட செயலாளர் முகமது ஆசிக் சுல்தான் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் த.மு.மு.க நகர தலைவர் முகமது அமீன் நன்றி கூறினார்.
- இரட்டை குவளை முறை, முடிவெட்ட மறுப்பது உள்ளிட்ட செயல்கள் நடந்து வருகிறது.
- அனைத்து அரசியல் கட்சியிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமூக நல்லிணக்கத்தையும், அமைதியை ஏற்படுத்த வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி தலைமையில் மாவட்ட துணை செயலாளர் சக்திவேல், நிர்வாகிகள் கலியபெருமாள், பாஸ்கர், மாவட்ட குழு உறுப்பினர் சீனி.முருகையன், ஒன்றிய செயலாளர்கள் பூபேஷ்குப்தா, வாசு.இளைய ராஜா, ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட துணை செயலாளர் கல்யாணசுந்தரம், சி.பி.எம்.எல் மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர் அருணாசலம், சமூக ஆர்வலர் ஏகலைவன் ஆகியோர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் கிளாமங்கலம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டாமை கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரட்டை குவளை முறை, முடிவெட்ட மறுப்பது உள்ளிட்ட செயல்கள் நடந்து வருகிறது.
அந்தக் கிராமத்தில் நிலவி வரும் பதட்ட நிலையை போக்கிட அனைத்து அரசியல் கட்சியினரையும் கூட்டி பேச்சு வார்த்தை நடத்தி சமூக நல்லிணக்கத்தையும், அமைதியை ஏற்படுத்த வேண்டும்.
இதேபோல் பட்டுக்கோ ட்டை வேப்பங்காடு பகுதியில் டாஸ்மாக் கடை கொண்டு வருவதை தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை தலைமையில் நடக்கிறது
- பொன்.ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. பேட்டி
நாகர்கோவில்:
நாகர்கோவில் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி மற்றும் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் தர்மராஜ் ஆகியோர் இன்று நாகர்கோவிலில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் 1982-ம் ஆண்டு நடந்த மத கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து வேணுகோபால் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் வேணுகோபால் கமிஷனை மீறி மாவட்ட நிர்வாகம் பல வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி வழங்கி வருகிறது. இது கண்டனத்துக்கு உரியது. வருத்தமும் அளிக்கிறது.
குமரி மாவட்டம் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே எங்களது நோக்கமாகும். எனவே வேணுகோபால் கமிஷன் பரிந்துரையை மீறி குமரி மாவட்டத்தில் புதிய வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது.
இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மற்றும் தலைமை செயலாளரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். ஆனால் இதுவரை பதில் தரவில்லை. எனவே குமரி மாவட்டத்தில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி டிசம்பர் 11-ந் தேதி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட உள்ளது.
இதில் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அனைத்து சமூகத்தினரும் கலந்து கொள்ள உள்ளார்கள். அதோடு மாவட்ட நிர்வாகம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது வருத்தம் அளிக்கிறது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர், மேயர், கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் கலந்து கொண்டனர். அதே சமயம் இந்த கூட்டத்தில் அமைச்சரின் மகனும் கலந்து கொண்டு உள்ளார். இது கண்டிக்கத்தக்கதாகும். இது போன்ற செயல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பேட்டியின் போது மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட பொருளாளர் முத்துராமன், மகளிர் அணி மாநில செயலாளர் உமாரதி ராஜன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- மதசார்பற்ற கூட்டணிக் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- இதில் மாரிமுத்து எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ, உலகநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு உறுப்பினர் பழனிச்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் சமூக நல்லிணக்கம் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதில் மாரிமுத்து எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ, உலகநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு உறுப்பினர் பழனிச்சாமி, ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர் மணிமேகலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் காரல் மார்க்ஸ், காங்கிரஸ் நகர தலைவர் எழிலரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் டி. பி .சுந்தர், ஒன்றிய செயலாளர் ஜெகவர், முத்துப்பேட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் உமேஷ் பாபு, ம.தி.மு.க மாவட்ட பொருளாளர் கோவி சேகர், விடுதலை சிறுத்தை மாவட்ட செயலாளர் செல்வம், மனிதநேய மக்கள் கட்சி நகர தலைவர் இக்பால் ராஜா, மார்க்சிஸ்ட் நகரச் செயலாளர் கோபு மற்றும் மதசார்பற்ற கூட்டணிக் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- அனைத்து கட்சிகளின் சார்பில் மனித சங்கிலி பல்லடம் பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது.
- மதவெறி மாய்ப்போம், மக்கள் ஒற்றுமை காப்போம் என்ற பதாகைகளுடன் மனித சங்கிலியில் கலந்து கொண்டனர்.
பல்லடம்:
தமிழகத்தில் மதவெறியை வளர்த்து தமிழர்களை பிரித்து அரசியல் ஆதாயத்திற்காக பிரிவினைவாதத்தை வளர்த்துக் கொண்டிருக்கக்கூடிய அமைப்புகளின் வகுப்புவாத அரசியலை கண்டித்து பல்லடத்தில் அனைத்து கட்சிகளின் சார்பில் மனித சங்கிலி பல்லடம் பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது. இதில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம் மற்றும் பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு மதவெறி மாய்ப்போம், மக்கள் ஒற்றுமை காப்போம் என்ற பதாகைகளுடன் மனித சங்கிலியில் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்