search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீப திருவிழா"

    • கடந்த 3 நாட்களாக கோவில் அருகில் உள்ள அய்யங்குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது.
    • மகா தீபத்தை தரிசனம் செய்ய தொடர்ந்து பக்தர்கள் வருகை தருவதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம், மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி கடந்த 26-ந் தேதி நடைபெற்றது.

    அன்று காலையில் கோவில் வளாகத்தில் பரணி தீபமும், மாலையில் 2,668 அடி உயர மலையில் மகா தீபமும் ஏற்றப்பட்டது. மகா தீபத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    கடந்த 3 நாட்களாக கோவில் அருகில் உள்ள அய்யங்குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் காலையில் அருணாசலேஸ்வரர் கிரிவலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இன்று மாலை சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவடைகிறது. அப்போது சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வர உள்ளார்.

    மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் பிரகாசிக்கும். மாலை நேரத்தில் ஏற்றப்பட்டு தொடர்ந்து காட்சி அளிக்கும்.

    மகா தீபத்தை தரிசனம் செய்ய தொடர்ந்து பக்தர்கள் வருகை தருவதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

    இதனால் வருகிற 3-ந் தேதி வரை கோவிலில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

    • தினசரி மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் காலை 6 மணிக்கு குளிர் விக்கப்படும்.
    • 11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவையொட்டி நேற்று மகாதீபம் ஏற்றப்பட்டது.

    அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தரும். தினசரி மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் காலை 6 மணிக்கு குளிர் விக்கப்படும். மகாதீபத்தை வருகின்ற 6-ந்தேதி வரை தரிசிக்கலாம்.

    11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதைத் தொடர்ந்து ஆயிரம் கால் மண்டபத்தில் தீப கொப்பரை பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் நாளில் நடராஜ பெருமானுக்கு திலகமிடப்பட்ட பின்னர் பிரசாதமாக வழங்கப்படும்.

    நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பல்வேறு வாகனங்களில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீ உண்ணா முலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீபரா சக்தியம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் பவனி நடைபெற்றது.

    தீபத்திருவிழாவின் தொடர் நிகழ்வாக, இன்று இரவு ஸ்ரீசந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், நாளை இரவு ஸ்ரீபராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும், நாளை மறுதினம் இரவு ஸ்ரீசுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெறுகின்றன.

    • புதுக்கோட்டை டவுன் வேதநாயகி உடனுறை சாந்தநாதசுவாமி கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தன,
    • தொடர்ந்து கோயில்கள் சிறப்பு ஆராதனைகளுக்கு பின் மேல் தளத்தில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டன.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை டவுன் வேதநாயகி உடனுறை சாந்தநாதசுவாமி கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தன, தொடர்ந்து கோயில்கள் சிறப்பு ஆராதனைகளுக்கு பின் மேல் தளத்தில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டன. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சொக்கப்பான் கொளுத்தப்பட்டன, நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று கலந்து கொண்டனர். இதேபோல் குமரமலை மலைமேல் பாலதண்டாயுதபாணி கோவிலிலும் தீபதிருவிழா நடைபெற்றது.

    • திருவண்ணாமலை தீப திருவிழாவை முன்னிட்டு ஏற்பாடு
    • அன்னதானம் வழங்கப்படுகிறது

    வேலூர்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத கிருத்திகையை முன்னிட்டு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தீப திருவிழா நடைபெற உள்ளது.

    தீபத் திருவிழாவை காண நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். தீப திருவிழாவை காண வரும் பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில் வேலூர் நேதாஜி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில் தீபத் திருவிழாவில் அன்னதானம் வழங்குவதற்காக 12 டன் எடையுள்ள காய்கறிகள் சேகரிக்கப்பட்டன.

    இதில் வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், பீட்ரூட், கோஸ் என அனைத்து வகையான காய்கறிகள் ஒரு லாரி முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டது.

    • 7 நாட்கள் வரை வீடு, கடை விளக்குகளை ஏற்றி வைத்து வழிபடுவார்கள்
    • பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது

    செங்கம்:

    ஒவ்வொரு ஆண்டும் தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் மலை உச்சியில் கொப்பரையில் தீபம் ஏற்றப்படும். உலகில் உள்ள சிவபக்தர்கள் தீப திருநாளை முன்னிட்டு அகல்விளக்குகளை ஏற்றி வைத்து தீபத்திருநாளை விமரிசையாக கொண்டாடுவது வழக்கம்.

    செங்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீபத்திருநாளை முன் னிட்டு அனைத்து பகுதிகளிலும் 7 நாட்கள் வரை வீடு, கடை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் அகல்விளக்குகளை ஏற்றி வைத்து வழிபடுவார்கள்.

    இந்த நிலையில் செங்கம் பகுதியில் தீபம் ஏற்றுவதற்காக அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். செங்கம் பகுதியில் தயாரிக்கப்படும் தீப விளக்குகள் செங்கத்தை தாண்டி பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    • நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை
    • இன்று முதல் 15-ந் தேதி வரை விண்ணப்பங்களை கொடுத்து அனுமதி பெறலாம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் அன்னதானம் வழங்க விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து அனுமதி பெறலாம் கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்தார்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 14 ஆம் தேதி துர்க்கையம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது.

    17-ந் தேதி அதிகாலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.

    நவம்பர் 23-ந் தேதி தேரோட்டமும், 26-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும்.

    அன்று மாலை 6 மணிக்கு 2668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

    கார்த்திகை தீபத் திருவிழாவை காண பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் வருவார்கள்.

    கார்த்திகை தீபத் திருவிழாவின் போது அன்னதானம் வழங்க உள்ளவர்கள் www.foscos.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம் அல்லது திருவண்ணா மலை செங்கம் சாலையில் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தில் நவம்பர் 6-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை விண்ண ப்பங்களை கொடுத்து அனுமதி பெறலாம்.

    விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முகவரி சான்று, ஆதார் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்த இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும்.

    அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்க கூடாது. கிரிவல பக்தர்களுக்கு இடையூறு இல்லா மல் கிரிவலப்பா தையில் இருந்து 100 மீட்டர் உட்புறமாக அன்னதானம் வழங்கலாம்.

    நோய் தொற்று உள்ளவர்களை அன்னதானம் சமைக்கவோ, அன்னதானம் விநியோகம் செய்யவோ அனுமதிக்க கூடாது. அன்னதானம் செய்ய பயன்படுத்தப்படும் உணவு பொருட்கள் தரமானதாகவும், தூய்மையானதாகவும், கலப்படம் இன்றியும் இருக்க வேண்டும்.

    அன்னதானம் வழங்கும் போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது. அன்னதானம் வழங்குபவர்கள் உணவு கழிவுகளை குப்பை தொட்டிகள் அமைத்து தாங்களாகவே அகற்ற வேண்டும்.

    அன்னதானம் வழங்கும் போது போதிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் கூடுதல் விபரங்களுக்கு 044 237416, 90477 49266, 98656 89838 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்தார்.

    • நவம்பர் மாதம் 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    • முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னே ற்பாடு பணிகள் குறித்த ஆலோ சனைக் கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

    கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் மாதம் 17-ந் தேதி வெள்ளிக்கிழமை அதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    23-ந் தேதி வியாழக்கி ழமை தேரோட்டம் நடைபெறும். 26-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும்.

    அன்று மாலை 6 மணிக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் அண்ணாமலையார் கோவில் தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளியதும் 2668 உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

    கார்த்திகை தீப திருவிழாவிற்கு 50 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நகராட்சி சார்பில் தற்காலிக பஸ் நிலையம் அமைத்தல், கிரிவலப் பாதை மற்றும் திருவண்ணா மலை நகரில் சாலைகள் அமைத்தல், தூய்மை பணி செய்தல், குடிநீர் வசதிகளை மேம்படுத்துதல், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கிரிவலப்பாதையில் உள்ள ஊராட்சி பகுதிகளில் தூய்மை பணி செய்தல், கழிப்பறை வசதி செய்தல், கண்காணிப்பு கோபுரம் அமைப்பது, காவல் துறை சார்பில் பாதுகாப்பு பணிகள், சட்டம் ஒழுங்கு பராமரித்தல், போக்கு வரத்தை சீர் செய்வது குறித்து ஆலோசிக்க ப்பட்டது. தீப தரிசனம் காண வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ் மற்றும் ெரயில்களை இயக்குவது, மலை மீது ஏறும் பக்தர்களுக்கு அனுமதி சீட்டு வழங்குவது, கிரிவல பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதை முறைப்படு த்துதல், கோவில் மற்றும் கிரிவ லப்பாதையில் மருத்துவ முகாம்கள் அமைத்தல், அவசர மருத்துவ உதவிக்காக ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் தீயணைப்பு மீட்பு பணி வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    இதில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், இணை ஆணையர் சி.ஜோதி, அறங்காவலர் குழு உறுப்பி னர்கள் டிவிஎஸ் ராஜாராம், கோமதி குணசேகரன், நகராட்சி ஆணையாளர் ந.தட்சணா மூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • 10 நாள் உற்சவம் ஆரம்பமாகும். 7-ம் நாளில் 'மகா தேரோட்டம்' நடைபெற உள்ளது.
    • தொடர்ந்து ராஜகோபுரம் முன்பு காலை 8.25 மணிக்கு துலா லக்கினத்தில் பந்தக்கால் நடப்பட்டது.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வருகிற நவம்பர் மாதம் 14-ந் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது.

    மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் வரும் நவம்பர் 17-ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றதும், 10 நாள் உற்சவம் ஆரம்பமாகும். 7-ம் நாளில் 'மகா தேரோட்டம்' நடைபெற உள்ளது.

    கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 'மலையே மகேசன்' என போற்றப்படும் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையின் உச்சியில் வரும் நவம்பர் 26-ந் தேதி மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படுகிறது.

    ஜோதி வடிவில் அண்ணாமலையார் காட்சி கொடுப்பார். தொடர்ந்து, 11 நாட்களுக்கு மகா தீப தரிசனத்தை பக்தர்கள் காணலாம்.

    கார்த்திகை தீபத்திரு விழாவை முன்னிட்டு பூர்வாங்க பணிகளுக்கான பந்தக்கால் நடும் முகூர்த்த நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.

    பந்தக்கால் நடும் நிகழ்ச்சியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் பந்தக்காலிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.

    பின்னர் தேரடி முனீஸ்வரர் கோவில் மற்றும் பஞ்சமூர்த்திகளின் திருத்தேர்களுக்கு முன்பு வைத்து பூஜை செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து ராஜகோபுரம் முன்பு காலை 8.25 மணிக்கு துலா லக்கினத்தில் பந்தக்கால் நடப்பட்டது.

    இதில் கலெக்டர் பா.முருகேஷ், கோவில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், உறுப்பினர்கள் டிவிஎஸ் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள், டாக்டர் மீனாட்சி சுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    • வருடந்தோறும் கார்த்திகை மாதத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீப திருநாளில் மகா தீபம் ஏற்றப்படும்.
    • அதன்படி இந்த ஆண்டும், நேற்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுமார் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த அண்ணாமலையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடந்தோறும் கார்த்திகை மாதத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீப திருநாளில் மகா தீபம் ஏற்றப்படும். அதன்படி இந்த ஆண்டும், நேற்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது. தீபத்திருநாளான நேற்று காலை அண்ணா மலையா–ருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் பரணி தீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்–பட்டது.

    பின்னர் அங்குள்ள அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து மாலை திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டவுடன், ஏற்காடு அண்ணாமலையார் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது. விழாவில் ஏற்காட்டில் உள்ள 67 மலை கிராம மக்களும் கலந்து கொண்டு அண்ணாமலை–யாரின் அருளை பெற்றனர். 

    • மேலும் கார்த்திகை மாத முதல் தேதி முதல் கடைசி தேதி வரை வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றுவது உண்டு.
    • ரூ.1 முதல் ரூ.200 வரைக்கும் அகல் விளக்குகள் விற்ப னைக்கு வந்துள்ளன.

    கடலூர்:

    கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு அகல் விளக்குகள் விற்பனைக்கு வந்தன. கார்த்திகை மாதத்தில் தீப திருநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி வீடுகள், கோவில்களில் அகல் விளக்குகள் ஏற்றி பக்தா்கள் வழிபாடு நடத்துவார்கள். மேலும் கார்த்திகை மாத முதல் தேதி முதல் கடைசி தேதி வரை வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றுவது உண்டு. இந்த நிலையில் கார்த்திகை தீப திருநாள் வருகிற 6-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடலூர் புதுப்பாளையம், மஞ்சகுப்பம், செம்மண்டலம், திருப்பாதி ரிப்புலியூர் மற்றும் சன்னதி தெரு, சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை ஓரங்களிலும், கடைகளிலும் வைத்து அகல் விளக்குகள் விற்கப்படுகிறது. சாலை ஓரங்களில் வியாபாரிகள் அகல் விளக்கு விற்பனைக்கு வந்துள்ளன. மேலும் ஒரு சில இடங்களில் அகல் விளக்குகள் தயாரி க்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    கடலூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் தயாராகும் அகல் விளக்குகள் வெளி மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், ''கார்த்திகை தீப திருவிழாவுக்கு தற்போது அகல்விளக்குகள் விற்ப னைக்கு வந்துள்ளது பெரிய வியாபாரிகளிடம் சிறு வியாபாரிகள் அகல் விளக்குகளை கொள்முதல் செய்து செல்கின்றனர். ரூ.1 முதல் ரூ.200 வரைக்கும் அகல் விளக்குகள் விற்ப னைக்கு வந்துள்ளன. மண்ணில் தயாரிக்கப்படும் அகல் விளக்குகள் அளவுக்கு தகுந்தாற்போல் விலை வைத்து விற்கப்படுகிறது. இதே அகல் விளக்குகள் தற்போது ஆடம்பரமாகவும், அலங்காரமாகவும் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இதனையும் பொதுமக்கள் விரும்பி வாங்குகின்றனர். தீப திருநாளுக்கு முந்தைய நாட்களில் அகல்விளக்கு விற்பனை அமோகமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்'' என்றார்.

    • பக்தர்களுக்கு அண்ணதானம் வழங்க ஏற்பாடு
    • குற்றவாளிகளை முகத்தை வைத்து கண்டறியும் செயலி பயன்படுத்தப்பட உள்ளது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதில் தீபத் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தெரிவிக்கப்பட்டதாவது:-

    திருவண்ணாமலை சுற்றிலும் 13 தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. தற்போது 9 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    கூடுதலாக 19 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. 2,692 சிறப்பு பஸ்கள் 6,431 நடை இயக்கப்படும். கிரிவலப் பாதையில் 15 மருத்துவ குழுக்கள், கோவில் வளாகத்தில் 3 குழுக்கள் அமைக்கப்படுகிறது.

    மேலும் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளன.

    தீபத் திருவிழாவிற்கு ஒரு ஐ.ஜி தலைமையில் 5 டி.ஐ.ஜி.கள், 20-க்கும் மேற்பட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோர் தலைமையில் 12 ஆயிரத்து 97 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட உள்ளனர்.

    மேலும் ஆங்காங்கே 26 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. 600-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.

    கோவில், மாடவீதிகள் மற்றும் கிரிவலப் பாதையில் 500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது மேலும் 7 ட்ரோன்கள் , 57 கோபுரங்கள் மூலமும் கண்காணிக்கப்படுகிறது.

    மலையின் மீது ஏறுவதற்கு 2,500 பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டுவார்கள்.

    திருவிழா கூட்டத்தில் சந்தேக நபர்களின் புகைப்படங்கள் எடுத்து அவர்கள் குற்றவாளிகளா? என்பதை முகத்தை வைத்து கண்டறியும் செயலி பயன்படுத்தப்பட உள்ளது.

    கூட்டத்தில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டு பிடிக்க நகருக்குள் நுழையும் போதே குழந்தைகள் கையில் முகவரியின் கூடிய தகவல் பட்டை கட்டப்படும். 101 இடங்களில் பக்தர்களுக்கு அண்ணதானம் வழங்கப்படவுள்ளது.

    12 பெரிய திரைகளில் கோவில் நிகழ்வுகள் திரையிடப்பட உள்ளது. சமூக விரோதிகளின் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட உள்ளனர்.

    குடிநீர் வசதி, கழிவறை எங்கெல்லாம் உள்ளது என்பது குறித்து அனைத்து இடங்களிலும் தகவல் பலகை வைக்கப்பட உள்ளது.

    மலையின் மீது ஏறக்கூடிய 23 வழிகளில் வனத்துறையினர் பாதுக்காப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    கலெக்டர் அலுவலகம் உட்பட 4 இடங்களில் முக்கிய கட்டுபாட்டு அறைகள் அமைக்கப்பட உள்ளது‌. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தும் வகையில் இட வசதி மேற்கொள்ளப்பட உள்ளது. யாராவது வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    3 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். 158 இடங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

    துணிப்பை கொண்டு வரும் பக்தர்களுக்கு குலுக்கள் முறையில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் வழங்கப்படும். சுமார் 1,000 கல்லூரி மாணவர்கள் தன்னார்வலராக பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு சுமார் 130 தங்குமிடம் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    • 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    • கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவியில் இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றப்படும் நிகழ்ச்சி டிசம்பர் மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ளது. விழா 10 நாட்கள் நடைபெறும் 7-ம் நாள் விழாவின் போது தேரோட்டம் நடைபெறும்.

    கொரோனா ஊரடங்கு காரணத்தினால் கடந்த 2 ஆண்டுகளாக பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெறவில்லை.

    இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகள் அனைத்தும் தளர்வு செய்யப்பட்டுள்ளதால் கார்த்திகை தீபத் திருவிழா மிக விமரிசையாக நடைபெறும் என பக்தர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    தீப திருவிழா பணிகள் தீவிரமாக நடைந்து வருகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவின் போது பஞ்சமூர்த்திகளின் தேரோட்டம் மாடவீதியில் நடைபெற உள்ளது.

    அதனைத்தொடர்ந்து அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாடவீதியில் ராஜகோபுரம் எதிரே நிறுத்தப்பட்டுள்ள பஞ்சமூர்த்திகள் தேர்கள் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    முதலில் முருகர் தேரை தொடர்ந்து விநாயகர், அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய தேர்கள் சீரமைக்கும் பணிகள் அடுத்தடுத்து நடைபெற உள்ளது.

    ×