என் மலர்
நீங்கள் தேடியது "டிராக்டர் விபத்து"
- மஞ்சள் அறுவடை செய்ய வயலுக்கு செல்லும் வழியில் டிராக்டர் கிணற்றில் கவிழ்ந்த விபத்தில் 7 பெண் விவசாயத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
- மேலும் 3 பெண்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மகாராஷ்டிராவில் மஞ்சள் அறுவடை செய்ய வயலுக்கு செல்லும் வழியில் டிராக்டர் கிணற்றில் கவிழ்ந்த விபத்தில் 7 பெண் விவசாயத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
நான்டெட் மாவட்டம் அலேகான் கிராமத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. பெண்கள் சென்றுகொண்டுந்த டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி, தண்ணீர் நிரம்பிய கிணற்றில் விழுந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மற்றும் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள், கிணற்றிலிருந்த அதிக அளவு தண்ணீரை வெளியேற்றினர்.
அதனபின் ஏழு பெண்களின் உடல்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டன. மேலும் 3 பெண்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இறந்த அனைவரும் ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள வாஸ்மத் தாலுகாவின் கீழ் உள்ள குஞ்ச் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
- பெண்கள் உட்பட 15 பேர் படுகாயம்
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் அடுத்த கடலாடி காலனி பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 28) இவர் டிராக்டரில் டிப்பர் இணைக்கப்பட்டு அதன் மூலம் 15 பெண்களை ஏற்றிக்கொண்டு போளூர் அருகே உள்ள முருகாபாடி அடுத்த ஒகூர் பகுதியில் மஞ்சம் புல் அறுப்பதற்காக புறப்பட்டு சென்றுள்ளனர்.
அப்போது கடலாடியில் இருந்து போளூர் செல்லும் பைபாஸ் சாலையில் உள்ள வ.பேட்டை பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தபோது டிராக்டரின் பின்புறம் இருந்த டிப்பர் திடீரென நிலை தடுமாறி தலைகீழாக சாலை ஓரம் கவிழ்ந்தது.இதில் அமர்ந்து வந்த 15 பெண்களும் சிக்கிக் கொண்டனர்.
அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகே உள்ள போளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில் பரமேஸ்வரி (50) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
மேலும் டிரைவர் சூர்யா உட்பட 15 பெண்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து கலசப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கால் தவறி ஆழமான பகுதியில் விழுந்து பரிதாபமாக இறந்தார்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
தக்கோலம் பகுதியை சேர்ந்தவர் நாகப்பன் (வயது 58). டிராக் டர் டிரைவர். இவர் நேற்று எஸ்.என்.கண்டிகையில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்றார். அங்குள்ள கல்லாற்றில் இடுப்பளவு நீரில் இறங்கினார்.
அப்போது திடீரென கால் தவறி ஆழமான பகுதியில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தக்கோலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நாகப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தெருநாய்கள் கையில் வைத்திருந்த பிஸ்கட்டை பார்த்து, சிறுவனை துரத்தியது.
- விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், கமலாபூர் மண்டலத்திற்கு உட்பட்ட மாரிப்பள்ளிகுடம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபால்.
இவரது மகன் தனுஷ் (வயது 11). சிறுவன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
தெலுங்கானா மாநிலம் உருவாகி 10 ஆண்டுகள் முடிவடைந்தது. இதன் நிறைவு விழாவையொட்டி பள்ளியில் கல்வி தினப் பேரணி நடத்தப்பட்டது. இதில் கலந்துகொள்ள தனுஷ் சென்றான். பேரணி முடிந்த பிறகு அங்குள்ள பேக்கரியில் பிஸ்கட் பாக்கெட் வாங்கிக் கொண்டு சாலையில் நடந்து சென்றான்.
தெருநாய்கள் கையில் வைத்திருந்த பிஸ்கட்டை பார்த்து, சிறுவனை துரத்தியது. இதனால் அச்சமடைந்த தனுஷ் சாலையில் வேகமாக ஓடினான்.
அப்போது எதிர் திசையில் வந்த டிராக்டர் சிறுவன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தனுஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.
இதுகுறித்து தகவல் அறிந்த கமலாப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாரங்கல் எம்.ஜி.எம். ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சண்முகம் என்பவரின் வயலில் விவசாய பணிக்காக டிராக்டரை ஓட்டியபோது, சேற்றில் சிக்கி டிராக்டர் கவிழ்ந்தது.
- திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருக்கழுக்குன்றம்:
திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது58) டிராக்டர் டிரைவர். அதே பகுதியில் சண்முகம் என்பவரின் வயலில் விவசாய பணிக்காக டிராக்டரை ஓட்டியபோது, சேற்றில் சிக்கி டிராக்டர் கவிழ்ந்தது.
இதில் சகதியில் சிக்கி மூச்சு திணறி ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- மாதேஸ்வரன் நாமக்கல் அரசு அறிஞர் அண்ணா கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.பி.ஏ. படித்து வந்தார்.
- கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொல்லிமலை:
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த பெரியபள்ளம் பாறை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. விவசாயி. இவரது மகன் மாதேஸ்வரன் (வயது 18).
இவர் நாமக்கல் அரசு அறிஞர் அண்ணா கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.பி.ஏ. படித்து வந்தார்.
நேற்று இரவு மாதேஸ்வரன் தனது உறவினரின் டிராக்டரை எடுத்துக்கொண்டு ஓட்டி பழகுவதற்காக அருகே உள்ள தோட்டத்திற்கு சென்றார். அங்குள்ள வயலில் டிராக்டரை ஓட்டி பழகும்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இதில் மாதேஸ்வரன் மேலே டிராக்டர் விழுந்ததால் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பவுர்ணமி தினத்தை முன்னிட்டு கங்கையில் நீராட யாத்ரீகர்கள் டிராக்டரில் பயணம்.
- காருடன் மோதுவதை தவிர்க்க டிரைவர் டிராக்டரை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் யாத்ரீகர்களை ஏற்றிக் கொண்டு டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்று பவுர்ணமி என்பதால் கங்கையில் நீராட அவர்கள் கதர்கஞ்ச் என்ற இடத்திற்குச் சென்றனர். டிராக்டரின் டிராலியில் பயணம் செய்தோர்களில் பெரும்பாலானோர் பெண்களும், குழந்தைகளும் ஆவார்கள்.
இந்த டிராக்டர் கஸ்கஞ்ச் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அதே வழியில் சென்ற காருடன் மோதாமல் இருக்க டிரைவர் டிராக்டரை திருப்பியுள்ளார். அப்போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்தது டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 15 யாத்ரீகர்கள் நீரில் மூழ்கி பலியாகினர். இதில் 8 பேர் குழந்தைகள் என முதற்கட்ட தகவல் வெளியானது. இந்த நிலையில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளா்.
- சங்கராபுரம் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியானார்.
- டிராக்டரின் சக்கரம் அரிகிருஷ்ணன் மீது ஏறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பகண்டை கூட்டுரோடு போலீஸ்சரகம் ரங்கப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். அவரது மகன் அரிகிருஷ்ணன் (வயது 27). இவர் இன்று காலை சீர்பனந்தல் கிராமத்தில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.
திருவரங்கம் சாலை வளைவில் திரும்பியபோது எதிரே கரும்புலோடு ஏற்றிய டிராக்டர் வந்தது. இதன் மீது மோதாமல் இருக்க அரிகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளை திருப்பினார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் தவறி விழுந்தார். அந்த நேரம் டிராக்டரின் சக்கரம் அரிகிருஷ்ணன் மீது ஏறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
இதுகுறித்து பகண்டை கூட்டு ரோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான அரிகி ருஷ்ணன் உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.