search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டப்பந்தயம்"

    • பந்தயத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு ஓடி வந்தனர்.
    • ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    களியக்காவிளை :

    களியக்காவிளை அருகே மேக்கோடு அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு குறுக்கு நாட்டு ஓட்டப்பந்தயம் நடந்தது. முதுநிலை மற்றும் இளநிலை மாணவர்களுக்கு தனித்தனியாக நடந்த இந்த பந்தயத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு ஓடி வந்தனர். முதுநிலை மாணவர்களுக்கான ஓட்டப்பந்தயத்தை களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபுராஜ் தொடங்கி வைத்தார். முதுநிலை மாணவிகளுக்கான ஓட்டப்பந்தயத்தை குழித்துறை ஜே.சி.ஐ. தலைவர் பெகின் தொடங்கி வைத்தார்.

    இளநிலை மாணவர்களுக்கான ஓட்டப்பந்தயத்தை வன்னியூர் ஊராட்சி தலைவி பாப்பா தொடங்கி வைத்தார். இளநிலை மாணவிகளுக்கான ஓட்டப்பந்தயத்தை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரெஜி தொடங்கி வைத்தார். பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயராஜ் மாணவர்களை ஒருங்கிணைத்து ஓட்டப்பந்தய ஏற்பாடுகளை செய்திருந்தார். இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் எஸ்.எம்.சி. தலைவர் மினி, ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • தொடர் ஓட்டப்பந்தயத்தை கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
    • போலீசாருக்கு மனஅழுத்தம் குறைந்து, உடல் நலமும் மேம்படும்

    கோவை,

    கோவை ஆயுதப்படை மைதானத்தில் போலீசாருக்கான 48 நாள்- 2 கி.மீ. தொடர் ஓட்டப்பந்தயத்தை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், காலை, மாலை என்று பாராமல் நேரம் கிடைக்கும்போது எல்லாம் ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுவது உடலுக்கு ஆரோக்கியம் தரும். இவ்வாறு 21 அல்லது 48 நாட்கள் தொடர்ச்சியாக ஓட்டப்பயிற்சி செய்து வந்தால் இது அவர்களின் தினசரி வாழ்வில் ஒரு பழக்கமாகவே மாறி விடும்.

    இதனால் போலீசாருக்கு மனஅழுத்தம் குறைந்து, உடல் நலமும் மேம்படும் என்று கூறினார். கோவை ஆயுதப்படை மைதானத்தில் ஓட்டப்பந்தயப் போட்டியில் முதற்கட்டமாக 1000 போலீசார் பங்கேற்க முன்வந்து உள்ளனர்.

    • எல்.கே.ஜி முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவ- மாணவிகளுக்கான தடகள போட்டி நடைபெற்றது.
    • 1200 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள வீரியன்கோட்டை - உடையநாடு ராஜராஜன் கல்வி நிறுவனத்தின் 25-ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு கெயின் ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து நடத்தும் மாநில அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது.

    விழாவிற்கு தஞ்சை தெற்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் சுப.சேகர் தலைமை வகித்தார்.

    பள்ளி தாளாளர் மனோன்மணி ஜெய்சங்கர் அனைவரையும் வரவே ற்றார். சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் மு.கி. முத்துமாணிக்கம், ஒன்றிய கவுன்சிலர் குழ.செ.அருள்நம்பி, ஊமத்தநாடு ஊராட்சி மன்ற தலைவர் என். குலாம்கனி, காரைக்குடி அழகப்பா கல்வி குழுமம் சி.மாதவன், பேராவூரணி நகர வர்த்தகர் கழக தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் சுவாதி காமராஜ், வீரியங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா அய்யப்பன், கவுன்சிலர் மகாலட்சுமி சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் பெருமகளூர் பேரூராட்சி பெருந்தலைவர் சுந்தரதமிழ் ஜெயபிரகாஷ், பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர், கரம்பக்காடு ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா குகன், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வி.சாந்தி, மாவட்ட கவுன்சிலர் இலக்கியா நெப்போலியன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தனர்.

    பள்ளி கொடியினை டாக்டர் துரை. நீலகண்டன் ஏற்றி வைத்தார். மாணவர்க ளுக்கான போட்டியினை மாவட்ட அமைச்சூர் கபடி கழக துணைத் தலைவர் தென்னங்குடி ஆர்.ராஜா துவக்கி வைத்தார். மாணவிக ளுக்கான போட்டியினை புதுக்கோட்டை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவர் எஸ்.ஆர்.சந்திரசேகர் துவக்கி வைத்தார்.உடற்கல்வி ஆசிரியர்கள்எம்.சோலை, குழ.மதியழகன், என்.ரவி,ஏ.அன்பரசன், கே. அழகப்பன, எஸ் , சங்கீதா, பாரதிதாசன் கெயின் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர்எஸ்.நீலகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சனிக்கிழமை எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர்களுக்கு தடகள போட்டி நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை 6ம் வகுப்பில் இருந்து கல்லூரி வரை படித்த மாணவ- மாணவிகளுக்கு தடகள போட்டி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் 50 மீட்டர்,100 மீட்டர்,200 மீட்டர், 400 மீட்டர்,600 மீட்டர்,1200 மீட்டர் ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

    தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், திருச்சி, ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

    வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    நிறைவாக உடற்கல்வி ஆசிரியர் நீலகண்டன் நன்றி கூறினார்.

    • தஞ்சைக்கு வந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பொங்கல் இட்டனர்.
    • தொடர்ந்து பானை உடைக்கும் போட்டி, ஓட்டப்பந்தயம் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் இன்று பழைய பஸ் நிலையம் அருகே தூய்மை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

    இதற்கு மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூய்மை பொங்கல் விழாவில் மாநகர நல அலுவலர் சுபாஷ் காந்தி, மாநகராட்சி வார்டு கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள், ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதில் பொங்கலிட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. தஞ்சைக்கு வந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பொங்கல் இட்டனர்.

    தொடர்ந்து பானை உடைக்கும் போட்டி, ஓட்டப்பந்தயம் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பாடலுக்கு நடனமாடி கொண்டாடினர். அனைவரும் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

    • 68 மாணவர்கள் வருவாய் மாவட்ட போட்டியில் கலந்து கொண்டனர்.
    • சீர்காழி ரெயில் நிலையத்திலிருந்து வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

    சீர்காழி:

    தரங்கம்பாடி தாலுகா, பொறையார் காட்டுசேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு திடலில் நடைபெற்று முடிந்த மயிலாடுதுறை வருவாய் மாவட்டத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டனர்.

    இப்போட்டிகளில் 100 மீ ஓட்டப்போட்டி, 200 மீ ஓட்டப்போட்டி, 400 மீ ஓட்டப்போட்டி, 100 மீ தட ஓட்டம், 400 மீ தடை ஓட்டம், நீளம் தாண்டுதல் உயரம் தாண்டுதல் குண்டு எரிதல், வட்டு எறிதல் , ஈட்டி எறிதல், கோலூன்றி தாண்டுதல், 100 மீ அஞ்சல் ஓட்ட போட்டி, 400 மீ ஓட்ட போட்டி, ஆகிய அனைத்துப் போட்டிகளிலும் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 14 வயது உட்பட்ட பிரிவு, 17 வயது உட்பட்ட பிரிவு, 19 வயது உட்பட்ட பிரிவு மாணவர்கள் இப்பள்ளியிலிருந்து குறுவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 68 மாணவர்கள் வருவாய் மாவட்ட போட்டியில் கலந்து கொண்டனர்.

    இவ்வீரர்களிலிருந்து 24 மாணவ மாணவிகள் திருவண்ணாமலையில் நடைபெறக்கூடிய தமிழக அரசின் பள்ளிக்க ல்வித்துறை சார்பில் 63வது குடியரசு தின மாநில தடகள போட்டிகள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள செயற்கை இழையிலான நவீன விளையாட்டு மைதானத்தில் நடைபெறக்கூடிய போட்டியில் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    குறிப்பாக இப்பள்ளியைச் சார்ந்த கிருத்திகா, பவித்ரா, ஜெனிஷா, நிஷாந்தி, கிருத்திகா, அஜய் குமார், சக்திவேல், பென்னி ஆகிய மாணவர்கள் மூன்று போட்டிக்கு மேலாக வெற்றி பெற்று, பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர்.

    இந்த மாணவர்களை பயிற்றுவித்த உடற்கல்வி இயக்குனர் முரளிதரன், மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் முரளி, மார்கண்டன், சக்திவேல், ஹரிஹரன், ராகேஷ் ஆகியோர்களை பள்ளியின் முன்னாள் செயலர் பாலசுப்பிரமணிய முதலியார், பள்ளியின் செயலர் இராமகிருஷ்ண முதலியார், பள்ளியின் குழு தலைவர் சொக்கலிங்கம், பள்ளி தலைமையா சிரியர் அறிவுடை நம்பி சீர்காழி புகைவண்டி நிலையத்திலிருந்து வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.

    மாணவர்களை உதவி தலைமை ஆசிரியர்கள் துளசிரங்கன், வரதராஜன் மற்றும் பள்ளியைச் சார்ந்த இருபால் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • மாவட்ட அளவில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மணிபாரதி முதலிடம்.
    • 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜெகதீஸ்வரன் மூன்றாமிடம்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் குறுவ ட்டம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட அளவிலான நடந்த தடகள மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வேதாரண்யம் சி.க.சுப்பையா அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ ர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பாராட்டு விழா கழக துணைத்தலைவர் தென்னரசு தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாவட்ட அளவில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்த மணிபாரதி, தட்டு எறிதலில் முதலிடம் பிடித்த விஜய், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்றாமிடம் பிடித்த ஜெகதீஸ்வரன் மற்றும் குறுவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்சி அளித்த பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அன்பழகன், ஆசிரியர் நாகராஜன்ஆகியோரையும் பாராட்டினர்.

    நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் பிரகாஷ் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • தஞ்சாவூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்களுக்கு மட்டும் ஆட்கள் தேர்வு நடைபெறும்.
    • தொடர்ந்து 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் நடத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 35 பணியிடங்களுக்கு (34 ஆண் மற்றும் 1 பெண்) தஞ்சாவூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட வர்களுக்கு மட்டும் ஆட்கள் தேர்வு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன.

    அதன்படி இன்று தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா அறிவுறுத்தலின்பேரில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெ ற்றது.

    இதற்கு ஏ.டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன், நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, ஊர்க்காவல் படை துணை மண்டலத் தளபதி டாக்டர் மங்களேஸ்வரி, ஊர்க்காவல் படை ஏரியா கமாண்டர் சுரேஷ், ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கி ஆட்கள் தேர்வு நடத்தினர்.

    இத்தேர்வில் தஞ்சாவூர், கும்பகோணம். பட்டுக்கோட்டை பகுதிகளை சேர்ந்த 324 ஆண்கள், 1 பெண் என மொத்தம் 325 பேர் கலந்து கொண்டனர்.

    அவர்களின் சான்றி தழ்கள் சரிபார்க்கப்பட்டன.

    இதையடுத்து உயரம், மா ர்பளவு சரிபார்க்கப்பட்டது.

    தொடர்ந்து 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் நடத்தப்பட்டது.

    இந்த தேர்வுகள் அனை த்தும் முடிந்த பின்னர் இதிலிருந்து 35 பேர் ஊர் காவல் படைக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    தேர்வு செய்யப்படும் ஊர் காவல் படையினர் போலீசாருடன் இணைந்து பணியாற்றுவர்.

    ×