என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவக் கல்லூரி"

    • கடந்த 13-ந் தேதி மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 60 பேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
    • நேற்று முன்தினம் வரை 22 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    விக்கிரவாண்டி:

    கள்ளச்சாராயம் குடித்த மேலும் 9 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் கிராமத்தில் கடந்த 13-ந் தேதி மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 60 பேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    இதில்ஒரு பெண் உள்பட 14 பேர் பலியானார்கள். 12 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும், 34 பேர் பொது வார்டுகளிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இவர்களில் நேற்று முன்தினம் வரை 22 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்நிலையில் எக்கியார் குப்பம் பாலு, மரியதாஸ், விநாயகம், ராமு, மணிமாறன், தேசிங்கு, ராஜ துரை, சிவா, ஆறுமுகம் ஆகிய 9 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    இவர்களை தாசில்தார் ஆதிசக்தி சிவக்குமரி மன்னன், தனி தாசில்தார் இளங்கோவன், மருத்துவக் கல்லூரி டீன் கீதாஞ்சலி, கண்காணிப்பாளர் அறிவழகன், உண்டு உறைவிட டாக்டர் ரவிக்குமார், துணை முதல்வர் யோகாம்பாள், துணை உண்டு உறைவிட டாக்டர் வெங்கடேசன் மற்றும் டாக்டர்கள் மருத்துவ ஆலோசனை வழங்கினார்கள்.

    தற்போது முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 2 பேரும், பொது வார்டில் 13 பேர் என 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • உண்மையானவர்களுக்கும், நேர்மையானவர்களுக்கும் இந்த நாட்டில் இடம் இல்லையா?
    • கனிமவள கொள்ளை அதிகமாக நடந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் இருந்து அத்தனை வளங்களும் சுரண்டப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய லூர்து பிரான்சிஸ் கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்தை கண்டித்தும், கேரளாவிற்கு தென்காசி வழியாக கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்கக்கோரி ஆலங்குளத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காகவும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.

    அவருக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட தே.மு.தி.க. பொறுப்பாளர் தயாளலிங்கம் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர்கள் மாலதி, துரை, பொருளாளர் விஜயன், பகுதி செயலாளர் சின்னத்துரை மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கனிமவள கொள்ளை அதிகமாக நடந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் இருந்து அத்தனை வளங்களும் சுரண்டப்படுகிறது. இதுகுறித்து கேட்டால் எதிர்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் மாறி மாறி குறை சொல்கிறார்கள். இதை தட்டிக்கேட்ட ஒரு நியாயமான அதிகாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது எந்த வகையில் நியாயம்?. உண்மையானவர்களுக்கும், நேர்மையானவர்களுக்கும் இந்த நாட்டில் இடம் இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    வி.ஏ.ஓ. குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ரூ.1 கோடி அறிவித்துள்ளார். இதனால் போன உயிர் வந்துவிடுமா. நியாயமாக உழைக்கும் அதிகாரிகளுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?.

    3 மருத்துவ கல்லுரிகளின் உரிமம் ரத்து செய்து இருக்கிறார்கள். ஸ்டான்லி கல்லூரி உரிமத்தை ரத்து செய்தது தமிழகத்திற்கு ஒரு தலை குனிவு. பள்ளிக்கூட கட்டிடம் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. ஆனால் டாஸ்மாக் கடை ஒரு தெருவுக்கு 10 திறக்கப்பட்டுள்ளது.

    புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்புக்கு வாழ்த்துக்கள். இந்திய வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நாள் இன்று. நல்ல ஒரு விஷயம் நாட்டிற்காக நடந்து கொண்டிருக்கிறது. நிச்சயமாக ஜனாதிபதியை அழைத்து இருக்க வேண்டும். அந்த நல்ல நிகழ்வை வரவேற்போம். தமிழகத்தில் இருந்து செங்கோல் அங்கு அமைவது ஒட்டு மொத்த தமிழருக்கு கிடைத்த பெருமை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அவர் வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துவிட்டு ஆலங்குளத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க புறப்பட்டு சென்றார்.

    • 2017 பேட்ச் மருத்துவ மாணவர்கள் பிரிவுபசார விழாவை முன்னிட்டு கல்லூரி நிர்வாகம் சார்பில் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
    • அரசின் அறிவிப்பை மருத்துவக் கல்லூரி போன்ற அரசு நிறுவனமே மீறி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி புற்றுநோய் பாதிப்புக்கு பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 18-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் பெங்களூருவில் இருந்து ஏர் ஆம்புலன்சு விமானம் மூம் திருவனந்தபுரத்துக்கு கொண்டு வரப்பட்டது.

    பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு இடங்களில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. பின்பு இறுதிச்சடங்குக்காக திருவனந்தபுரத்தில் இருந்து அவரது செந்த ஊரான கோட்டயம் புதுப்பள்ளிக்கு அரசு போக்குவரத்து கழக பேரூந்தில் எடுத்துச் செல்லப்பட்டது.

    திருவனந்தபுரத்தில் இருந்து கோட்டயம் வரை நடந்த அவரது இறுதி ஊர்வலத்தில் சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டுநின்று உம்மன் சாண்டிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

    உம்மன்சர்ண்டியின் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் கடந்த 18 மற்றும் 19-ந்தேதி ஆகிய 2 நாட்கள் துக்க நாளாக கேரள அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து அந்த இருநாட்களிலும் நடக்க இருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

    இந்நிலையில் உம்மன்சாண்டி மறைந்த 18-ந்தேதியன்று திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் கலைநிகழச்சி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2017 பேட்ச் மருத்துவ மாணவர்கள் பிரிவுபசார விழாவை முன்னிட்டு கல்லூரி நிர்வாகம் சார்பில் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனிடம், முன்னாள் கவுன்சிலர் ஸ்ரீகுமார் என்பவர் புகார் மனு அளித்துள்ளார். அவர் தனது புகார் மனுவில், உம்மன் சாண்டி மறைவையடுத்து அரசு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்த துக்க நாளில் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்பட்டு கலை நிகழ்ச்சி நடத்தி உள்ளனர்.

    மது விருந்தும் நடந்துள்ளது. இது குறித்து காவல் மற்றும் கலால் துறைக்கு தகவல் தெரிவித்தேன். அரசின் அறிவிப்பை மருத்து வக்கல்லூரி போன்ற அரசு நிறுவனமே மீறி உள்ளது. இதனால் அதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    • முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் வலியுறுத்தல்
    • அனைத்து நோய்களுக்கும் தரமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் :

    முன்னாள் அமைச்சரும், தி.மு.க. தணிக்கை குழு உறுப்பினருமான சுரேஷ் ராஜன், சென்னையில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை சந்தித்து ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறியி ருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட் டத்தின் தலைநகரமான, நாகர்கோவிலில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் மிக குறைந்த அளவு நோயாளிகள் வந்து மருந்துகளை வாங்கிவிட்டு வீடு திரும்பும் நிலை இருந்து வந்தது. தற்போது ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு, வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவு, மருத்துவப்பிரிவு செயல்பட்டு வருகிறது. மேலும் கல்லூரி வகுப்புகள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் பயின்று வருகிறார்கள். பல்வேறு வகையான அனைத்து நோய்களுக்கும் தரமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

    இங்கு உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வந்து தங்கி ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மருத்துவம் பெற்று வருகின்றனர். இந்த சூழலில் டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்கு றையால் இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் சீட்டு எடுப்பதற்கும், டாக்டரை சந்திப்பதற்கும், மருந்துகள் வாங்குவதற்கும், அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    வெளி மாவட்டத்தில் இருந்து சிகிச்சை பெறுவதற்கு வரும் நோயாளிகள், டாக்டர்கள் இல்லாததால் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகி றார்கள். 9 டாக்டர்கள் இருக்கும் இடத்தில் 3 பேர் மட்டுமே உள்ளனர். மீதமுள்ள இடங்களில் மருத்து வக்கல்லூரி பேராசிரியர்களை வைத்து தான் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. எனவே நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரிக்கு கூடுதலாக டாக்டர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 253 பேருக்கு ஒரு மருத்துவர் இருப்பதைக் காரணம் காட்டி மருத்துவக் கல்லூரிகளுக்கு தடை விதிப்பது அநீதி.
    • மருத்துவக் கல்லூரிகளை திறக்க அனுமதிக்கலாமா, வேண்டாமா? என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு தான் உண்டு.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் 253 பேருக்கு ஒரு மருத்துவர் இருப்பதைக் காரணம் காட்டி மருத்துவக் கல்லூரிகளுக்கு தடை விதிப்பது அநீதி. இவை அனைத்திற்கும் மேலாக ஒரு மாநிலத்தில் மருத்துவக் கல்லூரிகளை திறக்க அனுமதிக்கலாமா, வேண்டாமா? என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு தான் உண்டு.

    தேசிய மருத்துவ ஆணையத்திற்கு அந்த அதிகாரம் கிடையாது. இந்த விவகாரத்தில் தேசிய மருத்துவ ஆணையம் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான கட்டுப்பாடுகளை விதிப்பதும், அதற்கு மத்திய அரசு உடந்தையாக இருப்பதும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானவை. இதை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளக் கூடாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பெண் டாக்டர் கூறியுள்ள தகவல்கள் உண்மைதானா? என்பது குறித்த விவரங்களை அவர் பயிற்சி டாக்டர்களிடம் கேட்டு அறிந்தார்.
    • வேறு யாருக்காவது பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து உள்ளாரா

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கோட்டா ரில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

    இங்கு ஏராளமான உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தினமும் மருந்து வாங்கு வதற்கும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொது மக்கள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் எங்கு பணிபுரியும் பெண் டாக்டர் ஒருவருக்கு டாக்டர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பெண் டாக்டர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீ சார் இன்று ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக பயிற்சி டாக்டர்கள் இரண்டு பேரிடம் விசாரணை நடத் தப்பட்டது. பயிற்சி மாணவி களிடம் தனிஅறையில் சுமார் ஒரு மணி நேரமாக பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் விசாரணை மேற்கொண்டார். பெண் டாக்டர் கூறியுள்ள தகவல்கள் உண்மைதானா? என்பது குறித்த விவரங்களை அவர் பயிற்சி டாக்டர்களிடம் கேட்டு அறிந்தார்.

    புகார் தெரிவித்த டாக்டர் வேறு யாருக்காவது பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து உள்ளாரா என்பது குறித்த தகவல்களையும் போலீசார் கேட்டறிந்தனர். பெண் டாக்டர் புகார் கூறிய டாக்டர் கடந்த இரண்டு நாட்களாக விடுமுறையில் இருந்ததாக உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த கட்டமாக அவரிடம் விசாரணை நடத்த போலீ சார் முடிவு செய்துள்ளனர். பெண் டாக்டர் ஒருவருக்கு டாக்டர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு குலசேகரம் அருகே மருத்துவக் கல்லூரி ஒன்றில் கல்லூரி பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் பயிற்சி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவம் நடை பெற்று சில நாட்களிலேயே மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்று இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

    • தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் மட்டும் தான் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
    • வெற்று வசனம் பேசியே 3 ஆண்டுகளை தமிழக அரசு வீணடித்துவிட்டது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் 2024-25-ம் ஆண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவோ, புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவோ தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

    தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் மட்டும் தான் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளன. மாவட்டத்திற்கு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி என்ற கொள்கையின் அடிப்படையில் 6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இதுவரை புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதற்கோ, ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் 32 மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களை ஏற்படுத்துவதற்கோ எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. வெற்று வசனம் பேசியே 3 ஆண்டுகளை தமிழக அரசு வீணடித்துவிட்டது. எனவே, தேசிய மருத்துவ ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்று, மருத்துவக் கல்லூரி இல்லாத 6 மாவட்டங்களிலும் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராக லியூ டேவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வராக சிவசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் 14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வராக சிவசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி முதல்வராக பவானி, ஈரோடு மருத்துவக் கல்லூரி முதல்வராக ரவிக்குமார், குமரி மருத்துவக்கல்லூரி டீனாக ராம லட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    திருச்சி மருத்துவக் கல்லூரி முதல்வராக குமரவேல், மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக அருள் சுந்தரேஷ் குமார், ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி டீனாக அமுதா ராணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சேலம் மருத்துவக் கல்லூரி முதல்வராக தேவி மீனாள், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராக லியூ டேவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி முதல்வராக கலைவாணி, தேனி மருத்துவக் கல்லூரி முதல்வராக சித்ரா, கரூர் மருத்துவக் கல்லூரி முதல்வராக லோகநாயகி, விருதுநகர் மருத்துவக்கல்லூரி முதல்வராக ஜெயசிங் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக ரோகிணி தேவியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    • அனைவரையும் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நிற்க வைத்தனர்
    • மாணவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    குஜராத் மாநிலத்தில் மருத்துவக்கல்லூரியில் சீனியர்களின் ராகிங் கொடுமையால் 18 வயது மாணவன் பரிதமபாக உயிரிழந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

    குஜராத்தின் பதான் மாவட்டத்தில் உள்ள தர்பூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை விடுதியில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. விடுதியில் தங்கியிருக்கும் முதலாமாண்டு எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்து வந்துள்ளனர்.

    நேற்று முன்தினம் இரவு சீனியர் மாணவர்கள் சிலர் முதலாமாண்டு மாணவர்களை அழைத்து, அவர்கள் அனைவரையும் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நிற்க வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது 18 வயதான அணில் மெதானியா என்ற மாணவர், திடீரென மயங்கி விழுந்தார்.

    அவரை சக மாணவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் மாணவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடதுக்கு வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மாணவனின் மரணத்துக்கு உரிய நீதி  கிடைக்க வேண்டும் என்று உறவினர்கள் வலியறுதியள்ளனர்.

    • அரசு மருத்துவக் கல்விக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழ்நாடு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.
    • ஓராண்டில் புதிய இடங்களை உருவாக்குவதில் தமிழ்நாடு ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.

    அதிக எண்ணிக்கையில் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருந்தது என்றும், ஆனால் தற்போது தமிழ்நாடு இந்த வரிசையில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை இடங்கள்: மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்நாடு - ஒரு கல்லூரி கூட தொடங்காத திராவிட மாடல் அரசு!

    இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களைக் கொண்டுள்ள மாநிலங்கள் பட்டியலில் கடந்த ஆண்டு இரண்டாவது இடத்தில் இருந்த தமிழ்நாடு இப்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எந்தவொரு புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படாததும், புதிய மாணவர் சேர்க்கை இடங்கள் ஏற்படுத்தப்படாததும் தான் இந்த நிலைக்கு காரணம் ஆகும். அரசு மருத்துவக் கல்விக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழ்நாடு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.

    2023-24ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் 11,650 ஆக இருந்தன. அதன்பின் ஓராண்டில் 400 புதிய இடங்கள் மட்டும் தான் உருவாக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் தனியார் கல்லூரிகளில் ஏற்படுத்தப்பட்டவை. இந்த எண்ணிக்கை மிக மிக குறைவு ஆகும். இதேகாலத்தில் மிகவும் பின் தங்கிய மாநிலம் என்று கூறப்படும் உத்தரப்பிரதேசம் 2522 புதிய இடங்களை உருவாக்கி , தமிழ்நாட்டை பின்னுக்குத் தள்ளிவிட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. மராட்டியம் 1000 புதிய இடங்களையும், இராஜஸ்தான் 900 புதிய இடங்களையும், தெலுங்கானா 550 இடங்களையும் உருவாக்கியுள்ளன. கடந்த ஓராண்டில் புதிய இடங்களை உருவாக்குவதில் தமிழ்நாடு ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.

    கடந்த ஆண்டில் கர்நாடகம் 800 புதிய இடங்களை உருவாக்கிய நிலையில் தமிழ்நாட்டில் 1000 புதிய இடங்கள் உருவாக்கப்பட்டிருந்தால், மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை இடங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்திருக்க முடியும். தமிழ்நாட்டில் 2021-ஆம் ஆண்டில் புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளிலும் தலா 50 இடங்களை கூடுதலாக ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இரு ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அதை செய்திருந்தாலே தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்திருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்புகளையெல்லாம் இழந்து விட்டு நிற்கிறது தமிழ்நாடு அரசு.

    அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஒரு புதிய மருத்துவக் கல்லூரியைக் கூட திறக்கவில்லை; ஒரே ஒரு மருத்துவ இடத்தைக் கூட கூடுதலாக உருவாக்கவில்லை .தமிழக அரசு நினைத்திருந்தால் அதன் சொந்த நிதியில் கடந்த 3 ஆண்டுகளில் தலா இரு கல்லூரிகள் வீதம் உருவாக்கி அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகளை அமைத்திருக்க முடியும். ஆனால், மத்திய அரசு நிதியில் மருத்துவக் கல்லூரிகளை அமைக்கப் போகிறோம், அதற்காக மனு கொடுத்திருக்கிறோம் என்று வெற்று வசனம் பேசியே 3 ஆண்டுகளை தமிழக அரசு வீணடித்து விட்டது.

    அடுத்த ஆண்டு முதல் தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க முடியாது, கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களை உருவாக்க முடியாது என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், நடப்பாண்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளையும், மாணவர் சேர்க்கை இடங்களையும் அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்யத் தவறியதன் மூலம் திராவிட மாடல் அரசு மக்களுக்கு பெருந்துரோகம் செய்து விட்டது. இதற்காக திமுக அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கல்லூரி நிர்வாகிகள், பாத்திரங்களை கழுவுவதற்கு மட்டுமே பாத்ரூம் தண்ணீர் பயன்படுத்தப்பட்டது என்று தெரிவித்தனர்.
    • இந்த சம்பவம் சுகாதாரம் தொடர்பானது என்பதால் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் சஞ்சய் மிஸ்ரா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

    மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவக் கல்லூரியில் தேசிய அளவிலான மருத்துவ மாநாட்டில் கலந்து கொண்ட மருத்துவர்களுக்கு பாத்ரூம் தண்ணீரை பயன்படுத்தி உணவு தயாரிக்கப்பட்டதாக ஒரு வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி உள்ளது.

    அந்த வீடியோவில், கழிப்பறை குழாயில் இருந்து வரும் தண்ணீரை சமையல் செய்யும் ஊழியர்கள் பயன்படுத்துகின்றனர்.

    நாடு முழுவதும் இருந்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்ட தேசிய அளவிலான மருத்துவ மாநாடு பிப்ரவரி 6-ந்தேதி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது, பங்கேற்பாளர்களுக்கு இந்த உணவு தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த வீடியோ சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகிகள் கூறுகையில், "பாத்திரங்களை கழுவுவதற்கு மட்டுமே பாத்ரூம் தண்ணீர் பயன்படுத்தப்பட்டது" என்று தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் சுகாதாரம் தொடர்பானது என்பதால் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் சஞ்சய் மிஸ்ரா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

    உணவு தயாரிப்புக்கு பாத்ரூம் தண்ணீர் பயன்படுத்தப்படவில்லை என்று கூறினாலும், இந்த விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வ ஆய்வு தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக சுகாதாரத்துறை ஆய்வு செய்து வருகிறது.

    • மருத்துவ கல்லூரி பணியாளர்கள் ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
    • ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    ஆசாரிபள்ளம் அருகே பார்வதிபுரம் மேம்பாலம் அருகில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சம்பவத்தன்று மயங்கிய நிலையில் கிடந்தார். 

    உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். மீட்கப்பட்ட முதியவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மருத்துவ மனையில் அருகில் உள்ள வார்டு அருகே இறந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    இது பற்றி மருத்துவ கல்லூரி பணியாளர்கள் ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆசாரிபள்ளம் சப்-இன்ஸ்பெக்டர் மேரி மேரிபா வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி விசாரணை செய்து வருகிறார்.

    ×