search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சனி பிரதோஷம்"

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையடி வாரத்தில் குவிந்தனர்.
    • 10 வயதுக்கு குறைவானவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மலையேற தடைவிதிக்கப்பட்டிருந்தது.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் தலா 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் வருகிற 3-ந் தேதி வரை பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. முதல்நாளான இன்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு அதிகாலை முதல் மதுரை, விருதுநகர், திருச்சி, சிவகங்கை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையடி வாரத்தில் குவிந்தனர்.

    இன்று காலை 6.20 மணிக்கு வனத்துறையினர் நுழைவுவாயில் திறந்து விட்டனர். அதனை தொடர்ந்து உடைமைகள் சோதனை செய்யப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். சிறுவர்கள் முதல் இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.

     

    மலை பாதையில் உள்ள வழுக்குப்பாறையில் பக்தர்கள் குளித்தனர்.

    மலை பாதையில் உள்ள வழுக்குப்பாறையில் பக்தர்கள் குளித்தனர்.

    மலைப்பாதையில் உள்ள வழுக்குப்பாறையில் சிறிதளவு தண்ணீர் சென்றது. அதில் சில பக்தர்கள் குளித்துவிட்டு மலையேறி சென்றனர். நடக்க முடியாத வயதான வர்கள் டோலி மூலம் சுமை தூக்கும் தொழிலாளிகள் சுமந்து சென்று சாமி தரிசனம் செய்ய வைத்தனர்.

    இன்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு மாலையில் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி செயல் அலுவலர் ராம கிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.

    10 வயதுக்கு குறைவானவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மலையேற தடைவிதிக்கப்பட்டிருந்தது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. இரவில் மலை கோவிலில் தங்க அனுமதியில்லை போன்ற கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்திருந்தனர்.

    சதுரகிரி மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்தால் பக்தர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.
    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது.

    வத்திராயிருப்பு:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு இன்று முதல் 20-ந் தேதி வரை பக்தர்கள் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் உள்ள ஓடைகளில் நீர் வந்து கொண்டு இருக்கிறது. எனவே சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் 4 நாட்கள் செல்ல வனத்துறையினர் தடைவிதித்து உள்ளனர். எனவே பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரப்பகுதிக்கு வர வேண்டாம் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • நாளை சனி பிரதோஷம் என்பதால் பக்தர்களின் வருகை என்பது அதிக அளவில் இருக்கும்.
    • பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது.

    வத்திராயிருப்பு:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் இந்த மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. இந்த சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்வதற்காக நாளை (சனிக்கிழமை) முதல் வருகிற 20-ந்தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்கியுள்ளனர். இந்தநிலையில் இந்த பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் நாளை சனி பிரதோஷம் என்பதால் பக்தர்களின் வருகை என்பது அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    மேலும் மலையேற அனுமதிக்கப்பட்ட நாட்களில் எதிர்பாராதவிதமாக கனமழை பெய்தால் பக்தர்கள் பாதுகாப்பு கருதி மலையேற சென்று சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படும். பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளையும் வனத்துறையினர் விதித்துள்ளனர்.

    • 13 வகையான வாசனை திரவியங்களால் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது
    • சிறப்பு அபிஷேகங்களும், விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவிலில் ஆனி மாத மகா சனி பிரதோஷ வழிபாடு நேற்றுமாலை நடந்தது.

    இதையொட்டி மாலை 4.30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அப்போது எண்ணெய், மஞ்சள்பொடி, மாபொடி, களபம், பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் ஆகிய 13 வகையான வாசனை திரவியங்களால் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. இந்த அபிஷேகங்களை கோவில் மேல்சாந்தி ராஜாமணி அய்யர் நடத்தினார்.

    இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாளுடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பேரவையினர் செய்துஇருந்தனர்.

    இதேபோல கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள விஸ்வநாதர் கோவில், கீழ ரதவீதியில் உள்ள சிவன் கோவில், விவேகானந்தபுரம் சக்கர தீர்த்த காசிவிசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் கோவில், பஞ்சலிங்கபுரம் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில், மகாதானபுரம் காசிவிசுவநாதர் கோவில், கொட்டாரம் அகத்தீஸ்வரர் கோவில், மருந்துவாழ் மலை ஜோதி லிங்கசாமிகோவில் மற்றும் பரமார்த்தலிங்கசுவாமி கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், தேரூர் எடுத்தாயுதமுடைய நயினார் கோவில், குறண்டி சிவன் கோவில் ஆகிய 12 சிவாலயங்களிலும் ஆனி மாத மகா சனி பிரதோசத்தையொட்டி நேற்றுமாலை சிறப்பு அபிஷேகங்களும், விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    • புற்றுக்கோவிலில் மகா சனி பிரதோஷ விழா சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • சங்கரலிங்க சுவாமிக்கு 18 வகையான அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் மகா சனி பிரதோஷ விழா சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மகா சிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால சிறப்பு பூஜை நடைபெற்றது.

    பிரதோஷ வழிபாடு சுபமங்களம் தரும், சனிக்கிழமைகளில் வரும் மகா பிரதோஷம் அதாவது சனி பிரதோஷ வழிபாட்டினால் பதவி, புகழ் போன்றவற்றை தருவதோடு, மாயைகளில் மாட்டிக்கொண்டு அலைக்கழியாத நிலையையும் அளிக்கும்.சகல தோஷமும் போக்கி சந்தோஷம் அளிக்கும் பிரதோஷ வழிபாடு சிறப்புடையது என்று ஆன்றோர்களின் ஜதீக வாக்காகும்.

    இதனை முன்னிட்டு மாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபண கும்பகலச பூஜை ருத்திர ஜெபம், வருணஜெபம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சங்கரலிங்க சுவாமி, நந்தியம் பெருமாளுக்கு மஞ்சள் பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தனர்.

    இவ்விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • மகாசிவராத்திரி இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
    • சிவன் கோவிலில் விடிய விடிய கண்விழித்து இருப்பார்கள். குல தெய்வ கோவிலிலும் சிவ ஆலயங்களிலும் நடைபெறும்.

    சேலம்:

    மகாசிவராத்திரி இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதிகாலை குளித்து விரதத்தை தொடங்க வேண்டும். சிவன் கோவிலில் விடிய விடிய கண் விழித்து இருப்பார்கள். குல தெய்வ கோவிலிலும் சிவ ஆலயங்க ளிலும் நடைபெறும்.

    மகா சிவராத்திரியன்று கண்விழித்து சிவனை வணங்கினால் நாம் செய்த அத்தனை பாவங்களும் நம்மை விட்டு கரைந்து காணாமல் போய்விடும். அடுத்த 3 ஆண்டுகளில் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு மகத்தான செல்வ வளம் நம்மை வந்து சேரும்.

    மகா சிவராத்திரி நாளில், இரவு முழுவதும் சிவாலயங்கள் திறந்தி ருக்கும். வழக்கமாக அனைத்து சிவாலயங்களும் இரவு 8 முதல் 9 மணிக்குள் பள்ளியறை பூஜை முடிந்து நடை சாத்துவது வழக்கம். ஆனால் மகா சிவராத்திரி நன்னாளில், விடிய விடிய கோயில் திறந்திருக்கும். ஒவ்வொரு கால பூஜைகளும் விமரிசையாக நடைபெறும்.

    முதல் காலத்தில் பிரம்மன் சிவனை பூஜிப்ப தாக ஐதீகம். இந்த நேரத்தில் சிவனை வழிபட்டால் ஜாதக ரீதியான தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பிறவா நிலையை அடைய முடியும். கடன் தொல்லை நீங்கும்.

    2-ம் காலத்தில் பெருமாள் சிவபெருமானை பூஜிப்பதாக ஐதீகம். அப்போது சிவனை வழிபட வறுமை, கடன் தொல்லை, சந்திர தோஷம் நீங்கும். மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு, 2-ம் கால பூஜையின் அபிஷேக நீரை பருக கொடுத்தால் சித்த சுத்தி உண்டாகும் என்பது நம்பிக்கை. சகல பாவங்களும் நீங்கும்.

    3-ம் காலத்தில் பூஜையை அம்பிகையே செய்வதாக ஐதீகம். மகா சிவராத்திரியின் உச்ச கட்ட வழிபாட்டு நேரம் இது. இதனை 'லிங்கோத்பவ காலம்' என்றும் கூறுவர். நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரையான இந்த நேரத்தில்தான், அடிமுடியாக நின்ற ஈசன், மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் லிங்க ரூபமாக காட்சியளித்தார். மகா சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் இந்த காலத்தில் வழிபாடு செய்தால் சகல பாவங்களும் நீங்குவதோடு, எந்த தீய சக்தியும் அண்டாது. சிவசக்தியின் அருள் நம்மை காக்கும்.

    4-ம் காலத்தில் தேவர்க ளும், முனிவர்களும், ரிஷிகளும், பூத கணங்க ளும், மனிதர்களும், அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்ப தாக ஐதீகம். இவனால் இறைவன் சங்கடங்கள் அனைத்தையும் தீர்ப்பார். இந்த ஆண்டு மகா சிவராத்திரி சனிக்கிழமை மகா பிரதோஷ நாளில் வருவது இன்னும் சிறப்பு. வழக்கமாகவே மகா சிவ

    ராத்திரியின்போது சிவாலயங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இன்று சனி பிரதோஷமும் சேர்ந்து வருவதால் சிவாலயங்கள் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சேலம், நாமக்கல் மாவட்ட சிவாலயங்களில் மகா சிவராத்திரி வழிபாட்டுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சேலம் சுகவனேசுவரர் கோவிலில் மகா சிவ ராத்திரியை முன்னிட்டு மாலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை வரை சிவ வழிபாடு நடக்கிறது. இதையொட்டி பாரம்பரிய கலை, கலாசாரம் மற்றும் ஆன்மிகம் சார்ந்த சொற்பொழிவுகளும் பக்தி இசையும், நாட்டிய நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. சுகவனே சுவரர் கோவிலில் நடை பெறும் பூஜை உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் யு-டியூப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஒளிபரப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    தாரமங்கலம் கைலாச நாதர், நங்கவள்ளி சோமேஸ்வரர், உத்தமசோழ புரம், கரபுரநாதர் கோவிலில் இன்று (சனிக்கி ழமை) பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு மாலை 5 மணிக்கு மேல் பெரியநாயகி சமேத கரபுரநாதர் சாமிக்கு பால், தேன், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.

    இதைத்தொடர்ந்து மகா சிவராத்திரி விழா தொடங்குகிறது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்கின்றனர். அம்மாப்பேட்டை மாதேஸ்வ ரர் கோயில், அமரகுந்தி சொக்கநாதர் கோயில், அரசிராமணி சோளீஸ்வரர் கோயில், ஆத்தூர் காய நிர்மலேசுவரர் கோயில், பேரூர் பசுபதீசுவரர் கோயில், ஏத்தாப்பூர் சாம்ப மூர்த்திஸ்வரர் கோயில், கருப்பூர் கைலசநாதர் கோயில், கொங்கணாபுரம் உலகேஸ்வர சுவாமி கோயில், சுக்கம்பட்டி உதய தேவரீஸ்வரர் கோவில்,

    கோனேரிப்பட்டி அனந்தஈஸ்வரர் கோயில், பாலமலை சித்தேஸ்வரர் கோயில், பாலவாடி ஜலகண்டேஸ்வரர் கோயில், பெத்தநாயக்கன்பாளையம் ஆட்கொண்டீஸ்வரர் கோயில், பெரிய சோரகை பரமேஸ்வரன்சுவாமி கோயில், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில், மேட்டூர் அணை மீனாட்சி சொக்கநாதர் கோயில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோவில்கள், நாமக்கல் மாவட்டத்தில் ஆண்டாபுரம் காசிவிஸ்வநாதர் கோயில், ஆனங்கூர் சக்தீஸ்வரர் கோயில், கூடச்சேரி சோழீஸ்வ

    ரர் சுவாமி கோயில், கொல்லி மலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில் கொளங்கொண்டை சீர்காழிநாதர் கோயில், திருச்செங்கோடு அர்த்த நாரீசுவரர் கோயில், திருச்செங்கோடு கைலாசநா தர் கோயில், பரமத்தி வேலூர் பீமேஸ்வரர் கோயில் பள்ளிபாளையம் அக்ரஹரம் விஸ்வேஸ்வ ரர்சுவாமி கோயில், பாண்டமங்கலம் புதிய காசிவிஸ்வ நாதர் கோயில், ராசிபுரம் கைலாசநாதர் திருக்கோயில், பில்லூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில், வெண்ணந்தூர் தீர்த்த கீரீஸ்வரர் கோயில், வையப்பமலை இடும்பேஸ்வரர் கோயில் உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களி லும் இன்று சிவராத்திரி வழிபாடு நடைபெறுகிறது.

    • மகா சிவராத்திரி விழா 18-ந்தேதி நடக்கிறது
    • விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி விவேகா னந்தபுரம் சந்திப்பில் சக்கர தீர்த்த காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில் அமைந்து உள்ளது.

    இந்த கோவிலில் சனி பிரதோஷத்துடன் மகா சிவராத்திரி விழா வருகிற 18-ந்தேதி நடக்கிறது. இதை யொட்டிஅன்றுஅதிகாலை 4.30 மணிக்கு மஹா கணபதி ஹோமமும், காலை 7 மணிக்கு நித்திய பூஜையும் 7.30 மணிக்கு தீபாராதனையும் 10.30 மணிக்கு சிறப்பு அபி ஷேகமும் 11 மணிக்கு மகா தீபாராதனையும்  நடக்கிறது.

    இந்த அன்னதானத்தை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார். மாலை 4.30 மணிக்கு சனி மகா பிரதோஷமும், மாலை 4.35 மணிக்கு பிரதோஷ அபிஷேகமும் 5.30 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் 5.35 மணிக்கு பிரசாதம் வழங்குதலும் நடக்கிறது.

    6.15 மணிக்கு முதல் ஜாம பூஜையும் இரவு 8.30மணிக்கு ஆன்மீக சொற் பொழிவும் 9.15 மணிக்கு 2-ம் ஜாம பூஜையும் 10 மணிக்கு இசை நாட்டியாஞ்சலியும் நள்ளிரவு 12.15 மணிக்கு 3-ம் ஜாம பூஜையும் 12.30 மணிக்கு சமய சொற் பொழிவும் 1.30 மணிக்கு ஆன்மீக சங்கமமும் நடக் கிறது. மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு 4-ம் ஜாம பூஜையும் தொடர்ந்து சிறப்பு அபிஷேகமும் புஷ்பாபிஷேகமும் நடக்கிறது. 4 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் 4.15 மணிக்கு பிரசாதம் வழங்குதலும் நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் ஆனந்த் மற்றும் விழாக் குழுவினர் செய்து வருகிறார்கள்.

    • புற்றுக்கோவிலில் மகா சனி பிரதோஷ விழா சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • சங்கரலிங்க சுவாமி, நந்தியம் பெருமான்னுக்கு 18 வகையான அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் மகா சனி பிரதோஷ விழா சிறப்பு பூஜை நடைபெற்றது.

    பிரதோஷ வழிபாடு சுபமங்களம் தரும், சனிக்கிழமைகளில் வரும் மகா பிரதோஷம் அதாவது சனி பிரதோஷ வழிபாட்டினால் பதவி, புகழ் போன்றவற்றை தருவதோடு, மாயைகளில் மாட்டிக்கொண்டு அலைக்கழியாத நிலையையும் அளிக்கும்.சகல தோஷமும் போக்கி சந்தோஷம் அளிக்கும் பிரதோஷ வழிபாடு சிறப்புடையது என்று ஆன்றோர்களின் ஜதீக வாக்காகும். இதனை முன்னிட்டு மாலை கோவில் நடை திறக்கப்பட்டு சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபண கும்பகலச பூஜை, ருத்திர ஜெபம், வருணஜெபம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சங்கரலிங்க சுவாமி, நந்தியம் பெருமான்னுக்கு மஞ்சள் பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • சனி பிரதோஷத்தை முன்னிட்டு செங்கோட்டை குலசேகரநாதர் கோவிலில் சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    • தேன், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 36 நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    செங்கோட்டை:

    சனி பிரதோஷத்தை முன்னிட்டு செங்கோட்டை குலசேகரநாதர் கோவிலில் சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடந்தது. மாலையில் சுவாமி, அம்பாள், நந்திக்கு மா பொடி, மஞ்சள் பொடி, திரவியம், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 36 நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து சுவாமி, அம்பாள், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பின் சுவாமி, அம்பாள், நந்தீஸ்வரக்கு தீபாராதனைகள் நடந்தது. நிகழ்ச்சியில் சிவ பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடி சுவாமியை வழிபட்டனர். சுவாமி நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோவில் உள் பிரகாரத்தில் உலா வந்தார்.

    மகா சனி பிரதோசமான நேற்று செங்கோட்டை சுற்றுவட்டார பக்தர்கள் கலந்துகொண்டு அருள் பிரசாதம் பெற்று சென்றனர்.இதனைப் போன்று ஆறுமுகசாமி ஒடுக்கம், மாலையான் சாமி கோவில், புளியரை கோவில், இலத்தூர் மதுநாத சுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடுகள் நடைபெற்றது.

    ×