என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வன விலங்குகள்"
- மஞ்சள் நிற உரசாக்குடன் நின்றிருந்த ஒருவர் போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்றார்
- சட்ட விரோதமாக நாட்டுத் துப்பாக்கியை வைத்து வனப்பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாடி வருவதும் தெரியவந்தது.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் வெள்ளி திருப்பூரை ஒட்டியுள்ள வனப்பகுதிகளான மாத்தூர், வட்டக்காடு, செல்லம்பாளையம் ஆகிய பகுதிகளில் சட்ட விரோத செயல்கள் நடைபெறுகிறதா என வெள்ளித்திருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது வட்டக்காடு பகுதியில் மஞ்சள் நிற உரசாக்குடன் நின்றிருந்த ஒருவர் போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்றார். சந்தேகமடைந்த போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். மேலும் அவரிடம் சோதனை நடத்தினர்.
இதில் அவர் கையில் வைத்திருந்த உரசாக்கில் மொசுகோந்தி வகை குரங்கின் தோல் உரித்த நிலையில் இரண்டாக வெட்டப்பட்டு இருந்தது.
மேலும் விசாரணையில் அவர் சங்கராபாளையம் அருகே உள்ள காக்காயனூரை சேர்ந்த மாதன் என்கிற துரையன் (45) என்பதும், சட்ட விரோதமாக நாட்டுத் துப்பாக்கியை வைத்து வனப்பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாடி வருவதும் தெரியவந்தது.
மேலும் சாணிமடுவு வனப்பகுதியில் மொசுக்கோந்தியை சுட்டதாகவும் அதற்கு பயன்படுத்திய உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி மற்றும் மருந்து பொருட்களை அங்குள்ள ஒரு மறைவான பகுதியில் வைத்துள்ளதாகவும், அதனை கடந்த 5 வருடங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து வாங்கியதாகவும் மாதன் தெரிவித்தார்.
இதை அடுத்து மாதனை போலீசார் கைது செய்து துப்பாக்கி மற்றும் இறைச்சியை பறிமுதல் செய்தனர்.
- யானைகள், மான், காட்டெருமை, சிறுத்தை, கரடி, உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீருக்காக ரோட்டை கடக்கும்.
- குள்ளநரிகள் ஒன்றன் பின் ஒன்றாக சுமார் 8 நரிகள் ரோட்டை கடந்தன.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, புலி, சிறுத்தை, காட்டு எருமை, கரடி உள்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.
குறிப்பாக சத்தியமங்கலத்தில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அருகே வனவிலங்குகள் அடிக்கடி சாலையை கடப்பது வாடிக்கையான ஒன்று தான்.
இதில் யானைகள், மான், காட்டெருமை, சிறுத்தை, கரடி, உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீருக்காக ரோட்டை கடக்கும்.
இந்நிலையில் இன்று காலை சுமார் 7 மணி அளவில் சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருக்கும் ஒருவர் நடுரோட்டில் குள்ளநரி கூட்டம் ஒன்று கடப்பதை பார்த்து அங்கேயே வாகனத்தை நிறுத்தி செல்போனில் படம் பிடிக்க ஆரம்பித்தார்.
குள்ளநரிகள் ஒன்றன் பின் ஒன்றாக சுமார் 8 நரிகள் ரோட்டை கடந்தன. பொதுவாகவே காலையில் நரி முகத்தில் முழித்தால் நல்லது நடக்கும் என முன்னோர்கள் சொல்வார்கள். அதேபோல் இவர் குள்ளநரியை பார்த்து விட்டு மகிழ்ச்சி அடைந்தார்.
அந்த வழியாக வந்த மற்ற வாகன ஓட்டிகளும் குள்ள நரி கூட்டத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். மிகவும் கணிசமான எண்களில் இருக்கும் குள்ள நரிகளை பார்ப்பது இதுவே முதல்முறை என சுற்றுலா பயணிகள் கூறி மகிழ்ந்தார்.
- புல்லூர் காப்புகாடு பகுதியில் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
- வனவிலங்குகளை வேட்டை ஆடுவதற்காக நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திருந்ததாக தெரிகிறது.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை இடைக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகண்யா, தலைமை போலீஸ் ஏட்டு சத்தியராஜ் மற்றும் போலீசார் இடைக்கல் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட புல்லூர் காப்புகாடு பகுதியில் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக 5 பேர் நாட்டுதுப்பாக்கியுடன் வந்தனர். அவர்களை பார்த்த போலீசார் உடனே அவர்கள் 5 பேரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். இதில் அவர்கள் எறையூர் பகுதியை சேர்ந்த சூசை (வயது 45), தென்போஸ்கோ (23), அந்துவான் கிருஸ்துராஸ் (25), அந்துவான் சான்பீட்டர் (19), மற்றும் மே.மாலூர் பகுதியை சேர்ந்த ஜான் எடிசன் (22) ஆகியோர் என்பதும் இவர்கள் காப்பு காட்டு பகுதியில் வனவிலங்குகளை வேட்டை ஆடுவதற்காக நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திருந்ததாக தெரிகிறது. மேலும் போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடமிருந்து நாட்டுதுப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
- 2 முறை இந்த கண க்கெடுப்பு பணி நடை பெறுகிறது.
- 6 நாட்கள் இவ்வாறு கணக்கெடுப்பு செய்து புலிகளின் எண்ணிக்கை கணிக்கப்படும்.
டி.என்.பாளையம்,
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டி.என்பாளையம் வன ப்பகுதியில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
இங்கு இன்று முதல் 6 நாட்கள் நடைபெறும் புலிகள் கணக்கெடுப்பு மழைக்கு முந்தைய கண க்கெடுப்பு, மழைக்கு பிந்தைய கணக்கெடுப்பு என 2 முறை இந்த கணக்கெடுப்பு பணி நடை பெறுகிறது.
இன்று முதல் நாளில் புலி, சிறுத்தை, கரடி, செந்நாய் உள்ளிட்ட மாமிச உண்ணிகள் மற்றும் யானை, காட்டெருமை, கடமான் உள்ளிட்ட பெரிய தாவர உண்ணிகளின் எச்சங்கள், கால் தடங்களும், 2-ம் நாளில் நேர்கோட்டு பாதையில் தாவர உண்ணிகள் என மாற்றி மாற்றி 6 நாட்கள் இவ்வாறு கணக்கெடுப்பு செய்து புலிகளின் எண்ணிக்கை கணிக்கப்படும்.
டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கணக்கம்பாளையம், கொண்டையம்பாளையம், பங்களாப்புதூர், கொங்க ர்பாளையம், விளா ங்கோம்பை, மல்லியம்மன் துர்க்கம், கடம்பூர் கிழக்கு என 7 காவல் சுற்று பகுதியில் புலிகள் கணக்கெடுப்பு பணியை டி.என்.பாளையம் வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
- கணக்கெடுக்கும் பணி வருகிற 17-ந் தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள் நடைபெற உள்ளது.
- வனத்துறையினர் நேர்கோட்டுப் பாதையில் சென்று கண க்கெடுப்பு நடத்த உள்ளனர்.
சத்தியமங்கலம்,
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சத்தியமங்கலம், பவானி சாகர், தாளவாடி, கடம்பூர், ஆசனூர், விளாமுண்டி உள்ளிட்ட 10 வனச்சர கங்களில் மழைக்காலத்திற்கு முந்தைய வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
இதையொட்டி வன ப்பகுதிகளில் புலிகள், சிறுத்தைகள் மற்றும் பெரிய தாவர உண்ணிகளான யானை, காட்டெருமை ஆகியவைகளின் கணக்கெடுக்கும் பணி இன்று (திங்கட்கிழமை) காலை தொடங்கி நடந்து வருகிறது.
இன்று காலை தொடங்கிய வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி வருகிற 17-ந் தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள் நடைபெற உள்ளது.
முதல் நாளான இன்று பகுதிவாரியாக வனத்துறை ஊழியர்கள் பிரிந்து சென்று கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். 2-வது நாளாக நாளை (செவ்வாய்க்கிழமை) வனத்துறையினர் நேர்கோட்டுப் பாதையில் சென்று கண க்கெடுப்பு நடத்த உள்ளனர்.மேலும் 4 நாட்களும் பகுதிவாரியாகவும், நேர்கோட்டுப் பாதையிலும், சுழற்சி முறையில் இந்த கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.
ஒரு குழுவிற்கு வன க்காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கொண்ட 4 பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து மொத்தம் சுமார் 300-க்கும் மேற்பட்டோர், உணவு, தண்ணீர், ஜி.பி.எஸ், ரேஞ்ச் பைண்டர், காம்பஸ் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களோடு அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று, இந்த புலிகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த 6 நாட்கள் புலிகள் கணக்கெடுப்பு முடிவடைந்த பின்னர் 4 நாட்களுக்கு பிறகு சத்தியமங்கலம் புலிகள்காப்பகத்துக்கு உட்பட்ட 10 வனச்சரகங்களிலும் தானியங்கி கேமிராக்கள் பொருத்தும் பணி நடைபெற உள்ளது.
இதை தொடர்ந்து 3 மாதங்கள் அந்த தானியங்கி கேமிராக்கள் மூலம் சிறுத்தை மற்றும் புலிகளின் நடமாட்டம், பாலினம் மற்றும் குட்டிகளின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அந்த வீடியோ பதிவுகள் மற்றும் நேரடி கணக்கெடுப்பின் இறுதி எண்ணிக்கை உயர் அதி காரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
வனப்பகுதியில் 1.5 கிலோ மீட்டர் இடைவெளியில் ஒரு தானியங்கி கேமிரா என மொத்தம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மட்டும் 700 கேமிராக்களை பொருத்த வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
சென்ற ஆண்டு வரை நடைபெற்ற கணக்கெடுப்பில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மட்டும் 80-க்கும் மேற்பட்ட புலிகள் உள்ளதாகவும், 100-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் ஆரோக்கியமான வன ச்சூழலில் வாழ்ந்து வருவது. வனத்துறையினரின் புள்ளி விவரங்களின்படி தெரியவருகிறது.
தற்பொழுது நடைபெறும் புலிகள் கணக்கெடுப்பின் இறுதி வடிவம் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிறகே, மேலும் புலிகள் மற்றும் சிறுத்தைகளின் எண்ணிக்கை எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்பது குறித்து தெரிய வரும் என சத்தியமங்கலம் புலிகள் காப்பக உயிரியலாளர் சக்திவேல் தெரித்துள்ளார்.
- ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை அமராவதி வனப்பகுதி எல்லையில் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் அமைந்துள்ளன.
- காட்டுப்பன்றிகள் இனப்பெருக்கம் காரணமாக அவை கிராமங்கள் வரை வர துவங்கியுள்ளன.
உடுமலை:
ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை அமராவதி வனப்பகுதி எல்லையில் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள நிலங்களில் நிலக்கடலை, தென்னை, மா, மொச்சை உள்ளிட்ட பல்வேறு விவசாய சாகுபடிகள் மேற்கொள்ளப்படுகின்ற ன. வனத்திலிருந்து வெளியேறும் காட்டுப் பன்றிகள்,யானை,மான் கூட்டம் விளைநிலங்களில் தொடர் சேதம் ஏற்படுத்தி வருகிறது. நிலக்கடலை, பொச்சை பயிர்களில் செடிகளை முழுமையாக அழித்து பொருளாதார சேதம் ஏற்படுத்தி வருகின்றன.
வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுப் பன்றிகள் கூட்டம் மழை நீர் ஓடைகளில் பதுங்கி இரவு நேரங்களில் விளைநிலங்களுக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்துவதால் அவற்றை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் திணறுகின்றனர்.
வல்லக்குண்டாபுரம், ஜல்லிக்கட்டு,கொங்கு ரார்குட்டை, பருத்தியூர், மானுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டுப் பன்றிகள் தொல்லையால் விவசாயிகள் சாகுபடியை கைவிடும் நிலைக்குகூட தள்ளப்பட்டுள்ளனர்.
காட்டுப்பன்றிகள் இனப்பெருக்கம் காரணமாக அவை கிராமங்கள் வரை வர துவங்கியுள்ளன. பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி வரும் காட்டு பன்றிகளை மீண்டும் வனப்பகுதியில் விரட்ட வேண்டும். அவற்றை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் சார்பில் போராட்டமும்நடந்தது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வனவிலங்கு களால் சாகுபடி பாதிக்கும் போது நிவாரணம் வழங்க வனத்துறையினர் காலதாமதம் செய்கின்றனர். மேலும் பாதிப்புக்கும் வனத்துறை வழங்கும் நிவாரணத்திற்கும் சம்பந்தமே இல்லை. எனவே கிராம விவசாயிகளை உள்ளடக்கி மன உரிமை குழு கூட்டங்களை குறிப்பிட்ட இடைவெளியில் நடத்த வேண்டும். விவசாயிகளிடம் கருத்து கேட்டு அதற்கு ஏற்ப நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு உடு–ம–லை–யை–ய–டுத்த பெரி–ய–கோட்டை, தாரா–பு–ரம் சாலை உள்–ளிட்ட பகு–தி–களில் நூற்–றுக்–க–ணக்–கான ஆடு–கள் மர்ம விலங்–கு–க–ளால் கடித்–துக் குத–றப்–பட்–டன.இதன் தொடர்ச்–சி–யாக கடந்த சில மாதங்–க–ளாக உடு–மலை, மடத்–துக்–கு–ளம் பகு–தி–களில் மீண்–டும் ஆடு–கள், கன்–று–கள் உள்–ளிட்–டவை கடித்து குதறி கொல்–லப்–பட்டு வரு–கின்–றன. இதனை தொடர்ச்–சி–யாக கண்–கா–ணித்து வரும் வனத்–து–றை–யி–னர், கால்–ந–டை–களை வேட்–டை–யா–டும் மர்ம விலங்–கு–கள் வன விலங்–கு–கள் இல்லை என்–பதை உறு–திப்–ப–டுத்–தி–யுள்–ள–னர். மடத்–துக்–கு–ளத்–தை–ய–டுத்த சாம–ரா–யப்–பட்டி உள்–ளிட்ட ஒரு–சில பகு–தி–களில் கூட்–ட–மாக வரும் நாய்–கள் மனி–தர்–க–ளின் கண் முன்னே ஆடு–களை வேட்–டை–யா–டி–யுள்–ளது. மேலும் அவை மனி–தர்–க–ளை–யும் கடிக்–கத் துரத்–தி–யுள்–ளது. இந்–த–நி–லை–யில் துங்–காவி அரு–கி–லுள்ள மலை–யாண்–டிப்–பட்–டி–னம் பகு–தி–யில் பொன்–னுச்–சாமி, ஈஸ்–வ–ர–சாமி ஆகிய விவ–சா–யி–க–ளின் தோட்–டத்–துக்–குள் நள்–ளி–ர–வில் நுழைந்த நாய்–கள் 2 ஆடு–களை கடித்–துக் கொன்–றுள்–ளன.தொடர்ச்–சி–யாக ரத்த வேட்–டை–யாடி வரும் நாய்–க–ளைப் பிடிக்க நட–வ–டிக்கை எடுக்க வேண்–டும் என்–பது விவ–சா–யி–க–ளின் கோரிக்–கை–யாக உள்–ளது.
- வனத்துறையினர் 2 மரநாய்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு சென்றனர்.
- அரியூர் மலையில் உடும்பு உள்ளிட்ட அரியவகை வன உயிரினங்கள் உள்ளன.
சிவகிரி:
சிவகிரி அருகே உள்ள வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரியூர் மலையை ஒட்டியுள்ள விவசாய பகுதியில் 2 அரிய வகை மரநாய்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இது தொடர்பாக புளியங்குடி வனத்துறை யினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த புளியங்குடி வனவர் மகேந்திரன் தலைமை யிலான வனத்துறையினர் 2 மரநாய்களையும் மீட்டு வடக்குப்புதூர் கால்நடை மருத்துவ மனைக்கு உடற்கூறு ஆய்வு க்காக கொண்டு சென்றனர். தொடர்ந்து இதுகுறித்து புளி யங்குடி வனத்து றையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியூர் மலையில் அரியவகை வன உயிரினங்களான எறும்புத்திண்ணி, உடும்பு, முள் எலி, முள்ளம் பன்றி, மரநாய்கள் உள்ளிட்ட பல்வேறு வகை யான வன உயிரினங்கள் உள்ளன. இவை அவ்வ போது மலை அடிவார பகுதியில் மர்மமான முறையில் இறப்பது தொடர்ந்து வருவதாக அப்பகுதி யினர் கூறுகி ன்றனர். எனவே அரியூர் மலையை பாது காக்கப்பட்ட வனப்பகுதி யாக அறிவித்து அவற்றை பாதுகாக்க உரிய நடவடி க்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயி களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குளம், குட்டைகளில் ஏராளமான மான், மயில் உள்ளிட்ட வனவிலங்கள் உள்ளன.
- வனத் துறையினா் மானை மீட்டு அப்பகுதியில் உள்ள வனப் பகுதியில் விடுவித்தனா்.
அவினாசி :
அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளில் ஏராளமான மான், மயில் உள்ளிட்ட வனவிலங்கள் உள்ளன. இவை உணவு, குடிநீா்த் தேடி வனப் பகுதிகளில் இருந்து வெளியேறி விளை நிலங்களுக்குள் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.மேலும், இவை சாலைகளில் நடமாடும்போது வாகனங்கள் மோதி உயிரிழக்கின்றன.
இந்நிலையில் அவிநாசி அருகே உள்ள அ.குரும்பபாளையம் பகுதியை சோ்ந்த பெரியசாமி என்பவரது தோட்டத்துக்குள் புள்ளிமான் நுழைந்தது. இதனைப் பாா்த்த நாய்கள் மானை துரத்தின. இதையடுத்து, அப்பகுதி மக்கள் நாய்களிடமிருந்து மானை காப்பாற்றி, வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் மானை மீட்டு அப்பகுதியில் உள்ள வனப் பகுதியில் விடுவித்தனா்.
தொடா்ந்து, விளை நிலங்களுக்குள் நுழைந்து பயிா்களைச் சேதப்படுத்தியும், வாகனம், நாய்களிடம் சிக்கி உயிரிழக்கும் வனவிலங்குகளை குடியிருப்புப் பகுதிகளில் நுழைய வண்ணம் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
- கீழப்பத்தை வடக்குத் தெருவை சேர்ந்த ரமேஷ் (33) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
- குற்றவாளிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்வதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள கீழவடகரை கிராமத்தில் ஒரு தோட்டத்தில் மின்சார வேலியில் சிக்கி கரடி உயிரிழந்தது.
இது தொடர்பாக வனத்துறையினர் நடத்திய விசாரணையில் மர்ம கும்பல் மின்சார வேலி அமைத்து கடமான், பன்றி, முயல், உடும்பு போன்ற வனவிலங்குகளை தொடர்ந்து வேட்டையாடி கறியை பங்கு போட்டது தெரியவந்தது.
இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் தலைமையில் களக்காடு வனசரகர் பிரபாகரன் மற்றும் வனத்துறையினர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இவர்கள் கடந்த 15-ந்தேதி தோட்டக் காவலாளியான நாகன்குளத்தை சேர்ந்த கணேசனை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கில் தொடர்புடைய கீழப்பத்தை வடக்குத் தெருவை சேர்ந்த ரமேஷ் (33) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் வன விலங்குகளை வேட்டையாடி களக்காடு சுற்று வட்டாரத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் கறியை பங்கு போட்டுள்ளதாகவும், குற்றவாளிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்வதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
தலைமறைவாகியுள்ள 20-க்கும் மேற்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று வனத்துறை தனிப்படையினர் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்