search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கம்பிகள்"

    • செம்பு கம்பியின் மதிப்பு ரூ.3 லட்சம் என கூறப்படுகிறது.
    • மின்மாற்றி உடைக்கப்பட்டு அதில் இருந்த செம்புக்கம்பி திருடு போனது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மரக்காவலசை கிராமத்தில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலையில் இணையும் காரங்குடா செல்லும் சாலையின் இடதுபுறத்தில் சுடுகாடு உள்ளது.

    இதன் அருகே விவசாய நிலங்கள், தென்னந்தோப்புகள் உள்ளன.

    இப்பகுதியில், விவசாயிகளின் மின்மோட்டார்களுக்கு பயன்படும் வகையில் தமிழ்நாடு மின் வாரியம் சார்பில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டது.

    இந்நிலையில் சம்பவதன்று அதிகாலை இப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது.

    இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தபோது, மின்மாற்றி உடைக்கப்பட்டு அதில் இருந்த செம்புக்கம்பி (காயில்) திருட்டுப்போனது தெரியவந்தது.

    இதன்மதிப்பு ரூ.3 லட்சம் என கூறப்படுகிறது.

    இது குறித்து நாடியம் உதவி மின் பொறியாளர் சிவசங்கர் சேதுபாவா சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதன்பேரில் போலீசார் மின்மாற்றியில் செம்புக்கம்பி களை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • தற்போது தடுப்பு கம்பிகள் மாயமாகி விட்டது.
    • கம்பிகளை திருடியவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு, தமிழ் தேசிய கட்சி தலைவர் தமிழ் நேசன் அனுப்பி உள்ள மனுவில்கூ றியிருப்பதாவது:-

    நீர்வளத்துறை கல்லணை கால்வாய் விரிவாக்கம் புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டம் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம், பட்டுக்கோட்டை வட்டம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்ட எல்லையில் அமைந்துள்ள கல்லணை கால்வாய் பிரதான வாய்க்காலின் நெடுகை மற்றும் அக்கரை வட்டம் பிரதான வாய்க்கால் அலிவலம் வெட்டுவாக்கோட்டை வாய்க்கால்களின் கட்டுமா னங்களை புனரமைக்கும் பணி நடைபெற்றது.

    கல்லணை கால்வாய் வடிநில கோட்டத்தின் ஆற்றுக்கரையில் கீழ்கண்ட கிராமங்கள் உள்ளது.

    ஈச்சங்கோட்டை, வடக்கூர், செல்லம்பட்டி, பொய்யுண்டார் கோட்டை, வீரடிவாரி குலாலர் தெரு, உப்புண்டார்பட்டி, பாச்சூர் உளவயல் வாய்க்கால் சாலை, ஆதனாக்கோட்டை, அய்யம்பட்டி, முதலிப்பட்டி, கருக்காடிப்பட்டி, வெட்டிக்காடு, ஊரணிபுரம், ஆண்டிப்பட்டி, உஞ்சை விடுதி.

    வெட்டுவாக் கோட்டை, சென்னிய விடுதி மற்றும் ராங்கியன் விடுதி ஆகிய பகுதிகளில் உள்ள கரையில் இரும்பு தடுப்பு கம்பிகளை காணவில்லை.

    பகல் மற்றும் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகள், மிதிவண்டி, இரண்டு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கால்நடைகள் மற்றும் புதிதாக பயணிக்கும் பயணிகளை பாதுகாக்கின்ற வகையில் அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு.

    ஈச்சங்கோட்டை முதல் சென்னியவிடுதி வரை ஒரத்தநாடு நெடுஞ்சா லைத்துறை உதவி கோட்டம் சார்பாக ஆற்றுகரையில் இரும்பு தடுப்பு கம்பிகள் (பேரிகாட்) அமைக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் தற்போது தடுப்பு கம்பிகள் மாயமாகி விட்டது.

    மேலும் தடுப்பு கம்பிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

    இதனால் ஆற்றில் தவறி விழுந்து பல உயிர்கள் பலியாகி உள்ளன.

    எனவே இதனை தடுக்க ஆற்று கரையில் தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும்.

    கம்பிகளை திருடியவர்களை கண்டுபிடித்து உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதே மனுவானது தஞ்சாவூர் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் , கோட்டப் பொறியாளர் அலுவலக த்திற்கும் அனுப்பி வைத்துள்ளார்.

    • சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு சீர்குலைந்தது. இதனை அடுத்து பாலம் சீரமைக்கப்பட்டு இலகு ரக வாகன போக்குவரத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
    • பல இடங்களில் தடுப்பு களில் இரும்பு கம்பிகள் இல்லாமல் காட்சியளிக்கிறது.

    மேட்டூர்:

    மேட்டூர் காவிரி பாலம் மிகவும் பழமையான பாலம் ஆகும். இந்த பாலத்தின் வழியாக தான் ஆரம்ப காலத்தில் பஸ் போக்கு வரத்து மற்றும் கனரக போக்குவரத்து நடைபெற்று வந்தது. இந்த பாலம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு சீர்குலைந்தது. இதனை அடுத்து பாலம் சீரமைக்கப்பட்டு இலகு ரக வாகன போக்குவரத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    கனரக வாகனங்கள், பஸ் உள்ளிட்டவை மேட்டூர் அனல் மின் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள புது பாலம் வழியாக சென்று, வருகிறது.

    இந்தப் பாலத்தின் இருபுறத்திலும் கம்பிகளால் தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அணைக்கு சுற்றுலா வருப வர்கள் மற்றும் அந்த வழி யாக செல்பவர்கள், இந்த பாலத்தின் மீது நின்று காவிரி ஆற்றின் அழகினை ரசித்து செல்வர். இந்த நிலையில், பாலத்தின் தடுப்புகளில் உள்ள இரும்பு கம்பிகள் தற்போது சேதம் அடைந்துள்ளது. இதனால் பல இடங்களில் தடுப்பு களில் இரும்பு கம்பிகள் இல்லாமல் காட்சியளிக்கிறது.

    எனவே சிறுவர்கள், பாலத்தின் மீது நின்றி ருக்கும்போது தவறி ஆற்றில் விழ வாய்ப்புகள் உள்ளது. சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் இதில் தவறி விழ வாய்ப்புள்ளது.

    நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இந்த பாலத்தை உடனடியாக சீரமைத்து பொதுமக்களின் பாது காப்பினை உறுதி செய்ய வேண்டும் என, அந்த பகு தியைச் சேர்ந்தபொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கான்கிரீட் பெயர்ந்து சிமெண்டு கம்பிகள் வெளியே தெரியும் அளவில் காணப்படுகிறது.
    • பொருட்கள் வாங்கும் போது தொட்டி இடிந்து விழுமோ என்ற அச்சம்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் பனையூர் ஊராட்சி கீழப்பனையூர் கிராமத்தில் கிராம கூட்டுறவு அங்காடி செயல்பட்டு வருகிறது.

    இதில் கீழ பள்ளிச்சந்தம், திருப்பத்தூர், கீழப்பனையூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த 850-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர்.

    இந்த அங்காடி வாசலில் பராமரிப்பின்றி சேதமடைந்த நிலையில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த 20 ஆண்டுகளாக உள்ளது. தற்போது இந்த தொட்டியின் நான்கு தூண்களும் சேதமடைந்துள்ளது.

    மேலும் கான்கிரீட் பெயர்ந்து சிமெண்டு கம்பிகள் வெளியே தெரியும் அளவில் காணப்படுகிறது.

    எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. இதனால் அங்காடிக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுமோ? என அச்சப்படுகின்றனர்.

    எனவே சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து அங்காடிக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் கூறியதாவது:- அங்காடி வாசலில் சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பல ஆண்டுகளாக உள்ளது.

    இந்த தொட்டியின் தூண்கள் அனைத்தும் சேதமடைந்து கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன.

    இதனால் நாங்கள் பொருட்கள் வாங்கும் போது தொட்டி இடிந்து விழுமோ? என்ற அச்சத்துடன் பொருட்களை வாங்கி செல்கிறோம்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் ெதரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உடனடியாக சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • மின்மாற்றிலிருந்து உயரழுத்த மின் கம்பி திடீரென்று நெருப்பு பொறிகளுடன் எரிந்து கீழே விழுந்தது.
    • மின்கம்பி நிழற்குடை மீது பட்டு குடை மற்றும் பழங்கள் எரிந்து சேதமடைந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகரில் பட்டமங்கலதெரு முக்கிய கடைவீதி பகுதியாகும். இந்த பகுதியில் வங்கிகள் மருத்துவமனைகள் துணிக்கடைகள் பழக்கடை கள் மற்றும் பள்ளி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இதனால் இந்த பகுதி எப்பொழுதும் மக்கள் கூட்டம் நிறைந்து பரபரப்பாக காணப்படும்.

    நேற்று அப்பகுதியில் தனியார் வங்கிக்கு எதிரே உள்ள மின்மாற்றிலிருந்து மின்சாரம் செல்லும் உயிர் அழுத்த மின் கம்பி திடீரென்று நெருப்புப் பொறிகளுடன் எரிந்து கீழே விழுந்தது. வங்கிக்கு எதிரே பழக்கடை வைத்துள்ள குணசேகரன் என்பவர் தள்ளுவண்டி கடை மீது மின் கம்பி அறுந்து விழுந்தது.

    இதில் நிழலுக்கு பயன்படுத்தப்படும் மிகப்பெரிய குடை இருந்த காரணத்தால் மின் கம்பி அதில் பட்டு குடை மற்றும் பழங்கள் எரிந்து சேதம் அடைந்தது, உடனே குணசேகரன் அலறியடித்து வெளியேறியதால் உயிர் தப்பினார்.

    தகவல் மின்சாரம் துண்டி க்கப்பட்டு அப்பகுதியில் சீரமைப்பு பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    இதைப்போல் மார்க்கெட் பகுதி செட்டி தெரு, தர்மபுரம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் டிரான்ஸ்பார்மர்கள் வெடித்து 200க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்னணு மற்றும் மின்சாரப் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது காரணமாக மயிலாடுதுறை நகரில் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • மேல்தல கான்கிரீட்டுகள் சிதைந்து கம்பிகளும் சிமெண்ட் காரைகளுமே எஞ்சியுள்ளது.
    • அத்தியாவசிய பொருட்களை மட்டும் வைத்துவிட்டு வெளிப்புறத்தில் தடுப்புகள் அமைத்து வசித்து வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வானகிரி மீனவர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்கு பின்னர் கடலோர பகுதியிலிருந்து மீனவ குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டு அருகிலேயே சுனாமி குடியிருப்புகள் உருவாக்கப்பட்டு அரசின் சார்பாக 725 சுனாமி வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது.

    இந்த வீடுகள் கட்டப்பட்டு 18 ஆண்டுகள் கடந்த நிலையில் போதிய பராமரிப்பு இல்லாததால் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உட்புற மேல்தல கான்கிரீட்டுகள் சிதைந்து கம்பிகளும் சிமெண்ட் காரைகளுமே எஞ்சியுள்ளது.

    மேலும் அவ்வப்பொழுது சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுவதால் அச்சமடைந்த மீனவர்கள் வீட்டின் உள்ளே அத்தியாவசிய பொருட்களை மட்டுமே வைத்துவிட்டு வெளிப்புறத்திலேயே தடுப்புகள் அமைத்து தனியாக வசித்து வருகின்றனர்.

    தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் சிதிலமடைந்த வீடுகளை சீரமைத்து தர வேண்டுமென மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×