search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜராஜசோழன்"

    • சதய விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
    • தமிழனின் வீரத்தை உலகுக்கு உணர்த்திய பெரும்பள்ளி இராஜராஜ சோழனின் 1039-ஆம் சதயவிழா இன்று கொண்டாடப்படுகிறது.

    தஞ்சை பெரிய கோவிலை கட்டி மாமன்னன் ராஜராஜ சோழன் உலகிற்கே பெருமை சேர்த்தார். இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாக திகழ்கிறது.

    மாமன்னன் ராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா 2 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 1039-வது சதயவிழா அரசு விழாவாக இன்று காலை தொடங்கியது.

    சதய விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரிய கோவில் முன்பும் அலங்கார தோரண வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளன. பெரியகோவில் அருகே உள்ள பாலம், சோழன்சிலை பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இராஜராஜ சோழனின் பிறந்தநாளில் ஆட்சியை நிறுவ உறுதியேற்போம்!

    தமிழனின் வீரத்தை உலகுக்கு உணர்த்திய பெரும்பள்ளி இராஜராஜ சோழனின் 1039-ஆம் சதயவிழா இன்று கொண்டாடப்படுகிறது.

    கடல் கடந்து வெற்றிகளை குவித்ததன் மூலம் நம் குலப்பெருமையை உலகுக்கு உணர்த்தியவன் அவன். பாசனத் திட்டங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவன். நாமும் கடுமையாக உழைப்போம்... நமது ஆட்சியை நிறுவுவோம். மக்களுக்கு நல்லாட்சியை வழங்குவோம்! என்று தெரிவித்துள்ளார்.

    • ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா 2 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • விழாவிற்கு தலைமை தாங்கி கலெக்டர் பிரியங்காபங்கஜம் சிறப்புரையாற்றினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவிலை கட்டி மாமன்னன் ராஜராஜ சோழன் உலகிற்கே பெருமை சேர்த்தார்.

    இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாக திகழ்கிறது. மாமன்னன் ராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா 2 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி 1039-வது சதயவிழா அரசு விழாவாக இன்று காலை இறைவணக்கம், மங்கள இசையுடன் தொடங்கியது. தொடர்ந்து களிமேடு அப்பர் பேரவை திருமுறை அரங்கம் நடைபெற்றது.

    இதையடுத்து தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. சதயவிழாக்குழு தலைவர் செல்வம் வரவேற்றார்.

    விழாவிற்கு தலைமை தாங்கி கலெக்டர் பிரியங்காபங்கஜம் சிறப்புரையாற்றினார். பின்னர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் தொடக்க உரையாற்றினார்.

    நிகழ்ச்சிக்கு அரண்மனை பரம்பரை தேவஸ்தானம் அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், தென்னக பண்பாட்டு மைய இயக்குனர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. ராமசந்திரன், முன்னாள் நகர்மன்ற தலைவர் இறைவன், பேராசிரியர் சிவசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பழநி ஆதீனம் குருமகா சந்நிதானம் சாது சண்முக அடிகளார் அருளுரை வழங்கினார்.

    அதனைத்தொடர்ந்து வரலாறாக வாழும் மாமன்னன் ராசராசன் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

    இதையடுத்து பிற்பகலில் நாதசுரம், பரதநாட்டியம், யாழ் இசை, வில்லுப்பாட்டு ஆகியவை அடுத்தடுத்து நடைபெற்றன. இரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    விழாவின் 2-ம் நாளான நாளை (ஞாயிற்றுகிழமை) காலை 6.30 மணிக்கு மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. காலை 7 மணிக்கு கோவில் பணியாளர்களுக்கு கயிலை மாசிலா மணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை புத்தாடைகள் வழங்குகிறார். காலை 7.20 மணிக்கு அரசு சார்பில் மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

    காலை 8 மணிக்கு 100-க்கும் மேற்பட்ட ஓதுவாமூர்த்திகள் திருமுறை பண்ணுடன் ராஜவீதிகளில் திருஉலா நடைபெறும். காலை 9.10 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் நடக்கிறது. மதியம் 1.30 மணியளவில் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பெருந்தீப வழிபாடு நடைபெறும்.

    தொடர்ந்து 1039 கலைஞர்கள் பங்குபெறும் மாபெரும் நாட்டிய நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    சதய விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரிய கோவில் முன்பும் அலங்கார தோரண வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளன. பெரியகோவில் அருகே உள்ள பாலம், சோழன்சிலை பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. 

    • இலங்கையை வெற்றி கொண்டதன் அடையாளமாக ராஜராஜசோழன் காலத்தில் வெளியிடப்பட்ட செப்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது.
    • தேவநாகரி எழுத்துகளில் "ஸ்ரீராஜராஜ" என 3 வரிகளில் எழுதப்பட்டுள்ளது.

    விருதுநகர் 

    விருதுநகர் மாவட்டம், மம்சாபுரத்தில் உள்ள சிவந்திப்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி வரலாறு ஆசிரியர் செல்வத்திடம், இளந்திரை கொண்டான் என்னும் ஊரைச் சேர்ந்த ஒரு மாணவர் 12 ஆண்டுகளுக்கு முன் ஒரு பழமையான செப்புக்காசை கொடுத்துள்ளார். அக்காசு பற்றி எதுவும் தெரியாததால் செல்வம் அதை பத்திரமாக பாதுகாத்து வந்துள்ளார்.

    ஆசிரியர் செல்வம்

    இந்த நிலையில் கடந்த 6-ந்ம் தேதி ஆசிரியர்க ளுக்கான தொல்லியல் பயிற்சியின் முதல் சுற்று மதுரையில் நடைபெற்றது. இதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இப்பயிற்சியில் நாணயங்களின் வரலாற்றுச் சிறப்புகள் பற்றி தஞ்சாவூர் ஆறுமுக சீதாராமன் வகுப்பெடுத்தார். இதன்பின் தன்னிடம் இருந்த இந்த காசு முதலாம் ராஜராஜ சோழனால் வெளி யிடப்பட்டது என்பதை அவர் அறிந்து கொண்டார்.

    இதுபற்றி ஆசிரியர் செல்வம் கூறியதாவது:-


    ஆசிரியர் செல்வம்

    12 ஆண்டுகளாக என்னிடம் இருந்தும் அதன் முழுப்பெருமையும் தெரியவில்லை. மதுரையில், நடந்த தொல்லியல் பயிற்சியால் அக்காசின் சிறப்பை தெரிந்து கொண்டேன். தமிழ்நாடு அரசு வழங்கிய இந்தப் பயிற்சி எனக்குள் தொல்லியல் தேடலை விதைத்துள்ளது. இதை என் மாணவர்களுக்கும் கற்றுத்தருவேன். பயிற்சி வழங்கிய அரசுக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்ச ருக்கும், ஆணை யருக்கும் நன்றியை தெரிவி த்துக் கொள்கிறேன் என்றார்.இந்த காசு குறித்து பயிற்சியை ஒருங்கிணைத்த திருப்புல்லாணி அரசு மேல்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான வே.ராஜ குரு கூறியதாவது:-

    வரலாற்றைத் அறிய நாணயங்கள் உதவுகின்றன. மன்னர்கள் தங்களின் போர் வெற்றியைக் கொண்டாட சிறப்பு நாணயங்களை வெளியிட்டுள்ளார்கள். அவ்வாறு போர் மூலம் இலங்கையை முதலாம் ராஜராஜசோழன் வெற்றி கொண்டதன் பின்னணியில் தன் பெயர் பொறித்த ஈழக்கா சுகளை வெளி யிடப்பட்டுள்ளார். இவை முதலாம் ராஜராஜ சோழன் முதல் முதலாம் குலோத்து ங்கசோழன் காலம் வரை பயன்பாட்டில் இருந்து ள்ளன. பொன், வெள்ளி, செம்புகளில் இந்த காசுகள் வெளியிடப்ப ட்டுள்ளன. செம்பால் ஆன காசு ஈழக்கருங்காசு எனப்படுகி றது.இந்த காசுகளின் ஒரு பக்கம் கையில் மலரை ஏந்தியவாறு ஒருவர் நிற்க, அவரது இடப்பக்கம் 4 வட்டங்களும், சங்கும் உள்ளன. அவற்றின் மேலே பிறையும் கீழே மலரும் உள்ளன. வலதுபக்கம் திரிசூலம், விளக்கு உள்ளது. மறுபக்கம் கையில் சங்கு ஏந்தி ஒருவர் அமர்ந்தி ருக்கிறார். அவரின் இடது கை அருகே தேவநாகரி எழுத்துகளில் "ஸ்ரீராஜராஜ" என 3 வரிகளில் எழுதப்ப ட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தனியார் நிறுவனத்தில் பேங்க் லாக்கர் டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஜெயபிரகாஷ் ராஜராஜ சோழன் மீது கொண்ட பற்றின் காரணமாக முதுகில் பச்சை குத்தியுள்ளார்.
    • ராஜராஜசோழன் பிறந்த நாளான்று காலை 10 மணிக்கு டாட்டூ வரைய தொடங்கிய இவர் இந்த பணியை முடிக்க இரவு 12 மணி வரை ஆனதாக ஜெயபிரகாஷ் கூறுகிறார்.

    சேலம்:

    ராஜராஜசோழன் வரலாற்றை உணர்த்தும் விதமான 'பொன்னியின் செல்வன்' நாவல் மற்றும் சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சமூக வலைதளங்களிலும் ராஜராஜசோழன், அவர் கட்டிய தஞ்சை பெரிய கோவில் குறித்த புதிய புதிய தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. தமிழரின் பெருமையை பாறைசாற்றும் இந்த தகவல்களை பலரும் ஆர்வமுடன் படித்து தெரிந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சேலத்தைச் சேர்ந்த வாலிபர் ராஜராஜசோழன் மற்றும் தஞ்சை பெரிய கோவில் உருவத்தை டாட்டூ வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். சேலம் மரவனேரியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது30).

    தனியார் நிறுவனத்தில் பேங்க் லாக்கர் டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள இவர் ராஜராஜ சோழன் மீது கொண்ட பற்றின் காரணமாக முதுகில் பச்சை குத்தியுள்ளார்.

    ராஜராஜசோழன் பிறந்த நாளான்று காலை 10 மணிக்கு டாட்டூ வரைய தொடங்கிய இவர் இந்த பணியை முடிக்க இரவு 12 மணி வரை ஆனதாக கூறுகிறார். சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்தவர் நம்பி என்பவர் இந்த டாட்டூ படத்தை வரைந்துள்ளார்.

    தமிழ் மன்னர்களின் ராஜராஜசோழனின் காலம் வரலாற்று சிறப்புமிக்கதாகும். நான் படிக்கும் போது அவரது வரலாற்றை விரும்பி வாசித்துள்ளேன். பின்னர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படித்துள்ளேன். சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தையும் பார்த்தேன். ராஜராஜ சோழன் குறித்த வரலாற்று தகவல்கள் இன்றைய இளம்தலைமுறையினருக்கு தெரியவேண்டும் என்பதே எனது நோக்கம்.

    அவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடுவது மகிழ்ச்சி.

    அந்த காலத்தில் தஞ்சை பெரிய கோவில் கட்டி தமிழ் மீது வைத்துள்ள பற்றை வெளிப்படுத்தும் விதமாக எனது முதுகில் பெரியகோவிலையும், ராஜராஜ சோழனின் படத்தையும் வரைந்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தஞ்சை பெரிய கோயிலைக் கட்டுவித்த கலைத்திறமும், களங்கண்ட போர்களில் எல்லாம் வெற்றி முரசம் கொட்டிய தீரமும் உடைய மும்முடிச் சோழன் ராஜராஜனின் புகழ் வரலாற்று வானில் துருவ நட்சத்திரமாய் என்றும் மின்னும்.

    சென்னை:

    மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த நாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை பெரிய கோயிலைக் கட்டுவித்த கலைத்திறமும், களங்கண்ட போர்களில் எல்லாம் வெற்றி முரசம் கொட்டிய தீரமும் உடைய மும்முடிச் சோழன் ராஜராஜனின் புகழ் வரலாற்று வானில் துருவ நட்சத்திரமாய் என்றும் மின்னும். அரசர்க்க ரசர் பிறந்த ஐப்பசி சதய நாள் இனி ஆண்டு தோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மக்களை மையமாகக்கொண்ட கொள்கைகள், தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், நிர்வாகத்திறன் ஆகியவற்றுக்கு ராஜராஜ சோழன் எப்போதும் உத்வேகமாக இருப்பார்.
    • ராஜராஜ சோழன் ஆட்சியில் ’தமிழகம்’ ஆழ்ந்த ஆன்மீக பண்பாட்டு எழுச்சி பெற்றது.

    சென்னை:

    ராஜராஜ சோழனின் பிறந்தநாளையொட்டி கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    பேரரசர் ராஜராஜ சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு மக்களை மையமாகக் கொண்ட கொள்கைகள், தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், நிர்வாகத்திறன் ஆகியவற்றுக்கு அவர் எப்போதும் உத்வேகமாக இருப்பார். மேலும் அவரது ஆட்சியில் 'தமிழகம்' ஆழ்ந்த ஆன்மீக பண்பாட்டு எழுச்சி பெற்றது என்பதை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நினைவுகூர்ந்தார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெரிய கோவிலுக்கு வெளியே உள்ள மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அணிவித்து மரியாதை செலுத்தினார்‌‌.
    • பெரிய கோவிலில் பெருவுடையார் மற்றும் பெரிய நாயகி அம்மனுக்கு பால், மஞ்சள், தயிர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் பேரபிஷேகம் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    சோழ சாம்ராஜ்யத்தின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவர் ராஜராஜ சோழன். இவர் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்தார். இவரது பிறந்தநாள் சதய விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டு 1037-வது சதய விழா இரண்டு நாள் அரசு விழாவாக நடைபெற்று வருகிறது. இனி ஆண்டுதோறும் அரசு விழாவாக நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    நேற்று முதல் நாள் விழா நடைபெற்றது. ராஜராஜ சோழன் பிறந்த சதய நட்சத்திரமான இன்று 2-ம் நாள் விழா தஞ்சை பெரிய கோவிலில் தொடங்கியது. இதற்காக இன்று தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. முதலில் அரண்மனை தேவஸ்தானம் நிஷாந்தி மற்றும் ஆறுமுகம் குழுவினரின் மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

    இதையடுத்து கோவில் பணியாளர்களுக்கு புத்தாடைகளை தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வழங்கினார். தொடர்ந்து யானை மீது திருமுறைகள் வைக்கப்பட்டு 4 ராஜவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அடியார்கள், ஓதுவார்கள் திருமுறை பாராயணம் பாடியப்படி வீதி உலா வந்தனர்.

    அப்போது பழங்கால கொம்பு உள்ளிட்ட இசைக்கருவிகளை இசைத்தபடி வந்தனர். இதில் பெரியகோவில் உருவம் பொறித்த பிரமாண்ட மாதிரி அரங்கம் வாகனத்தில் வைக்கப்பட்டு வீதி உலாவில் பின்தொடர்ந்து வந்தது.

    இதையடுத்து பெரிய கோவிலுக்கு வெளியே உள்ள மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் சதயவிழாக்குழு தலைவர் து.செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து பல்வேறு இயக்கம், கட்சிகள், அமைப்பு சார்பில் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. ஏராளமானோர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    தொடர்ந்து பெரிய கோவிலில் பெருவுடையார் மற்றும் பெரிய நாயகி அம்மனுக்கு பால், மஞ்சள், தயிர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் பேரபிஷேகம் நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் தலைமையில் நடந்த இந்த பேரபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். மதியம் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பெருந்தீப வழிபாடு நடைபெற்றது.

    மாலையில் மங்கள இசை, குரலிசை நிகழ்ச்சி, திருமுறை பண்ணிசை அரங்கம், திருநெறிய தமிழிசை நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    சதயவிழாவை முன்னிட்டு பெரியகோவில் அருகே உள்ள பாலம், சோழன் சிலை பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு தஞ்சை மாநகரம் விழாக்கோலம் பூண்டது.

    ×