search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன்று குட்டி"

    • சுமார் 6 மாதங்களாக 23 ஆடுகளை வேட்டையாடி கொன்றதாக கூறப்படுகிறது.
    • கன்றுகுட்டியை காட்டு விலங்கு மீண்டும் அடித்து கொன்றுள்ளது

    தக்கலை :

    கோதநல்லூர் பேரூராட்சி முட்டைக்காடு சரல்விளை பகுதியில் மலைச்சிங்கம் எனப்படும் காட்டு விலங்கு சுமார் 6 மாதங்களாக 23 ஆடுகளை வேட்டையாடி கொன்றதாக கூறப்படுகிறது. இதனை பிடிக்க வேண்டும் என்று அந்தப் பகுதி பொதுமக்கள், மாவட்ட கலெக்டர் மற்றும் வனத்துறையினரிடம் முறையிட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து கண்காணிப்பு ஒளிப்பதிவு கருவி பொருத்தப்பட்டு காட்டுவிலங்கு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மருந்துகோட்டை பகுதியில் கன்றுகுட்டியை காட்டு விலங்கு மீண்டும் அடித்து கொன்றுள்ளது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த காட்டு விலங்கால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை உறுதியான தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று அதிசய கன்று குட்டியை பார்ப்பதோடு செல்பி எடுத்தும் செல்கின்றனர்.
    • கடவுளின் ஆசிர்வாததத்தால் கோமாதா பிறந்து இருப்பதாகவே கிராம மக்கள் நினைக்கிறார்கள்.

    அரூர்:

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரவீந்தர். விவசாயி. இவரது பண்ணையில் 2 கறவை மாடுகளை வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் அவர் வளர்க்கும் பசுமாட்டில் ஒன்று ஆண் கன்று ஒன்றை ஈன்றது.

    அது சாதாரண கன்று குட்டி போல் இல்லாமல் இரண்டு தலைகளுடன் பிறந்தது. இந்த கன்று குட்டி இரண்டு வாய், இரண்டு மூக்கு, நான்கு கண்களுடன் பிறந்துள்ளது.

    இந்த தகவல் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தெரியவர காட்டு தீ போல் பரவியது.

    இதனையடுத்து பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று அதிசய கன்று குட்டியை பார்ப்பதோடு செல்பி எடுத்தும் செல்கின்றனர்.

    கடவுளின் ஆசிர்வாததத்தால் கோமாதா பிறந்து இருப்பதாகவே அந்த கிராம மக்கள் நினைக்கிறார்கள்.

    மேலும் இந்த பசுவின் உரிமையாளர் பசு மாட்டையும், ஈன்ற அதன் கன்று குட்டியையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

    • சங்கராபுரம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே பரமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அழகன். இவரது மனைவி பட்டு(வயது68). இவர் சம்பவத்தன்று தனது கன்று குட்டியை மேய்ச்சலுக்காக வயலுக்கு ஓட்டிச்சென்றார். அப்போது, வயல்வெளி பகுதியில் அறுந்து கிடந்த உயர்மின் அழுத்த கம்பியை தெரியாமல் மிதித்தார். இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டார். இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்த சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சின்னமணி-தெய்வானை தம்பதியினர் தங்கள் வீட்டில் பசு மாடு வளர்த்து வருகின்றனர்.
    • கன்றுகுட்டிக்கு முன்கால் பகுதியின் மேல் பகுதியில் 2கால்கள் கூடுதலாக இருந்தது.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள மேலக்கலங்கல் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சின்னமணி-தெய்வானை தம்பதியினர். விவசாயிகளான இவர்கள் வீட்டில் பசு மாடு வளர்த்து வருகின்றனர்.

    சினையுடன் இருந்த பசு நேற்று இரவு பெண் கன்றுகுட்டியினை ஈன்றது. பிறந்த அந்த கன்றுகுட்டி மற்ற குட்டிகள் போல இல்லாமல் முன்கால் பகுதியின் மேல் பகுதியில் இரண்டு கால்கள் கூடுதலாக கொண்டு இருந்தது.

    கூடுதலாக இரண்டு கால்கள் இருந்ததால் அப்பகுதி பொதுமக்கள் அதிசயத்துடன் கன்றுக்குட்டியை பார்த்து செல்கின்றனர். இது குறித்து கால்நடை மருத்துவர்கள் கூறுகையில் பிறவி குறைபாட்டால் இப்படி கூடுதல் கால்களுடன் கன்று பிறந்து உள்ளது. அறுவை சிகிச்சை மூலம் அதை அகற்றி சரி செய்யலாம் என்றனர்.

    • விநோதமாக நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் கன்றுக்குட்டிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
    • பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பிரியாணி விருந்து பரிமாறினர்.

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள பென்னாத்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் மகன்கள் உதயகுமார் (வயது 25), சூரியா (20) விவசாயி. இவர்கள் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார்.

    இதில் ஜூனியர் வேலூர் பைபாஸ் என்னும் அழைக்கப்படும் ஒரு வயதான கன்றுக்குட்டியை வளர்த்து வருகின்றனர். இந்தகுட்டிக்கு நேற்று பிறந்தநாள்.

    இதனை வெகுவிமரிசையாக கொண்டாட உதயகுமார், சூர்யா இருவரும் முடிவு செய்தனர்.

    இதற்காக உறவினர்கள், தெரிந்தவர்களை பிறந்தநாள் விழாவுக்கு அழைத்தனர். வீட்டில் பிரமாண்டமாக அலங்காரம் செய்தனர். மேலும் கன்று குட்டியை குளிப்பாட்டி அலங்காரம் செய்து அழைத்து வந்தனர்.

    உறவினர்கள் ஊர் பொதுமக்கள் எல்லோரும் நேற்று இவர்கள் வீட்டுக்கு வர இந்த மாட்டின் பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி விருந்து வைத்து கொண்டாடினர். விநோதமாக நடந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் கலந்து கொண்டு, கன்றுக்குட்டிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பிரியாணி விருந்து பரிமாறினர். கிராமங்களில் பொதுவாக பிறந்தநாளை கொண்டாடுவது இல்லை. கோவில்களுக்கு சென்று சாமி கும்பிடுவதோடு சரி. ஆனால், அதே கிராமத்தில் ஒரு கன்றுகுட்டிக்கு இப்படி பிரம்மாண்டமாக பிறந்தநாள் விழா எடுத்ததை ஊரே நெகிழ்ச்சியுடன் பார்த்தது. அவர்கள் வீட்டுக்குச் சென்று மனதார வாழ்த்தி சென்றனர். 

    • மாட்டின் கன்று இரு தலையுடன் இருந்ததால் கன்றை வெளியே தள்ள முடியாமல் சிரமப்பட்டது.
    • மாட்டின் உரிமையாளர்கள் மாடு சினைப்பருவத்தில் இருக்கும்போதே அதை ஸ்கேன் செய்து பார்த்திருக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான மரக்காணத்தில் பசுமாடு சினையாக இருந்தது.

    மாட்டின் கன்று இரு தலையுடன் இருந்ததால் கன்றை வெளியே தள்ள முடியாமல் சிரமப்பட்டது. மாட்டிற்கு டாக்டர் செல்வமுத்து சிகிச்சை அளித்தார்.

    ஆனால், கன்றை வெளியே எடுப்பது மிகவும் சிரமமாக இருந்தது. இறுதியாக, கன்று வெளியே எடுக்கப்பட்டது. சில மணி நேரம் உயிருடன் இருந்த கன்று மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தது.

    இதுகுறித்து கால்நடை டாக்டர் செல்வமுத்து கூறியதாவது:-

    கருவுற்றிருக்கும்போது கரு சரியாக பிளவுபடாததால் அரிதான இரட்டை வடிவம் உருவாகியுள்ளது.

    இதுபோன்ற சூழ்நிலையில் மாட்டின் உரிமையாளர்கள் மாடு சினைப்பருவத்தில் இருக்கும்போதே அதை ஸ்கேன் செய்து பார்த்திருக்க வேண்டும். அப்போது தான் முன்கூட்டியே கண்டறிந்து அதை சரி செய்வதற்கான வேலையை பார்க்க முடியும்.

    இவ்வாறு டாக்டர் செல்வமுத்து கூறினார்.

    • கோவை- பொள்ளாச்சி மெயின் ரோட்டில் வழக்கம் போல் சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் அதிவேகமாக சென்று கொண்டிருந்தன.
    • கூட்டத்தில் இருந்த கன்று குட்டி ஒன்று சாலையை கடக்க முடியாமல் வெகுநேரமாக அங்கேயே நின்று கொண்டிருந்தது.

    குனியமுத்தூர்,

    கோவையின் பிரதான சாலைகள் அனைத்திலும் கால்நடைகளும், ஆடுகளும், குதிரைகளும் ஆங்காங்கே சுற்றி வருவதை நாம் அன்றாடம் காண முடிகிறது.

    இன்று காலை கோவை- பொள்ளாச்சி மெயின் ரோட்டில் வழக்கம் போல் சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் அதிவேகமாக சென்று கொண்டிருந்தன.

    அந்த சமயம் சுந்தராபுரம் பகுதியில் நடுரோட்டில் கால்நடைகள் கூட்டமாக வந்தன. அப்போது அந்த கூட்டத்தில் இருந்த கன்று குட்டி ஒன்று சாலையை கடக்க முடியாமல் வெகுநேரமாக அங்கேயே நின்று கொண்டிருந்தது. வாகன போக்குவரத்து காரணமாக கன்று குட்டி எங்கு செல்வது என்று தெரியமால் தவித்தது.

    சாலையின் வலது புறத்தில் கன்று குட்டியுடன் வந்த கால்நடைகள் கூட்டம் கன்றுகுட்டி வந்து விடும் என காத்திருந்தன. ரோட்டில் வேக வேகமாக சென்று கொண்டிருக்கும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் இதனை கண்டு கொள்ளவில்லை. 1 மணி நேரத்திற்கும் மேலாக கன்று குட்டி சாலையை கடக்க முடியாமல் அங்கேயே நின்றது.

    இதனை அந்த வழியாக வந்த சில சமூக ஆர்வலர்கள் பார்த்தனர். உடனடியாக போக்குவரத்தை 1 நிமிடம் நிறுத்தி, அந்தக் கன்று குட்டியை மீட்டு சாலையோரத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் அந்த கன்று குட்டி, தனது தாயுடன் இணைந்து நடந்து சென்றது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஆடு மாடுகளை வளர்ப்பவர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். வீட்டில் கட்டி வைத்திருந்தால் இரை போட வேண்டும் என்ற காரணத்திற்காக பெரும்பாலும் ஒரு சிலர் மாடுகளை அவிழ்த்து வெளியே விட்டு விடுகின்றனர். இது மிகவும் கண்டிக்கக் கூடியதாகும். கோவை மாநகராட்சி இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது கோவை மாநகராட்சி இதில் கவனம் கொண்டு செயல்பட்டால், நன்றாக இருக்கும். என்றனர்.

    ×