என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வரைவு வாக்காளர் பட்டியல்"
- அக்டோபர் 2-ந்தேதி நிலவரப்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி 15 ஆயிரத்து 187 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
- பட்டியலில் பெயர் இல்லாத பட்சத்தில், பெயரை சேர்ப்பதற்காக படிவம் 6-ஐ பூர்த்தி செய்து அளிக்கலாம்.
சென்னை:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக வரைவுப் பட்டியல் கடந்த 27-ந் தேதி வெளியிடப்பட்டது. அன்றைய தினத்திலிருந்து வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்றன.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகி ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், வாக்குச்சாவடி அலுவலர்களிடமும், தேர்தல் துறையின் இணைய தளத்தின் வாயிலாகவும் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அக்டோபர் 2-ந்தேதி நிலவரப்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி 15 ஆயிரத்து 187 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்கம் செய்வதற்காக 1,914 படிவங்களும், ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்ளேயே முகவரியை மாற்றுவதற்காக 19 ஆயிரத்து 36 படிவங்களும் அளிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 36 ஆயிரத்து 142 விண்ணப்பங்கள் பொதுமக்களால் வழங்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தங்களை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களிடமும், தேர்தல் துறையின் இணைய தளம் மூலமும் விண்ணப்பங்களை அளித்தாலும், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில், தமிழ்நாட்டில் 31 அமைவிடங்களில் உள்ள 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்கும் வாக்குச் சாவடிகளுக்குச்சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள பட்டியலில் தங்களது பெயர் இருக்கிறதா இல்லையா என்பதை சரிபார்த்து வருகிறார்கள்.
பெயர்கள் விடுபட்ட வாக்காளர்கள் உரிய விண்ணப்பங்களை வாங்கி சென்றனர்.
பட்டியலில் பெயர் இல்லாத பட்சத்தில், பெயரை சேர்ப்பதற்காக படிவம் 6-ஐ பூர்த்தி செய்து அளிக்கலாம். இதற்கான படிவங்கள் சிறப்பு முகாம்களிலேயே வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
- கட்சிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வாக்காளர்களாக இளம் வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
- 100 வயதை கடந்த மிக மூத்த வாக்காளர்கள் 16 ஆயிரத்து 306 பேர் இருக்கிறார்கள்.
சென்னை:
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. மொத்தம் 6 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 197 பேர் உள்ளனர்.
இவர்களில் 18 வயது முதல் 39 வயது வரையிலான இளம் வாக்காளர்கள் மட்டும் 2 கோடியே 37 லட்சத்து 13 ஆயிரத்து 851 பேர் உள்ளனர்.
கட்சிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வாக்காளர்களாக இளம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். எனவே அவர்களை கவர எல்லா அரசியல் கட்சிகளும் வியூகம் வகுத்து வருகின்றன.
100 வயதை கடந்த மிக மூத்த வாக்காளர்கள் 16 ஆயிரத்து 306 பேர் இருக்கிறார்கள்.
அவர்களில் 120 வயதை கடந்த குடு குடு தாத்தாக்கள் 66 பேர். பாட்டிகள் 71 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
வயது வாரியாக வாக்காளர்கள் விபரம் வருமாறு:-
- ஸ்ரீபெரும்புதூர் தனி தொகுதியில் ஆண்கள் 1,79,657 பேர், பெண்கள் 1,89,828 பேர் மாற்று பாலினத்தவர்கள் 60 பேர் என மொத்தம் 3,69,545 பேர் உள்ளனர்.
- காஞ்சிபுரம் தொகுதியில் ஆண்கள் 149570 பேர், பெண்கள் 1,60,088 பேர், மாற்றுபாலினத்தவர்கள்22 பேர் என மொத்தம் 3,09,680 பேர் உள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் கலைசெல்வி மோகன் வெளியிட மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் பெற்றுக்கொண்டார். இதில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் திவ்யா தேர்தல் அலுவலர் புண்ணியகோட்டி தாசில்தார் புவனேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீபெரும்புதூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 4 வாக்குச்சாவடி மையம் புதியதாக ஏற்படுத்தப்பட்டு தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1398 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 13 லட்சத்து 24 ஆயிரத்து 581 வாக்களர்கள் உள்ளனர்.
இதில் அதிகபட்சமாக ஆலந்தூர் தொகுதியில் 3 லட்சத்து 79 ஆயிரத்து 758 வாக்களார்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1 லட்சத்து 87 ஆயிரத்து 615 பேர், பெண்கள் 1 லட்சத்து 92 ஆயிரத்து 86 பேர், மாற்றுபாலினத்தவர்கள் 57 பேர் உள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர் தனி தொகுதியில் ஆண்கள் 1,79,657 பேர், பெண்கள் 1,89,828 பேர் மாற்று பாலினத்தவர்கள் 60 பேர் என மொத்தம் 3,69,545 பேர் உள்ளனர். உத்திரமேரூர் தொகுதியில் ஆண்கள் 127960 பேர், பெண்கள்137595 பேர், மாற்று பாலினத்தவர்கள் 43 பேர் என மொத்தம் 2,65,598 பேரும், காஞ்சிபுரம் தொகுதியில் ஆண்கள் 149570 பேர், பெண்கள் 1,60,088 பேர், மாற்றுபாலினத்தவர்கள்22 பேர் என மொத்தம் 3,09,680 பேர் உள்ளனர்.
- திருவெற்றியூர் தொகுதியில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 315 ஆண் வாக்காளர்கள்.
- ஆவடி தொகுதியில் 4 லட்சத்து 31 ஆயிரத்து 908 வாக்காளர்கள் உள்ளனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் அரசியல் கட்சியினர் முன்பு வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 33 லட்சத்து 34 ஆயிரத்து 786 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் 16 லட்சத்து 47 ஆயிரத்து 943 பேரும், பெண்கள் 16 லட்சத்து 86 ஆயிரத்து 123 பேரும், மாற்று பாலினத்தவர்கள் 720 பேரும் உள்ளனர். அதிகபட்சமாக மாதவரம் தொகுதியில் 4 லட்சத்து 52 ஆயிரத்து 568 பேர் இருக்கிறார்கள்.
சட்டமன்ற தொகுதி வாரியாக வரைவு வாக்காளர்கள் விபரம் வருமாறு:-கும்மிடிப்பூண்டி தொகுதியில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 838 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 37 ஆயிரத்து 209 பெண் வாக்காளர்களும், 41 மாற்று பாலினத்தவர்கள் என மெத்தம் 2 லட்சத்து 68 ஆயிரத்து 88 பேர் உள்ளனர்.
பொன்னேரி தனி தொகுதியில் 1 லட்சத்து 23ஆயிரத்து 627 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 29 ஆயிரத்து 120 பெண் வாக்காளர்கள், மாற்று பாலினத்தவர்கள் 27 பேர் உள்பட மொத்தம் 2 லட்சத்து 52 ஆயிரத்து 774 வாக்காளர்கள்.
திருத்தணி தொகுதியில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 67 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 35 ஆயிரத்து 775 பெண் வாக்காளர்களும், மாற்று பாலினத்தவர்கள் 30 பேர் உட்பட மொத்தம் 2 லட்சத்து 67 ஆயிரத்து 872 வாக்காளர்கள்.
திருவள்ளூர் தொகுதியில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 937 வாக்காளர்கள், 1 லட்சத்து 31 ஆயிரத்து 851 பெண் வாக்காளர்கள், மாற்று பாலினத்தவர்கள் 23 பேர் உள்பட மொத்தம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 811 வாக்காளர்கள் உள்ளனர்.
பூந்தமல்லி தனி தொகுதியில் 1 லட்சத்து 77 ஆயிரத்து 546 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 84 ஆயிரத்து 628 பெண் வாக்காளர்களும், மாற்று பாலினத்தவர்கள் 69 பேர் உட்பட மொத்தம் 3 லட்சத்து 62 ஆயிரத்து 243 வாக்காளர்களும்
ஆவடி தொகுதியில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 428 ஆண் வாக்காளர்களும், 2 லட்சத்து 18 ஆயிரத்து 386 பெண் வாக்காளர்களும், 94 மாற்று பாலினத்தவர்கள் உள்பட மொத்தம் 4 லட்சத்து 31 ஆயிரத்து 908 வாக்காளர்கள் உள்ளனர். மதுரவாயல் தொகுதியில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 820 ஆண் வாக்காளர்களும் 2 லட்சத்து 7 ஆயிரத்து 218 பெண் வாக்காளர்களும், 119மாற்று பாலினத்தவர்கள் உள்பட மொத்தம் 4 லட்சத்து 17 ஆயிரத்து 157 வாக்காளர்கள்.
அம்பத்தூர் தொகுதியில் 1 லட்சத்து 75 ஆயிரத்து 598 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 76 ஆயிரத்து 187 பெண் வாக்காளர்களும், மாற்று பாலினத்தவர்கள் 78 பேர் உள்பட 3 லட்சத்து 51 ஆயிரத்து 863 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
மாதவரம் தொகுதியில 2 லட்சத்து 24 ஆயிரத்து 767 ஆண் வாக்காளர்கள், 2 லட்சத்து 27 ஆயிரத்து 692 பெண் வாக்காளர்களும், மாற்று பாலினத்தவர்கள் 109 பேர் உள்பட மொத்தம் 4 லட்சத்து 52 ஆயிரத்து 568 வாக்காளர்களும் உள்ளனர்.
திருவெற்றியூர் தொகுதியில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 315 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 38 ஆயிரத்து 57 பெண் வாக்காளர்களும், மாற்று பாலினத்தவர்கள் 130 பேர் உள்பட மொத்தம் 2 லட்சத்து 72 ஆயிரத்து 502 வாக்காளர்கள் உள்ளனர்.
- இணையதளம் வாயிலாகவும் பெயர்களை சேர்க்கலாம்.
- வாக்காளர் ஹெல்ப் லைன் மொபைல் ஆப் மூலமும் வாக்காளர் பட்டியலை பார்த்து விண்ணப்பிக்கலாம்.
சென்னை:
சென்னையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு இன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் இன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் வரைவு வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
இதன் பிரதியை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் வழங்கி உள்ளோம்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வரைவு வாக்காளர் பட்டியலை வைக்க உள்ளோம். அதை பொதுமக்கள் பார்த்து தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? முகவரி மாற்றம் வேண்டுமா? என்பதை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல்படி மொத்தம் 6 கோடியே 11 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3 கோடி ஆண் வாக்காளர்களும் 3 கோடியே 10 லட்சம் பெண் வாக்காளர்களும் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 8,016 பேர் உள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் 17 வயது நிரம்பிய புது வாக்காளர்களும் தங்களது பெயர்களை சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு 18 வயது பூர்த்தியாகும் காலாண்டில் அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.
இதற்காக ஜனவரி-1, ஏப்ரல்-1, ஜூலை-1, அக்டோபர்-1 ஆகிய தேதிகளில் 18 வயது ஆகும்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும்.
இணைய தளம் வாயிலாகவும் பெயர்களை சேர்க்கலாம். வாக்காளர் ஹெல்ப் லைன் மொபைல் ஆப் மூலமும் வாக்காளர் பட்டியலை பார்த்து விண்ணப்பிக்கலாம்.
அடுத்த மாதம் 4, 5, 18, 19 தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அதில் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். பரிசீலனைக்கு பிறகு பெயர்கள் சேர்ப்பு, திருத்தம் நடைபெறும்.
இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ந்தேதி வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
- நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் இந்துபாலா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஆனந்தன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான மாவட்ட ஊராட்சி, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் உறுப்பினர்களை கொண்ட வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளது.
இந்த வரைவு வாக்காளர் பட்டியலை வாக்காளர் பதிவு அலுவலரும் மாவட்ட கலெக்டருமான ராகுல் நாத் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் முன்னிலையில் வெளியிட்டார். இதனை மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் பெற்றுக் கொண்டார். வரைவு வாக்காளர் பட்டியல் இன்றைய நிலையில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்களின் பட்டியலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் மாவட்ட ஊராட்சி-16, மாநகராட்சி-70, நகராட்சிகள்-108, பேரூராட்சிகள்-99 என மொத்தம் 293 உள்ளது. மேலும் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலின் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை (4-ந்தேதி) வெளியிடப்படுகிறது.
நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் இந்துபாலா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஆனந்தன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரித்தல், வெளியிடுவதற்கான பதிவு அலுவலர் ஆவார்.
- காலை 10.30 மணிக்குதிருப்பூர் மாவட்ட ஆட்சியரக மாவட்ட பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டரால் வெளியிடப்பட உள்ளது .
திருப்பூர் :
தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய செயலாளர் கடிதத்தின்படி,மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான சாதாரணத் தேர்தல்களைநடத்திடுவதற்கு அறிவுரைகள் வரப்பெற்றுள்ளது. இதில் முதல் கட்ட பணியாக மேற்படித்தேர்தலுக்கான ஊரகப்பகுதி மற்றும் நகர்ப்புற பகுதிக்கான வாக்காளர் பட்டியலை 1999ம்ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் (மாவட்டத் திட்டமிடும் குழு உறுப்பினர்கள்தேர்தல்) விதி 10ல் குறிப்பிட்டுள்ளவாறு தயாரித்து வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்படி தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் (மாவட்ட திட்டமிடும் குழுஉறுப்பினர்கள் தேர்தல்) விதிகள் 1999-ன் விதி 6ன்படி மாவட்ட தேர்தல் அலுவலர் -மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கானவாக்காளர் பட்டியல் தயாரித்தல், வெளியிடுவதற்கான பதிவு அலுவலர் ஆவார். மேற்படிதேர்தலுக்கான வாக்காளர் பட்டியலினை இணைப்பு -அ-வில் உள்ளவாறு படிவம் -1தயாரித்து, இணைப்பு-ஆ-வில் உள்ள அறிவிப்பில் (படிவம்-2) வெளியிட தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே திருப்பூர் மாவட்டத்தின் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை 2.5.2023 அன்று காலை 10.30 மணிக்குதிருப்பூர் மாவட்ட ஆட்சியரக அறை எண்: 238 –ல் மாவட்ட பதிவு அலுவலர் மற்றும்மாவட்ட கலெக்டரால் வீனித்தால் வெளியிடப்பட உள்ளது .
- திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
- வாக்காளர் பட்டியலில் திருத்தம் உள்ளவர்கள் இன்று முதல் வருகிற வருகிற 8-ம் தேதி வரை உரிய படிவங்களில் வாக்கு சாவடி மையத்தில் விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் 23 லட்சத்து 19 ஆயிரத்து 219 வாக்காளர்கள் உள்ளனர்.
1-1-2023 நாளினை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2023 மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட கால அட்டவணைப்படி இன்று (புதன்கிழமை) திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு உரிய வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் மறு சீரமைக்கப்பட்டு வாக்கு சாவடி பட்டியலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
அதன்படி தாராபுரம் (தனி) தொகுதியில் மறுசீரமைக்கப்பட்ட வாக்கு சாவடிகளின் எண்ணிக்கை 298, ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 25 ஆயிரத்து 222, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 32 ஆயிரத்து 313, 3-ம் பாலினத்தவர் 10 என மொத்தம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 545, காங்கேயம் தொகுதியில் மறுசீரமைக்கப்பட்ட வாக்கு சாவடிகள் எண்ணிக்கை 295, ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 23 ஆயிரத்து 553, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 30 ஆயிரத்து 551, 3-ம் பாலினத்தவர் 21 என மொத்தம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 125, அவினாசி (தனி) மறு சீரமைக்கப்பட்ட வாக்கு சாவடி 313, ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 34 ஆயிரத்து 300, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 42 ஆயிரத்து 394, 3-ம் பாலினத்தவர் 4 என மொத்தம் 2 லட்சத்து 76 ஆயிரத்து 698, திருப்பூர் வடக்கு மறுசீரமைக்கப்பட்ட வாக்கு சாவடி 374, ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 92 ஆயிரத்து 618, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 87 ஆயிரத்து 540, 3-ம் பாலினத்தவர் 140 என மொத்தம் 3 லட்சத்து 80 ஆயிரத்து 298, திருப்பூர் தெற்கு மறு சீரமைகப்பட்ட வாக்கு சாவடி 242, ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 34 ஆயிரத்து 874, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 32 ஆயிரத்து 874, 3-ம் பாலினத்தவர் 35 பேர் என மொத்தம் 2 லட்சத்து 67 ஆயிரத்து 783, பல்லடம் மறு சீரமைக்கப்பட்ட வாக்கு சாவடி 410, ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 90 ஆயிரத்து 379, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 94 ஆயிரத்து 38, 3-ம் பாலினத்தவர் 69 என மொத்தம் 3 லட்சத்து 84 ஆயிரத்து 486, உடுமலை மறுசீரமைக்கப்பட்ட வாக்கு சாவடி எண்ணிக்கை 294, ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 25 ஆயிரத்து 632, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 35 ஆயிரத்து 633, 3-ம் பாலினத்தவர் 25 பேர் என மொத்தம் 2 லட்சத்து 61 ஆயிரத்து 290, மடத்துக்குளம் மறு சீரமைக்கப்பட்ட வாக்கு சாவடி எண்ணிக்கை 287, ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 15 ஆயிரத்து 854, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 21 ஆயிரத்து 120, 3-ம் பாலினத்தவர் 20 பேர் என மொத்தம் 2 லட்சத்து 36 ஆயிரத்து 994 பேர் உள்ளனர். ஒட்டு மொத்தமாக திருப்பூர் மாவட்டத்தில் மறுசீரமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2513, ஆண் வாக்காளர்கள் 11 லட்சத்து 42 ஆயிரத்து 432 பேரும், பெண் வாக்காளர்கள் 11 லட்சத்து 76 ஆயிரத்து 463, 3-ம் பாலினத்தவர் 324, என மொத்தம் 23 லட்சத்து 19 ஆயிரத்து 219 பேர் உள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் திருத்தம் உள்ளவர்கள் இன்று முதல் வருகிற வருகிற 8-ம் தேதி வரை உரிய படிவங்களில் வாக்கு சாவடி மையத்தில் விண்ணப்பிக்கலாம். சிறப்பு முகாம்களில் திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 55 ஆயிரத்து 169 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
- 75 சதவீதம் பேர் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண இணைப்பு செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக திருச்சி 7-வது இடத்தில் உள்ளது.
திருச்சி,
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளில் 2023-ம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.இதனிடையே வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ள ஏதுவாக வரைவு வாக்காளர் பட்டியலை இன்று மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அதன்படி திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளில் 11 லட்சத்து 15 ஆயிரத்து 975 ஆண் வாக்காளர்கள், 11 லட்சத்து 85 ஆயிரத்து 14 பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தார் 289 பேர் என மொத்தம் 23 லட்சத்து 1,278 வாக்காளர்கள் உள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 55 ஆயிரத்து 169 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். லால்குடியில் ஒரு வாக்குச்சாவடி கூடுதலாக சேர்க்கப்பட்டதுடன் மாவட்டத்தில் 2,544 வாக்குச்சாவடிகள் உள்ளன. 75 சதவீதம் பேர் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண இணைப்பு செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக திருச்சி 7-வது இடத்தில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. சார்பில் தெற்கு மாவட்ட நகர செயலாளர் மதிவாணன், வக்கீல் தினகரன், அ.தி.மு.க. (இ.பி.எஸ்.) அணி சார்பில் திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் ராவணன், அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்.) அணி பகுதி செயலாளர்கள் சுதாகர், தாயார் சீனிவாசன், காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ஜவகர், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிவா, வெற்றி செல்வன் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்
- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
- அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.65 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
சென்னை:
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள், குறைகளை சரி செய்யும் நோக்கில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு பணி கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.
இதையொட்டி துணை மற்றும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கி 7-ந்தேதியுடன் முடிவடைந்தது.
தமிழகத்தில் இன்று அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
சென்னையில் இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 3 லட்சத்து 95 ஆயிரத்து 103 பேரும், பெண் வாக்காளர்கள் 3 கோடியே 14 லட்சத்து 23 ஆயிரத்து 321 பேர் உள்ளனர். 3-ம் பாலின வாக்காளர்கள் 7,758 பேர் உள்ளனர்.
தமிழகத்தில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.65 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1.72 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சென்னையில் வருகிற 12, 13 மற்றும் 26, 27-ந்தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு சென்னை மயிலாப்பூரில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்