என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மகளிர்"
- வரும் ஐ.பி.எல் தொடரில் ஒரு போட்டியில் மட்டும் மட்டும் பிங்க் நிற ஜெர்சி அணிந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது
- இதற்கான ஜெர்சியை ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், மற்றும் அணியின் பயிற்சியாளர் குமார் சங்ககாரா அறிமுகப்படுத்தியுள்ளனர்.
வரும் ஐ.பி.எல் தொடரில் ஒரு போட்டியில் மட்டும் மட்டும் பிங்க் நிற ஜெர்சி அணிந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள மகளிரை கௌரவிக்கும் வகையில் பிங்க் நிற ஜெர்சியில் விளையாட உள்ளோம் என ராஜஸ்தான் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ள பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தான் முழு பிங்க் நிற ஜெர்சியில் ராஜஸ்தான் அணி விளையாடுகிறது.
இதற்கான ஜெர்சியை ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், மற்றும் அணியின் பயிற்சியாளர் குமார் சங்ககாரா அறிமுகப்படுத்தியுள்ளனர்.
- நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் காங்கிரசில் 50 சதவீத பெண்களை முதல்-மந்திரிகளாக ஆக்குவோம்.
- பெண்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது தான் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரசுக்கு இடையேயான போராட்டம்.
திருவனந்தபுரம்:
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய முன்னாள் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி வயநாட்டில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
மூன்றாம் நாளான நேற்று எர்ணாகுளம் மாவட்டம் கொச்சியில் கடந்த காங்கிரஸ் மாநில மகளிர் மாநாட்டை ராகுல் காந்தி தொடங்கிவைத்தார். அந்த மாநாட்டில் அவர் பேசியதாவது:-
நமது கட்சியில் இன்று ஒரு பெண் முதல்-மந்திரி கூட இல்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியில் முதல்-மந்திரிகளாகும் நற்பண்புகள் கொண்ட பல பெண்கள் இருக்கிறார்கள். காங்கிரஸ் தனது கட்டமைப்புக்குள் பெண்களை தீவிரமாக ஊக்குவிக்க வேண்டும். நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் காங்கிரசில் 50 சதவீத பெண்களை முதல்-மந்திரிகளாக ஆக்குவோம்.
பெண்கள் தாழ்ந்தவர்கள் அல்ல என்று காங்கிரஸ் அடிப்படையில் நம்புகிறது.ஆண்களை விட பெண்கள் பல வழிகளில் உயர்ந்த வர்கள். ஆண்களை விட அவர்களுககு பொறுமை அதிகம். அதிக உணர்திறன் மற்றும் இரக்கமுள்ளவர்கள். அதிகார கட்டமைப்பின் ஒரு பகுதியாக பெண்கள் இருக்க வேண்டும்.
பெண்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது தான் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரசுக்கு இடையேயான போராட்டம். பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்ற போதிலும், அதை அமல்படுத்தாமல் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அதன் முழு வரவலாற்றிலும் பெண்களை அதன் அணிகளில் அனுமதிக்கவில்லை. இதற்கு முன் இதை நான் இருமுறை கூறியபோது, தங்களிடம் பெண்கள் அமைப்புகள் இருப்பதாக ஆர்.எஸ்.எஸ். கூறியது. ஆனால் அவர்களிடம் பெண்கள் அமைப்புகள் இருக்கிறதா இல்லையா? என்பது கேள்வி அல்ல.
ஆர்.எஸ்.எஸ்-ல் பெண்கள் அதிகாரத்தை பகிர்ந்து கொள்கிறார்களா? என்பது தான் கேள்வி. அந்த கேள்விக்கு முழுமையாக இல்லை என்பதே பதில். இந்திய அரசியலை ஆழமாக பார்த்தால் ஆர்.எஸ்.எஸ். மற்றும் காங்கிரசுக்கு இடையேயான உண்மையான சண்டை, அரசியலில் பெண்களின் பங்கை பற்றியது என்பதை நீங்கள் காணலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- விழாவுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார்.
- தாசில்தார் ஜெய்சிங்சிவக்குமார், பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம்:
பல்லடம் தனியார் திருமணமண்டபத்தில் கலைஞர் உரிமை தொகை 2-ம் கட்டமாக தேர்வு செய்யப்பட்ட மகளிருக்கு உரிமை தொகை வழங்கும் விழா ஏற்கனவே உரிமை தொகை பெற்றவர்களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கும் விழா பல்லடத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் பவன் குமார் கிரியப்பனவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் கலந்து ெகாண்டு 1,239 மகளிருக்கு ஏ.டி.எம். கார்டுகளை வழங்கினர்.
விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் 604 மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கியதற்கான ஏ.டி.எம். கார்டு மற்றும் 635 மகளிருக்கு முதல்-அமைச்சரின் வாழ்த்து மடல்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் மாதம் ரூ.1000 அரசு கொடுத்திருக்கிறது என்று அலட்சியப்படுத்தாமல் இந்த தொகையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுடைய குடும்பத்தினுடைய நன்மைக்கும் அதன் மூலமாக இந்த நாட்டினுடைய நன்மைக்கும் பயன்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்
விழாவில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி் ஜெய்பீம், ஆர்.டி.ஓ. (பொறுப்பு) ராம்குமார், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், மாநகராட்சி பவன்குமார் கிரியப்பனவர், பல்லடம் நகர்மன்றத்தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார், அறங்காவலர் குழுத்தலைவர் கீர்த்தி சுப்பரமணியம், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், தாசில்தார் ஜெய்சிங்சிவக்குமார், பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.
- தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் 17 ஆயிரம் பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் விடுபட்ட பெண்களுக்கு 2-ம் கட்டமாக மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கில் விடுபட்ட மகளிர்களுக்கு உரிமை தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடந்தது. மாவட்டம் முழுவதும் 17 ஆயிரம் பெண்களுக்கு உரிமை த்தொகை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், அண்ணாதுரை, தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர்கள் அஞ்சுகம் பூபதி, தமிழழகன், ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, ஒன்றிய செயலாளர் முரசொலி, மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கோட்டாட்சியர் இலக்கியா, தாசில்தார்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- குமரி மாவட்டத்திலும் தகுதியானவர்களுக்கு 1000 ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.
- சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்த னர். சரியான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் பலரது விண்ணப்ப மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
நாகர்கோவில் : தமிழகம் முழுவதும் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன மூலம் குடும்ப அட்டைதாரர் களுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்திலும் தகுதியானவர்களுக்கு 1000 ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வர்கள் விண்ணப்பித்திருந்தனர். சரியான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் பலரது விண்ணப்ப மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. தகுதியான நபர்களுக்கு மாதம் தோறும் வங்கி கணக்கில் ரூபாய் ஆயிரம் செலுத்தப்பட்டு வருகிறது. விடுபட்ட நபர்கள் விண்ணப் பித்துக் கொள்ள கால அவகாசம் வழங்கப்பட் டது.
இதை தொடர்ந்து இ-சேவை மையங்கள் மற்றும் கலெக்டர் அலுவல கம், தாலுகா அலுவல கங்களில் பொதுமக்கள் விண்ணப்பங்களை வழங்கினார்கள். ஏற்கனவே விண்ணப்பம் வழங்கப்பட்டு முறையான வங்கி கணக்கு உள்பட ஆவணங்கள் இணைக்கப்படாத ஒரு சிலரின் விண்ணப்பங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த விண்ணப்பபடிவங்களில் குறைகளை நிவர்த்தி செய்யும் பணி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்காக தனியாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு பணி நடைபெற்று வருகிறது.
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உதவி மையத்தில் கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பப் படிவங்கள் நிராகரிக்கப்பட்ட பெண்கள் ஏராளமானோர் இன்று குவிந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று கலைஞர்கள் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய நடவடிக்கை மேற்கொண்டனர். விண்ணப்பங்களில் வங்கி கணக்கு இணைக்கப்பட்டது. தற்போது இணைக்கப்பட்டு வரும் நபர்களுக்கு விரை வில் பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் ஏற்கனவே குமரி மாவட்டத்தில் கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் மாதம் தோறும் 1000 வழங்கப்பட்டு வந்த சிலருக்கு 2-வது மாதம் பணம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
- மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை, விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
- சுய உதவிக் குழுக்கள் மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்று அரங்கு அமைக்க விரும்பினால், வருகிற 20-ந் தேதிக்குள் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர்.உமா வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை, விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவில் 3 கண்காட்சிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடத்தப்படுகிறது.
தற்போது நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டி கையை முன்னிட்டு வரு கின்ற வருகிற 7-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மாநில அளவிலான கண்காட்சி நடைபெற வுள்ளது.
இக்கண்காட்சியில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்கள், கைத்தறி பொருட்கள், உணவுப் பொருட்கள், பாரம்ப ரிய அரிசிகள், சிறுதானிய மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்கள், பனை ஓலைப் பொருட்கள் போன்ற பொருட்களும், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு பயன்பாட்டிற்கு கொலு பொம்மைகள், மண் பொம்மைகள், காகித கூழ் பொம்மைகள், விருந்தின ருக்கு வழங்கக் கூடிய நினைவு பரிசு பொருட்க ளான சிறிய சணல் பைகள், பனையோலை பெட்டிகள், சிறிய அளவிலான வண்ண காகித பைகள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு சேலைகள், காட்டன் சேலைகள், காட்டன் வேட்டி கள் போன்ற துணி வகைகள், சிவகங்கை மாவட்ட காரைக்குடி பலகாரங்கள் போன்ற தீபாவளி பலகாரங்கள் காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது
எனவே நாமக்கல் மாவட்டத்தில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்று அரங்கு அமைக்க விரும்பினால், வருகிற 20-ந் தேதிக்குள் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- மகளிர் நல இலவச மருத்துவ முகாம் நடந்தது.
- 20க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டு பெண்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கினர்.
தேவகோட்டை
தேவகோட்டை ரோட்டரி சங்கம், மதுரை குரு மருத்துவமனை இணைந்து மகளிர் நல இலவச மருத்துவ ஆலோசனை முகாமை நடத்தியது. முகாமினை முன்னாள் துணை ஆளுநர் கணேசன் தொடங்கி வைத்தார். ரோட்டரி சங்கத் தலைவர் ஊடிவயல் கதிரேசன் வரவேற்றார். குரு மருத்துவ மனை குழந்தையின்மை மற்றும் மகளிர் நல சிறப்பு மருத்துவர் டாக்டர் கல்பனா தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டு பெண்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கினர்.
குழந்தை இல்லாதவர்கள், நீர்க்கட்டி, கர்ப்பப்பவை கட்டி, சினைப்பையில் கட்டி உள்ளவர்கள் கருமுட்டை குறைபாடு விந்தணு குறைபாடு கர்ப்பப்பை புற்றுநோய் அதிக ரத்தப்போக்கு மார்பக புற்று நோய் மற்றும் பல்வேறு குறைபாடுகள் உள்ளவர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ரோட்டரி சங்க செயலாளர் திருவேங்கடம், பொருளாளர் ராமநாதன், கம்யூனிட்டி சர்வீஸ் சேர்மன் சந்திரசேகரன், நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பம் சரிபார்க்கும் பணி நடந்தது.
- கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கரூர்:
கரூர் அரவக்குறிச்சி, கடவூர் ஆகிய வட்டத்திற்குட்பட்ட தடாகோவில், புங்கம்பாடி மேல்பாகம், காமராஜர் நகர், பள்ளப்பட்டி அப்பீஸ் நகர், ஷாநகர், சீத்தப்பட்டி, தரகம்பட்டி ஆகிய பகுதிகளில் நேற்று மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்களை களப்பணியாளர்கள் வீடு வீடாக நேரில் சென்று சரிபார்க்கும் பணியினை கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
களப்பணியாளர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று ஆதார் எண், மின் கட்டணம், குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் விவரம், சொந்தமாக வைத்திருக்கும் வாகனங்களின் விவரம் ,மேலும் ஆண்டு வருமானம் தொடர்பான விவரங்களை சேகரித்து அதற்கான தனிச்செயலியில் பதிவேற்றம் செய்யப்படும் இப்பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை பார்வையிட்டு களப்பணியாளர்களிடம் தங்களுக்கு ஒரு நாளைக்கு எத்தனை மனுக்களை விசாரிக்க வேண்டும் என்ற பட்டியலை நாள்தோறும் தேர்வு செய்து பணிகளை விரைவாகவும், சரியான விவரங்களையும் செயலியில் பதிவேற்றம் செய்ய களப்பணியாளர்களுக்கு ஆலோசனைகளை கலெக்டர் வழங்கினார்.
- சமுதாய முதலீட்டு நிதியாக 1265 குழுக்களுக்கு ரூ.9.38 கோடி கடனுதவிகள்
- சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.115.38 கோடி கடன்தொகை தள்ளுபடி
நாகர்கோவில் :
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2021-2022 மற்றும் 2022-2023-ம் ஆண்டில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 720 புதிய மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற நாளான 07.05.2021 முதல் 31.07.2023 வரை சுழல்நிதி கடனாக 337 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.51 லட்சம் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. சமுதாய முதலீட்டு நிதியாக 1265 குழுக்களுக்கு ரூ.9.38 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
நலிவுற்ற தன்மை குறைப்பு நிதியின் கீழ் 160 நபர்களுக்கு ரூ.20 லட்சம் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. வங்கிக்கடன் இணைப்பு நிதியாக 24094 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1372.49 கோடி வங்கி கடன் பெற்றுதரப் பட்டுள்ளது. வங்கி பெருங்கடன் வழங்குவதில் இதுவரை 52 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.32.30 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்தொகை தள்ளுபடி செய்யப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் 3558 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.115.38 கோடி கடன்தொகை தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் புதியதாக நகர்ப்புற பகுதிகளில் 2297 மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களை ஊக்குவிக்கும் வகையில் மகளிர் குழு உறுப்பினர்கள் சுயதொழில் தொடங்க ஏதுவாக கடனுதவிகள் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
- குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15 முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
- கலை ஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் தகுதியான பயனாளிகள் விவரங்களை சேகரிக்கும் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
குமாரபாளையம்:
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15 முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. மாவட்ட வாரியாக இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இல்லம் தேடி கல்வி பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களை மகளிர் உரிமைத் தொகை திட்டப் பணியில் முழுமையாக ஈடு படுத்த அரசு திட்ட மிட்டுள்ளது. இதற்கான பயிற்சி முகாம் குமாரபாளை யம் தனியார் கல்லூரியில் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் நடைபெற்றது. இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் பங்கேற்ற னர். இவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர்கள் இதற் கான பயிற்சி வழங்கினர். இதில் குமாரபாளையம், பள்ளிபாளையத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
மாதம் ரூ.1000 வழங்கப்ப
டும் கலைஞர் மகளிர் உரி
மைத் திட்டம் செய லாக்கம் தொடர்பாக சில நாட்க ளுக்கு முன்பு முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கலை ஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் தகுதியான பயனாளிகள் விவரங்களை சேகரிக்கும் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- 7 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.44 லட்சம் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- தஞ்சை மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை குழுக்களுக்கு கடன்களை வழங்கினார்.
தஞ்சாவூர்:
தஞ்சை சரகம் பூதலூர் வட்டம் செங்கிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் உறுப்பினர் கல்வி திட்டம் மற்றும் 7 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.44 லட்சம் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் தஞ்சை மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை கலந்துகொண்டு மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன்களை வழங்கினார். இதில் தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குனர் பன்னீர்செல்வம், பூதலூர் கூட்டுறவு சார்பதிவாளர்-கள அலுவலர் சந்தியாஸ்ரீ, சங்கத்தின் செயலாட்சியர் நிஜந்தன், தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி கள மேலாளர் ஓம்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
- பெண்கள் கூட்டம் அலைமோதியது
- குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம் 2 கட்டமாக நடக்கிறது.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம் 2 கட்டமாக நடக்கிறது.
இதையடுத்து முதல் கட்டமாக முகாம் நடந்த 400 ரேஷன் கடைகளுக்குட்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன்கள் ஊழியர்கள் மூலமாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது. சுமார் 3 லட்சம் பேருக்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்ட நிலையில் 2 லட்சம் 25 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பபடிவங்களை பூர்த்தி செய்து வழங்கி உள்ளனர். முதல் கட்ட முகாம் நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து 2-ம் கட்ட கலைஞர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் 384 ரேசன் கடை மூலமாக ஏற்கனவே விநி யோகம் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று (5-ந்தேதி) முதல் விண்ணப்ப படிவங்கள் பெறப்படுகிறது.
மேல்புறம், கிள்ளியூர், திருவட்டார் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பபடிவங்கள் பெறப்பட்டு வருகிறது.
முகாமில் விண்ணப்பங்களை ஒப்படைக்க வந்த பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களுடன் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு இணைக்கப்பட்ட வங்கி புத்தகம் மற்றும் மின் கட்டண கார்டு ஆகியவற்றை இணைத்திருந்தனர். ஒரு சில பொதுமக்கள் ஆதார் கார்டை இடைக்கால வங்கி புத்தகத்தை கொண்டு வந்தனர்.
அப்போது அதிகாரிகள் அதை பரிசோதனை செய்துவிட்டு வங்கி கணக்கில் உடனடியாக ஆதார் கார்டை இணைக்குமாறு கூறினார்கள். ஒரு சில பெண்கள் சில ஆவணங்களை கொண்டு வரவில்லை. அவற்றை எடுத்து வருமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரண்டாம் கட்ட முகாமில் விண்ணப்ப படிவங்கள் பெறுவதற்கு முதல் நாள் என்பதால் இன்று அனைத்து மையங்களிலும் கூட்டம் அலைமோதியது. பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று பெண்கள் விண்ணப்ப படிவங்களை வழங்கினார்கள்.
வருகிற 16-ந்தேதி வரை விண்ணப்ப படிவங்கள் பெறப்படும். எனவே பொது மக்கள் தங்களுக்கு ஒதுக்கப் பட்ட தினத்தில் அந்தந்த பகுதியில் உள்ள முகாம்களுக்கு சென்று விண்ணப்ப படிவங்களை வழங்க வேண்டும். கூட்ட நெரிசலை தவிர்க்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்