search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரமாரி தாக்குதல்"

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • தலையில் பலத்த காயம் ஏற்பட்டது

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மேல் சாணங்குப்பம் பகுதியில் இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதி உள்ளது.

    இந்த நிலையில் நேற்று இரவு மர்ம கும்பல் அந்த பகுதியில் வசிக்கும் வசந்தராஜ் (வயது 50) என்பவரை திடீரென சரமாரியாக தாக்கியது.

    இதில் வரதராஜிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இது குறித்து உமராபாத் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடும்பத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தார்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் பறக்கை அருகே உள்ள வண்டிகுடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் லிங்கேஷ் (வயது 40).

    இவர் நாகர்கோவில் மாந கர 50- வது வட்ட தி.மு.க. செயலாளராக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சுந்தர்லிங்கம் என்ப வர் மீது சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் பினு என்பவர் புகார் கொடுத்தார். இதில் சுந்தரலிங்கத்திற்கு ஆதரவாக லிங்கேஷ் செயல்பட்டதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக அவ ருக்கும் எதிர் தரப்பின ருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு லிங்கேஷ் இரு சக்கர வாக னத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    வண்டி குடியிருப்பு அம்மன் கோவில் முன்பு வந்தபோது அதே பகுதியை சேர்ந்த ரவி (43) வழிமறித்து தகாத வார்த்தைகள் பேசி மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த லிங்கேஷ், ரத்த வெள்ளத்தில் அலறினார்.

    அலறல் சத்தம் கேட்டு அவருடைய தம்பி கண்ணன் மற்றும் அவரது மனைவி, அம்மா, அப்பா ஆகியோர் ஓடி வரவே, ரவி கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்று விட்டார்.

    படுகாயம் அடைந்த லிங்கேசை, குடும்பத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் மாநகர 50-வது வட்ட செயலாளர் லிங்கேஷை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் லிங்கேஷ் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ் பெக்டர் விஜயகுமார் விசா ரணை நடத்தி, ரவி மீது கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தார். தொடர்ந்து தலைமறைவாகியுள்ள ரவியை போலீசார் தேடி வருகின்றனர்.

    • குண்டியமல்லூரை சேர்ந்த 15 வயது மாணவன் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • ஏறிய போது வழியில் நிற்காமல் சற்று வழி விடவும் என கூறியுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் அருகே குண்டியமல்லூரை சேர்ந்த 15 வயது மாணவன் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அதேப்பகுதியை சேர்ந்த 16 வயது மாணவன் குறிஞ்சிப்பாடியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்‌. சம்பவத்தன்று குறிஞ்சிப்பாடியில் இருந்து குண்டியமல்லூர் பகுதிக்கு அரசு பஸ்ஸில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் முதலில் ஏறி உள்ளார். இதனை தொடர்ந்து 10-ம் வகுப்பு படிக்கும் மாணவன் பின்னால் ஏறிய போது வழியில் நிற்காமல் சற்று வழி விடவும் என கூறியுள்ளார்.

    இந்த நிலையில் 11-ஆம் வகுப்பு மாணவன் தனது நண்பர்களுக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு 10-ம் வகுப்பு மாணவன் என்னிடம் சண்டை ஏற்படுத்துவது போல் பேசி சென்றுள்ளார் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து குண்டியமல்லூர் பகுதியில் 10-ம் வகுப்பு மாணவன் இறங்கி நடந்து சென்ற போது, 11ஆம் வகுப்பு மாணவன் உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பல் 10-ம் வகுப்பு மாணவனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதில் காயம் அடைந்த 10-ம் வகுப்பு மாணவன் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் 11-ம் வகுப்பு மாணவன் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • பெண்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இந்த வழக்கு தொடர்பாக மேலும் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை சேடப்பட்டியை அடுத்த வீராளம்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் மனைவி ஜோதிமணி (வயது 36). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையில் ஏற்கனவே நிலப்பிரச்சினை சம்பந்தமாக முன் விரோதம் இருந்தது.

    சம்பவத்தன்று ஜோதி மணி வீராளம்பட்டி மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 4 பேர் கும்பல், சரமாரியாக அடித்து உதைத்து தப்பி சென்றது. இது தொடர்பாக ஜோதிமணி, சேடப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த பாண்டி (31), சிவனாண்டி (60), தங்கேஸ்வரன் (29) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    மதுரை திருமங்கலம் அடுத்த பன்னிகுண்டு, கிழக்கு தெருவை சேர்ந்தவர் போதும்பொண்ணு (வயது 50). இவரது கணவர் சந்திரன். இவர் அங்கு உள்ள ஒரு கோவிலில் மேளக்காரராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் அதே பகுதியில் வசிக்கும் ஒரு சிலர், கோவில் திருவிழா நிகழ்ச்சியின்போது முதல் மரியாதை கேட்டதாக தெரிகிறது. இதற்கு போதும்பொண்ணு எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் 8 பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கியது. படுகாயமடைந்த போதும்பொண்ணு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியில் வசிக்கும் பெரியபாண்டி, அவரது மகன் பால்பாண்டி, மகள் ஜோதி, பெரிய பாண்டி சகோதரர் சின்னபாண்டி, அவரது மனைவி பாப்பாத்தி, பெரியபாண்டி மனைவி பொன்னுத்தாய், நீலமேகம் மகள் மீனாட்சி ஆகிய 8 பேரிடம் சிந்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×