search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவ்வையார் விருது"

    • பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது வழங்கப்பட்டு வருகிறது.
    • விருது பெறுவோருக்கு தங்கப்பதக்கம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட உள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    சர்வதேச மகளிர் தினவிழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது தமிழக முதல்-அமைச்சரால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் இந்த விருது பெறுவோருக்கு 8 கிராம் (22காரட்) எடையுள்ள தங்கப்பதக்கம், ரூ.1 லட்சத்துக்கான காசோலை, சான்று மற்றும் சால்வை வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட உள்ளது. அவ்வையார் விருதுக்கான கருத்துருக்களை தமிழ்நாடு அரசின் விருதுகள் இணையதளத்தின் (https://awards. tn.gov.in) 20.11.2023-க்குள் சமர்பிக்க குறிப்பிட்டிருந்த நிலையில் தற்போது அடுத்த மாதம் 10-ந் வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கமலம் சின்னசாமி ஊட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 33 ஆண்டுகளாக தமிழ் ஆசிரியராக வேலை பார்த்துள்ளார்.
    • கடந்த 36 ஆண்டுகளாக கவிதைகள், புனைவது, வானொலி பேச்சு, பட்டிமன்றங்களிலும் பங்கேற்று பேசியுள்ளார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் கமலம் சின்னசாமி. இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு இவர் பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை ஆற்றியதற்காக அவ்வையார் விருது வழங்கப்பட்டது.

    சென்னையில் நடந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விருதினை, கமலம் சின்னசாமிக்கு வழங்கினார்.

    கமலம் சின்னசாமியின் சொந்த ஊர் ஊட்டி ஆகும். இவரது பெற்றோர் ராமசாமி-மாரியம்மாள். இவர் எம்.காம். எப்.ஐ.ஏ. சி.ஏ படித்தவர். ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியை. இதுதவிர தமிழ் புலவர், மதுரை தமிழ் சங்க புலவர் பட்டங்களையும் பெற்றுள்ளார்.

    இவரது கணவர் சின்னசாமி. இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வந்தார்.

    கமலம் சின்னசாமி ஊட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 33 ஆண்டுகளாக தமிழ் ஆசிரியராக வேலை பார்த்துள்ளார். மேலும் 7 ஆண்டுகள் ஆங்கில ஆசிரியராகவும் பணியாற்றி உள்ளார்.

    இவர் ஆசிரியர் பணி மட்டுமின்றி எழுத்தாளராகவும், கவிதையாளராகவும் அறியப்படுகிறார். இவர் கடந்த 36 ஆண்டுகளாக கவிதைகள், புனைவது, வானொலி பேச்சு, பட்டிமன்றங்களிலும் பங்கேற்று பேசியுள்ளார்.

    இதுதவிர சிறந்த ஓவியம் தீட்டுபவர், வண்ணக் கோலங்கள், உல்லன் வேலைப்பாடுகள், பனியன், மப்ளர், ஸ்கார், குரோஷா, பூ வேலைகள், ஆன்மிக பாடல்கள் இசைப்பதில் ஆர்வம், தையல் கலையிலும் ஆர்வமுடையவராகவும் உள்ளார்.

    இவர் இணையில்லா எமது தமிழ், தாயும் தனயனும், என் தெய்வம் ஸ்ரீ சத்ய ஸாயி, எனக்கு பிடித்த சமுதாயம், கொங்கு நாட்டு தங்கம் எமது சமுதாயம், இவளா என் மனைவி, நலந்தரும் நாட்டு வைத்தியம் பாகம்-1, கருமியின் காசு, சங்ககால பெண்மணிகள், இன்றைய மாணவ, மாணவிகள், மணமக்கள், வங்கம் கண்ட தங்கம், ஊட்டி அவ்வையின் ஆத்திசூடி, சிறுவர் பாடல்கள் உள்பட பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார்.

    சிறந்த பணி, நூல்களுக்காக எண்ணற்ற விருதுகளும் வாங்கியுள்ளார். சாரண சாரணியர் அரசு விருது, கவியருவி, சைவச் சித்தாந்த செம்மல், மலைச்சாரல், மகுடம், காரைக்கால் அம்மையார் விருது, கராத்தே விருது, கூடலூர் தமிழ்சங்க விருது, 2 முறை உலக சாதனையாளர் விருது, சேவா ரத்னா விருது, சிங்கப்பெண் விருது, பாரதி விருது, பாரதிதாசன் விருது, ஈரோடு தமிழ்சங்கம் விருது, நெய்வேலி தமிழ்சங்க விருது, காங்கயம் அளித்த அவ்வை விருது, ஊட்டி மலைச்சாரல் அளித்த ஊட்டி அவ்வை விருதுகள் என பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

    அவ்வையார் விருது வாங்கிய கமலம் சின்னசாமிக்கு அவரது உறவினர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    தகுதி வாய்ந்த நபர்கள் தமிழக அரசின் இணையதளத்தில் 10.12.2022க்குள் பதிவு செய்ய வேண்டும்.

    கடலூர்:

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 2023 ஆம் ஆண்டில் உலக மகளிர் தினத்தன்று அவ்வையார் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு தமிழக முதலமைச்சர் 8 கிராம் தங்கபதக்கமும், 1 லட்சத்திற்கான காசோலை, சான்று மற்றும் சால்வை ஆகியவைகள் வழங்கப்படுகிறது. இவ்விருது பெறுவதற்கு தகுதி வாய்ந்த நபர்கள் தமிழக அரசின் இணையதளத்தில் 10.12.2022க்குள் பதிவு செய்ய வேண்டும்.

    மேலும் தமிழ் நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும் 18 வயதிற்கு மேற்பட்ட வராகவும் இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூகநலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண்

    குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள் மொழி, இனம், பண்பாடு, கலை அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்காக தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணிபுரிபவர்களாக இருத்தல் வேண்டு ம். தேசிய மற்றும் உலகளாவிய விருதுகளின் விவரம் (விருது பெற்றிருப்பின் அதன் விவரம், விருதின் பெயர், யாரிடமிருந்து பெற்றது பெற்ற வருடம் தெரிவிக்க வேண்டும். சேவை பற்றிய செயல்முறை விளக்கம் புகைப்படங்கள் மற்றும் விரிவான அறிக்கை தெரிவிக்க வேண்டும். சமூக சேவையாளரின் சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விபரங்கள் தெரிவிக்க வேண்டும்.

    சமூகப் பணியாளர் இருப்பிடத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்று.

    விண்ணப்பதாரர் சமர்ப்பிக்கும் கருத்துரு க்களில் பெண்களின் முன்னேற்றத்திற்கான சேவை புரிந்த விவரங்களை ஒரு பக்க அளவில் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் பாலசுப்பிரமணியம் விடு த்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

    • விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
    • மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    தமிழ்நாடு, சமூக நல துறையின் சார்பில், 2023-ம் ஆண்டில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்தவருக்கு அவ்வையார் விருது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் உலக மகளிர் தின விழா அன்று மார்ச் 2023-ல் வழங்கப்பட உள்ளது.

    மேற்படி விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.

    10.12.2022-க்குள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்த பின்னர் மாவட்ட சமூக நல அலுவலகம், காஞ்சிபுரம் என்ற முகவரியில் இரு பிரதிகளை நேரில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

    • பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தவருக்கு வழங்கப்படுகிறது
    • கலெக்டர் தகவல்

    திருப்பத்தூர்:

    உலக மகளிர் தினவிழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது தமிழக முதல்-அமைச்சரால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பெறுவோருக்கு 8 கிராம் தங்கப்பதக்கம், ரூ.1 லட்சத்திற்கான காசோலை, சான்று மற்றும் சால்வை வழங்கப்படும். இவ்விருதினைப்பெற https://awards.tn.gov.in எனும் இணையத் ளத்தில் விண்ணப்பிக்கலாம். 2023-ம் ஆண்டு அவ்வையார் விருது பெறுவதற்கு தமிழகத்தை பிறப்பிடமாக கொண்ட 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலம் சார்ந்த நடவடிக்கை கள் இருக்க வேண்டும். பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கையும், மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்றதுறைகளில் மேன்மையான முறை யில் மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணி யாற்றி இருக்க வேண்டும். டிசம்பர் 10-ந் தேதிக்குள் இணையத ளத்தில் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

    இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களையும் கையொப்பத்துடன் மாவட்ட சமூகநல அலுவலகம், பி-பிளாக், முதல் தளம், மாவட்ட ஆட் சியரகம், திருப்பத்தூர் என்ற முகவரியில் உரிய தேதிக்குள் சமர்ப் பிக்க வேண்டும். மேற்கண்ட தகவலை கலெக்டர் அமர் குஷ் வாஹா தெரிவித்துள்ளார்.

    ×