search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஜேந்திர சிங் ஷெகாவத்"

    • ராய்பூரில் நடைபெற்ற தூய்மை இயக்கத்தில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் கலந்துகொண்டார்.
    • பிரதமர் மோடியின் ஆட்சியில் தான், மணிப்பூர் உட்பட வடகிழக்கு இந்தியா வளர்ந்துள்ளதாக அமைச்சர் கஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

    மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், ராய்பூரில் உள்ள ராமர் கோவிலில் தூய்மை இயக்கத்தில் இன்று பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 55 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் வடகிழக்கு இந்தியா புறக்கணிக்கப்பட்டதாகவும், வடகிழக்கு இந்தியாவை பிரதான நிலப்பரப்பில் இருந்து பிரிக்கும் சதிகள் நடைபெற்றதாகவும் கூறினார். பிரதமர் மோடியின் ஆட்சியில் தான், மணிப்பூர் உட்பட வடகிழக்கு இந்தியா வளர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்,

    ராய்பூரில் தூய்மை இயக்கத்தில் பங்கேற்ற பின்னர், மகாசமுந்த் மாவட்டத்தில் உள்ள பிவிடிஜி கிராமத்திற்கு செல்ல இருக்கிறார். அங்கு மாவட்ட பஞ்சாயத்து வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'பிரதான் மந்திரி ஜன்மம்' நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நயா ராய்பூரில் உள்ள விருந்தினர் மாளிகையில் அவரது தலைமையில் நடைபெறும் ஜல் ஜீவன் மிஷன் பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். அதன் பின்னர் மாலை 5 மணிக்கு ராய்ப்பூரில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

    • ஐந்து மாநில தேர்தலில் மூன்றில் பா.ஜனதா வெற்றி பெற்றது.
    • மத்திய பிரதேச மாநில முதல்வராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம், ராஜஸ்தான் ஆகிய ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் கடந்த 3-ந்தேதி வெளியாகின. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் பா.ஜதனா ஆட்சியை பிடித்தது.

    என்றபோதிலும் முதலமைச்சரை தேர்வு செய்வதில் அந்த கட்சி தொடர்ந்து ஆலோசனை நடத்தியது. இதனால் ஒரு வாரத்திற்கு மேலாகியும் இன்னும் பதவி ஏற்பு விழா நடைபெறவில்லை. சத்தீஸ்கரில் சில தினங்களுக்கு முன் முதலமைச்சர் தேர்வு செய்யப்பட்டார்.

    மத்திய பிரதேச மாநிலத்தில் நேற்று தேர்வு செய்யப்பட்டது. ராஜஸ்தானில் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இந்த நிலையில்தான் இன்று மாலை பா.ஜனதா எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் மத்திய பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், தேசிய துணை தலைவர் சரோஜ் பாண்டே, தேசிய பொது செயலாளர் வினோத் டவ்தே ஆகிய துணை பார்வையாளர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

    இந்த கூட்டத்தில் முதலமைச்சர் யார் என்பது தேர்வு செய்யப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, மத்திய மந்திரிகள் அர்ஜூன் ராம் மெஹ்வால், கஜேந்திர சிங் ஷெகாவத், அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோர் முதல்வர் பதவி போட்டியாளர்களில் முன்னணியில் இருக்கிறார்கள்.

    ராஜஸ்தானில் 199 சட்டமன்ற இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதல் பா.ஜனதா 115 இடங்களில் வெற்றி பெற்றது. வேட்பாளர் மரணம் காரணமாக ஒரு தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • கர்நாடக அணைகளில் கிட்டதட்ட 54 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் இருந்தும் தமிழகத்துக்கு போதுமான தண்ணீரை திறந்து விட மறுக்கிறார்கள்.
    • தமிழகத்தின் உடனடி தேவைக்கு 12500 கனஅடி நீரை திறக்க சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை வைக்க உள்ளோம்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் காவிரி தண்ணீரை கர்நாடகம் முறையாக திறந்து விடாத நிலையில் மத்திய அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

    இதற்காக மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவினர் நேற்று சந்தித்து பேசினார்கள். கோரிக்கை மனுவும் அளித்தனர்.

    ஆனால் மத்திய மந்திரி தமிழகத்துக்கு திருப்தி அளிக்கும் வகையில் பதில் சொல்லவில்லை. 5 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவில் சொல்வதாக தெரிவித்தார்.

    இந்த நிலையில் காவிரிநீர் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது. அதில் என்னென்ன வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என்பது குறித்து அமைச்சர் துரைமுருகன் டெல்லியில் இன்று மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி அலுவலகத்துக்கு சென்று அவருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனாவும் உடன் சென்றிருந்தார்.

    சுமார் 1 மணிநேரம் முகுல் ரோஹத்கியுடன் ஆலோசனை நடத்திய துரைமுருகன் நிருபர்களை சந்தித்தார்.

    கர்நாடக அணைகளில் கிட்டதட்ட 54 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் இருந்தும் தமிழகத்துக்கு போதுமான தண்ணீரை திறந்து விட மறுக்கிறார்கள்.

    எனவே உச்சநீதிமன்றம் தான் நமக்கு ஒரே தீர்வு. ஆரம்பத்தில் இருந்து இன்று வரை உச்சநீதிமன்ற தீர்ப்பு தான் கை கொடுத்து உள்ளது. தொடக்கம் முதல் சுப்ரீம் கோர்ட்டு தான் தமிழகத்துக்கு தீர்வை பெற்று தந்துள்ளது. எனவே சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாட்டின் நிலையை எடுத்துரைத்து உரிய நீரை திறக்க கோருவோம்.

    தமிழகத்தின் உடனடி தேவைக்கு 12500 கனஅடி நீரை திறக்க சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை வைக்க உள்ளோம்.

    இவ்வாறு துரைமுருகன் கூறினார்.

    • அவமரியாதையுடன் பார்ப்பவர்கள் அனைவரின் கண்களும் பிடுங்கப்படும்.
    • சனாதனத்திற்கு எதிராக பேசும் எவரும் இந்தியாவில் நிலையான அரசியல் செய்ய முடியாது.

    தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறியதற்கு நாடு முழுவதிலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்த விவகாரம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. நாடு முழுக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு கண்டக்குரல் ஓங்கி ஒலித்தது.

    இதனிடையே ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர சிங் ஷெகாவத் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது கருத்துக்களை தெரிவித்தார். இது குறித்து அவர் பேசியதாவது..,

    "உயிரை தியாகம் செய்து நமது முன்னோர்கள் கட்டி காத்து வந்த சனாதன தர்மத்தை சிலர் அழிக்க நினைக்கின்றனர். அவர்களை இனியும் சகித்து கொள்ள முடியாது. சனாதன தர்மத்திற்கு எதிராக பேசுபவர்களுக்கு நான் ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன். நீங்கள் இவ்வாறு பேசினால் உங்கள் நாக்கை பிடுங்கி விடுவோம். எங்களை கீழ்த்தரமாக, அவமரியாதையுடன் பார்ப்பவர்கள் அனைவரின் கண்களும் பிடுங்கப்படும். சனாதனத்திற்கு எதிராக பேசும் எவரும் இந்தியாவில் ஒரு நிலையான அரசியல் செய்து விட முடியாது," என்று தெரிவித்தார்.

     

    இவரது கருத்துக்கு பா.ஜ.க. தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை கூறியதாவது..,

    "சனாதன தர்மத்தில் இருப்பவர்கள் பொதுவாக ஹிம்சையை எதிர்த்து, அஹிம்சையின் பக்கம் இருப்பவர்கள். யாரும் அப்படி பேசுவதற்கு உரிமை இல்லை, யாராவது உணர்ச்சியில் அப்படி பேசினால் அதை திருத்திக் கொள்ள வேண்டும். யாரும் பேசக் கூடாது."

    "இந்த மதம் அடிப்படையில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் அனைவரையும் அரவணைத்ததால், தான் இந்தியா இன்று இப்படிப்பட்ட நாடாக இருக்கிறது. யார் சொல்லி இருந்தாலும், எந்த பொறுப்பில் இருந்து அப்படி சொல்லி இருந்தாலும் கூட கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தும் போது அது தவறான அர்த்தத்தை கொடுக்கும். யார் சொல்லி இருந்தாலும், இது போன்ற கருத்துக்களை தவிர்ப்பது மிக மிக நல்லது," என்று தெரிவித்து உள்ளார்.

    • தமிழகத்திற்கு மொத்தம் 22.54 டி.எம்.சி. தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.
    • தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும்.

    புதுடெல்லி:

    தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்திக்க நேற்றிரவு டெல்லி சென்றிருந்தார்.

    இன்று காலையில் டெல்லியில் உள்ள வீட்டில் மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசினார். அவருடன் துறை செயலாளர் சந்தீப் சக்சேனாவும் உடன் சென்றிருந்தார். காவிரியில் தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை உடனடியாக திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை வைத்தார்.

    தமிழகத்திற்கு மொத்தம் 22.54 டி.எம்.சி. தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் காவிரி டெல்டா பகுதிகளில் பயிர் சாகுபடி பிரச்சினை மிக மோசமாகி விடும்.

    எனவே, கர்நாடக அரசு காவிரியில் 22.54 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படாததால் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 85.97 அடியாக குறைந்துவிட்டது என்றும் வலியுறுத்தினார்.

    ஆனால் கர்நாடகாவில் உள்ள கபினி, ஹாரங்கி, ஹேமாவதி, கே.ஆர்.எஸ். ஆகிய 4 அணைகளின் மொத்த கொள்ளளவான 114 டி.எம்.சி.யில் 32 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பதால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க இயலாது என்று கர்நாடக துணை முதல் மந்திரி சிவக்குமார் கூறி வருவதையும் மத்திய மந்திரியின் கவனத்துக்கு அவர் கொண்டு சென்றார்.

    எனவே மத்திய அரசு இதில் தலையிட்டு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    அதன் பிறகு செய்தியாளர்களிடம் துரைமுருகன் கூறுகையில், தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும். இதை மத்திய மந்திரியிடம் வலியுறுத்தி சொல்லி உள்ளேன். 22.54 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளேன் என்றார்.

    • சூரத் கோர்ட்டு, ராகுல்காந்திக்கு எல்லா வாய்ப்புகளும் அளித்துள்ளது.
    • சட்டம் தனது கடமையை செய்துள்ளது.

    புதுடெல்லி :

    மத்திய மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது, கோர்ட்டு எடுத்த நடவடிக்கை. சட்டப்படி, அவரது எம்.பி. பதவியை மக்களவை பறித்துள்ளது. இந்த நீதித்துறை சார்ந்த, சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்த்து காங்கிரஸ் தலைவர்கள் கூச்சல் போடுகிறார்கள். அவர்கள் சோனியாகாந்தி குடும்பத்தை நீதித்துறையை விட உயர்ந்ததாக கருதுகிறார்கள்.

    சூரத் கோர்ட்டு, ராகுல்காந்திக்கு எல்லா வாய்ப்புகளும் அளித்துள்ளது. மன்னிப்பு கேட்கக்கூட வாய்ப்பு அளித்தது. ஆனால், தனது குடும்பத்துக்கு எதிராக தீர்ப்பு அளிக்க கோர்ட்டுக்கு துணிச்சல் இருக்காது என்று கருதி, அவர் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார்.

    சட்டம் தனது கடமையை செய்துள்ளது. இதில் மத்திய அரசுக்கோ, பா.ஜனதாவுக்கோ தொடர்பில்லை. சோனியாகாந்தி குடும்பம், தன்னை உயர்தர வர்க்கம் என்றும், அரசியல் சட்டத்தை விட உயர்ந்தது என்றும் கருதுகிறது. ஒரு எம்.பி.யின் பதவி பறிப்பு பிரச்சினையில், மக்களவைக்கு விருப்ப உரிமை அதிகாரம் எதுவும் கிடையாது. ஜனநாயகம், அச்சுறுத்தலில் இருப்பதாக கூறுபவர்கள்தான், நீதித்துறை நடவடிக்கைக்கு எதிராக தெருமுனை போராட்டம் நடத்துவதன் மூலம், ஜனநாயகத்தை இழிவுபடுத்தி வருகிறார்கள்.

    நாட்டை இழிவுபடுத்துவதற்கான எந்த வாய்ப்பையும் ராகுல்காந்தி விட்டுவிடுவது இல்லை. ஜனநாயகத்தின் பல்வேறு தூண்களுக்கு சவால் விட்டு வருகிறார். கோர்ட்டு மன்னிப்பு கேட்க வாய்ப்பு அளித்தும் அதை பயன்படுத்தாமல் அவர் ஆணவமாக நடந்து கொண்டார். ஜனநாயக நடைமுறையை விட தன்னை உயர்வாக கருதுவதால், அவர்தான் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்.

    தேசபக்தரும், சுதந்திர போராட்ட வீரருமான வீர சாவர்க்கரை ராகுல்காந்தி இழிவுபடுத்தி வருகிறார். தான் சாவர்க்கர் அல்ல என்று ராகுல்காந்தி சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்.

    சாவர்க்கரை பற்றி அவர் உண்மையிலேயே தெரிந்து கொள்ள விரும்பினால், அந்தமான் ஜெயிலுக்கு சென்று, சாவர்க்கர் யார்? அவர் செய்த தியாகங்கள் என்ன? என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வர்த்தக தலைவர்களின் தலைமை பண்பை மேம்படுத்தும் இன்சைட் நிகழ்ச்சியை கோவை ஈஷா யோகா மையம் நடத்தியது.
    • இதில் சிறப்பு விருந்தினராக ஜல் சக்தி துறை அமைச்சர் பங்கேற்று ஜல் ஜீவன் திட்டம் குறித்த விஷயங்களை பகிர்ந்தார்.

    கோயம்புத்தூர்:

    வர்த்தக தலைவர்களின் தலைமை பண்பை மேம்படுத்துவதற்காக ஈஷா இன்சைட் என்ற 4 நாள் நிகழ்ச்சி கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஜல் ஜீவன் திட்டம் குறித்த பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    ஜல் ஜீவன் திட்டத்தின் கணக்கீட்டின்படி 2019-ம் ஆண்டு 16 சதவீதம் இந்தியர்களின் வீடுகளில் மட்டுமே குழாய் குடிநீர் வசதி இருந்தது. தற்போது அந்த அளவு 54 சதவீதமாக அதிகரித்துள்ளது. வரும் 2024-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் குடிநீர் வசதியை ஏற்படுத்த செயல்கள் செய்துவருகிறோம். இதற்காக 2019-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை இந்திய நீர் வளத் துறையில் 210 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    கிராமப்புறங்களில் குடிநீரின் தரத்தை உறுதி செய்வதற்காக கிராம வாரியாக தனி குழுக்களை உருவாக்கி உள்ளோம். இதில் கிராமப்புற பெண்களுக்கும் பயிற்சி அளித்துள்ளோம். அவர்கள் ஒரு கையடக்க கருவியின் மூலம் 12 காரணிகளைக் கொண்டு நீரின் தரத்தை ஆய்வுசெய்து ஆன்லைனில் பதிவேற்றுவார்கள். இதன்மூலம் நீரின் தரம் உறுதி செய்யப்படும் என தெரிவித்தார்.

    நவம்பர் 24 முதல் நவம்பர் 27 வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சத்குருவின் சிறப்புரைகள், சத்சங்கம் மற்றும் தியான நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அத்துடன் பல்வேறு முன்னணி வர்த்தக தலைவர்கள் பங்கேற்று வர்த்தகம் மற்றும் தலைமைப் பண்பு தொடர்பாக ஆலோசனைகள் வழங்கினர்.

    ஹிமாலயன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆல்டர்நேட்டிவ்ஸ் (HIAL) நிறுவனத்தின் இயக்குனர் சோனம் வாங்சுக், கல்வித் துறையில் அவரது கண்டுபிடிப்புகள் மற்றும் தலையீடுகளுக்காக அறியப்பட்டவர். அவர் அமீர் கானின் 3 இடியட்ஸ் பட கதாபாத்திரத்தின் உத்வேகமாக இருந்தார். 

    அப்போது அவர் பேசுகையில், என்னைப் பொறுத்தவரை தொழில்முனைவோர், மேலும் மேலும் பணம் மட்டுமே சம்பாதித்துக் கொண்டே இருப்பவர்கள் அல்ல. தொழிலதிபர்கள் சிக்கலைத் தீர்ப்பவர்கள். நீங்கள் சிக்கலைத் தீர்ப்பவர்களாக இல்லை என்றால், நீங்கள் தொழில்முனைவோரே அல்ல. இரண்டாவதாக, நீங்கள் பணம் சம்பாதிப்பதோடு சிக்கலைத் தீர்த்தாலுமே கூட, நீங்கள் ஒரு நல்ல தொழில்முனைவோர் அல்ல. மற்றவர்கள் உங்களுடன் சேர்ந்து முன்னேற நீங்கள் உதவ வேண்டும். அப்போதுதான் நீங்கள் உண்மையான தொழில்முனைவோர் என தெரிவித்தார்.

    ஏஸ் வெக்டர் (AceVector) குழுமத்தின் (Snapdeal, Unicommerce மற்றும் Stellaro) இணை நிறுவனர் குணால் பாஹ்ல் பேசுகையில், அடுத்த 20 ஆண்டுகளில் உலகம் முழுவதும் வாங்கப்படும் பெரும்பாலான மென்பொருள் தயாரிப்புகள் மேட் இன் இந்தியா ஆக இருக்கும். அது நம் அனைவருக்கும் பெருமையை தேடித்தரும். உலகில் எந்த நாடும் நம்மைப் போல டிஜிட்டல் மயமாக்கப்படவில்லை. யுபிஐ அல்லது என்டிசி ஆதார், அல்லது அக்கவுன்ட் அக்ரிகேட்டர் இந்தியா ஸ்டேக், இந்தியா ஹெல்த் ஸ்டேக் - இவை இந்தியாவிற்கு வெளியே உள்ள உலகெங்கிலும் உள்ள யாருமே கேள்விப்படாதவை. இது எங்களுக்கு ஒரு தொடக்கம். எதிர்காலத்தைப் பற்றி நாங்கள் புத்துணர்வோடும் உற்சாகமாகவும் உணர்கிறோம். என்னவொரு அற்புதமான தருணத்தில் நாம் இந்தியாவில் இருக்கிறோம் என மகிழ்ச்சியைப் பகிர்ந்தார்.

    பந்தன் வங்கியின் சிஐஓ மற்றும் எம்.டி சந்திரசேகர் கோஷ், புதிதாக ஒரு வங்கியை பூஜ்ஜியத்திலிருந்து உருவாக்குவதில் பெற்ற தனது அடிப்படை அறிவிலிருந்து, வழங்கிய நடைமுறை ஞானத்தால் பங்கேற்பாளர்களைக் கட்டிப்போட்டார்.

    ×