என் மலர்
நீங்கள் தேடியது "கோவில் யானை"
- கோவிலுக்கு வந்து பக்தர்களுக்கு யானை லட்சுமி தொடர்ச்சியாக ஆசி வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- திடீரென மயங்கி விழுந்த லட்சுமி, சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தது.
புதுவையில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலுக்கு கடந்த 1997-ம் ஆண்டு யானை ஒன்று தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது. அந்த யானைக்கு லட்சுமி என்று பெயர் சூட்டப்பட்டது.
லட்சுமி யானை நாள்தோறும் கோவிலுக்கு வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது. தொடர்ந்து பக்தர்களிடம் அமோக வரவேற்பை யானை லட்சுமி பெற்றுள்ளது. புத்துணர்ச்சி முகாமுக்கு செல்லும் நாட்கள் தவிர மற்ற நாட்களில் கோவிலுக்கு வந்து பக்தர்களுக்கு யானை லட்சுமி தொடர்ச்சியாக ஆசி வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் யானை லட்சுமி இன்று காலை வழக்கம் போல் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் நடைபயிற்சிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளது.
அப்போது திடீரென மயங்கி விழுந்த லட்சுமி, சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் 25 ஆண்டுகளாக பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த யானை லட்சுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்பட 3 யானைகளுக்கு வனத்துறை உரிமைச் சான்றிதழ் காலாவதியாகி விட்டது.
- தமிழ்நாடு வளர்ப்பு யானை மேலாண்மை மற்றும் பராமரிப்பு சட்டத்தின் கீழ் வளர்ப்பு யானையை பராமரிக்க 10 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை
தமிழ்நாடு முழுவதும் கோவில்கள் மற்றும் மடங்களில் சுமார் 24 வளர்ப்பு யானைகள் உள்ளன. அவைகள் பாகன்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்தில் 3 கோவில் யானைகளின் நிலை, உரிமை சான்றிதழ் ஆகிவை தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் மருதுபாண்டி என்பவர் மதுரை மாவட்ட வனத்துறையிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார். இதற்கு மதுரை மாவட்ட வனத்துறை பதில் அளித்து கடிதம் அனுப்பி உள்ளது. அதில் மதுரை மாவட்டத்தில் உள்ள கோவில் யானைகளுக்கான உரிமைச் சான்றிதழ் காலாவதியாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் பார்வதி (மீனாட்சி அம்மன் கோவில்), தெய்வானை (திருப்பரங்குன்றம் சுப்பிர மணிய சுவாமி கோவில்), சுந்தரவல்லி (கள்ளழகர் கோவில்) உள்பட 7 யானைகள் பராமரிக்கப்படுகிறது. இவற்றுக்கு தமிழ்நாடு மேலாண்மை மற்றும் பராமரிப்பு சட்டம்-2011-ன் படி வனத்துறை உரிமை சான்றிதழ் வழங்கி வருகிறது. இதில் யானையின் எடை, வயது, பெயர், உயரம், உடல்நிலை, புகைப்படம் உள்பட பல்வேறு விவரங்கள் இடம் பெற்று இருக்கும்.
தமிழ்நாடு முதன்மை தலைமை வனவிலங்கு காப்பாளர் மூலம் வழங்கப்படும் இந்த சான்றிதழ், இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான 3 கோவில் யானைகள் விஷயத்தில் காலாவதியாகி இருப்பது தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு வளர்ப்பு யானை மேலாண்மை மற்றும் பராமரிப்பு சட்டத்தின் கீழ் வளர்ப்பு யானையை பராமரிக்க 10 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அது கோவில் யானைகள் பராமரிப்பில் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
புதுச்சேரி யானை மணக்குள விநாயகர் கோவில் லட்சுமி யானை திடீரென மயங்கி விழுந்து இறந்தது. இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள கோவில் யானைகள், உரிய சான்றிதழின்றி உள்ளது வன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- உபயதாரர் மூலம் வழங்கப்பட்ட இந்த யானைக்கு கோவில் நிர்வாகம் தெய்வானை என பெயர் சூட்டி பராமரித்து வருகிறது.
- வழக்கத்திற்கு மாறாக அதன் உடல் எடை அதிகரித்திருந்தது தெரியவந்தது.
திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் கோவில் யானை அவ்வை மரணம் அடைந்ததையொட்டி கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அசாம் மாநிலத்தில் இருந்து 7 வயது பெண் யானை வாங்கப்பட்டது. உபயதாரர் மூலம் வழங்கப்பட்ட இந்த யானைக்கு கோவில் நிர்வாகம் தெய்வானை என பெயர் சூட்டி பராமரித்து வருகிறது.
யானை தெய்வானை தினமும் கோவில் பூஜைக்கு திருமஞ்சனம் செய்வதற்கு சரவணப் பொய்கையில் இருந்து புனித நீர் எடுத்து வந்து கோவிலில் சேர்ப்பது, திருவிழாக்களின்போது கொடி பட்டதை தலையில் சுமந்து திருப்பரங்குன்றம் நகரின் முக்கிய வீதிகளில் உலா வருவது, சுவாமி புறப்பாடின்போது சுவாமிக்கு முன்பு செல்வது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது.
இது தவிர கோவில் நிர்வாகம் மலைக்குப் பின்பகுதியில் இயற்கையான முறையில் யானை குளிப்பதற்காக குளியல் தொட்டி மற்றும் அதற்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.
இந்நிலையில் வழக்கமாக நடைபெறும் மருத்துவ பரிசோதனை கோவில் யானைக்கு நடைபெற்றது. அப்போது வழக்கத்திற்கு மாறாக அதன் உடல் எடை அதிகரித்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவக் குழுவினர் யானையின் உடல் எடையை குறைக்க பரிந்துரை செய்தனர்.
அதன் அடிப்படையில் இந்து அறநிலையத்துறை ஆணையர் அனுமதியுடன் வனத்துறையினர் ஒப்புதல் பெற்று கோவில் யானை தெய்வானை பொள்ளாச்சியை அடுத்த டாப்ஸ்லிப் பகுதியில் உள்ள யானைகள் புத்துணர்வு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து கோவில் அலுவலர்கள் கூறுகையில், யானை தெய்வானை உடல் எடை அதிகரித்த காரணத்திற்காகவும், அதற்கு மேலும் பயிற்சி அளிப்பதற்காகவும் 10 மாத காலம் பொள்ளாச்சியை அடுத்த டாப்ஸ்லிப் பகுதிக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது என தெரிவித்தனர்.
- ராமேசுவரம் கோவில் யானை ராமலட்சுமி நீராட புதிய தொட்டி கட்டப்பட்டுள்ளது.
- சேது மாதவ தீர்த்தத்தில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது.
ராமேசுவரம்
தமிழகம் முழுவதிலும் உள்ள அறநிலையத்துறை மற்றும் தனியார் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கோவில்களில் யானைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. அவை அந்தந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள், உற்சவங்கள் மற்றும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்க செய் யப்பட்டு வருகிறது. இந்த யானைகளுக்கு ஆண்டு–தோறும் புத்து–ணர்ச்சி முகாம்களும் நடத்தப்பட்டு பராமரிக்கப்ப–டுகிறது.
இதற்கிடையே கோவில் யானைகள் உற்சாகமாக குளித்து மகிழும் வகையில் கோவில் நிர்வாகம் மற்றும் தனியார் பங்களிப்புடன் நீச்சல் குளம் போன்ற அமைப்பில் தொட்டிகள் கட்டப்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம், திருவானைக்கா–வல், பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்க–ளில் யானைகளுக் கான குளியல் தொட்டி கட்டப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
அந்த வகையில் உலகப்பு–கழ்பெற்ற ராமேசுவரம் ராம–நாத சுவாமி கோவிலில் கோடிக்கணக்கான பக்தர்க–ளுக்கு ஆசிர்வாதம் வழங்கி வரும் ராமலட்சுமி யானை நீராடுவதற்கு நேற்று கோவிலில் புதிய நீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த தொட்டியானது கோவிலின் வடக்கு நந்தவ–னத்தில் ரூ.15 லட்சம் மதிப் பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
அதிநவீன வசதிகளுடன் யானை ராமலட்சுமி சுதந்தி–ரமாக குளிப்பதற்கு ஏற்பா–டுகள் செய்யப்பட்டுள்ளன. யானை நீராடுவதற்கு புனித தீர்த்தமான கோவில் வளா–கத்தில் அமைந்துள்ள சேது மாதவ தீர்த்தத்தில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த புதிய தொட்டியில் யானை ராமலட்சுமியை இறக்கி நீராட வைத்து கோவில் அதிகாரிகள், அலுவலர்கள் ஒத்திகை நடத்தினர். புதிய அனுபவம் கிடைத்த மகிழ்ச்சியில் யானை ராமலட்சுமி நேற்று ஆனந்தமாய் நீராடியது. அதன்பின்னர் நந்தவன பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- கோமதி யானையின் உடல் நலம் குறித்து நெல்லை வனக் கால்நடை மருத்துவத்துறையுடன் இணைந்து வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
- யானையின் உடல் வெப்பம், உயரம், எடை ஆகியவற்றை பரிசோதனை செய்தனர்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் கோமதி யானை உள்ளது. இந்த கோமதி யானையின் உடல் நலம் குறித்து நெல்லை வனக் கால்நடை மருத்துவத்துறையுடன் இணைந்து வனத்துறையினர் ஆய்வு செய்தனர். யானையின் உடல் வெப்பம், உயரம், எடை ஆகியவற்றை பரிசோதனை செய்தனர். பின்னர் மத்திய அரசின் கீழ் உள்ள வனவிலங்கு ஆய்வகத்திற்கு அனுப்புவதற்காக யானையின் ரத்தமாதிரி மற்றும் செல்களை எடுத்து பத்திரப்படுத்தினர். இதைத்தொடர்ந்து யானை நலமாக இருப்பதாக யானைப் பரிசோதனை செய்த வனக் கால்நடை மருத்துவர் மனோகரன் கூறினார்.
ஆய்வின் போது புளியங்குடி வனச்சரக வனவர் மகேந்திரன், உதவி இயக்குனர் திருநாவுக்கரசு, கால்நடை மருத்துவர் கருப்பையா, கோவில் துணை ஆணையர் ஜான்சி ராணி மற்றும் யானைப் பாகன்கள் உடனிருந்தனர்.
- ஆசிர் பெற்ற பிரதமர் யானை பாகனிடம் யானை குறித்து விவரங்களை கேட்டறிந்தார்.
- வாஞ்சையுடன் யானையை தடவி கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.
திருச்சி:
ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம் செய்ய வந்த பிரதமர் நரேந்திர மோடி, கோவில் யானை ஆண்டாளிடம் ஆசிர் பெற்றார். யானை நிறுத்தப்பட்டிருந்த 4 கால் மண்டபத்திற்கு வந்த பிரதமர் மோடி, ஆண்டாள் யானைக்கு பழங்கள் வழங்கினார். பின்னர் யானையிடம் ஆசிர் பெற்ற அவர், யானை பாகனிடம் யானை குறித்து விவரங்களை கேட்டறிந்தார். அப்போது யானைக்கு 44 வயதாவது குறித்தும், அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் பாகன் எடுத்து கூறினார். மேலும் ஆண்டாள் யானை ஸ்ரீரங்கம் நவராத்திரி உற்சவத்தின் போது மவுத் ஆர்கன் வாசிக்கும் என்ற தகவலை கூறினார்.
இதனை கேட்டு ஆச்சர்யமடைந்த பிரதமர் நரேந்திர மோடி வாசிக்க வைக்குமாறு கேட்டார். உடனே பாகன் யானை துதிக்கையில் மவுத் ஆர்கன் கொடுக்க, ஆண்டாள் வாசித்து காண்பித்தது. இதனை ரசித்த மோடி வாஞ்சையுடன் யானையை தடவி கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். இந்த ஆண்டாள் யானையானது, குட்டியாக காரமடை கோவிலில் இருக்கும் போது ரஜினிகாந்த நடித்த தம்பிக்கு எந்த ஊர் என்ற படத்தில் ரஜினிக்கு ஆசீர்வாதம் செய்யும் காட்சியில் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
- யானை பாகன் உதயா மற்றும் பழம் கொடுக்க வந்த பக்தர் ஒருவரை யானை மிதித்து தாக்கியது.
- இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
திருச்செந்தூரில் கோவில் யானை தெய்வானை பாகன் மற்றும் அவரது உறவினரை மிதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யானை பாகன் உதயா மற்றும் பழம் கொடுக்க வந்த பக்தர் ஒருவரை யானை மிதித்து தாக்கியது.
இதில், படுகாயமடைந்த யானை பாகன் மற்றும் பக்தர் ஆகியோரை திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இருவரின் நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனை முன்பு உறவினர்கள் கதறி அழுதனர்.
- யானை பாகன் உதயா மற்றும் பழம் கொடுக்க வந்த பக்தர் ஒருவரை யானை மிதித்து தாக்கியது.
- இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தாக்கி உயிரிழந்த பாகன் உதயகுமார், அவரது உறவினர் சிசுபாலன் ஆகிய இருவரது குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், "தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர். அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள தெய்வானை என்ற யானையின் பாகன் திரு. உதயகுமார் மற்றும் அவருடன் அவரது உறவினர் திரு.சிசுபாலன் ஆகியோர் 18-11-2024 அன்று யானையின் அருகில் இருந்தபோது யானை திடீரென திமிறி அருகில் இருந்த பாகன் திரு.உதயகுமார் மற்றும் திரு.சிசுபாலன் ஆகிய இருவரையும் தூக்கி வீசித் தாக்கியுள்ளது. இதில், திரு.சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார் என்றும். பாகன் திரு.உதயகுமார் சிகிச்சை பலனின்றி மருத்துவனையில் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த உதயகுமார் மற்றும் சிசுபாலன் ஆகிய இருவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா இரண்டு இலட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
- கோவில் நிர்வாகங்களுக்கு 39 அறிவுறுத்தல்களை இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
- உணவு அல்லது பணத்திற்காக பிச்சை எடுக்க யானையை வெளியே அழைத்துச் செல்லக்கூடாது.
கோவில் யானைகளை பாராமரிப்பது தொடர்பாக, கோவில் நிர்வாகங்களுக்கு 39 அறிவுறுத்தல்களை இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
யானைகளை உறுதியான மண் அல்லது புல் தரையில் நிறுத்தி வைக்கவும், காற்றோட்டத்துடன் கான்கிரீட் கொட்டகை அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், யானையின் எடை, வயதுக்கு ஏற்ப உணவுகளை உள்ளூர் கால்நடை மருத்துவரின் ஆலோசனையுடன் வழங்க வேண்டும்.
யானையின் கால், நகக்கண், தந்தங்களில் தோக்கா மல்லி எண்ணெய் விட்டு பராமரிக்க வேண்டும்.
யானைக்கு வெப்பம் அதிகரிக்கும்போது, சங்கிலியால் கட்டி தேவையான உணவு, தண்ணீர் அருகில் வைக்க வேண்டும். மது அருந்தியவர்களை அருகில் செல்ல அனுமதிக்கக் கூடாது.
கோயில் யானைகள் அருகே பக்தர்களை அனுமதிக்கக் கூடாது. அருகே நின்று, செல்பி, புகைப்படம் எடுக்கவும் விடக் கூடாது.
உணவு அல்லது பணத்திற்காக பிச்சை எடுக்க யானையை வெளியே அழைத்துச் செல்லக்கூடாது.
வாரத்திற்கு நான்கு முறையும், கோவை காலத்தில் தினமும் யானையை கட்டாயம் குளிப்பாட்ட வேண்டும்.
யானைக்கு தினமும் 10 கி.மீ தூரத்திற்கு நடைபயிற்சி அளிக்க வேண்டும் என அனைத்து கோயில் நிர்வாகங்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு