search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மசூதி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத நம்பிக்கையைப் புண்படுத்தியதாக சட்டப்பிரிவு 295A-வின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • இருவர் மீது நடவடிக்கை எடுப்பது சட்டத்தை தவறாக பயன்படுத்தியதாகும்

    இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமான மசூதிக்குள் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷம் எழுப்புவது மத நம்பிக்கையைப் புண்படுத்தாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி உள்ளூர் மசூதி ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பி குழப்பத்தை ஏற்படுத்தியதாக இருவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

    அதன்படி அத்துமீறி நுழைந்தது[ சட்டப்பிரிவு 447], பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல்[ சட்டப்பிரிவு 505], மத நம்பிக்கையைப் புண்படுத்தியது [சட்டப்பிரிவு 295A] , மிரட்டல் விடுத்தது உள்ளிட்டவற்றின்கீழ் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தற்போது கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி எம்.நாகபிரசன்னா முன் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது பேசிய நீதிபதி, ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிடுவது என்ன மத நம்பிக்கையை புண்படுத்தும் என்பதை புரிந்துகொள்ளமுடியவில்லை.

    இந்த புகாரை அளித்த மனுதாரரே, தாங்கள் வசிக்கும் பகுதியில் இந்து- முஸ்லிம்கள் நல்லிணக்கத்துடன் வாழ்வதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். அப்படி இருக்கும்போது எல்லா செயல்களும் மத நம்பிக்கையைப் புண்படுத்தும் சட்டப்பிரிவு 295A இன் கீழ் வராது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதற்கு மேலும் இந்த விவகாரத்தில் அவர்கள் இருவர் மீது நடவடிக்கை எடுப்பது சட்டத்தை தவறாக பயன்படுத்தியதாகும் என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

    • லெபனான் மீது குறிவைத்துள்ள இஸ்ரேல், காசா மீதான தாக்குதலையும் தீவிரப்படுத்தி உள்ளது.
    • இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சமடைந்திருந்த மசூதி மற்றும் பள்ளியை குறிவைத்து இன்று அதிகாலை குண்டுகளை வீசியது

    சர்வதேச நாடுகளின் அழுத்தத்தையும் மீறி பாலஸ்தீனம் லெபனான் மீது இஸ்ரேல் சரமாரியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீனத்தில் இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

    இதில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். இந்நிலையில் தற்போது லெபனான் மீது குறிவைத்து இஸ்ரேல் தாக்கி வந்தாலும், காசா மீதான தாக்குதலையும் தீவிரப்படுத்தி உள்ளது.

    மத்திய காசாவின் டெய்ர் அல்-பலாஹ் நகரில் அல்-பலாஹ் நகரில் அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனைக்கு அருகே இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சமடைந்திருந்த மசூதி மற்றும் பள்ளியை குறிவைத்து இன்று அதிகாலை இஸ்ரேல் குண்டுகளை வீசியது.

    இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் 93 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதற்கிடையே வடக்கு காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்தப்பட்டுள்ள இஸ்ரேல் அங்குள்ள மக்களை வெளியேறும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • பவன் கல்யாண் இன்று முதல் வெங்கடேசப் பெருமானுக்கு 11 நாள் பரிகார தீட்சை விரதம் இருப்பதாக அறிவித்துள்ளார்
    • ஏன்! இந்துக்களுக்கு உணர்வுகள் இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் விநியோகிக்கப்படும் உலகப் புகழ் பெற்ற பிரசாதமான லட்டு மாட்டிறைச்சி கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பு கலந்த நெய்யினால் தயாரிக்கப்படுகிறது என்ற சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த சர்ச்சை அரசியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் இன்று முதல் வெங்கடேசப் பெருமானுக்கு 11 நாள் பரிகார தீட்சை விரதம் இருப்பதாக அறிவித்துள்ளார். விரத முடிவில் முவில் அக்டோபர் 1,2-ந் தேதிகளில் திருப்பதி சென்று ஏழுமலையானை நேரில் தரிசனம் செய்து பாவமன்னிப்புக் கோரி, பிறகு இறைவனிடம் பரிகாரத் தீட்சை நிறைவு செய்வேன் என்று தெரிவித்திருந்தார்.

    மேலும் நாடு முழுவதும் உள்ள இந்து கோவில்களில் இதுபோன்ற அனாச்சாரங்கள் நடபத்தை தடுக்க தேசிய அளவில் சனாதன தர்ம ரக்ஷனா [பாதுகாப்பு] சங்கம் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் பிற மதங்களை ஒப்பிட்டு இந்த விவகாரத்தில் பவன் கல்யாண் மற்றொரு கருத்தை தற்போது தெரிவித்துள்ளார்.

    அதாவது, திருப்பதி கோவிலில் நடந்ததுபோல தேவாலயத்திலோ, மசூதியிலோ நடந்திருந்தால் இந்நேரம் நாட்டில் குழப்பம் ஏற்பட்டிருக்கும். அந்த விஷயம் உலகம் முழுவதும் பேசப்பட்டு சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வந்திருக்கும். ஆனால் கோடிக்கணக்கான இந்துக்களின் மத நம்பிக்கை புண்பட்டுள்ள வேளையில் நாம் மதச்சார்பற்றவர்கள் எனக் கூறி இதை பிரச்சனையாக வேண்டாம் என்று கூறுகின்றனர். ஏன்! இந்துக்களுக்கு உணர்வுகள் இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    • மெஹபூப் -இ- சுப்ஹானி மசூதியின் பகுதி சாலையில் 90 அடி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுக் கட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இடிக்க வந்தனர்.
    • நூற்றுக்கணக்கான மக்கள் தாராவி காவல் நிலையத்தின் முன் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அமைந்துள்ள ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய குடிசை குடியிருப்பு பகுதியாக தாராவி உள்ளது. இங்கு தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து புலம்பெயர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இம்மக்கள் வேலை நிறுத்தம் செய்தால் மும்பை நகரமே முடங்கும் அளவுக்கு நகரம் முழுவதிலும் பரவி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறனர்.

    சமீபத்தில் தாராவியை மறுசீரமைப்பு செய்யும் டெண்டரை இந்தியாவின் பெரும் பணக்காரரான அதானி கைப்பற்றியுள்ளதும் அரசியல் ரீதியாக புகைச்சலை ஏற்படுத்தி உள்ள நிலையில் தாராவியில் உள்ள மசூதி கட்டடத்தின் பகுதி சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளது என கூறி மாநகராட்சி அதிகாரிகள் இடிக்க வந்துள்ளனர்.

     

    தாராவியில் உள்ள மெஹபூப் -இ- சுப்ஹானி மசூதியின் பகுதி சாலையில் 90 அடி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுக் கட்டப்பட்டுள்ளதாக அதை இடிக்க G-North பகுதியை சேர்ந்த மாநகராட்சி அதிகாரிகள் இன்று காலை 9.00 மணி அளவில் வருவதை அறிந்த தாராவி மக்கள் அவர்கள் மசூதிக்கு வரும் வழிகளை அடைத்து அதிகாரிகள் மசூதியை நெருங்காதபடி தடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதனைத்தொடர்ந்து நூற்றுக்கணக்கான மக்கள் தாராவி காவல் நிலையத்தின் முன் திரண்டு போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களைச் சமாதானப்படுத்த காவல்துறை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

    • பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் நாராயண் ரானேவின் மகனும் மகாராஷ்டிர மாநிலம் கன்காவிலி தொகுதி பாஜக எம்.எல்.ஏவுமான நிதேஷ் ரானே பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார்
    • கடந்த காலங்களிலும் இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகம் குறித்து இழிவாக பேசியதற்காக நிதேஷ் மீது வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இஸ்லாமியர்களை மசூதிக்குள் புகுந்து வேட்டையாடுவோம் என்று மகாராட்டிர பாஜக எம்.எல்.ஏ நிதேஷ் ரானாபொதுக்கூட்டத்தில் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்து மத குரு மஹாந்த் ராம்கிரி மஹராஜ் என்பவர் கடந்த மாதம் இஸ்லாம் குறித்தும் நபிகள் நாயகம் குறித்தும் இழிவாகப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.

    இந்நிலையில் ராம்கிரி மஹராஜூக்கு ஆதரவாக பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் நாராயண் ரானேவின் மகனும் மகாராஷ்டிர மாநிலம் கன்காவிலி[Kankavli] தொகுதி பாஜக எம்.எல்.ஏவுமான நிதேஷ் ரானே பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். 'மதகுரு மஹாந்த் ராம்கிரி மஹராஜூக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உங்களின் மசூதிகளுக்குள் புகுந்து உங்களை ஒவ்வொருவராக வேட்டையாடுவோம் [chun chun ke marenge]. இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்' என்று நிதேஷ் ரானே தெரிவித்தார். அவரின் பேச்சை கேட்டு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைது தட்டி ஆரவாரம் செய்தனர்.

    நிதேஷின் கருத்துக்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. நிதேஷ் பிரயோகித்த வார்த்தைகளுக்கு பாஜகவும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. பொதுவாழ்க்கையில், குறிப்பாக அரசியல் வாதிகள் இதுபோன்ற வார்த்தைகளைப் பிரயோகிக்கக் கூடாது என்று பாஜக செய்தி தொடர்பாளர் துஷின் சின்ஹா கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் நிதேஷ் மீது இரண்டு எப்.ஐ ஆர் கள் பதியப்பட்டுள்ளது. கடந்த காலங்களிலும் இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகம் குறித்து இழிவாக பேசியதற்காக நிதேஷ் மீது வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • முஸ்லிம்களாகிய நாங்கள் எப்போதும் கன்வார் யாத்திரைக்கு வரும் சிவபக்தர்களை வரவேற்கிறோம்.
    • இதற்கு முன்பு இதுமாதிரி மசூதிகள் மறைக்கப்பட்டதில்லை

    புனித மாதமான சவான் (ஷ்ரவான்) மாதம் வரும் திங்கட்கிழமை தொடங்குகிறது. இதனையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் (Kanwariyas) பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லி மாநிலம் வழியாக ஹரித்வார் செல்வார்கள்.

    அவர்கள் கங்கையில் புனித நீர் எடுத்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வார்கள். இதனை கன்வார் யாத்திரை என அழைப்பார்கள். இந்த யாத்திரை ஆகஸ்ட் 2-ந்தேதி முடிவுடையும்.

    இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் நகரில் கன்வார் யாத்திரை செல்லும் வழியில் உள்ள மசூதி மற்றும் மஸார் வெள்ளைத்துணி கொண்டு மறைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அந்த வெள்ளைத்துணி அகற்றப்பட்டது.

    மசூதி வெள்ளைத்துணி வைத்து மறைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்தது.

    இந்த விவகாரம் தொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் நயீம் குரேஷி, "முஸ்லிம்களாகிய நாங்கள் எப்போதும் கன்வார் யாத்திரைக்கு வரும் சிவபக்தர்களை வரவேற்கிறோம். அவர்களுக்கு வரும் வழியில் உணவு, தண்ணீர் வழங்கி வருகிறோம். ஹரித்வாரில் உள்ள இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்திற்கு இதுதான் உதாரணம். இதற்கு முன்பு இதுமாதிரி மசூதிகள் மறைக்கப்பட்டதில்லை" என்று தெரிவித்தார்.

    • இந்த மசூதி மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் அமைந்துள்ளது.
    • டிசம்பர் 6, 1992ல் நடந்த பாபர் மசூதி இடிப்பு போன்ற சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.

    ஒரு கும்பல் மசூதியை இடிக்க முயற்சிப்பதைக் காட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

    இந்த மசூதி மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் அமைந்துள்ளது. கஜாபூர் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மசூதி சேதப்படுத்தப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.

    இந்நிலையில், மசூதியை ஒரு கும்பல் இசைக்கும் அந்த வீடியோவை ஐதராபாத் எம்.பி ஒவைசி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "மகாராஷ்டிரா மாநில அரசு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். டிசம்பர் 6, 1992ல் நடந்த பாபர் மசூதி இடிப்பு போன்ற சம்பவம் மீண்டும் நடந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    ஒவைசி பகிர்ந்த வீடியோவில், "மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் ஒரு கும்பல் மசூதியின் மேல் ஏறி, காவிக்கொடியை நட்டு, மசூதியை இடிக்க முயன்றது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • போஜ்சாலா வளாகத்தில் போஜிஸாலா கோவிலும் அதன் அருகில் கமல் மவுலா மசூதியும் அருகருகில் உள்ளது.
    • கடந்த 3 மாதங்களாக நடந்து வந்த ஆராய்ச்சியின் முடிவுகளை ASI உயர்நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பித்தது.

    மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள போஜ்சாலா வளாகத்தில் உள்ள வாக்தேவி சரஸ்வதி கோவில் மற்றும் கமல் மவுலா மசூதியும் ஒரே இடத்தில உள்ளது. மசூதி இருக்கும் இடத்தில் கோவில் கட்டடமே இருந்ததாக சிலர் சர்ச்சையை கிளப்பிய நிலையில் போஜ்சாலா வளாகத்தை ஆய்வு செய்ய கடந்த மார்ச் மாதம் அம்மாநில உயர்நநீதிமன்றம் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்துக்கு [ASI] உத்தரவிட்டது.

    அதன்படி கடந்த 3 மாதங்களாக நடந்து வந்த ஆராய்ச்சியின் முடிவுகளை ASI உயர்நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், 'போஜ்சாலாவின் உள்ள கமல் மவுலா மசூதிக் கட்டடமானது ஏற்கனவே அங்கிருந்த கோவில் கட்டடத்தின் எச்சங்களிலின் மீது கட்டப்பட்டுள்ளது.

    மசூதியின் தரைப்பகுதி ஏற்கனவே இருந்த கல்வெட்டுகளின் மீது அமைக்கப்பட்டுள்ளது. சிதிலமடைந்த கோவிலின் தூண்கள் மசூதி கட்டடத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.  அந்த தூண்களில் இந்து கடவுளர்களின் சிதைந்த சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.

    அதுபோன்ற மொத்தம் 94 சிற்பங்கள் அங்கு தென்படுகிறது என்று தனது அறிக்கையில் ASI தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை வரும் ஜூலை 22 ஆம் தேதி உயர்நீதிமன்றம் விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பழைய மசூதி கட்டடத்தில் நேற்று மதியம் திடீரென விரிசல் ஏற்படத் தொடங்கியது.
    • சீட்டுக்கட்டுபோல் சரிந்து தரைமட்டமாகும் காட்சிகள் கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.

    உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்களால் பக்ரீத் பெருநாள் நேற்று [ஜூன் 17] திங்கட்கிழமை கோலாகலாமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவிலும் பக்ரீத் கொண்டாட்டங்கள் களைகட்டிய நிலையில் டெல்லியில் ஸ்திரத்தன்மையை இழந்து மசூதியின் பெரும்பகுதி இடிந்து விழுந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    பழைய டெல்லியில் சூடிவாலா பகுதியில் நெருக்கமான கட்டடங்கள் நிறைந்த தெருவொன்றில் இருந்த சங்கமர்மர் என்ற பழைய மசூதி கட்டடத்தில் நேற்று மதியம் திடீரென விரிசல் ஏற்படத் தொடங்கியது. இதனால் சுதாரித்துகொண்டு அங்கிருத்தவர்கள் உடனே வெளியேறியனர். அதனைத்தொடர்ந்து மசூதியின் பெரும் பகுதி சீட்டுக்கட்டுபோல் சரிந்து தரைமட்டமாகும் காட்சிகள் கொண்ட வீடியோ வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    சரியான நேரத்தில் மசூதியிலுந்தும் அருகில் இருந்த 3 கட்டிடங்களில் இருந்தும் அனைவரும் வெளியேறியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அந்த தெருவில் உள்ள சாலை சற்று கீழிறங்கியதால் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

    • இளம்பெண் அரை நிர்வாணமாகவும், உடலில் காயங்களுடனும் சடலமாக மீட்பு.
    • சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

    ஆக்ராவின் தாஜ்மகால் அருகே இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தாஜ்மகால் அருகே உள்ள மசூதிக்குள் முகம் நசுக்கப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

    இளம்பெண் அரை நிர்வாணமாகவும், உடலில் காயங்களுடனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

    சடலத்தை மீட்டு பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார் இது கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

    • சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளின் உதவியுடன் பாஜக தங்களை குறிவைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன
    • டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

    "சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, தேர்தல் பத்திரம், இந்து - முஸ்லீம், கோயில் - மசூதி ஆகியவை இல்லையென்றால் பாஜக 100 இடங்களை கூட தாண்டாது" என்று ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

    சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற விசாரணை அமைப்புகளின் உதவியுடன் பாஜக தங்களை குறிவைப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றன.

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • யாருடைய உணர்வுகளையும் நான் புண்படுத்த வில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
    • இதுபோன்ற வீடியோவினால் பாதிக்கப்பட்டுள்ளேன், நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.

    1984-ம் ஆண்டு முதல், ஹைதராபாத் தொகுதி ஏஐஎம்ஐஎம் வசம் உள்ளது. முதலில் சுல்தான் சலாவுதீன் ஓவைசி பின்னர் 2004 முதல் அவரது மகன் அசாதுதீன் ஒவைசி என 40 வருடங்களாக ஓவைசிகளின் குடும்ப கோட்டையாக ஹைதராபாத் உள்ளது.

    நான்கு முறை எம்.பி-யாக இருந்த அசாதுதீன் ஒவைசி, 2019-ல் பாஜகவின் பகவந்த் ராவை 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த முறை அவருக்குப் போட்டியாக தொகுதியில் செல்வாக்கான மாதவி லதா நிறுத்தப்பட்டுள்ளார்.




    இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங்கின் ராம நவமி ஷோபா யாத்திரை நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது. தடையை மீறி

    பழைய ஹைதராபாத்தில் உள்ள சித்தியம்பர் பஜார் சந்திப்பு அருகே நடைபெற்ற ராமநவமி ஊர்வலத்தில் பாஜக வேட்பாளர் மாதவி லதா பங்கேற்று, திறந்த வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மாதவி லதா, அங்குள்ள மசூதியை நோக்கி வில்-அம்பு ஏவுவது போன்ற செய்கை செய்தார். இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.பாஜக வேட்பாளரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் வலுத்தன. மாதவி லதா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.




    இந்நிலையில் பாஜக வேட்பாளர் மாதவி லதா மாதவி லதா கூறியதாவது :-

    'எனது வீடியோ சமூக ஊடகங்களில் பரவுவது எனது கவனத்திற்கு வந்தது. இது முழுமையடையாத வீடியோ மற்றும் யாருடைய உணர்வுகளையும் நான் புண்படுத்த வில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதுபோன்ற வீடியோவினால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன், நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.

    நேற்று, ராம நவமியின் போது, நான் வானத்தை நோக்கி ஒரு (கற்பனை) அம்பு எய்ததாக சைகை செய்து கொண்டிருந்தேன். அந்த அம்பை ஒரு கட்டிடத்தை நோக்கி எய்தேன், அப்போது மசூதி அங்கிருந்தது தெரியாது" என கூறி உள்ளார்.

    ×