search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பா சிவந்தி ஆதித்தனார்"

    • சிறப்பு விருந்தினராக இந்திய நாடார்கள் பேரமைப்பு தலைவர் ராகம் சவுந்திர பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    சென்னை:

    சென்னையை அடுத்த புழலில் ஸ்ரீ நல்லழகு நாடார் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும் இணைந்து பள்ளி வளாகத்தில் பத்மஸ்ரீ டாக்டர்.பா. சிவந்தி ஆதித்தனாரின் 88 - வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    சென்னை வாழ் நாடார்கள் சங்க துணை தலைவர் கரு.சி. சின்னத்துரை நாடார் தலைமையில் டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக பாலிடெக்னிக் கல்லூரியின் செயலரும் பள்ளியின் நிர்வாக அதிகாரியுமான எஸ். கோவிந்தசாமி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக இந்திய நாடார்கள் பேரமைப்பு தலைவர் ராகம் சவுந்திர பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    விழாவில் சென்னை வாழ் நாடார்கள் சங்கத்தின் செயலாளர்கள் செல்லத்துரை, எல். சி. மனோகரன், பாலிடெக்னிக் கமிட்டி உறுப்பினர்கள் எஸ். எஸ். பாண்டியன், நாகராஜன், செல்வகுமார், அட்மிஷன் கமிட்டி உறுப்பினர் சிவாஜி, புழல் சங்கம், செங்குன்றம் வட்டார நாடார் ஐக்கிய சங்கம், செங்குன்றம் வட்டார நாடார் இளைஞர் அணி, காந்தி நகர் நாடார் சங்கம், செங்குன்றம் சுற்று வட்டார நாடார்கள் முன்னேற்ற சங்கம், சூளைமேடு நாடார் சங்கம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், கல்லூரி மற்றும் பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டி, கவிதை போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோருடன் மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
    • உங்கள் பள்ளி வெள்ளி விழா நடைபெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே வருகிறேன்.

    சென்னை:

    சென்னை மணலியில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 40 பேர் இன்று ஆர்.எஸ்.பி. மற்றும் பேண்டு வாத்தியக் குழு சீருடையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்தினார்கள்.

    அவர்களுடன் பள்ளி தலைமை ஆசிரியை ஜெக ஜோதி, உதவி தலைமை ஆசிரியை சித்ரா ஜெயசீலி, ஆசிரியைகள் ஷீஜா, சுஜாதா, கல்விக்குழு உறுப்பினர் காளியப்பன், மணலி எம்.பாலா, செல்வராஜ சோழன் ஆகியோரும், மாணவிகளுடன் வந்து மரியாதை செலுத்தினார்கள்.

    பின்னர் 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், 'தினத்தந்தி' குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோருக்கு மாணவிகள் இனிப்பு வழங்கினார்கள். பின்னர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோருடன் மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    அப்போது 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தனுடன் ஆசிரியைகளும் மாணவிகளும் கலந்துரையாடினார்கள். அப்போது 'அய்யா பா.சிவந்தி ஆதித்தனார் தொடங்கி வைத்த மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வெள்ளி விழா கொண்டாட இருக்கிறது.

    இந்த நேரத்தில் பள்ளிக்கு நீங்கள் வருகை தந்தால் பெருமையாக இருக்கும். 1999-ம் ஆண்டு பள்ளியை அய்யா பா.சிவந்தி ஆதித்தனார் திறந்து வைத்த போது இந்த பள்ளி மென்மேலும் வளர்ச்சிப் பெற்று கல்லூரியாக மாற வேண்டும் என்று விரும்பினார். அதற்கான பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். நீங்களும் மனது வைத்தால் அது விரைவில் நிறைவேறும்' என்று தெரிவித்தனர்.

    இதற்கு பதில் அளித்த சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், "உங்கள் பள்ளி வெள்ளி விழா நடைபெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே வருகிறேன். அப்போது பள்ளி மைதானம் மற்றும் விளையாட்டுகளுக்கு தேவையான உதவிகளை செய்து தருகிறேன்" என்று உறுதி அளித்தார்.

    • நெல்லையில் உள்ள மாலைமலர் அலுவலகத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஆன்மீக துறையிலும் சிறந்து விளங்கினார்.

    நெல்லை:

    பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

    இதை முன்னிட்டு நெல்லையில் உள்ள மாலைமலர் அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

    வழக்கமாக அவரது பிறந்த நாளுக்கு சென்னையில் அவர் வாழ்ந்த வீட்டில் தான் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவேன். இன்று நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக நெல்லை வந்துள்ளேன்.

    எனவே இங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி உள்ளேன்.

    விளையாட்டு துறையில் இளைஞர்களை ஊக்கப் படுத்துவதிலும், ஊடகத் துறையில் இளைஞர்களை ஊக்கப்படுத்துவதிலும் தன்னிகரற்று விளங்கிய பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஆன்மீக துறையிலும் சிறந்து விளங்கினார்.

    ஆசிய அளவிலான விளையாட்டு போட்டியில் இந்தியா 2 வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளது. இத்தகைய சாதனைகளுக்கு அவர் விளையாட்டு துறையில் முன்னுதாரணமாக விளங்கியதே காரணமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது பா.ஜனதா நெல்லை மாவட்ட தலைவர் தயாசங்கர், மாவட்ட செயலாளர் நாகராஜன், மாவட்ட பொது செயலாளர் முத்துபலவேசம் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ஆதித்தனார் கல்வி நிறுவனம் சார்பில் மணி மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘இ நூலகத்தை’ அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
    • நாம் இந்தியர் கட்சி சார்பாக மாநில பொருளாளர் பேரூரணி ஜெயகணேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    திருச்செந்தூர்:

    பத்திரிகை, கல்வி, ஆன்மீகம், விளையாட்டு, பொதுசேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வியத்தகு சாதனைகள் படைத்து, முத்திரை பதித்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு பெருமை சேர்க்கும் விதமாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், வீரபாண்டியன்பட்டினத்தில் தமிழக அரசு சார்பில் கடந்த 2020-ம் ஆண்டு ரூ.1 கோடியே 67 லட்சம் மதிப்பில் மணி மண்டபம் திறக்கப்பட்டது.

    மேலும் அவரது பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 24-ந் தேதி ஆண்டு தோறும் அரசு விழாவாக கொண்டா டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் இன்று அவரது பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.

    அரசு சார்பில் மணிமண்டபத்தில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், சண்முகையா எம்.எல்.ஏ., தி.மு.க. மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணைத்தலைவர் செங்குழி ரமேஷ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து ஆதித்தனார் கல்வி நிறுவனம் சார்பில் மணி மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 'இ நூலகத்தை' அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

    இதில் ஆதித்தனார் கல்வி நிறுவனங்களின் மேலாளர் வெங்கட் ராமராஜன், கல்லூரி நிறுவன செயலாளர் நாராயணராஜன், ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    காயாமொழி ஊர் பொது மக்கள் சார்பாக ஓய்வு பெற்ற கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் பால சுப்பிரமணிய ஆதித்தன் தலைமையில் வரதராஜ ஆதித்தன், ராஜன் ஆதித்தன், ராமகிருஷ்ணன் ஆதித்தன், குமரகுருபர ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தொழில் அதிபர் தண்டு பத்து ஜெயராமன் மகன்களான ரகுராம், சிவராமன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நாம் இந்தியர் கட்சி சார்பாக மாநில பொருளாளர் பேரூரணி ஜெயகணேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் மாநில தொழிற் சங்க தலைவர் சரவண குமார், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் உடையார், தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர், துணை செயலாளர் சின்னத்துரை, ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், வேல்சாமி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் சுரேஷ் பெருமாள், துணை செயலாளர் பால முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் அங்குள்ள நினைவு பீடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • பல்வேறு கட்சியினரும் பிறந்தநாளுக்கு மரியாதை செலுத்தினர்.

    சென்னை:

    பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். அவரது 88-வது பிறந்தநாள் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் நினைவு இல்லத்தில் அவரது உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் அங்குள்ள நினைவு பீடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 'தினத்தந்தி' குழும இயக்குனர் பா. சிவந்தி ஆதித்தன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மாலதி சிவந்தி ஆதித்தன், அனிதா குமரன் ஆகியோரும் மரியாதை செலுத்தினார்கள்.

    அதைத் தொடர்ந்து தினத்தந்தி, டி.டி. நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணி முத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., கோகுலம் கதிர், பாரோஸ் ஓட்டல் ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் மரியாதை செலுத்தினார்கள்.

    மேலும் மரியாதை செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-

    முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன், தொழில் அதிபர்கள் வி.ஜி.சந்தோசம், தண்டுபத்து ஜெயராமன், நடிகர் எஸ்.வி.சேகர், தி.மு.க. மகளிர் அணி ஆலோசனை குழு சிம்லா முத்துசோழன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் தூத்துக்குடி ஜோயல், மாநில வர்த்தகர் அணி தலைவர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், நிர்வாகிகள் சீனிவாசன், மதியழகன், கனிமொழி, மீனா, கருணாநிதி, நந்தகுமார், சரவணன், பாஸ்கர், சக்திவேல், விஜி, ஆர்.எஸ்.மனோகரன், கோவிந்தன், விச்சு சிங், மதுரை, கணேஷ், குமார், ஜெகதீஷ், செந்தில், விஸ்வநாதன், கோபிநாத், தளபதி பேரவை தலைவர் அருள்காந்த், நிர்வாகிகள் தண்டபாணி, அறிவுமணி, தாமோதரன், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, விஜயபாஸ்கர் மற்றும் இ.சி.சேகர், 170-வது வார்டு நிர்வாகி கோட்டூர் கே.குரு. காங்கிரஸ் நிர்வாகி ஜெயம் கக்கன்.

    பாரதிய ஜனதா மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ், மாநில சிறுபான்மையினர் அணி துணைத் தலைவர் யமஹா கே.சுரேஷ், புயல் ராஜாமணி.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. பாலாஜி, மாவட்ட செயலாளர்கள் சாரநாத், வேலுமணி, அப்புனு, சேத்துப்பட்டு இளங்கோ, முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை, வெங்கடேசன், பகலவன், பார்த்திபன்.

    தே.மு.தி.க. துணை செயலாளர் பார்த்தசாரதி, பிரபாகரன், மாறன், கருப்பையா, பிரபு, எம்.ஆர்.வெங்கடேசன், குமாரி, மேரி.

    த.மா.கா. செயற்குழு உறுப்பினர் டி.சிவபால்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், மாநில செயலாளர் எம்.வி.எம்.ரமேஷ்குமார், தலைமை நிலைய செயலாளர் ஆர்.சிவகுமார், மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், உயர்மட்டக்குழு உறுப்பினர் டி.உதயகுமார், மாநில மகளிர் அணித் தலைவி நளினி மகேந்திரன், செயலா ளர் ஆரோக்கிய ராணி, சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் எம்.வைகுண்ட ராஜா, பொருளாளர் விருகை கே.மணிராஜ், தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் எம்.சுப்பிரமணியன், பொருளாளர் டி.ராஜ் நாடார், தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் வி.எஸ்.கே.செந்தில்குமார்.

    தென் சென்னை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அன்பு, காந்திமதி, மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி.பி. ஐயர், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் புரசை சி.நாகராஜ், செயலாளர் எல்.சுந்தரலிங்கம், வடசென்னை மாவட்ட செயலாளர் ஜி.ராபர்ட், மகளிர் அணி தலைவி சுமதி, வடசென்னை மேற்கு மாவட்டத் தலைவர் என்.வேலப்பன், செயலாளர் நீலகண்ணன், காஞ்சிபுரம் மாவட்ட பொருளாளர் ஏ.முருகேச பாண்டி, தி.நகர் தொகுதி தலைவர் எம்.எம்.டி.ஏ. பாலமுருகன், குன்றத்தூர் ஒன்றியத் தலைவர் ஏ.சி.தர்மராஜ், அயனாவரம் வினோத் குமார், அய்யாவைகுண்டர்

    மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் நாடார், பொதுச் செயலாளர் சுரேஷ் மாறன், பொருளாளர் சிவா, கொள்கை பரப்பு செய லாளர் பேச்சிராஜன், அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கழக பொதுச்செயலாளர் முத்து ராமன், சிங்கப்பெருமாள், பொருளாளர் அருண் குமார், மாநில செயலாளர் தேவேந்திரன், துணைத் தலைவர் விஜயகுமார், துணைச் செயலாளர் சுரேஷ், இளைஞர் அணி செயலாளர் பலவேசம், சாந்தி முத்துராமன், விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், மாவட்ட தலைவர்கள் அப்புனு, பாலமுருகன், நிர்வாகிகள் பூக்கடை குமார், இ.சி.ஆர்.சரவணன், ஆர்.கே.நகர் மணி, நவீன், ஓ.எம்.ஆர்.லோகு, சந்திரகுமார், குரு, ஸ்டீபன், தினேஷ், வனிதா, முத்துலட்சுமி, மாலதி, கஜலட்சுமி, விக்கி, ஓ.எம்.ஆர்.ரவி, சகாயமேரி, ஜெய், சரத், எழில், கவியரசன், நரேஷ்குமார், முத்து, ஆனந்த், ராஜேஷ், தரணி, கருணாகரன், கதிர், பிரபா, பிரசாந்த், விஜி, அமர்நாத், கார்த்திக், பிரவீன், அப்பு, மணிபாரதி.

    • கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் 29-ந் தேதி மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் உள்ள சயான்- பாந்திரா இணைப்பு சாலையில் சதுக்கம் அமைக்கப்பட்டது.
    • மும்பையில் உள்ள ஒவ்வொரு தமிழர்களுக்கும் பா.சிவந்தி ஆதித்தனாரை தெரியும். மும்பை தமிழர்களுக்கு தமிழ்மொழி மூலம் செய்தியை கொண்டு சேர்த்தவர் அவர்.

    மும்பை:

    பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்த ''தினத்தந்தி'' அதிபர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார், விளையாட்டு, கல்வி, ஆன்மிகம் போன்ற துறைகளிலும் இமாலய சாதனை படைத்தவர். மறைந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் சாதனைகளை நினைவுகூரும் வகையில் அவரது பெயரில் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் 29-ந் தேதி மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் உள்ள சயான்- பாந்திரா இணைப்பு சாலையில் சதுக்கம் அமைக்கப்பட்டது.

    சதுக்கத்தை அப்போதைய மும்பை மாநகராட்சி மேயர் சினேகல் அம்பேகர் திறந்து வைத்தார். திறப்பு விழாவில் தற்போது தெலுங்கானா கவர்னராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தற்போது டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் சதுக்கம் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. புதுப்பிக்கப்பட்ட அந்த சதுக்கத்தை நேற்று முன்தினம் இரவு நடந்த விழாவில், மகாராஷ்டிர முன்னாள் மந்திரியும், தாராவி எம்.எல்.ஏ.வுமான வர்ஷா கெய்க்வாட் திறந்து வைத்தார்.

    இதைத்தொடர்ந்து தாராவியில் உள்ள காமராஜர் பள்ளியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் வளாகத்தில் நடந்த விழாவிற்கு திருநெல்வேலி தெட்சணமாற நாடார் சங்க தலைவர் காளிதாசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் சபேஷன் ஆதித்தன், செயலாளர் ஜெகதீஸ் சவுந்தர் முருகன், தெட்சணமாற நாடார் சங்க செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் செல்வராஜ், மும்பை கிளை சேர்மன் காசிலிங்கம், செயலாளர் மைக்கிள் ஜார்ஜ், பொருளாளர் பொன்ராஜ், பாக்கியநாதன், நடராஜன், ரெம்ஜிஸ், ஆனந்த் செல்வம், ஜான் கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் வர்ஷா கெய்க்வாட் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், "காமராஜர் பள்ளி கட்டுமான பணியின் போது பா.சிவந்தி ஆதித்தனாருடன் எனது தந்தை இணைந்து பணியாற்றினார். அப்போது, இங்கு வந்திருந்த பா.சிவந்தி ஆதித்தனாரின் கம்பீர தோற்றத்தை பார்த்து நான் வியந்திருக்கிறேன். கல்வி துறையில் அவர் ஈடுபாட்டுடன் செயல்பட்டார். நானும் கல்வி மந்திரியாக இருந்துள்ளேன். இனி வரும் காலங்களிலும் கல்வி வளர்ச்சிக்காக பாடுபடுவேன்.

    மும்பையில் உள்ள ஒவ்வொரு தமிழர்களுக்கும் பா.சிவந்தி ஆதித்தனாரை தெரியும். மும்பை தமிழர்களுக்கு தமிழ்மொழி மூலம் செய்தியை கொண்டு சேர்த்தவர் அவர். சங்கத்தில் யார் பொறுப்பில் இருந்தாலும் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பேன்" என்றார்.

    விழாவில் ஹரிராம் சேட் நன்றி கூறினார்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மும்பை கிளை தலைவர் ரசல், செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் ஜெபகுமார், துணை தலைவர் வடிவேல், இணைச்செயலாளர் மாரியப்பன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், கிளை மன்ற நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

    முன்னதாக பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மும்பை கிளை செயலாளர் ராஜ்குமார் கூறுகையில், "சமீபத்தில் நடந்த சாலை விரிவாக்க பணியால் சதுக்கம் பொலிவு இழந்தது. அதன் பிறகு சதுக்கத்தை சிறப்பாக புதுப்பித்து கொடுத்த எம்.எல்.ஏ. வர்ஷா கெய்க்வாட்டுக்கு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். முல்லுண்டில் உள்ள சாலைக்கு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பெயரை சூட்ட வேண்டும் என மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளோம்" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாவீரன் பூலித்தேவனின் படைத்தளபதியான ஒண்டிவீரனுக்கு மணிமண்டபம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ததும் முத்தமிழ் அறிஞர் கலைஞர்தான்.
    • மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆட்சிகாலத்தில் தினத்தந்தி அதிபர் பெருமதிப்பிற்குரிய பா.சிவந்தி ஆதித்தன் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசியில் இன்று நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    தென்காசிக்கு வந்ததுமே இந்த மண்ணைப்போலவே மனமும் குளிர்ந்து வருகிறது. எப்போதும் லேசான தூரல், சாரலாக பெய்து வருவதை பார்க்கும்போது சென்னையை போன்று வெப்பமான இடத்தில் இருந்து வந்த எனக்கு இதமாக இருக்கிறது.

    ஆண்டுதோறும் குற்றாலத்தில் சாரல் திருவிழா அரசு சார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் அமைந்துள்ளது தென்காசி மாவட்டம். குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகியவற்றை உள்ளடக்கியது தென்காசி மாவட்டம்.

    அதிகமான அருவிகளை கொண்ட மாவட்டம். அணைகள் உள்ள மாவட்டம். மொத்தத்தில் எழில் கொஞ்சும் மாவட்டம் தென்காசி மாவட்டம். வீரத்தின் விளைநிலமாக இருக்கக்கூடிய பூலித்தேவன் மண் இந்த மண். இந்திய விடுதலைக்காக குரல் கொடுத்து ஆங்கிலேயேர்களுக்கு வரி கொடுக்க மறுத்த பூலித்தேவன் மண் இந்த மண். நெற்கட்டான்செவலில் மாவீரன் பூலித்தேவனுக்கு மணிமண்டபம், சிலையுடன் அமைத்து கொடுத்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.

    மாவீரன் பூலித்தேவனின் படைத்தளபதியான ஒண்டிவீரனுக்கு மணிமண்டபம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ததும் முத்தமிழ் அறிஞர் கலைஞர்தான்.

    வடக்கே ஒரு காசி உள்ளதை போல தெற்கே ஒரு காசி உருவாக்க வேண்டும் என்பதை மன்னர் பராக்கிரம பாண்டியன் நினைத்து உருவாக்கியது தான் தென்காசி கோபுரம்.

    500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தென்காசி கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட 1960-ம் ஆண்டு நினைத்தபோது திருப்பணிக்குழு தலைவராக நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவராக பி.டி.ராஜன் நியமிக்கப்பட்டார்.

    பின்னர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆட்சிகாலத்தில் தினத்தந்தி அதிபர் பெருமதிப்பிற்குரிய பா.சிவந்தி ஆதித்தன் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. 25-06-1990-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த தினகரன் கே.பி. கந்தசாமி தலைமையில் ராஜகோபுரம் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது.

    இப்படி இயற்கைக்கும், ஆன்மீகத்திற்கும், வீரத்திற்கும், விளைச்சலுக்கும் புகழ்பெற்ற தென்காசி மாவட்டத்திற்கு வந்ததற்கு பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். பூரிப்பு அடைகிறேன். இது அரசு விழாவா? அல்லது கட்சியின் மாநில மாநாடா? என்ற அளவிற்கு மிக பிரமாண்டமாக இந்த விழா நடத்தப்படுகிறது.

    இந்த விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் தொகையும் மிக அதிக அளவில் ஆகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×