என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பொங்கல்"
- நொய்யல் ஆற்றங்கரையோரம் சமத்துவ பொங்கல் விழா நடத்தப்பட்டது.
- பல்லாங்குழி, தாயம், பரமபதம் போன்ற விளையாட்டுகளும் நடைபெற்றது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி நொய்யல் பண்பாட்டு அமைப்பு மற்றும் ஜீவநதி நொய்யல் சங்கம் சார்பாக திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வளர்மதி பாலம் அருகே உள்ள நொய்யல் ஆற்றங்கரையோரம் சமத்துவ பொங்கல் விழா நடத்தப்பட்டது. 3 நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முதல் 2 நாட்கள் மாலை நேரத்தில் பல்வேறு தமிழ் பாரம்பரிய கலாச்சார கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது .
அதனை தொடர்ந்து 3-வது நாளான இன்று திருப்பூர் நொய்யல் ஆற்றங்கரையோரம் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளை சேர்ந்த 1000 பெண்கள் கலந்து கொண்டு வைக்கக்கூடிய சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டனர். நொய்யல் நதிக்கரை யோரம் அடுப்புகளை பற்ற வைத்து பொங்கலிட்டனர். பால் பொங்கும் போது குலவையிட்டனர்.
இதைத்தொடர்ந்து மகிழ்ச்சியான ஞாயிறு கொண்டாட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் உள்ளூர் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பரதநாட்டியம், சிலம்பம், பானை உடைத்தல், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற நிகழ்ச்சிகளும், குழந்தைகளுக்கான பாரம்பரிய விளையாட்டுக்களான நொண்டி, பல்லாங்குழி, தாயம், பரமபதம் போன்ற விளையாட்டுகளும் நடைபெற்றது.
மேலும் கேரம், செஸ், கைகளில் மெகந்தி வரைதல் , சலங்கையாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாநகரை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் என பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனால் நொய்யல் பகுதியானது பொதுமக்களின் ஆட்டம் பாட்டத்தால் களை கட்டியது. சமத்துவ பொங்கல் தொடக்க விழாவில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், கலெக்டர் கிறிஸ்துராஜ், மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார், மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு உள்ளிட்டோர் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து கலந்து கொண்டு பொங்கல் விழாவினை தொடங்கி வைத்தனர்.
- பச்சரிசி எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் தரமானதாக இருந்ததாக பாராட்டுகள் குவிகின்றன.
- பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட பச்சரிசி, கரும்பு ஆகியவை நல்ல தரமானதாக இருந்ததாக அனைத்து தரப்பினரும் பாராட்டுகின்றனர்.
சென்னை:
பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு 2 கோடியே 19 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
எந்தவித விமர்சனமும் ஏற்படாத வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட வேண்டும் என மு.க.ஸ்டாலின் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்தார்.
இதைத்தொடர்ந்து 2 கோடியே 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்கு தேவையான தரமான பச்சரிசி தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் மூலம் விரைந்து கொள்முதல் செய்யப்பட்டு தமிழகத்தில் உள்ள 35 ஆயிரம் ரேஷன் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, 9-ந்தேதி தொடங்கி 13-ந்தேதி வரை 97 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
மொத்தம் உள்ள 2 கோடியே 19 லட்சத்து 33 ஆயிரத்து 342 குடும்ப அட்டைதாரர்களில் 2 கோடியே 12 லட்சத்து 82 ஆயிரத்து 791 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் 97 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே பரிசு தொகுப்பு வினியோகிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர், சேலம், விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் 99 சதவீதமும், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, தர்மபுரி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் 98 சதவீதமும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. மிக குறைந்தபட்சமாக தென்சென்னையில் 94 சதவீதம் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்னும் 6 லட்சத்து 3 ஆயிரத்து 332 பேருக்கு மட்டுமே பரிசு தொகுப்பு வழங்க வேண்டியது உள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் பொங்கல் பண்டிகையை கொண்டாட முன்கூட்டியே சொந்த ஊர் சென்ற காரணத்தினால்தான் பரிசு தொகுப்பை வழங்க முடியவில்லை. பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட பச்சரிசி, கரும்பு ஆகியவை நல்ல தரமானதாக இருந்ததாக அனைத்து தரப்பினரும் பாராட்டுகின்றனர்.
குறிப்பாக பச்சரிசி எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் தரமானதாக இருந்ததாக பாராட்டுகள் குவிகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
- நிர்வாகிகள் பொங்கலிட்டனர்.
- பொதுமக்களுக்கு மேயர் மகேஷ் கரும்புகளை வழங்கினார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.
அவைத்தலைவர் எப்.எம்.ராஜரத்தினம் தலைமை தாங்கினார். குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், கூட்டுறவு சங்கத்திற்கு விரைவில் தேர்தல் வர உள்ளது.கூட்டுறவு சங்க பதவிகளை கைப்பற்ற அனைவரும் உறுப்பினர் சேர்க்கை பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாவட்ட பொருளாளர் கேட்சன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தில்லை செல்வம், மாநில மீனவரணி துணை செயலாளர் நசரேத் பசலியான், துணை மேயர் மேரி பிரின்சி லதா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தாமரை பாரதி, சதாசிவம், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், ஒன்றிய செயலாளர் மதியழகன், செல்வன், பிராங்கிளின், பாபு, மாநகராட்சி மண்டல தலைவர்கள், அகஸ்டினா கோகிலவாணி, ஜவகர், இ.என்.சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதைத் தொடர்ந்து தி.மு.க. அலுவலகத்தில் நிர்வாகிகள் பொங்கலிட்டனர். பொதுமக்களுக்கு மேயர் மகேஷ் கரும்புகளை வழங்கினார்.
- மேயர் மகேஷ் சொந்த செலவில் வழங்கினார்
- தூய்மை பணியாளர்களை கவுரவப்படுத்தும் விதமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநக ராட்சி தூய்மை பணியா ளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். மாநகர் நல அதிகாரி ராம்குமார் முன்னி லை வகித்தார். ஆணையர் ஆனந்த் மோகன் சிறப்புரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மேயர் மகேஷ் தனது சொந்த செலவில் 1,286 தூய்மை பணியாளர்களுக்கு கரும்பு, சில்வர் பாத்திரம், கரண்டி, ஆண்களுக்கு வேட்டி மற்றும் சட்டை, பெண்களுக்கு சேலை ஆகியவற்றை வழ ங்கினார்.
முன்னதாக மேயர் மகேஷ் பேசியதாவது அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரி வித்துக் கொள்கிறேன். பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏழை எளிய மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்ட உள்ளனர்.
நாகர்கோவில் மாநகரை பொருத்தமட்டியில் தூய்மை பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாக்கடையை தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன.
எனவே தூய்மை பணியா ளர்களை கவுரவப்படுத்தும் விதமாக இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. மாகராட்சி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தை திறந்து வைக்க வருமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைத்துள்ளோம். அவர் பிப்ரவரி 2-வது வாரத்தில் வருவதாக கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் ஜவகர், செல்வ குமார், அக ஸ்டினா கோகில வாணி, கவுன்சிலர்கள் நவீன்குமார்,டி.ஆர். செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கலெக்டர்-மேயர் பங்கேற்று ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கினர்
- ஏழை,எளிய மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும்
நாகர்கோவில்:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சை அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு, ரூ.ஆயிரம் ரொக்கம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து ரேஷன் கடை ஊழியர்கள் மூல மாக கார்டுதாரர்களுக்கு டோக்கன் வழங்கப் பட்டது. தொடர்ந்து இன்று முதல் ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்க ப்படுகிறது.
நாகர்கோவில் மறவன் குடியிருப்பில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ரேஷன் கடையில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார்.மாநகராட்சி மேயர் மகேஷ் பொங்கல் தொகுப்பு விநியோகத்தை தொடங்கி வைத்தார்.
துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாவட்ட வழங்கல் அதிகாரி விமலா ராணி, அகஸ்தீஸ்வரம் வழங்கல் அதிகாரி ஜெகதா, கவுன்சிலர்கள் சோபி, நவீன்குமார், சிஜி, தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சந்திர சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து பொது மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது. விழாவில் மேயர் மகேஷ் பேசுகையில், ஏழை,எளிய மக்கள் அனைவரும்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பொங்கல் பரிசுத்தொகை அறிவித்து உள்ளார். ரூ.ஆயிரம் ரொக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அனைவரும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும்.முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏராளமான மக்கள் திட்ட ங்களை செயல்படுத்தி வருகிறார்.
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளும் வளர்ச்சி அடைந்து உள்ளது என்றார்.
கலெக்டர் அரவிந்த் கூறுகையில், மாவட்டம் முழுவதும் 5 லட்சத்து 74 ஆயிரத்து 675 ரேஷன் கார்டுதாரர்களுக்கு 774 ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. தினமும் காலையில் 100 பேருக்கும் மாலையில் 100 பேருக்கும் என பொங்கல் பரிசு தொகை வழங்க ஏற்கனவே டோக்கன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
டோக்கன் அடிப்படையில் பொதுமக்கள் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று கொள்ளலாம் என்றார்.
பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் விநியோகம் செய்யப்பட்டதையடுத்து ரேஷன் கடைகளில் இன்று காலையிலேயே கூட்டம் அலைமோதியது. ரேஷன் கடை ஊழியர்கள் பொங்கல் பரிசு தொகையை பொது மக்களுக்கு வழங்கினார்கள்.
- கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் ஒன்றிணைந்து கோலம் இட்டு பொங்கல் வைத்து உற்சாகமாக சமத்துவ பொங்கல் விழாவை இன்று கொண்டாடினர்.
- மேற்கத்திய நடனம், உறியடி, கயிறிழுத்தல்,கயிறு தாண்டுதல், நெருப்பாட்டம் உள்பட பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
வல்லம்:
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் என்பது உற்சாகமின்றி இருந்த நிலையில் இந்த ஆண்டு மீண்டும் பொங்கல் விழா உற்சாகம் காண தொடங்கிவிட்டது.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தஞ்சையை அடுத்துள்ள வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் ஒன்றிணைந்து கோலம் இட்டு பொங்கல் வைத்து உற்சாகமாக சமத்துவ பொங்கல் விழாவை இன்று கொண்டாடினர்.
இதில்மாணவர்களின் நாட்டுப்புற பாடல்கள், கட்டக்கால்ஆட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், மேற்கத்திய நடனம், உறியடி, கயிறிழுத்தல்,கயிறு தாண்டுதல், நெருப்பாட்டம் உள்பட பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் பெரியார் மணியம்மை பல்கலைகழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் அன்புராஜ், பதிவாளர் வித்யா, துணைவேந்தர் வேலுச்சாமி, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள்,மாணவ, மாணவிகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
- பொங்கல் பண்டிகையையொட்டி விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய வயலியுறுத்தப்பட்டது.
- மேலூரில் கரும்பு விவசாயிகள் சங்க கூட்டம் பெரியாறு ஒரு போக பாசன சங்க தலைவர் முருகன் தலைமையில் நடந்தது.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூரில் கரும்பு விவசாயிகள் சங்க கூட்டம் பெரியாறு ஒரு போக பாசன சங்க தலைவர் முருகன் தலைமையில் நடந்தது.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு விவசாயிகளிடம் இருந்து தமிழக அரசு கரும்புகளை நேரடியாக கொள்முதல் செய்து ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும்.
தமிழக அரசு கடந்த வருடம் போல் இந்த வருடமும் கரும்பை கொள்முதல் செய்ய விரைவில் அறிவிப்பு வெளியிட வேண்டும். அலங்காநல்லூர் தேசிய சர்க்கரை ஆலை மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தடைசெய்யப்பட்ட சில பூச்சி கொல்லி மருந்துகளின் தடையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது விளைந்து வரும் நெற்பயிரை கொள்முதல் செய்ய நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும்.
கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான பணப்பட்டுவாடா விவசாயி களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். மேற்கண்டவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலூர் பெரியாறு ஒரு போக விவசாயிகள் சங்க செயலாளர் ரவி, பொருளாளர் ஜெயபால் மற்றும் நிர்வாகிகள், கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்