என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தங்கத்தேர்"
- தங்கத்தேரில் 8 கருடன்கள், 16 கந்தர்வர்கள், சூரிய பகவான் 2 குதிரைகள் உள்ளிட்ட அழகிய வடிவிலான சிலைகளையும் பொருத்தி உள்ளனர்.
- பழமையை மாற்றாமல் 23 அடி உயரத்துடனும் 3½ டன் எடையுடன் ரூ.1¼ கோடி மதிப்பீட்டில் 75 நாட்களில் தயார் செய்து முடித்துள்ளது.
காஞ்சிபுரத்தில் தயாராகி அமெரிக்கா செல்லும் தங்கத்தேர்காஞ்சிபுரம்:
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் செயல்படும் ராஜா ஆன்மிகம் எனும் தனியார் நிறுவனம் கோவில்களுக்கு தேவையான வாகனம், கொடிமரம் தங்க வெள்ளி கவசங்கள், பஞ்சலோக சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் மேளதாளங்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து, உள்நாடு, வெளிநாடு, கோவில்களுக்கு விற்பனை செய்கிறது.
இந்த தனியார் நிறுவனத்திடம் அமெரிக்கா நாட்டில் உள்ள வாஷிங்டன் மாகாணத்தை சேர்ந்த சியாட்டின் நகரத்தின் அருகில் ரெட்மண்டில் அமைந்துள்ள வேதிக் கோவில் நிர்வாகம் தங்கத்தேர் ஒன்றை செய்து தரும்படி கேட்டுக்கொண்டது.
அதன்படி முதல் முறையாக ராஜா ஆன்மிகம் நிறுவனம் மரங்களை பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க இரும்பு ஆங்கிள்களை பயன்படுத்தியும் 6 பகுதிகளாக பிரித்து எடுத்து செல்லும் வகையில் செப்பு தகடுகளில் சிற்பங்களை செதுக்கி தங்க முலாம் பூசி, தங்கத்தேரை செய்து முடித்துள்ளது.
தங்கத்தேரில் 8 கருடன்கள், 16 கந்தர்வர்கள், சூரிய பகவான் 2 குதிரைகள் உள்ளிட்ட அழகிய வடிவிலான சிலைகளையும் பொருத்தி உள்ளனர்.
பழமையை மாற்றாமல் 23 அடி உயரத்துடனும் 3½ டன் எடையுடன் ரூ.1¼ கோடி மதிப்பீட்டில் 75 நாட்களில் தயார் செய்து முடித்துள்ளது.
இன்னும் சில நாட்களில் 6 பகுதிகளாக விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பும் பணி நடைபெறுவதாக தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் நாகராஜன் நிருபர்களிடம் தெரிவித்தார்.
- புதிய பஞ்சாங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
- சிவாச்சாரியார்கள் புதிய பஞ்சாங்கம் வாசித்தனர்.
வேங்கிக்கால்:
திருவண்ணா மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
அருணசலேஸ்வரர் உண்ணாமுலை அம்மன் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாளித்தனர். தமிழ் புத்தாண்டையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் புதிய பஞ்சாங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
பின்னர் சம்பந்த விநாயகர் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் புதிய பஞ்சாங்கம் வாசித்தனர். இதில் அருணாசலேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம் உறுப்பினர்கள் கோமதி குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு கோவிலில் பக்தர்கள் தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர். ஏராளமான பக்த்ர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் இன்று காலை முதல் கிரிவலம் சென்றனர்.
- மேளதாளங்கள் முழங்க உபயதாரர்கள், பக்தர்கள், தங்கத் தேரினை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
- “ஓம் சக்தி,பராசக்தி” கோஷமிட்டு காஞ்சி காமாட்சி அம்மனை தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் புரட்டாசி மாதம் வெள்ளிக் கிழமையையொட்டி நேற்று இரவு தங்கத்தேர் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தங்கத்தேர் உற்சவத்தையொட்டி காஞ்சி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. மஞ்சள் நிற பட்டு உடுத்தி சாமந்தி பூ மலர் மாலைகள் அணிவித்து, லட்சுமி, சரஸ்வதி, தேவிகளுடன் சிறப்பு அலங்காரத்தில், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில் காமாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பின்னர் மேளதாளங்கள் முழங்க உபயதாரர்கள், பக்தர்கள், தங்கத் தேரினை வடம் பிடித்து இழுத்து சென்றனர். காஞ்சி காமாட்சி அம்மன், கோவில் வளாகத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இந்த தங்கத்தேர் உற்சவத்தில் உள்ளூர், வெளியூர், வெளி மாவட்டம்,வெளி மாநிலம் என பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு "ஓம் சக்தி,பராசக்தி" கோஷமிட்டு காஞ்சி காமாட்சி அம்மனை தரிசனம் செய்தனர்.
- புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் தொள்ளை காது சித்தர் சமாதி உள்ளது.
- காதில் பெரிய துளை இருந்ததால் தொள்ளை காது சித்தர் என்று அழைக்கப்பட்டார்.
புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் தொள்ளை காது சித்தர் சமாதி உள்ளது. இவரின் இயற்பெயர் தெரியாது. தாய்,தந்தை யார் என்றும் தெரியவில்லை.
இளம் வயதில் இவர் தந்தையை இழந்தார். தாயார் அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்தார். இதை விரும்பாத அவர் தன் குல தெய்வமான அம்மனிடம் முறையிட்டார். அப்போது அவரை அம்மன் அழைப்பது போல் குரல் வந்தது. அந்த வழியே நடந்து வந்தார். புதுவை அருகே உள்ள மொரட்டாண்டி பகுதிக்கு வந்தார். அங்கிருந்து முத்து மாரியம்மன் கோவிலை வந்தடைந்தார்.
அம்மனை வேண்டினார். அம்மனின் தரிசன காட்சியை கண்டார். அவருக்கு ஞானம் கிடைத்தது. பின்னர் அங்கிருந்து 5 மைல் தொலைவில் உள்ள புதுவைக்கு வந்தார். கடற்கரை அருகில் மணற்குளத்தின் கடற்கரையில் விநாயகரை வழிபட்டு வந்தார்.
விநாயகரை வழிபட்ட பின்னர் மொரட்டாண்டிக்கு சென்று வந்தார். அங்கு பிரெஞ்சு அதிகாரிகளின் தொல்லை அதிகம் ஆனது. எனவே அங்கிருந்து வெளியேறி புதுவை ஆனந்த ரங்க பிள்ளை தோட்டத்துக்கு வந்தார்.
அங்கு குடில் அமைத்து தங்கினார். அந்த இடம் அவருக்கு அமைதி தந்தது. அவர் தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்தார்.
அவர்கள் குறைகள் கேட்டு தீர்த்துவைத்தார். சித்து வேலைகள் புரிந்தார். அவர் தங்கியிருந்த குடிசையை சித்தன் குடிசை என்று மக்கள் அழைத்தார்கள். இன்று வரை இந்த பகுதி சித்தன் குடிசை என்றே அழைக்கப்படுகிறது. அவரின் காதில் பெரிய துளை இருந்தது. எனவே அவர் தொள்ளை காது சித்தர் என்று அழைக்கப்பட்டார்.
தரிசன நேரம்
காலை 5.45 மணி முதல் மதியம் 12.30 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை
விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் தரிசன நேரத்தில் மாற்றம் ஏற்படும்
தங்கத்தேர்
மணக்குள விநாயகர் கோவிலில் அழகான தங்கத்தேர் ஒன்று உள்ளது. பக்தர்களின் நன்கொடையால் இது உருவாக்கப்பட்டது.
தேர் செய்ய பயன்படுத்திய தங்கத்தின் மொத்த எடை 7.5 கிலோ
மதிப்பீடு-ரூ.35 லட்சம், தேரின் உயரம்-10 அடி, அகலம்-6 அடி
தங்கத்தேர் உருவாக்கி பயன்பாட்டுக்கு வந்த ஆண்டு-2006.
பவனிவரும் காலம்- ஒவ்வொரு ஆண்டும் விஜய தசமி அன்று மேள தாளங்களுடன் ஊர்வலம் நடைபெறும்
குளத்தின் மீது விநாயகர்
மணக்குள விநாயகர்கோவிலில் மூலவர் ஒரு குளத்தின் மீது அமர்ந்திருக்கிறார். பீடத்தின் இடப்பக்கம் மூலவருக்கு அருகில் அரை அடி விட்டத்தில் ஒரு ஆழமான குழி செல்கிறது. அதில் தீர்த்தம் உள்ளது. இதன் ஆழத்தை கண்டு பிடிக்க முடியவில்லை. இதில் எப்போதும் வற்றாத நீர் உள்ளது.
- திருப்பரங்குன்றம் கோவிலில் தங்கத்தேர் இழுத்து ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. வழிபாடு செய்தார்.
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பூச்செண்டு கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். மேலும் திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து கொண்டு சென்ற பிரசாதங்களை வழங்கினார். அவருடன் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ்சத்யன், இளைஞரணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், விக்டர் ஆகியோரும் கலந்து கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு தொகுதி, மேலூர் உள்ளிட்ட இடங்களில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கப்பட்டது. இன்று மாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- திரளான மக்கள் பங்கேற்பு
- திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு மக்கள் செய்து இருந்தனர்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் உள்ள மிகவும் புகழ்பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் கன்னியா குமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலமும் ஒன்று. இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த9-ந்தேதிகொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவையொட்டி தினமும் திருப்பலி, மறை யுரை, திருஇருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனை, ஜெபமாலை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. 9-ம் நாள் திருவிழாவான நேற்று அதிகாலையில் பழைய கோவிலில் திருப்பலியும் அதைத்தொடர்ந்து 6.15 மணிக்கு அஞ்சு கூட்டுவிளை இறைமக்கள் சிறப்பித்த திருப்பலி நிகழ்ச்சியும் நடந்தது.
பின்னர் காலை 8 மணி முதல் 9 மணி வரை திருஇருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனையும் 10.30 மணிக்கு நோயாளி களுக்கான திருப்பலி யும் நடந்தது. கேசவன் புத்தன்துறை பங்குத்தந்தை லாரன்ஸ் தலைமை தாங்கி மறையுரை ஆற்றினார். இதனை தூய அடைக்கல அன்னை சகோதரிகள் சிறப்பித்தனர். மாலையில் சிறப்பு மாலை ஆராதனை நடந்தது. இதனை பங்குப் பேரவையினர் சிறப்பித்தனர். இரவு 8 மணிக்கு வாண வேடிக்கையும், இரவு 9 மணிக்கு புனிதசூசையப்பர் தங்கத் தேர்ப்பவனியும் நடைபெற்றது. திருத்தலம் முன்பு இருந்து புறப்பட்ட சூசையப்பர் தேர்4ரத வீதிகள் வழியாக பவனி வந்து அதிகாலையில் நிலைக்குநின்றது.
10-ம் நாள் திருவிழாவான இன்று அதிகாலை 4.30 மணிக்கு தங்கத்தேர் திருப்பலியும், காலை 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலியும் நடந்தது. பங்கு மக்கள், குமரிப்பகுதி வாழ் மக்கள், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வாழும் குமரி மக்கள், திருப்பயணிகள் ஆகியோர் இதனை சிறப்பித்தனர். காலை 8 மணிக்கு ஆங்கில திருப்பலி நடந்தது காலை 10 மணிக்கு மாதா, சூசையப்பர் ஆகிய இரு தங்கத் தேர்ப்பவனி நடந்தது. இதில் விஜய் வசந்த் எம். பி., தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. உள்பட திரளான மக்கள் கலந்து கொண்டனர். காலை 10.30 மணிக்கு மலையாளத் திருப்பலியும் பகல் 12 மணிக்கு தமிழில் திருப்பலியும் நடந்தது. மாலை 5 மணிக்கு இரு தங்கத்தேர்களும் 4 ரத வீதிகள் வழியாக பவனி வந்து நிலைக்கு வந்து சேர்ந்தது. வழிநெடுகிலும் மக்கள் மாதாவுக்கு மாலை அணிவித்து காணிக்கை மற்றும் நேர்ச்சை செலுத்தி னார்கள். மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்கம், நற்கருணை ஆசிர் போன்றவை நடைபெறு கிறது.
திருவிழாவுக்கான ஏற் பாடுகளை கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் அருட்பணியாளர் ஆன்றனி அல்காந்தர், இணைப்பங்கு தந்தையர்கள் பங்குப் பேரவை துணைத்தலைவர் செல்வராணி ஜோசப், செயலாளர் சுமன், பொ ருளாளர் தீபக் இணை பங்கு தந்தையர்கள் மேக்சன், ஜான் போஸ்கோ, சேவியர் அருள்நாதன் மற்றும் பங்குப்பேரவையினர், அருட் சகோதரிகள், அனைத்து அன்பிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்கு மக்கள் செய்து இருந்தனர்.
- மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை நடக்கிறது
- மயிலாடி பங்குத்தந்தை சைமன் மறையுறையாற்றுகிறாா்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் ஒன்றாகும். ஆலய திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழா நாட்களில் தினமும் பழையகோவிலில் திருப்பலி, புனிதசூசையப்பா் பீடத்தில் திருப்பலி, ஜெபமாலை ஆகியவை நடைபெற்று வருகிறது.
8-ம் திருவிழாவான நேற்று மாலை 6.30 மணிக்கு ஜெபமாலையும், திருப்பலியும் நடந்தது. ஆலஞ்சி வட்டார முதல்வர் அருட்ப பணியாளர் தேவதாஸ் தலைமையில் திட்டுவிளை பங்குதந்தை அருட்பணியாளர் சஜுமறையுரை ஆற்றினார். இரவு 9 மணிக்கு திருச்சப்பர பவனி நடந்தது.
9-ம் நாள் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) அஞ்சு கூட்டுவிளை பங்கு இறைமக்கள் திருவிழாவை சிறப்பிக்கின்றனா்.காலை நடைபெற்ற நோயாளிகளுக்கான சிறப்பு திருப்பலிக்கு கீழமணக்குடி பங்குத்தந்தை ஆன்றனி பிரபு தலைமை தாங்கி, திருப்பலியை நிறைவேற்றி மறையுரையாற்றினார்.
மாலை 6.30 மணிக்கு நடைபெறும் சிறப்பு மாலை ஆராதனைக்கு திருநயினாா் குறிச்சி பங்குத்தந்தை லியோன் எஸ்.கென்சன் தலைமை தாங்குகிறார். மயிலாடி பங்குத்தந்தை சைமன் மறையுறையாற்றுகிறாா். 9 மணிக்கு சூசையப்பர் தங்க தேர்ப்பவனி நடக்கிறது.
10-ம் திருவிழாவை முன்னிட்டு நாளை (18-ந்தேதி) அதிகாலை தங்கத் தேரில் திருப்பலி நடைபெறுகிறது. தொடா்ந்து காலை 6 மணிக்கு திருவிழா நிறைவுத் திருப்பலி அருட்பணியாளர் சுவக்கின் தலைமையில் நடைபெறும். அருட்பணியாளர் மில்லா் மறையுறையாற்றுகிறாா். காலை 8 மணிக்கு நடைபெறும் ஆங்கிலத் திருப்பலியை அருட்ப பணியாளர் ஆன்சல் ஆன்றனி நிகழ்த்துகிறாா்.
தொடா்ந்து புனித ஜோசப் கலாசன்ஸ் பள்ளி முதல்வா் ஜீன்ஸ் மறையுரையாற்றுகிறாா். காலை 9 மணிக்கு மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்கத் தோ் பவனி நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு மலையாள திருப்பலியும், பகல் 12 மணிக்கு சிறப்பு திருப்பலியும் மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்கம் மற்றும் நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை திருத்தல பங்குமக்கள், பங்குத்தந்தை ஆன்றனி அல்காந்தா், இணை பங்குத்தந்தையா்கள் சகாய வினட் மேக்ஸ்சன், ஜான் போஸ்கோ, சேவியா் அருள்நாதன், பங்குப்பேரவை துணை தலைவா் ஜோசப், செய லாளர் சுமன், பொருளா ளா் தீபக் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்