என் மலர்
நீங்கள் தேடியது "பொங்கல் பரிசு தொகுப்பு"
- பொங்கல் பரிசுப் பணம் இந்த முறை ரேசன் கடைகளில்தான் வழங்கப்படும் என தெரிகிறது.
- அது மட்டுமின்றி பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க வாய்ப்பில்லை என தெரிகிறது.
சென்னை:
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகளில் ரொக்கப் பணத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்குவது வழக்கமாக உள்ளது.
கடந்த ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகும் ரேசன் கடைகளில் அரிசி, வெல்லம், கரும்பு, ஏலக்காய், முந்திரி, திராட்சை உள்ளிட்ட 21 பொருட்கள் வழங்கப்பட்டது. பணம் வழங்கப்படவில்லை
அப்போது ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட பொருட்களின் தரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. பல ரேசன் கடைகளில் வழங்கப்பட்ட வெல்லம் மோசமாக இருந்ததாக எதிர்க்கட்சியினர் அரசு மீது குறை கூறினார்கள். மற்ற பொருட்களின் எடையும் குறைவாக இருந்ததாக விமர்சனம் வைக்கப்பட்டது.
இதனால் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 ரொக்கப் பணத்துடன் பரிசுத் தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரையுடன் என்னென்ன பொருட்கள் வழங்கலாம் என்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.
இதில் அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி, டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பொங்கலுக்கு பொதுமக்களுக்கு பணமாக கொடுக்கும் பட்சத்தில் ரூ.1000 ரொக்கப் பணத்தை ரேசன் கார்டுதாரர்களின் வங்கிக் கணக்கு மூலம் வழங்கினால் எளிதாக இருக்கும் என்று நிதித்துறை தெரிவித்த கருத்து முன் வைக்கப்பட்டது.
ஆனால் ரூ.2 கோடியே 23 லட்சம் ரேஷன் கார்டுகளில் இன்னும் சில ஆயிரம் ரேசன் கார்டுதாரர்களுக்கு வங்கி கணக்கு இல்லாதது மட்டுமின்றி ஆதார் எண் இணைக்கப்படாமல் இருக்கும் தகவலும் தெரிவிக்கப்பட்டது.
இந்த பணிகள் ஒருபுறம் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், ரூ.1000 ரொக்கப் பணத்தை ரேசன் கடை மூலம் பொதுமக்களுக்கு கையில் நேரில் கொடுப்பதுதான் சிறந்தது என்று அதிகாரிகள் தரப்பில் கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது.
ரேசன் கடைகளின் மூலமாக ரொக்கப் பணத்தை கொடுப்பதின் மூலம் மக்கள் பிரதிநிதிகள் அதை அருகே இருந்து கவனித்துக் கொள்வார்கள் என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டுள்ளது.
எனவே அதன் அடிப்படையில் பொங்கல் பரிசுப் பணம் இந்த முறை ரேசன் கடைகளில்தான் வழங்கப்படும் என தெரிகிறது. அது மட்டுமின்றி பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க வாய்ப்பில்லை என தெரிகிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசின் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுபற்றி முடிவு செய்து விரைவில் வெளியிடுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர். அனேகமாக இன்று அல்லது நாளை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பொங்கல் தொகுப்பு வழங்குவது என்பது முதன் முதலாக கலைஞர் ஆட்சி காலத்தில் 2008-ல் துவங்கப்பட்டது.
- கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் சங்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
சென்னை:
கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத் துறை பதிலாளர்கள், கூடுதல் பதிலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் இன்று ஆய்வு கூட்டம் நடத்தினார்.
இந்த கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் சங்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வுக்கு பிறகு அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கூட்டுறவுத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. 33571 நியாய விலைக் கடைகளில் அரசு மூலம் வழங்கப்படும் பொருட்கள் முறையாக மக்களிடம் சென்றடைவது உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் அனைத்து கூட்டுறவு வங்கிகளும் லாபகரமாக இயங்கி கொண்டிருக்கிறது.
கே: பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது அறிவிக்கப்படும்?
ப: அதுபற்றிய ஆலோசனை கூட்டம் நடந்தது உண்மை. அதுபற்றிய முடிவை முதல்-அமைச்சர் விரைவில் அறிவிப்பார். இந்த அறிவிப்பு வந்ததும் எங்களது துறை செயல் படுத்தும்.
பொங்கல் தொகுப்பு வழங்குவது என்பது முதன் முதலாக கலைஞர் ஆட்சி காலத்தில் 2008-ல் துவங்கப்பட்டது. அப்போது மக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டது.
2011-க்கு பிறகு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பொருட்கள் வழங்கப்பட்டாலும் இடையில் 1 வருடம் தர வில்லை. அதுமட்டுமல்ல இடையில் 4 ஆண்டுக்கு எதுவும் அவர்கள் வழங்கவில்லை.
இப்போது தி.மு.க. ஆட்சியில் நாங்கள் வழங்குகிறோம். இது தொடர்பாக முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்தி உள்ளார். விரைவில் அவர் அறிவித்ததும் அதை செயல்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக அரசு கடந்த ஆண்டைப் போலவே பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு விவசாயிகளிடம் இருந்து கரும்பைக் கொள்முதல் செய்ய வேண்டும்.
- வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு இந்தப் போராட்டம் தொடங்க உள்ளது.
திருப்பூர்:
தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்யக்கோரி சென்னை தலைமைச் செயலகம் முன்பு வருகிற 27-ந்தேதி முதல் போராட்டம் நடைபெறும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனா் ஈசன் முருகசாமி, மாநிலத் தலைவா் ஆா்.சண்முகசுந்தரம், மாநிலப் பொதுச் செயலாளா் எஸ்.முத்துவிஸ்வநாதன் ஆகியோா் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழக அரசு கடந்த ஆண்டைப் போலவே பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு விவசாயிகளிடம் இருந்து கரும்பைக் கொள்முதல் செய்ய வேண்டும். இந்த கோரிக்கை நிறைவேறும் வரை தலைமைச் செயலகத்தின் முன்பு போராட்டம் நடத்த உள்ளோம். வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு இந்தப் போராட்டம் தொடங்க உள்ளது. இந்த கோரிக்கை தொடா்பாக பல்வேறு விவசாய சங்கத் தலைவா்கள், சம்பந்தப்பட்ட அமைச்சா்களிடமும், துறையின் செயலாளரிடமும் கோரிக்கை வைத்தும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. ஒரு ஏக்கருக்கு ரூ. 2 லட்சம் செலவு செய்து, கடன் பெற்று கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் தமிழக அரசு பொங்கல் கரும்பை கொள்முதல் செய்யாவிட்டால் தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.ஆகவே கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளிடமிருந்து அந்தந்த மாவட்டங்களிலேயே கொள்முதல் செய்து பொங்கல் பரிசுத்திட்டத்தில் கரும்பு வழங்கிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த கோரிக்கை நிறைவேறும் வரையில் தொடா் காத்திருப்பு போராட்டத்தை நடத்த உள்ளோம் என்றனா்.
- திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட விவசாய அணி சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தி.மு.க.வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- விவசாய அணி மாநகர் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார்.
திருச்சி:
தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, தேங்காய், வெல்லம் ஆகியவற்றை சேர்க்க வலியுறுத்தி இன்று மாநிலம் தழுவிய அளவில் பா.ஜ.க. விவசாய அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட விவசாய அணி சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தி.மு.க.வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு விவசாய அணி மாநகர் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், புறநகர் மாவட்ட விவசாய அணி தலைவர் சசிக்குமார், மாநில விவசாய அணி துணைத் தலைவர் கோவிந்தராஜன், வரகனேரி பார்த்திபன், ஒண்டிமுத்து, காளீஸ்வரன், தண்டபாணி, கள்ளிக்குடி ராஜேந்திரன், சந்துரு, முத்தையனன், கும்பக்குறிச்சி பழனிச்சாமி, ஏ.ஆர்.பாட்சா மல்லி செல்வம், மிலிட்டரி நடராஜன், முருகானந்தம், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேஸ்குமார், பழனிக்குமார், நாகேந்திரன், பூண்டு பாலு மற்றும் திரளானோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க.வினர் கைகளில் கரும்பு மற்றும் தேங்காய்களை ஏந்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர்.
- பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு உள்ளிட்ட மற்ற பொருட்களையும் சேர்த்து வழங்க கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- பொங்கல் பரிசு தொகுப்புடன் மண்பானை வழங்க கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் தலையில் மண்பானையை சுமந்து வந்து கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்:
தமிழகத்தில் ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.1000 ரொக்கப்பணம் மற்றும் அரிசி, சர்க்கரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு உள்ளிட்ட மற்ற பொருட்களையும் சேர்த்து வழங்க கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் தனபால் தலைமையில் மாவட்ட விவசாய அணி தலைவர் சக்திவேல் மற்றும் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அதன் பிறகு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தங்கள் கோரிக்கை மனுவினையும் அளித்தனர்.
இதே போல பொங்கல் பரிசு தொகுப்புடன் மண்பானை வழங்க கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் தலையில் மண்பானையை சுமந்து வந்து கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும் தங்கள் கைகளில் கரும்பு ஏந்தி வந்து ஊர்வலமாக போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜனதா சார்பில் கைகளில் கரும்புகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- விவசாய அணி மாநில பொதுச்செயலாளர் பூண்டி வெங்கடேசன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க அரசை கண்டித்தும் பேசினார்.
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பு, வெல்லம், தேங்காய் ஆகியவற்றையும் சேர்த்து வழங்கி தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜனதா சார்பில் கைகளில் கரும்புகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர் பண்ணவயல் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் ஜெய்சதீஷ் (தெற்கு), சதீஷ்குமார் (வடக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா வரவேற்றார்.
இதில் விவசாய அணி மாநில பொதுச்செயலாளர் பூண்டி வெங்கடேசன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க அரசை கண்டித்தும் பேசினார். இதனைத்தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனு கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓ.பி.சி. அணி மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம், பிரசார பிரிவு மாவட்ட துணை தலைவர் போர்வாழ் கோவிந்தராஜ், மருத்துவர் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் டாக்டர் தர்மதுரை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட விவசாய அணி தலைவர் அய்யம்பெருமாள் நன்றி கூறினார்.
- பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை ஜனவரி 2ம் தேதிக்கு பதில் ஜனவரி 9ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
- ஜனவரி 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை டோக்கன் வழங்கப்படுகிறது.
பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க வேண்டும் என்று பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. சென்னை உயர்நீதிமன்றத்திலும் இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணையை வரும் 2ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
இதற்கிடையே, கரும்பு வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி மற்றும் அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதனால் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 ரொக்கம், சர்க்கரை, பச்சரிசியுடன் கரும்பு வழங்க முடிவு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முழு கரும்பு வழங்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை ஜனவரி 2ம் தேதிக்கு பதில் ஜனவரி 9ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இதற்காக, ஜனவரி 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை டோக்கன் வழங்கப்படுகிறது.
- சென்னையை பொறுத்தவரை சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் கரும்பு கொள்முதல் தேவையான குழுக்களை அமைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
- கொள்முதல் செய்யும் போது சிறு, குறு, ஆதி திராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
சென்னை:
பொங்கலுக்கு ரேஷன் கடைகளில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ரூ.1000 ரொக்கப்பணத்துடன் முழு கரும்பு கொடுக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இதில் கரும்புகளை கொள்முதல் செய்வதற்கு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. இதன்படி 1 கரும்புக்கு போக்குவரத்து செலவு உள்பட அதிகபட்சமாக 33 ரூபாய் செலவழிக்க வேண்டும் என்று கூட்டுறவு துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. (வெட்டு கூலி, விவசாயிகளுக்கு வழங்கும் தொகை, ஏற்றி இறக்கும் செலவு உள்பட) அதுமட்டுமின்றி பன்னீர் கரும்பு மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும்.
கொள்முதல் செய்யப்படும் கரும்பின் உயரம் சுமார் 6 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு வழங்கப்படும் கரும்பு மெலிதாக இல்லாமல் சராசரி தடிமனைவிட கூடுதலாக இருக்க வேண்டும். நோய் தாக்கிய கரும்பு கொள்முதல் செய்யப்படக்கூடாது.
அந்தந்த மாவட்டங்களில் விளையும் கரும்பை கொள்முதல் செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதில் விவசாயிகள் தரப்பில் இருந்து எவ்வித புகார்களுக்கும் இடம் அளிக்கக்கூடாது.
கரும்பு கொள்முதல் செய்ய ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட கலெக்டர் கூட்டுறவுத்துறை, வேளாண்மைத்துறை குழுக்கள் அமைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
சென்னையை பொறுத்தவரை சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் கரும்பு கொள்முதல் தேவையான குழுக்களை அமைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
கொள்முதல் செய்யும் போது சிறு, குறு, ஆதி திராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
ஒரு கிராமத்தில் ஒரே விவசாயியிடம் இருந்து ஒட்டுமொத்த கொள்முதலையும் மேற்கொள்ளக் கூடாது. மாறாக அந்த கிராமம் முழுவதிலும் பரவலாக கரும்பின் தரத்தின் அடிப்படையில் கொள்முதல் செய்யப்பட வேண்டும். இதில் எந்தவித புகார்களுக்கும் இடமளிக்க கூடாது.
எக்காரணம் கொண்டும் கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கொள்முதல் விலைக்கு குறைவாக விலை நிர்ணயம் செய்யப்படக்கூடாது. கரும்பு கொள்முதல் செய்யும்போது அந்தந்த மாவட்ட விவசாயிகளிடம் இருந்து நேரடியாக மட்டுமே வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலமாக கொள்முதல் செய்யப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் இடைத்தரகர்கள் அனுமதிக்கப்படக் கூடாது.
கரும்பு மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் எதிர்வரும் 2023 ஜனவரி 9-ந்தேதியில் இருந்து தொடங்கப்பட வேண்டும். எந்தந்த நாளில் எத்தனை அட்டைகளுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறதோ, அதற்கேற்றவாறு கரும்பு படிப்படியாக கொள்முதல் செய்யப்பட வேண்டும்.
எக்காரணம் கொண்டும் முன்கூட்டியே அனைத்து கரும்பையும் கொள்முதல் செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் கரும்பு காய்ந்து போவதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் அது தேவையற்ற புகார்களுக்கு வழிவகுக்கும்.
கொள்முதல் செய்யப்படும் கரும்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் வரை பாதுகாப்பாக வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது. கரும்பின் நுனியில் இருக்கும் தோகையை வெட்டாமல் முழு கரும்பையும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்க பணம் மக்களை சென்றடைவதற்கு மாவட்ட கலெக்டர்களே பொறுப்பு என்றும், அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உன்னிப்பாக கவனித்து அனைத்து மக்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க பணம் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
பச்சரிசி, முழு கரும்பு ஆகியவை முழு தரத்துடன் இருப்பதை மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் தகுதியான பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்காமல் திருப்பி அனுப்பக்கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- யாருக்கும் பொங்கல் பரிசு பொருள்-பணம் வழங்காமல் திருப்பி அனுப்பக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
- பொங்கல் பரிசை பொங்கல் பண்டிகைக்கு முன்பே வழங்க வேண்டும் என்பதற்காக வருகிற 13-ந்தேதி ரேஷன் கடைகள் அனைத்தும் செயல்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு-ரூ.1000 ரொக்கம், முழு கரும்பு வாங்குவதற்கு ரேஷன் கடைகளில் வரிசையில் நிற்கும் பொதுமக்கள் அனைவருக்கும் விடுபடாமல் வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. யாருக்கும் பொங்கல் பரிசு பொருள்-பணம் வழங்காமல் திருப்பி அனுப்பக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
பொங்கல் பரிசை பொங்கல் பண்டிகைக்கு முன்பே வழங்க வேண்டும் என்பதற்காக வருகிற 13-ந்தேதி ரேஷன் கடைகள் அனைத்தும் செயல்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
- அனைவருக்கும் வீடுகளுக்கு சென்று நாளை முதல் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்பட உள்ளது.
- ஒரு நாளைக்கு 200 டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டிலும் பொங்கல் பண்டிகையை மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு, ரூ.1000 ரொக்கம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்தது.
அதன்படி வருகிற 9-ந் தேதி பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அன்றே அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.
அனைவருக்கும் வீடுகளுக்கு சென்று நாளை முதல் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்பட உள்ளது. ஒரு நாளைக்கு 200 டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வருகிற 8-ந்தேதி வரை டோக்கன் வழங்கப்படுகிறது. இந்த டோக்கனில் பரிசு தொகுப்பு வழங்கும் நாள், வழங்கப்படும் நேரம் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கும். அந்த நேரத்தில் சென்று பொங்கல் தொகுப்பினை பெற்று கொள்ளலாம். பொங்கல் தொகுப்பில் ஏதாவது குறைகள் இருந்தால் அது குறித்து புகார் தெரிவிக்க எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொங்கல் தொகுப்பு பெற்றவுடன் அதுகுறித்த குறுஞ்செய்தி குடும்ப அட்டைதாரர்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- கோவை மாவட்டத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரரர்கள் உள்ளனர்.
- அனைவருக்கும் வீடுகளுக்கு சென்று நாளை முதல் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்பட உள்ளது.
கோவை:
பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டிலும் பொங்கல் பண்டிகையை மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு, ரூ.1000 ரொக்கம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்தது.
அதன்படி வருகிற 9-ந் தேதி பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அன்றே அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் வீடுகளுக்கு சென்று நாளை முதல் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்பட உள்ளது. வருகிற 8-ந்தேதி வரை டோக்கன் வழங்கப்படுகிறது.
இந்த டோக்கனில் பரிசு தொகுப்பு வழங்கும் நாள், வழங்கப்படும் நேரம் உள்ளிட்டவை இடம் பெற்று இருக்கும். அந்த நேரத்தில் சென்று பொங்கல் தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம். பொங்கல் தொகுப்பில் ஏதாவது குறைகள் இருந்தால் அது குறித்து புகார் தெரிவிக்க எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொங்கல் தொகுப்பு பெற்றவுடன் அதுகுறித்த குறுஞ்செய்தி குடும்ப அட்டைதாரர்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் 10 லட்சத்து 88 ஆயிரம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களில் 1089 பேர் இலங்கை தமிழர்கள். இவர்கள் அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் நாளை முதல் வழங்கப்படுகிறது.
அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் ஊழியர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்றே பொங்கல் தொகுப்புக்கான டோக்கனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு 200 டோக்கன் வழங்க திட்டமிட்டுள்ளோம். டோக்கன் வழங்கியதும் வருகிற 9-ந்தேதி முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். இந்த மாதம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் இலங்கை அகதி முகாம்களில் இருக்கும் தமிழர்கள் ஆகிய 2.19 கோடி பேருக்கு வழங்கப்படும்.
- டோக்கனில் பரிசு தொகுப்பு வழங்கப்படும் நாள், நேரம் ஆகியவை இடம் பெற்று இருக்கிறது.
சென்னை:
பொங்கல் திருநாளையொட்டி பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக அரசு அறிவித்தது. ரூ.1000 ரொக்கப்பணம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசு தொகுப்பு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை அகதி முகாம்களில் இருக்கும் தமிழர்கள் ஆகிய 2.19 கோடி பேருக்கு வழங்கப்படும்.
வருகிற 9-ந் தேதி (திங்கள்) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கி தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே தமிழகத்தில் உள்ள 33 ஆயிரம் ரேஷன் கடைகளிலும் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை உணவு பொருள் வழங்கல் துறையினர் செய்து வருகிறார்கள்.
ரேஷன் கடையில் குடும்பத்தலைவர் அல்லது குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவர் கைவிரல் ரேகையை பதிவு செய்து தான் அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகிறார்கள். இப்போது பொங்கல் பரிசு தொகுப்பை பெறவும் கைரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் ரேஷன் கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்கூட்டியே டோக்கன் வழங்கப்படுகிறது. இந்த பணி இன்று தொடங்கியது. ஊழியர்கள் வீடுவீடாக சென்று டோக்கன் வழங்கி கொண்டிருக்கிறார்கள்.
அந்த டோக்கனில் பரிசு தொகுப்பு வழங்கப்படும் நாள், நேரம் ஆகியவை இடம் பெற்று இருக்கிறது.
ஒரு நாளைக்கு 200 டோக்கன் வீதம் வழங்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் சிரமம் இல்லாமல் தங்கள் பரிசு தொகுப்புகளை வாங்கி கொள்ளலாம்.
பொங்கல் பரிசு தொகுப்பில் ஏதேனும் குறைகள் இருந்தால் புகார் செய்யலாம். அதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த எண்கள் வருமாறு:-
1967 மற்றும் 1800-425-5901.