என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Women’s Group"
- மகளிர் குழுக்களுக்கு களநீர் பயிற்சி வகுப்பு நடந்தது.
- ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் வீரராகவன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
மதுரை
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக, கிராமப்புற பெண்கள் சுகாதாரக் குழுக்கள், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு களநீர் பரிசோதனை பெட்டி பயன்படுத்துதல் மற்றும் வலைத்தளத்தில் பதிவு குறித்த பயிற்சி வகுப்பு, கிராம குடிநீர் திட்ட கோட்ட நிர்வாக பொறியாளர் செந்தில்குமரன் தலைமை யில் நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் வீரராகவன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் உலக நாதன் சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாகப் பொறியாளர் கருத்த பாண்டியன் மற்றும் பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பெட்கிராட் பொருளாளர் கிருஷ்ண வேணி நன்றி கூறினார்.
இந்நிகழ்வில் மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 29 கிராம பஞ்சாயத்துகளில் பணி யாற்றும் பம்ப் ஆப்ரேட்டர் களுக்கு நீரின் தன்மைகள் குறித்து செய்முறைகள் மூலமாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நீர் பரிசோதனையாளர் விளக்கி கூறினார்.
இந்த நிகழ்ச்சி மூலமாக நீரின் பல்வேறு தன்மைகள் குறித்து தாங்கள் அறிந்து கொண்டதாக பம்ப் ஆப்ரேட்டர்கள் தெரிவித்த னர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜூபிடர் பெண்கள் கூட்ட மைப்பு,பெட்கிராட் நிர்வாகிகள் அங்குசாமி, சாராள் ரூபி, மார்ட்டின் லூதர் கிங் ஆகியோர் செய்திருந்தனர்.
- விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 58 மகளிர் குழுக்களுக்கு ரூ.4.36 கோடி கடனுதவியை கலெக்டர் வழங்கினார்
- வங்கிகள் உங்களை தேடி வந்து கடன்களை கொடுக்கின்றன.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல அலுவலகம் இணைந்து மாபெரும் மகளிர் சுய உதவிக்குழு கடன் முகாமை நடத்தியது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.
இதில் 58 மகளிர் குழுக்களுக்கு ரூ.4 கோடியே 36 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பிலான கடனு தவிகளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைகளின் மூலமாக கலெக்டர் வழங்கி னார்.
முகாமில் அவர் பேசியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு புதிய கடன்களை அதிகமாக வழங்கியிருக்கிறோம். விருதுநகர் மாவட்டத்திற்கு வழங்கக்கூடிய கடன்கள் வாரா கடன்களாக மாறுகின்றனவா? என்றால் இல்லை. அனைத்து குழுக்களும் தாங்கள் பெறக்கூடிய கடன்களை முழுமையாக திரும்ப செலுத்தி விடுகின்றன. அதனால் தான் வங்கிகள் உங்களை தேடி வந்து கடன்களை கொடுக்கின்றனர்.
புதிதாக உங்களுக்கு கடன்களை வழங்கக்கூ டியது, புதிதாக உங்களுக்கு கடன்களை பெறக்கூடியது, தனிநபர் அல்லது குழுவின் உடைய பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமாகும். ஒரு நாடாக இருந்தாலும் சரி, வீடாக இருந்தாலும் சரி உங்களின் வருமானத்தை பெருக்கு வதற்கு புதிய முதலீடுகளை செய்ய வேண்டும்.
பெண்களுக்கு உண்மை யான வலிமை, உண்மையான சுதந்திரம், விடுதலை என்பது அவர்களின் பொருளாதார வலிமையை பொறுத்தது தான் ஆகும். நீங்கள் பொருளாதார வலிமையை அடைவதற்கு நிறைய பணத்தை நல்ல வழியில் அதனை ஈட்டுவதற்கு நாம் வழிமுறையை கண்டுபிடிக்க வேண்டும்.
அதற்கு மிகவும் முக்கிய மானது ஒரு முதலீடு. அந்த முதலீட்டை வைத்து உங்கள் உழைப்பால், திறமையால், அர்ப்பணிப்பால் பெண்கள் பெரிய அளவில் பொருளா தார வலிமை பெற முடியும். பொருளாதார வலிமை இருந்தால் உங்களால் நிறைய சாதிக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் தெய்வேந்திரன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தூத்துக்குடி மண்டல மேலாளர் நாகையா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாண்டி செல்வன், ஊரக கிராமிய பயிற்சி மைய இயக்குநர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- புதிய மகளிர் குழு உறுப்பினர்கள் சேர்க்கும் சிறப்பு முகாம் ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
- முகாமில் சேலம் சரக துணை பதிவாளர் விஜயா வரவேற்புரை ஆற்றினார்.
சேலம்:
ஏற்காடு மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் புதிய மகளிர் குழு உறுப்பினர்கள் சேர்க்கும் சிறப்பு முகாம் ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. முகாமில் சேலம் சரக துணை பதிவாளர் விஜயா வரவேற்புரை ஆற்றினார்.
இதனைத் தொடர்ந்து சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார் தலைமை உரை ஆற்றினார் . அவர் பேசுகையில்,ஏற்காட்டில் உள்ள அனைத்து பழங்குடியின மகளிரும் ஏற்காடு மலைவாழ் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் தங்களின் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் பொருட்டு அரசு வழிகாட்டுதலின்படி கடன் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த சிறப்பு முகாமின் மூலம் 25 மகளிர் சுய உதவி குழுக்களாக சுமார் 300 பேர் ஏற்காடு மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் புதிய உறுப்பினர்களாக சேர்ந்து கொண்டனர். முகாமின் முடிவில் சங்க செயலாளர் பிரகாஷ் நன்றி கூறினார். விழாவில் ஏற்காடு மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் கூட்டுறவு சார்பதிவாளர் சுகன்யா அவர்கள் மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- விருதுநகரில் மகளிர் குழுக்களுக்கு ரூ.83.79 கோடி கடனுதவிகளை ஏழை மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்படுகிறது.
- அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.
விருதுநகர்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து, விருதுநகர் மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில், மகளிர் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், அசோகன் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 1591 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.83.79 கோடி மதிப்பிலான கடனுதவி களை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் தன்னம்பிக்கை மூலம் மகளிரின் நிலையை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தொடங்கப்பட்டது.
இந்தியாவிலேயே முதன்முறையாக 1989ம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழு இயக்கத்தை முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார். தற்போது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, ஊரக மற்றும் நகர்ப்புரங்களில் உள்ள ஏழை மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் வெற்றி கரமாக செயல்படுத்தப்பட்டு தற்போது சமூக பொரு ளாதார மேம்பாட்டை அடைவதற்கு மகளிரைக் கொண்டு சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்ட மைப்புகளை உருவாக்கி முறையான பயிற்சிகள் வழங்கி வருமானம் ஈட்டும் தொழில் தொடங்க வங்கிக் கடன் இணைப்புகள் ஏற்படுத்தி சுய உதவிக் குழு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி, திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) தெய்வேந்திரன், விருதுநகர் நகர்மன்றத்தலைவர் மாதவன், அருப்புக்கோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- காரைக்குடியில் மகளிர் குழுக்களுக்கு ரூ.8.61 கோடி கடனுதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
- ஒட்டு மொத்த சமுதாய வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமையும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடனுதவி வழங்கும் விழா நடந்தது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவை தொடங்கி வைத்தார்.கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், ரகுபதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
அரசு கூடுதல் தலைமை செயலாளர், அதுல்யாமிஸ்ரா, நில நிர்வாக ஆணையர் நாகராஜன், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயல் உறுப்பினர் கார்த்திகேயன், மகளிர் மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குநர் பிரியங்கா பங்கஜம், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.மாங்குடி, தமிழரசி முன்னிலை வகித்தனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் வேலைநாடுநர்கள் பயன்பெறும் வகையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 95 தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இந்த மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கல்வித்தகுதிக்கேற்றார் போல் வேலைவாய்ப்பினை பெற்று பயன்பெற்று வருகின்றனர்.
இளைஞர்கள் எந்த துறையில் ஆர்வ முள்ளவர்கள் என்பதை அறிந்து, அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்றார்போல் பயிற்சி அளிக்க சுமார் 95 பதிவு பெற்ற நிறுவனங்களின் மூலம் ஏறத்தாழ 5 ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இந்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அனைத்துத்துறைகளின் வாயிலாக, பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு தனிநபர் பயன்பெறுவது மட்டுமன்றி, ஒட்டு மொத்த சமுதாய வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமையும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியின் வாயிலாக 113 மகளிர் சுயஉதவிக்குழுக்களைச் சார்ந்த மொத்தம் 1,641 உறுப்பினர்களுக்கு அவர்கள் பயன்பெறும் வகையில் மொத்தம் ரூ.8.61 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வங்கிக்கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இதில் நகர்மன்ற தலைவர் முத்துதுரை, துணை தலைவர் குணசேகரன், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர்.கே.ஆர்.ஆனந்த், பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் கே.எஸ்.ரவி, கோட்டையூர் பேரூராட்சி தலைவர் கே.எஸ்.கார்த்திக் சோலை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், நகர்மன்ற ஆணையாளர் லெட்சுமணன், செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி தலைவர் செல்லப்பன், தாளாளர் சத்யன், பேரூராட்சி தலைவர்கள் முகம்மது மீரா, சாந்தி சிவசங்கர், ராதிகா, சங்கீதா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தாதனேந்தல் ஊராட்சியில் மகளிர் சுயஉதவி குழுக்களை ராமநாதபுரம் கலெக்டர் நேரில் சென்று பாராட்டினார்.
- மகளிர் குழுவை போல் ஒவ்வொரு குழுவும் அந்தந்த பகுதியில் சூழ்நிலைக்கு ஏற்ப உற்பத்தி பொருள்களை தயாரித்து விற்பனை செய்யலாம் என்றும் கூறினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், தாதனேந்தல் ஊராட்சியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் பண்ணை விவசாயம் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட கீரை வகைகளை பொது மக்களுக்கான விற்பனையினை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்து மகளிர் குழுவினை பாராட்டி இக்குழுவில் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கூறியதாவது:-
மகளிர் குழுவினர் ஒவ்வொரு ஊராட்சிகளும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிகள் இருக்கும்போது பார்த்துவிட்டு பணிகள் இல்லாத இடைப்பட்ட காலங்களில் இது போல் சுய தொழில்கள் தொடங்கிட வேண்டும். நிலையான வருமானம் என்பதை நம்மால் உருவாக்க முடியும். இன்றைய காலகட்டத்தில் மக்களின் தேவைகள் அதிகரிக்கும் வண்ணம் இருந்து வருகின்றன. அதை இருந்த இடத்திலிருந்து வழங்கும் வகையில் திட்டமிட்டு செயல்படலாம். தாதனேந்தல் இணைந்த கைகள் மகளிர் குழுவை போல் ஒவ்வொரு குழுவும் அந்தந்த பகுதியில் சூழ்நிலைக்கு ஏற்ப உற்பத்தி பொருள்களை தயாரித்து விற்பனை செய்யலாம்.
அதுமட்டுமின்றி ராமநாதபுரம் மாவட்டம் சுற்றுலாத்தலமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்க தாகும். கலை வண்ணப்பொருட்கள் தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்