என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சுனாமி நினைவு தினம்"
- கடற்கரையில் உயிரிழந்தவர்களை நினைத்து கண்ணீர் விட்டு அழுதபடி கடல் அலைகளை பார்த்து கும்பிட்டனர்.
- கடல் அலையில் பாலை ஊற்றியும், பூக்களைத் தூவியும் கண்ணீர் வடித்த படி நினைவு அஞ்சலி செலுத்தினர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் 19-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி என்கின்ற பேரலை கடலூர் மாவட்டத்தில் தாக்கியதில் சுமார் 610 பேர் பேரலையில் சிக்கி உயிரி ழந்தனர். இதன் நினைவு தினம் இன்று கடை பிடிக்கப் பட்டது. மீனவ கிராம மக்கள், உறவினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக அமைப்பினர், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் இந்த சுனாமி தினத்தை அனுசரித்தனர்.
இந்தநிலையில் இன்று காலை சுனாமி நினைவு தினத்தையொட்டி சுனாமி பேரலையில் இறந்த நபரின் குடும்பத்தினர்கள், உறவினர்கள் கடலூர் தேவனாம் பட்டினம் மற்றும் சோனாங் குப்பம் பகுதிக்கு வந்தனர். பின்னர் கடற்கரையில் உயிரிழந்தவர்களை நினைத்து கண்ணீர் விட்டு அழுதபடி கடல் அலைகளை பார்த்து கும்பிட்டனர். பின்னர் கடற்கரை ஓர மாகவே கற்பூரம், விளக்கு, ஊதுபத்தி, கற்பூரம் ஆகியவற்றை ஏற்றி இறந்தவர்களுக்கு மண்டியிட்டு அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் பலர் தாங்கள் கொண்டு வந்த பால் மற்றும் கூடை நிரம்ப கொண்டு வந்த பூக்களையும் கடல் அலையில் பாலை ஊற்றியும், பூக்களைத் தூவியும் கண்ணீர் வடித்த படி நினைவு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் சுனாமி நினைவு தூண் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நினைவு தூணில் உறவினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் தாங்கள் கொண்டுவந்த மலர் வளையம், மலர்கள் மற்றும் மெழுகுவத்தி ஆகியவற்றை கொண்டு அஞ்சலி செலுத்தி னர். இறந்த குடும்பத்தின ரையும் மற்றும் உறவினர்களை நினைத்துக்கொண்டு பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதனை பார்த்த அனைவரும் கண் கலங்கியபடியே சென்றனர். மேலும் பலர் கண்ணீர் விட்டு அழுதனர். கடந்த 19 ஆண்டுக்கு முன்பு சுனாமி பேரலை தாக்கிய போது எப்படி இருந்ததோ அதே போல் இன்றும் அழுகை மற்றும் அலறல் குரல் நிலைத்திருந்தது. இன்று மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை.
- இன்று 19-வது ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் மீனவர்கள் கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள்.
- உவரியில் ஜெபம் முடிந்து ஊர்வலமாக சென்று கடலில் அஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடி:
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி இந்தோனேஷிய கடற்பரப்பில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் சுனாமி உருவானது.
அதன் தாக்கத்தால் பல்வேறு நாடுகளின் கடலோரப் பகுதிகளை சுனாமி என்னும் ஆழிப்பேரலை அழித்து சென்றது. இதில் தமிழகத்தில் ஏராளமான உயிர்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டது.
நெஞ்சை விட்டு அகலாத இந்த கோர சம்பவத்தை நினைவு கூரும் வகையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடற்கரை பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படுகிறது. இன்று 19-வது ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் மீனவர்கள் கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள்.
இதனை முன்னிட்டு தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த சங்கு குழி மீனவர் சங்கம் சார்பில் அதன் தலைவர் இசக்கிமுத்து தலைமையில் மீனவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள்.
இதில் செயலாளர் முருகையா, துணைத்தலைவர் மாரிலிங்கம், பொருளாளர் விமலேசன் உள்ளிட்ட ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் நெல்லை மாவட்டத்திலும் உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, இடிந்தகரை உள்ளிட்ட 9-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் இனிமேல் இப்படி ஒரு பேரழிவை இயற்கை தந்து விடக்கூடாது என வேண்டி கடல் தாய்க்கு மலர் தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினார்கள்.
உவரியில் ஜெபம் முடிந்து ஊர்வலமாக சென்று கடலில் அஞ்சலி செலுத்தினர். மேலும் மாவட்டம் முழுவதும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
- வேளாங்கண்ணி ஆர்ச்சில் உள்ள சுனாமி ஸ்தூபியில் மும்மத பிரார்த்தனை நடைபெற்றது.
- பகவத்கீதை, குரான், விவிலியம் உள்ளிட்டவைகளில் இருந்து வாசகங்கள் வாசிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி சுனாமி பேரலை தாக்கியது. இதனால் கடலோர கிராமங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. கடலோர மாவட்டங்களில் வசித்த ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதனால், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ந்தேதி சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் 19-வது ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வேளாங்கண்ணி பேராலயத்தில் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
தொடர்ந்து, வேளாங்கண்ணி ஆர்ச்சில் உள்ள சுனாமி ஸ்தூபியில் மும்மத பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்று மெழுகுவர்த்தியை கைகளில் ஏந்தியவாறு கடற்கரையில் இருந்து அமைதி பேரணியாக வந்து அஞ்சலி செலுத்தினர்.
அப்போது பகவத்கீதை, குரான், விவிலியம் உள்ளிட்டவைகளில் இருந்து வாசகங்கள் வாசிக்கப்பட்டது.
சுனாமி ஏற்பட்டு 18 ஆண்டுகள் கடந்த நிலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வேளாங்கண்ணி நினைவு ஸ்தூபிக்கு வந்து கண்ணீர் மல்க மெழுகுவர்த்தி ஏந்தி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
- சுனாமியின்போது சொந்தங்களை இழந்த குடும்பங்கள் ஏராளம்.
- சுனாமிக்கு பிறகு எழுதப்பட்ட கடலோர கவிதைகளில் சோக கீதமே மேலோங்கி இருந்தது.
தமிழ்நாட்டின் கிழக்கு பகுதி எல்லையாக வங்கக் கடலோரம் விளங்கி வருகிறது. வடக்கே திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் தொடங்கி, தெற்கே கன்னியாகுமரி மாவட்டம் ஏழுதேசம் வரை 1,076 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கரையோர பகுதியில் 13 மாவட்டங்களும், 561 மீன்பிடி கிராமங்களும் இருக்கின்றன. இங்கு வசிக்கும் மீனவ மக்களுக்கு தொழில் தருவது கடல், பொழுதுபோக்கு இடமாக அமைவது கடற்கரை. அலையோடு விளையாடியே பழக்கப்பட்ட அவர்களுக்கு, கடற்கரை வரை வந்து முத்தமிடும் அலைகள், நம் வீட்டு முற்றம் வரை வந்து மிரட்டும் என்று உணர்த்திய ஆண்டு 2004.
19 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள் (டிசம்பர் 26) அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவுக்கு அருகே கடலுக்குள் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், சுனாமி என்னும் ஆழிப்பேரலை 30 மீட்டர் உயரத்துக்கு கடலில் ஆர்ப்பரித்து எழுந்து 14 நாடுகளின் கடலோர பகுதிகளை கடுமையாக தாக்கியது.
"உலகம்தான் அழிகிறதோ?" என்ற மரண பயத்தில் உயிர் பிழைக்க ஓடிய மக்களையும் தயவுதாட்சண்யம் இன்றி சுனாமி அரக்கன் வாரிச் சுருட்டிக்கொண்டான். இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, மலேசியா உள்பட 14 நாடுகளில் கரையோரம் வசித்த 2 லட்சத்து 29 ஆயிரத்து 866 பேர் இறந்து போனார்கள். 43 ஆயிரத்து 786 பேர் இன்றுவரை காணவில்லை.
தமிழகத்திலும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மாண்டு போனார்கள். அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 6 ஆயிரத்து 65 பேரும், கடலூரில் 610 பேரும், சென்னையில் 206 பேரும் பலியானார்கள். பொருட்சேதமும் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்பட்டது.
சுனாமியின்போது சொந்தங்களை இழந்த குடும்பங்கள் ஏராளம். கடற்கரையோரம் அன்றைக்கு எழுந்த மரண ஓலம், அலைகளின் ஓசையையே அடங்கச் செய்துவிட்டது. சுனாமிக்கு இரையான கட்டிடங்கள், சுவடுகளாக இன்னும் பல இடங்களில் காட்சிப்பொருளாக இருக்கின்றன.
சுனாமிக்கு முன்னால் எழுதப்பட்ட கடலோர கவிதைகளில் காதல் மனம் வீசியது. ஆனால், சுனாமிக்கு பிறகு எழுதப்பட்ட கடலோர கவிதைகளில் சோக கீதமே மேலோங்கி இருந்தது.
இன்றைக்கு வங்கக் கடற்கரையோர கிராமங்களில், சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அன்று மறைந்தவர்களை மனதில் நினைத்து, கடலில் பால் ஊற்றி, பூக்கள் தூவி மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அலைகள் ஓய்வதில்லை. அதுபோல், சுனாமி நினைவுகளும் ஓயப்போவதில்லை. காலங்கள் கடந்தாலும் நினைவுகள் தொடரும்.
- சுனாமியால் உறவினர்களை பறிகொடுத்தவர்களின் துயரம் இன்னும் நீங்காமல் நீடிக்கிறது.
- கடற்கரையில் சுனாமியால் இறந்தவர்களின் படங்களை வைத்து அஞ்சலி செலுத்தப்படுகிறது.
சென்னை:
தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி சுனாமி பேரலை தாக்கியது. இதனால் கடலோர கிராமங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. கடலோர மாவட்டங்களில் வசித்த ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். சென்னை கடலோர பகுதிகளிலும் உயிரிழப்புகள் அதிகமாக இருந்தன. இதனால், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ந்தேதி சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் 19-வது ஆண்டு சுனாமி நினைவு தினம் நாளை கடைபிடிக்கப்படுகிறது. சுனாமி கோர தாண்டவம் ஆடிய தினம் நிகழ்ந்து 19 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஆறாத வடுக்களாகவே பொதுமக்களை வாட்டுகிறது. சுனாமியால் உறவினர்களை பறிகொடுத்தவர்களின் துயரம் இன்னும் நீங்காமல் நீடிக்கிறது.
சென்னை உள்பட தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் நாளை (26-ந்தேதி) கடற்கரை பகுதிகளில் சுனாமி நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இதையடுத்து நாளை கடற்கரையில் சுனாமியால் இறந்தவர்களின் படங்களை வைத்து அஞ்சலி செலுத்தப்படுகிறது. அதன் பிறகு கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்படுகிறது. இதில் அரசியல் கட்சி தலைவர்கள், பலியானவர்களின் குடும்பத்தினர், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துகிறார்கள்.
- சுனாமியால் உறவுகளை இழந்தவர்கள் சோகத்தில் இருந்து இன்னும் மீள முடியாமல் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.
- பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், மீனவர்களும் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
சென்னை:
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி கடலோரப் பகுதிகளை சுனாமி பேரலை புரட்டிப்போட்டது.
இந்தியா உள்பட 14 நாடுகளில் கடலோர பகுதிகளில் வசித்த மக்களையும் கடற்கரைகளுக்கு வேடிக்கை பார்க்க சென்றவர்களையும் திடீரென வந்த ஆழிப்பேரலை வாரிசுருட்டி இழுத்துச்சென்றது. இதில் 14 நாடுகளிலும் சேர்த்து 2½ லட்சம் பேர் பலியானார்கள்.
தமிழகத்தில் சென்னை முதல் குமரி வரை கடலோர பகுதிகளை துவம்சம் செய்த சுனாமிக்கு 10 ஆயிரம் பேர் பலியானார்கள். இப்படி சுனாமியால் உறவுகளையும், நண்பர்களையும் இழந்தவர்கள் இன்னமும் சோகத்தில் இருந்து மீளாமலேயே உள்ளனர்.
சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டு தோறும் டிசம்பர் 26-ந்தேதி சுனாமி நினைவு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 18-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
தமிழக கடலோர பகுதிகள் முழுவதிலும் சுனாமியால் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சென்னையிலும் கடற்கரை ஓரங்களில் சுனாமி நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. பட்டினப்பாக்கம், காசிமேடு உள்ளிட்ட அனைத்து கடலோர பகுதிகளிலும் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடலில் பால் ஊற்றப்பட்டது.
சுனாமியால் உறவுகளை இழந்தவர்கள் சோகத்தில் இருந்து இன்னும் மீள முடியாமல் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், மீனவர்களும் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதனால் கடலோர பகுதிகள் இன்று கண்ணீர் கடலாக காட்சி அளித்தது. உதிரி பூக்களை வாங்கி வந்து பலர் கடலில் தூவி மரியாதை செலுத்தினார்கள். மெரினா பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் ஊர்வலமாக சென்று மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தி.மு.க. சார்பில் கடலில் பால் ஊற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் மீனவ மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மாவட்டச் செயலாளர் தாய் இளைய அருணா, ஜே.ஜே.எபினேசர் எம்.எல்.ஏ., பகுதி செயலாளர் லட்சுமணன், சுற்றுச்சூழல் அணி தீனயாளன், மாவட்ட தலைவர் வெற்றி வீரன், ஆர்.வி.கணேஷ் உள்ளிட்ட ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
வடசென்னை பகுதியான காசிமேடு கடற்கரையில் அ.தி.மு.க. சார்பில் அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அ.தி.மு.க. முன்னணி தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
பாரதிய ஜனதா கட்சி சார்பில் சுனாமி நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதே போன்று மற்ற அரசியல் கட்சி தலைவர்களின் சார்பிலும் கடலோர பகுதிகளில் அஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு குமரி மாவட்டத்தில் நினைவு தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. அங்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
- கடற்கரை ஓரமாகவே கற்பூரம், விளக்கு, ஊதுபத்தி, கற்பூரம் ஆகியவற்றை ஏற்றி இறந்தவர்களுக்கு மண்டியிட்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
- கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூணில் உறவினர்கள், பொதுமக்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
கடலூர்:
கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி என்கின்ற பேரலை கடலூர் மாவட்டத்தில் தாக்கியதில் சுமார் 610 பேர் பேரலையில் சிக்கி உயிரிழந்தனர்.
இதன் நினைவு தினம் மீனவ கிராம மக்கள், உறவினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக அமைப்பினர், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் இந்த சுனாமி தினத்தை அனுசரித்தனர்.
இன்று சுனாமி நினைவு தினத்தையொட்டி சுனாமி பேரலையில் இறந்த நபரின் குடும்பத்தினர்கள், உறவினர்கள் கடலூர் தேவனாம்பட்டினம் மற்றும் சோனங்குப்பம் பகுதிக்கு வந்தனர். பின்னர் கடற்கரையில் உயிரிழந்தவர்களை நினைத்து கண்ணீர் விட்டு அழுதபடி கடல் அலைகளை பார்த்து கும்பிட்டனர்.
பின்னர் கடற்கரை ஓரமாகவே கற்பூரம், விளக்கு, ஊதுபத்தி, கற்பூரம் ஆகியவற்றை ஏற்றி இறந்தவர்களுக்கு மண்டியிட்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
மேலும் பலர் தாங்கள் கொண்டுவந்த பால் மற்றும் கூடை நிரம்ப கொண்டு வந்த பூக்களையும் கடல் அலையில் பாலை ஊற்றியும், பூக்களைத் தூவியும் கண்ணீர் வடித்தபடி நினைவு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் சுனாமி நினைவு தூண் அரசு சார்பில் அமைக்கப்பட்டிருந்தது. அந்த நினைவு தூணில் உறவினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் தாங்கள் கொண்டுவந்த மலர் வளையம், மலர்கள் மற்றும் மெழுகுவர்த்தி ஆகியவற்றை கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து பெண்கள் இறந்த குடும்பத்தினரையும் மற்றும் உறவினர்களை நினைத்துக்கொண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதனை பார்த்த அனைவரும் கண் கலங்கியபடியே கடந்து சென்றதை காண முடிந்தது. மேலும் பலர் இதனை பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர்.
கடந்த 18 ஆண்டுக்கு முன்பு சுனாமி பேரலை தாக்கி கடற்கரைப் பகுதிகள் அன்று எப்படி இருந்ததோ அதே போல் இன்றும் கடற்கரைப் பகுதியில் அழுகை மற்றும் அலறல் குரல் நிலைத்திருந்தது. இந்த நிலையில் இன்று மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை.
- அழகு என்றும் ஆபத்து என்று சொல்வார்களே, அதுபோல இந்த அழகான அலைகளும் ஆபத்தை ஏற்படுத்திய ஆண்டு 2004.
- தமிழகத்தில் சுனாமி தாக்குதலில் சென்னை முதல் குமரி வரை கிழக்கு கடலோர பகுதிகள் பாதிக்கப்பட்டன.
நாம் வாழும் பூமியின் மொத்தப் பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே நிலம். மீதி 2 பங்கு கடல்தான்.
7 கண்டங்களாக பிரிந்துகிடக்கும் இந்த நிலப்பரப்பை எப்போதும் முத்தமிட்டுக் கொண்டிருப்பது கடல் அலைகள்தான். ஓய்வில்லாத இந்த அலைகளின் ஓசையை நித்தமும் கேட்டு மகிழ்வதுதான் கடலோர மீனவ மக்களின் ஆசை. ஒவ்வொரு நாள் இரவிலும் அவர்களை தாலாட்டு இசை பாடி தூங்க வைப்பதே இந்த அலைகள்தான்.
அழகு என்றும் ஆபத்து என்று சொல்வார்களே, அதுபோல இந்த அழகான அலைகளும் ஆபத்தை ஏற்படுத்திய ஆண்டு 2004.
18 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள் (டிசம்பர் 26) அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவு கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், சுனாமி என்னும் ஆழிப்பேரலை 30 மீட்டர் உயரத்துக்கு கடலில் எழுந்து 14 நாடுகளில் கடலோரப் பகுதிகளை தாக்கியது.
என்னமோ... ஏதோ... என்று கரையோர மக்கள் உயிர் பிழைக்க ஓடியும், இரக்கமில்லாத சுனாமி அரக்கன் வயது வித்தியாசமின்றி வாரிச் சுருட்டிக்கொண்டான். இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, மலேசியா உள்பட 14 நாடுகளில் கரையோரம் இருந்த 2 லட்சத்து 29 ஆயிரத்து 866 பேர் மாண்டு போனார்கள். 43 ஆயிரத்து 786 பேரை காணவில்லை.
தமிழகத்தில் சுனாமி தாக்குதலில் சென்னை முதல் குமரி வரை கிழக்கு கடலோர பகுதிகள் பாதிக்கப்பட்டன. 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்தனர். அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 6 ஆயிரத்து 65 பேரும், கடலூரில் 610 பேரும், சென்னையில் 206 பேரும் பலியானார்கள். உயிர்ப்பலியை தாண்டி, பொருட்களின் சேத மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய்.
சுனாமியின்போது பெற்றோரை இழந்த குழந்தைகளும், குழந்தைகளை இழந்த பெற்றோரும் ஏராளம். கடலோரப் பகுதியில் அன்றைக்கு எழுந்த மரண ஓலம் அடங்க பல ஆண்டு காலம் ஆனது. ஆனால், கடல் அலை போல இன்னும் துயரச் சுவடுகள்தான் மறையவே இல்லை.
அன்றைக்கு சிறுவயதில் இறந்து போனவர்கள், உயிரோடு இருந்திருந்தால் இன்றைக்கு திருமணமாகி குடும்பமாக வாழ்ந்திருப்பார்கள். நடுவயதை ஒத்தவர்கள், பேரன்-பேத்தி என்று வாழ்வை ரசித்து வந்திருப்பார்கள். ஆனால், மாண்டவர்கள் என்றும் மீள முடியாது. அதுதான் இயற்கையின் இரக்கமற்ற நியதி. என்றாலும், 17 ஆண்டுகளாக கடற்கரையோரம் அந்த சோக கீதம் ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது.
இன்றைக்கு சென்னை முதல் குமரி வரை கடலோரம் வசிக்கும் கிராம மக்கள், கடலில் பால் ஊற்றி, பூக்களை தூவி, இறந்துபோனவர்களுக்காக அஞ்சலி செலுத்துவார்கள். பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும், மீனவ அமைப்பினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, தங்களுடைய ஆறுதலையும் தெரிவிப்பார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்