என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நீதித்துறை"
- நீதித்துறை மக்களுடையது. மக்களுக்காக செயல்படும் என்று நான் நம்புகிறேன்.
- நீதித்துறை எங்களுக்கு முக்கியமான கோயில் என்றார் மேற்கு வங்காள முதல் மந்திரி.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நீதித்துறை வளர்ச்சிகள் குறித்த கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இந்தக் கருந்தரங்கில் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்தக் கருத்தரங்கில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி பேசியதாவது:
நீதித்துறை எங்களுக்கு முக்கியமான கோயில். இது மந்திர் மற்றும் குருத்வாரா போன்றது.
மக்களுக்கு நீதி வழங்குவதில் அதிக கவனம் செலுத்தவேண்டும். நீதித்துறை மக்களுடையது. மக்களுக்காக செயல்படும் என்று நான் நம்புகிறேன்.
யாரையும் இழிவுபடுத்துவது எனது நோக்கமல்ல. ஆனால் நீதித்துறையில் அரசியல் சார்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
நீதித்துறை முற்றிலும் தூய்மையாகவும், நேர்மையாகவும், புனிதமாகவும் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
- 1949 நவம்பர் 26ல், அரசியல் நிர்ணய சபை உருவாக்கிய வடிவம் ஏற்கப்பட்டது
- இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் ஒரு பொது விடுமுறை நாள் அல்ல
வெள்ளையர்களின் காலனி ஆதிக்க ஆட்சியில் இருந்து இந்தியா 1947ல் சுதந்திரம் பெற்றது.
பல மதங்கள், இனங்கள், சாதிகள், ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பிரிவுகள் கொண்ட இந்திய மக்களை ஒருங்கிணைத்து வழிநடத்தி செல்லும் விதமாக நாட்டிற்கு ஒரு திசைகாட்டியாக விளங்க அரசியலமைப்பு சட்டம் தேவைப்பட்டது. இதை உருவாக்கி தரும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பை அரசியல் நிர்ணய சபை எனும் அறிஞர்களை கொண்ட குழு ஏற்று கொண்டது.
1949 நவம்பர் 26 அன்று இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை உருவாக்கி தந்த அரசியலமைப்பு சட்டத்தை இந்திய பாராளுமன்றம் ஏற்று கொண்டது.
இந்த அரசியலமைப்பு சட்டம் 1950 ஜனவரி 26 அன்று செயலுக்கு வந்தது.
இதையொட்டி ஆண்டுதோறும் நவம்பர் 26, இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் (சம்விதான் திவஸ்) என கொண்டாடப்படும் என 2015 அன்று மத்திய அரசாங்கத்தால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் 2015 அக்டோபர் 11 அன்று வெளியிடப்பட்டது. அதற்கு முன்பு வரை இது சட்ட தினம் என கொண்டாடப்பட்டு வந்தது.
அரசியலமைப்பு சட்டம் பொதுமக்களுக்கு வழங்கியுள்ள அதிகாரங்கள், உரிமைகள், கட்டுப்பாடுகள், சலுகைகள், விதிகள் மற்றும் விலக்குகள், வலியுறுத்தும் கடமைகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களை குறித்தும் நாடு முழுவதும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதமாகவும், இந்த அரசியலமைப்பை உருவாக்கிய குழுவின் தலைவராக இருந்த டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் உயரிய சித்தாந்தங்களை மக்கள் நினைவுகூரும் விதமாகவும் இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டாடப்படுகிறது.
சம உரிமை, சுதந்திரம், சகோதரத்துவம், சுரண்டலை மறுக்கும் உரிமை, தனது மதத்திற்கான சுதந்திரம் உள்ளிட்ட பல மனித உரிமைகள் எந்த பேதமுமின்றி அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வது அரசியலமைப்பு சட்டத்தில் வலியுறுத்தப்படுகிறது.
இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் ஒரு பொது விடுமுறை நாள் அல்ல என்பதும் உலக நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்களிலேயே இந்திய அரசியலமைப்பு சட்டம்தான் அதிக நீளம் உடையது என்பதும் குறிப்பிடத்தக்கது.
"மக்களுக்காக, மக்களால், மக்களின் ஜனநாயகம்" என புகழ் பெற்ற இந்திய ஜனநாயகத்தின் 3 அங்கங்களாக விளங்கும் பாராளுமன்றம், நீதித்துறை மற்றும் நிர்வாக துறை ஆகியவற்றின் கடமைகளையே வலியுறுத்துவது இந்திய அரசியலமைப்பு சட்டம்தான் என்பதே இதன் பெருமைக்கு ஒரு சான்று.
அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை சித்தாந்தங்கள் வலுவாகவும் மாற்ற இயலாததாகவும் உருவாக்கப்பட்டிருந்தாலும், ஓரு சில விதிமுறைகள் வெவ்வேறு காலகட்டங்களுக்கு ஏற்ப பாராளுமன்றத்தால் மாற்றப்பட்டுள்ளன.
1950ல் ஏற்று கொள்ளப்பட்ட அரசியமைப்பு சட்டத்தில் 2023 செப்டம்பர் மாதம் வரை, 106 மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- தென்காசியில் மகளிருக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் வக்கீல்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
தென்காசி:
நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மகளிர் ஆணையத்தின் மகளிருக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் தென்காசியில் நடைபெற்றது. இதில் தென்காசி வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், முதன்மை சார்பு நீதிபதியுமான ரஸ்கின் ராஜ் மற்றும் தென்காசி கூடுதல் சார்பு நீதிபதி மாரீஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வக்கீல்கள் செந்தூர் பாண்டியன், சங்கர சுப்பிரமணியன் முத்துக்குமார் தாஹிரா பேகம் கவுரி, பூசை துரைச்சி, கிரிஜா கோபால கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர். மகளிர் திட்டத்தின் திட்ட இயக்குனர் குருநாதன் மற்றும் உதவி திட்ட அலுவலர் சிவக்குமார் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- அரியலூர் நீதித்துறை ஊழியர் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்
- தலைமை குற்றவியல் நீதிமன்ற இரண்டாம் நிலை எழுத்தர் பொன்.சண்முகம் மாவட்ட தலைவராக தேர்வு செய்யபட்டுள்ளார்.
அரியலூர்:
அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம் பகுதிகளில் பணிபுரியும் கோர்ட் ஊழியர்கள் ஒருங்கிணைந்த அரியலூர் மாவட்ட நீதித்துறை ஊழியர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைமை குற்றவியல் நீதிமன்ற இரண்டாம் நிலை எழுத்தர் பொன்.சண்முகம் மாவட்ட தலைவராகவும், குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் 1 அலுவலக உதவியாளர் பாஸ்கர் மாவட்ட செயலாளராகவும், முதன்மை சார்பு நீதிமன்ற இரண்டாம் நிலை எழுத்தர் நல்லதம்பி மாவட்ட பொருளாளராகவும், குடும்ப நல நீதிமன்றம் முதல் நிலை எழுத்தர் உதயகுமார், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற அலுவலக உதவியாளர் வேல்முருகன், மகிளா கோர்ட் அலுவலக உதவியாளர் சுப்பிரமணியன் ஆகியோர் மாவட்டத் துணைத் தலைவராகவும், மகிளா விரைவு நீதிமன்ற முதல் நிலை சுருக்கெழுத்து தட்டச்சர் தினேஷ், முதன்மை மாவட்ட நீதிமன்ற உதவியாளர் மதன்குமார், சார்பு நீதிமன்ற நகல் பரிசோதகர் பாஸ்கரன் ஆகியோர் மாவட்ட துணைச் செயலாளராகவும், முதன்மை மாவட்ட நீதிமன்ற முதுநிலை கட்டளை பணியாளர் வடிவேல், ஜெயங்கொண்டம் சார்பு நீதிமன்ற இளநிலை கட்டளை பணியாளர் பாரத், ஆகியோர் மாநில செயற்குழு உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்