search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் அணி"

    • பெண் வாக்காளர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர்.
    • கூட்டம் நடத்தும் பொறுப்பு பா.ஜ.க. மகளிர் அணியிடம் அளிக்கப்பட்டு உள்ளது.

    பா.ஜ.க. மகளிர் அணி நடத்தும் பிரச்சாரக் கூட்டம் மே21-ந் தேதி , உத்தரபிரதேசத்தின் சம்பூர்ணானந்த் சம்ஸ்கிருத பல்கலைக் கழகத்தில் நடைபெறுகிறது.

    இந்த பழமையான கல்வி நிறுவனம், பிரதமர் மோடியின் பாராளுமன்றத் தொகுதியான வாரணாசியில் உள்ளது. இக்கூட்டத்தில், கிழக்கு உத்தரபிரதேசத்தில் மீதம் இரண்டு கட்ட பாராளுமன்றத் தொகுதிகளின் பெண் வாக்காளர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். இக்கூட்டம் நடத்தும் பொறுப்பு பா.ஜ.க. மகளிர் அணியிடம் அளிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து பா.ஜ.க. மகளிர் அணியின் பொறுப்பு செயலாளர் அர்ச்சனா மிஸ்ரா கூறும்போது, "பிரதமர் வேட்புமனு தாக்கலுக்காக இந்த முறை நடைபெற்ற ஊர்வலத்தில் திரளான பெண்கள் கூடி நின்று ஆர்ப்பரித்தனர்.

    இதைக் கண்டு பிரதமர் மோடிக்கு உதித்த யோசனையின் பேரில் இந்த கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் அனைத்து ஏற்பாடு களும், நடவடிக்கைகளும் முழுக்க, முழுக்க பெண்கள் மட்டுமே செய்ய உள்ளனர்" என்றார்.

    பா.ஜ.க.வின் இந்த வித்தியாசமான பிரச்சாரக் கூட்டத்திற்காக அதன் பெண் நிர்வாகிகள் பலரும் நேரடியாக அழைப்பிதழ் விநியோகித்து வருகின்றனர்.

    இக்கூட்டத்தில் வாரணாசி மட்டுமின்றி அதன் சுற்றுப்புற பாராளு மன்றத் தொகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்களை பங்கேற்க செய்ய முயற்சிக்கப்படுகிறது.

    இதன்மூலம், பா.ஜ.க. மகளிர் அணியினரும், பெண் நிர்வாகிகளும் தமக்கு கிடைத்த முதல் வாய்ப்பை முறையாக பயன்படுத்தி கட்சித் தலைமையிடம் பாராட்டை பெற ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    • இந்நிலையில் ரசிகர்கள் பலரும் சமூக வலை தளத்தில் 'விராட் கோலி' கேலி செய்து மீம்ஸ்கள் உருவாக்கி உள்ளனர்
    • வேடிக்கையான மீம்ஸ்கள் மூலம் தங்கள் எதிர்வினைகளை வெளிப்படுத்தினர்

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் 2 -வது சீசன் கடந்த பிப்ரவரி 23- ந்தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது.

    இப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், யுபி வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் என 5 அணிகள் இடம் பெற்று விளையாடின.டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று இறுதிப்போட்டி நடந்தது.

    இறுதி ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணி வெற்றி பெற்று, டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணிக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மகளிர் பிரீமியர் லீக் 2024 பட்டம் பெற்றது. 

    சாம்பியன் பட்டம் வென்று ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணி அசத்தியதை ரசிகர்கள் கொண்டாடினர்.

    இந்நிலையில் ரசிகர்கள் பலரும் சமூக வலை தளத்தில் 'விராட் கோலி' கேலி செய்து மீம்ஸ்கள் உருவாக்கி உள்ளனர்.மேலும்சில வேடிக்கையான மீம்ஸ்கள் மூலம் தங்கள் எதிர்வினைகளை வெளிப்படுத்தினர்.

    அதில் ஒரு சில 'மீம்ஸ்கள்' வருமாறு:

    தூள்' படத்தில் நடிகை ரீமா சென்-ஐ கவருவதற்காக உடற்பயிற்சி செய்வது போல் விவேக் ஏமாற்றுவார். அப்போது, திடீரென பறவை முனியம்மா, அந்த காகிதத்தாலான உடற்பயிற்சி பொருட்களை எல்லாம் தூக்கி எறிவார்.

    அதுமட்டுமல்லாமல், இந்த கருமத்தைதான் ராத்திரி முழுக்க ஒட்டிட்டு இருந்தியா என்று நக்கல் செய்வார். அதேபோல் பறவை முனியம்மாவாக ஆர்சிபி மகளிர் அணியையும், விவேக்காக ஆர்சிபி ஆடவர் அணியையும் மாற்றி, 16 சீசனா இந்த கோப்பையை ஜெயிக்க தான் உருட்டிட்டு இருந்தியா என்று உருவாக்கப்பட்டு உள்ளது.




     

    சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த் ஒரு வாரத்தில் வீட்டில் இருந்து புறப்படுவதை எண்ணி வடிவேலு, நாசர் மகிழ்ச்சி அடைவார்கள். அப்போது ரஜினிகாந்த், ஒரு மாதம் இருந்து செய்ய வேண்டிய வேலையை ஒரு வாரத்தில் முடித்துவிட்டேன் என்பார்.

    அதனை ஆர்சிபி மகளிர் அணி பேசுவதாக மாற்றி, எங்களோட ஆடவர் அணி 16 வருஷமா பண்ணாததை.. நாங்கள் 2 சீசனிலேயே செய்து முடித்துவிட்டோம் என்று உருவாக்கப்பட்டு உள்ளது

    அதேபோல நடிகர் வடிவேலு அரசியல் வாதியாக வெள்ளை வேட்டி, சட்டை துண்டு அணிந்து மிரட்டலாக நடந்து வருவது போலவும் அவருக்கு அடியாளாக கம்புடன் விராட் கோலி நடந்து வருவது போலவும் " பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக 16 வருசமாக காத்திருந்த ஒரே டீம்" ..என்ற வாசகத்துடனும் மீம்ஸ் உருவாக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல கிரிக்கெட் ரசிகர்கள் ஆயிரக்கணக்கான மீம்ஸ்கள் உருவாக்கி இணைய தளத்தில் பதிவிட்டு உள்ளனர்.

    • டாக்டர்கள் பரிசோதித்து விட்டு வேலு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
    • தப்பி ஓடிய ராஜேசை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அவரை பல இடங்களில் தேடி வந்தனர்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட் டம் விராலிமலை ராஜாளிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி கவுண்டர் (வயது 80). இவருக்கு வேலு (56) சாமிக்கண்ணு( 52) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் வேலு மணப்பாறை அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். ரங்கசாமி கவுண்டரின் மகன்களுக்கு இடையே சொத்து தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று சாமிக்கண்ணு மகன் ராஜேஷ்(25) ராஜாளிப்பட்டி யில் உள்ள தனது பெரியப்பா வேலுவின் வீட்டிற்கு சென்றார். அங்கு சொத்து பிரச்சினை தொடர்பாக அவர் வேலுவிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    இதில் ஆத்திரமடைந்த அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வேலுவை சரமாரியாக குத்தினார். தடுக்க வந்த தாத்தா ரங்கசாமி கவுண்டருக்கும் கத்திகுத்து விழுந்தது. பின்னர் ராஜேஷ் அங்கிருந்து தப்பி ஓடினார்.

    கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த 2 பேரையும் உறவினர்கள் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு வேலு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    கொலை செய்யப்பட்ட வேலுவின் மனைவி திருப்பதி புதுக்கோட்டை மாவட்ட பா.ஜ.க. மகளிர் அணி தலைவியாக உள்ளார். ரங்கசாமி கவுண்டருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன், துணை போலீஸ் காயத்ரி ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    தப்பி ஓடிய ராஜேசை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப் படை போலீசார் அவரை பல இடங்களில் தேடி வந்தனர். இதை தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை)காலை 8 மணி அளவில் ராஜாளி பட்டி காட்டுப் பகுதியில் அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    கைதான ராஜேஷ் போலீசில் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது;-

    எனது தாத்தாவுக்கு கவரப்பட்டியில் ஒன்றரை ஏக்கர் விவசாய நிலம் இருந்தது. அதனை கடந்த 6 மாதத்திற்கு முன்பு எங்களுக்கு தெரியாமல் தாத்தா பெரியம்மா (வேலுவின் மனைவி) திருப்பதி பெயருக்கு எழுதிக் கொடுத்துவிட்டார்.

    இது தொடர்பாக கேட்க சென்றபோது பெரியப்பா என்னை மதிக்காமல் திட்டினார். இதனால் ஆத்திரமடைந்த நான் அவரை கத்தியால் குத்தி கொலை செய்தேன். தடுக்க வந்த தாத்தாவையும் குத்தி விட்டு தப்பி சென்றேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். தொடர்ந்து ராஜேசிடம் விசாரணை நடந்து வருகிறது.

    கைதான சதீஷ்குமார் அங்குள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    • டாக்டர் பிரவீன் அய்யப்பன் அனைவரையும் வரவேற்றார்.
    • பெண்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தி.மு.க. திராவிட மாடல் அரசின் சாதனைகளின் முழக்கங்களுடன் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிரின் மாபெரும் எழுச்சி பேரணி கடலூர் தொகுதி எம்.எல்.ஏ. அய்யப்பன் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்றது. இப் பேரணிக்கு லீமா அய்யப்பன் தலைமை தாங்கினார். டாக்டர் பிரவீன் அய்யப்பன் அனைவரையும் வரவேற்றார்.

    இப்பேரணி கடலூர் ஜவான்பவன் சாலையில் இருந்து தொடங்கப்பட்டு தமிழக அரசின் சாதனைகளை முழக்கங்களோடு அண்ணா மேம்பாலம், பாரதி சாலை வழியாக கடலூர் சுப்புராய ரெட்டியார் திருமண மண்டபத்தில் முடிவடைந்தது. மாநகராட்சி கவுன்சிலர்கள் கீதா குணசேகரன், சுமதி ரங்கநாதன், மகேஸ்வரி விஜயன், ராதிகா பிரேம்குமார், கீர்த்தனா ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் பேரணியில் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் வி.எஸ்.எல். குணசேகரன், லட்சுமி செக்யூரிட்டி சர்வீஸ் கே.ஜி.எஸ் தினகரன், வக்கீல் சுந்தர், தொழிலதிபர் சித்ராலயா ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன், தொழிலதிபர் உமா சந்திரன், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர்,மாநகராட்சி கவுன்சிலர்கள் பிரகாஷ், தமிழரசன், சரத் தினகரன், பாருக் அலி, கர்ணன் மற்றும் நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் அனைத்து நிர்வாகிகள் மற்றும் பெண்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    • ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு பாரதிய ஜனதா அரசுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கமிட்டனர்.
    • பல்லாவரம், தாம்பரம், குன்றத்தூர் உள்ளிட்ட ஒவ்வொரு ஊர்களிலும் திமுக பேச்சாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

    சென்னை:

    மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், பாரதிய ஜனதா ஆட்சியை கண்டித்தும் சென்னை புறநகரில் காஞ்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் 6 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் இன்று நடைபெற்றன.

    ஆலந்தூர் பல்லாவரம் தாம்பரம் செங்கல்பட்டு திருப்போரூர் குன்றத்தூர் ஆகிய இடங்களில் மகளிர் அணி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு பாரதிய ஜனதா அரசுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கமிட்டனர்.

    ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி நங்கநல்லூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதேபோல் பல்லாவரம், தாம்பரம், குன்றத்தூர் உள்ளிட்ட ஒவ்வொரு ஊர்களிலும் திமுக பேச்சாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

    • செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட மகளிர் அணி தலைவி மகாலட்சுமி தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தென்காசி:

    தென்காசியில் பா.ஜ.க. மாவட்ட மகளிர் அணி செயற்குழு கூட்டம் மற்றும் பயிற்சி முகாம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட மகளிர் அணி தலைவி மகாலட்சுமி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் அனிதா செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வரவேற்றார்.

    இதில் மாநில மகளிர் அணி செயலாளர் மற்றும் பொதுச் செயலாளர் நெல்லையம்மாள், தென்காசி மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா, பொதுச்செயலாளர்கள் பாலகுருநாதன், ராமநாதன், பொருளாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவி வக்கீல் முத்துலட்சுமி, மாவட்ட செயலாளர் ராஜலட்சுமி, முத்துலட்சுமி, மாவட்டத் துணைத்தலைவர் ராஜா லெட்சுமி, மகளிர் அணி மாவட்ட செயலாளர் வளர்மதி, ராஜலெட்சுமி சுந்தராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், தென்காசி மாவட்ட அரசு மருத்துவ மனைகளில் பிரசவத்திற்கு வரும் தாய்மார்களிடம் மருந்து பற்றாக்குறை என கூறி வெளியில் இருந்து மருந்து வாங்கி வரக் கூறும் நிலையை அரசு போக்க வேண்டும். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணா மலை தலைமையில் தென்காசி மாவட்டத்தில் பொதுக் கூட்டம் நடத்துவது எனவும், மாவட்ட மகளிர் அணி சார்பில் 5 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    ×