என் மலர்
நீங்கள் தேடியது "தொழிலாளி படுகாயம்"
- லோகநாதன் சொந்த வேலையாக தியாகதுருகத்தில் இருந்து எலவனாசூர்கோட்டைக்கு தனது மொபட்டில் நேற்று சென்று கொண்டிருந்தார்.
- கார் அவரது மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த லோகநாதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் கோவிந்தபக்தர் தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 45). கூலி தொழிலாளி. இவர் சொந்த வேலையாக தியாகதுருகத்தில் இருந்து எலவனாசூர்கோட்டைக்கு தனது மொபட்டில் நேற்று சென்று கொண்டிருந்தார். அப்போது பெரியமாம்பட்டு அருகே சென்றபோது தனக்கு பின்னால் வந்த கார் அவரது மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த லோகநாதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக சேலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து அவரது தந்தை ராமமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் சேலம், காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் கார்த்திக் (33) என்பவர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- தேயிலை தோட்ட மறைவில் இருந்த சிறுத்தை ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் பன்னீர்செல்வம் மீது பாய்ந்து அவரை தாக்கியது
- சிறுத்தை அங்கிருந்து ஓடி அருகே இருந்த புதருக்குள் மறைந்து விட்டது.
கோத்தகிரி:
கோத்தகிரியை அடுத்த சோலூர்மட்டம் பகுதியில் அடர்ந்த வனப்பகுதிகள் பெருமளவில் காணப்படுகின்றன.
இந்த வனப்பகுதிகளில் சிறுத்தை, கரடி, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் அதிகமாக காணப்படுகிறது. வன விலங்குகள் அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருவது வாடிக்கையாகி விட்டது.
சோலூர்மட்டம் பகுதிக்கு உட்பட்ட பரவக்காடு பகுதியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். கூலித்தொழிலாளி.
இவர் இன்று காலை தனது வீட்டில் இருந்து, பணிக்கு செல்வதற்காக பரவக்காடு பகுதியில் உள்ள தேயிலை தோட்டம் வழியாக நடந்து வந்தார்.
அப்போது அங்கு தேயிலை தோட்ட மறைவில் இருந்த சிறுத்தை ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் பன்னீர்செல்வம் மீது பாய்ந்து அவரை தாக்கியது.
இதில் பயத்தில் பன்னீர்செல்வம் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதையடுத்து சிறுத்தை அங்கிருந்து ஓடி அருகே இருந்த புதருக்குள் மறைந்து விட்டது.
இதில் அவரது கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குடியிருப்பு பகுதியில் உலாவரும் இந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சவ ஊர்வலத்தின்போது விபரீதம்
- பலத்த தீ காயம் அடைந்தனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளூர் கிராமத்தில் நேற்று சவ ஊர்வலம் நடைபெற்றது.
அப்போது சிலர் பட்டாசுகளை கொளுத்தி தூக்கி வீசியுள்ளனர். அப்போது அந்த வண்டியில் இருந்த கள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் (வயது 32)டிரைவர், கே.வி.குப்பம் அடுத்த கீழ்ஆலத்தூர் நாகல் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி டில்லி பாபு (27) என்பவர்கள் மீது பட்டாசு பட்டத்தில் பலத்த தீ காயம் அடைந்தனர்.
- கிணற்றில் உள்ள மோட்டாரில் பழுது ஏற்பட்டதால் உத்தமபாளையம் அம்மாபட்டியைச் சேர்ந்தவரை வேலைக்கு அழைத்தார்.
- இந்நிலையில் சம்பவத்தன்று மோட்டாரை பழுது பார்க்க சென்றவர் கிணற்றில் தவறி விழுந்தார்.
சின்னமனூர்:
சின்னமனூர் அருகே எல்லப்பட்டியைச் சேர்ந்தவர் பாலு. இவரது தோட்டத்து கிணற்றில் உள்ள மோட்டாரில் பழுது ஏற்பட்டது. பழுதை சரிபார்ப்பதற்கு உத்தமபாளையம் அம்மாபட்டியைச் சேர்ந்த ஆனந்த் (வயது 45) என்பவரை வேலைக்கு அழைத்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மோட்டாரை பழுது பார்க்க சென்ற ஆனந்த் கிணற்றில் தவறி விழுந்தார். இதையடுத்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி ஆனந்தை மீட்டனர்.
கிணற்றில் தவறி விழுந்ததில் ஆனந்துக்கு படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- மாணவியை மாடு முட்டி தூக்கியது போல் பழவந்தாங்கலில் தொழிலாளி ஒருவரை மாடு முட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் மாட்டை விரட்டியடித்து உயிருக்கு போராடியவரை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆலந்தூர்:
அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனி, இளங்கோ தெரு வழியாக தாயுடன் நடந்துசென்ற சிறுமியை கடந்த மாதம் மாடு ஒன்று முட்டி தூக்கி வீசியது. இந்த கண்காணிப்பு கேமிரா காட்சி பார்ப்பவர்களை பதைபதைக்க வைத்தது.
இதைத்தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாலையில் சுற்றும் கால்நடைகளை கட்டுப்படுத்த மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்தது.
போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சுற்றிய கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மாணவியை மாடு முட்டி தூக்கியது போல் பழவந்தாங்கலில் தொழிலாளி ஒருவரை மாடு முட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பழவந்தாங்கல், பி.வி. நகர், 2-வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் கண்ணன் (51). தொழிலாளி. மனைவியை பிரிந்து வாழும் இவர் தங்கை வீட்டில் தங்கி இருந்தார்.
இவர் நேற்று இரவு 7 மணியளவில் வீட்டின் அருகே உள்ள கடைக்கு நடந்து சென்றார். நேரு நெடுஞ்சாலை வழியாக உழவர் சந்தை அருகே சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த மாடு ஒன்று திடீரென ஆவேசம் அடைந்து கண்ணனை முட்டி தூக்கி வீசியது. இதில் அவரது வயிறு கிழந்து குடல் வெளியே சரிந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அந்த மாட்டை விரட்டியடித்து உயிருக்கு போராடிய கண்ணனை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பழவந்தாங்கல் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். கண்ணனை மாடு முட்டி தூக்கி வீசிய பகுதியில் கால்நடைகள் அதிகம் சுற்றி வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தொழிலாளியை மாடு முட்டி தூக்கி வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையை சேர்ந்தவர் சங்கர் (வயது 45). தொழிலாளி. இவர் தனது மனைவி மற்றும் 2 மகன்களான மணிமாறன், அபிஷேக் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் மங்கலம்பேட்டை நோக்கி இன்று காலை சென்று கொண்டிருந்தார்.
அப்போது விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள வயலூர் ெரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி மேம்பால பக்கவாட்டு தடுப்புச் சுவரில் பலமாக மோதியது. இதில் சங்கருக்கு தலையில் அடிபட்டு பலத்த காயமடைந்தார். மற்றவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.அவ்வழியே சென்றவர்கள் சங்கரை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தகராறு முற்றிய நிலையில் அரிவாளால் ஜேசுராஜா போலீசாரை வெட்ட முயன்றார்.
- அரிவாள் வெட்டில் காயமடைந்த ஏட்டு காளிமுத்துவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சாயல்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள உறைக்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் ஜேசுராஜா (வயது 45), பனைத்தொழிலாளி. இவர் போக்சோ வழக்கில் கைதாகி சிறையில் இருந்தார். பினனர் ஜாமினில் வெளியே வந்தவர் வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தார். கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது.
அதன்பேரில் நேற்று காலை சப்-இன்ஸ்பெக்டர் சாலமன் தலைமையில் ஏட்டு காளிமுத்து (35) மற்றும் போலீசார் ஜேசுராஜாவை பிடிக்க அவரது வீட்டிற்கு சென்றனர். அவரிடம் கோர்ட்டு உத்தரவை கூறி போலீஸ் நிலையத்திற்கு வருமாறு அழைத்தனர்.
அப்போது கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் வீட்டுக்குள் சென்று சட்டை அணிந்து வருவதாக கூறி சென்றவர் அரிவாளுடன் வந்து போலீசாருடன் தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றிய நிலையில் அரிவாளால் ஜேசுராஜா போலீசாரை வெட்ட முயன்றார்.
இதை தடுக்க முயன்ற ஏட்டு காளிமுத்துவுக்கு கை, கால்களில் சரமாரியாக வெட்டு விழுந்தது. அதிர்ச்சியடைந்த மற்ற போலீசார் உடனே சுதாரித்துக் கொண்டு ஜேசுராஜாவை வளைத்து பிடித்தனர். அப்போது போலீசாரை தள்ளி விட்டு ஜேசுராஜா தப்பியோடி உள்ளார். போலீசார் அவரை விரட்டி சென்றனர்.
ஒரு பனை மரத்தில் ஏறிய போது ஜேசுராஜா தவறி கீழே விழுந்தார். இதில் அவரது கால் முறிந்தது. அவரை கைது செய்த போலீசார் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேலும் அரிவாள் வெட்டில் காயமடைந்த ஏட்டு காளிமுத்துவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை டி.ஐ.ஜி. துரை, போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.
- அடையாளம் தெரியாத வாகனம் மோதியது
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள அயிதம்பட்டு ஊராட்சியை சேர்ந்தவர் பாஸ்கரன், கூலி தொழிலாளி. இவர் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றார்.
அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த பாஸ்கரன் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.