search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காய்ச்சல் பரிசோதனை"

    • மலப்புரம் மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட பகுதிகள் கட்டுப்பாடு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    களியக்காவிளை:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது வாலிபர், கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவர் நிபா வைரஸ் பாதிப்பால் இறந்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில் 175 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அவர்களின் திரவ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.

    மேலும் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட பகுதிகள் கட்டுப்பாடு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் வசிப்பவர்கள் கேரள சுகாதாரத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கிடையில் கேரள மாநிலத்தின் அண்டை மாநிலங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களிலும் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பை தொடங்கி உள்ளனர்.

     

    களியக்காவிளை சோதனை சாவடியில் சுகாதாரத்துறையினர் காய்ச்சல் பரிசோதனை செய்தனர்

    களியக்காவிளை சோதனை சாவடியில் சுகாதாரத்துறையினர் காய்ச்சல் பரிசோதனை செய்தனர்

    குமரி மாவட்டத்தை பொறுத்தவரை களியக்காவிளை, காக்கவிளை சோதனை சாவடிகளில் இன்று காய்ச்சல் பரிசோதனையில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டனர். இதற்காக சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி செய்வதற்காக 3 சுற்றுகளாக பணி பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு சுற்றுக்கு 2 பேர் பணியில் உள்ளனர். அவர்கள் கேரளாவில் இருந்து வருபவர்களை, தெர்மாமீட்டர் உதவியுடன் பரிசோதித்தனர்.

    இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கேரளாவில் நிபா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் சோதனை செய்ய பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தெர்மா மீட்டர் உதவியுடன் காய்ச்சல் பரிசோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையின்போது காய்ச்சல் இருப்பது தெரியவந்தால், அவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்றால், திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்.

    அதேநேரம் அவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்றால், நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்கு அனுப்பப்படுவார். இது தொடர்பான தகவல் சுகாதாரத்துறையின் தலைமைக்கு அளிக்கப்படும். குமரி மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரிகளில் யாரேனும் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டால், அதுபற்றி சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    இதற்கிடையில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள காய்ச்சல் வார்டில் இந்த சிகிச்சைக்காக ஆண்கள், பெண்களுக்காக தலா 2 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    • தீவிரமாக கண்காணிக்க பொதுசுகாதாரத்துறை உத்தரவு.
    • எல்லைகளில் மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.

    கோவை:

    கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக 14 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் அங்கு 60 பேருக்கும், பாலக்காடு மாவட்டத்தில் 2 பேருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

    தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழம்-கேரளா எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென பொதுசுகாதாரத்துறை உத்தரவிட்டு உள்ளது.

    அதன்படி கோவை-கேரளா எல்லையில் வாளை யார், வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி, மீனாட்சி புரம், கோபாலபுரம், செம்மனாம்பதி, வீரப்பகவு ண்டன்புதூர், நடுப்புணி, ஜமீன்காளியாபுரம், வடக்காடு உள்ளிட்ட 13 சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறை ஊழியர்கள் சிறப்பு தற்காலிக முகாம் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கேரளாவில் இருந்து கோவைக்கு கார், பஸ் மற்றும் வாகனங்களில் வருவோருக்கு நிபா காய்ச்சல் பாதிப்பு இருக்கிறதா என மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.

    இதில் அவர்களுக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்ட பின்னரே சம்பந்தப்பட்ட வாகனங்கள் கோவைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

    மேலும் நிபா வைரஸ் தாக்கம் குறையும்வரை தமிழக மக்கள் கேரளாவுக்கு தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாமென கோவை சுகாதார த்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    நிபா வைரஸ் காய்ச்சல் என்பது வவ்வால்கள் மூலம் பரவக்கூடியது. அவை உட்கொள்ளும் பழங்கள், சிறுநீர், உமிழ்நீர், கழிவுகள் ஆகியவை மூலம் தொற்று பரவும் வாய்ப்பு உள்ளது. தீராத காய்ச்சல், இருமல், தலைவலி, வயிற்றுப்போக்கு, மூச்சு திணறல், மனநிலை பிரச்சினை ஆகியவை நிபா வைரசின் முக்கிய அறிகுறிகள் ஆகும்.

    இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதார அதிகாரி அருணா கூறியதாவது:-

    கேரளாவில் நிபா வைரஸ் பரவலை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் உள்ள 13 சோதனைச்சாவடிகளிலும் சுகாதாரக்குழு நியமிக்க ப்பட்டு அங்கு 24 மணிநேரமும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் நுழையும் வாகனங்கள் கிருமிநாசினி மூலம் தூய்மை செய்யப்படுகிறது.

    நிபா வைரஸ் தொற்று ஏற்பட்ட நபரின் உமிழ்நீர், சிறுநீர், சளி மூலமாக மற்றவர்களுக்கு நோய் பரவும் ஆபத்து உள்ளது. எனவே மாவட்டத்தின் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் நிபா வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சைக்கு வருவோர் பற்றிய விவரங்களை தெரிவிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இதுதவிர கோவை மாவட்டம் முழுவதும் நிபா வைரஸ் தொடர்பாக தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை யாருக்கும் பாதிப்பு கண்டறியப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் கடந்த முறை கொரோனா தொற்று பரவியபோது இங்குள்ள மக்களிடம் நோய்எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்து காணப்பட்டது.
    • கொரோனா தொற்று பரவல் குறித்து பெரிய அளவில் அச்சப்பட தேவையிலை.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் அனைத்து நாட்களும், சிங்கப்பூருக்கு வாரத்தில் 5 நாட்களும் சர்வதேச விமானங்கள் இருமார்க்கங்களிலும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா நோய்த்தொற்று பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதனை தொடர்ந்து சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜாவில் இருந்து சர்வதேச விமானம் மூலம் கோவை வரும் பயணிகளிடம் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்ச்சல் பரிசோதனை பணிகள் தீவிரமாக தொடங்கி நடைபெற்று வருகின்றன.

    இதுதொடர்பாக கோவை விமான நிலைய இயக்குனர் செந்தில்வளவன் கூறுகையில், கோவை விமான நிலையத்துக்கு ஷார்ஜா மற்றும் சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளிடம் தற்போது காய்ச்சல் பாதிப்புகளை கண்டறியும் வகையில் சுகாதாரத்துறையுடன் ஒருங்கிணைந்து தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகிறோம். மேலும் கோவை விமான நிலையத்தில் ஏற்கனவே தானியங்கி காய்ச்சல் கண்டறியும் எந்திர பரிசோதனைகள் செயல்பாட்டில் உள்ளன.

    சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா பரவல் காரணமாக மத்திய-மாநில அரசுகள் இதுவரை பிரத்யேக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்படவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை விமான நிலையத்துக்கு வரும் பயணிகளிடம் காய்ச்சல் கண்டறியும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்து உள்ளார்.

    கோவை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அருணா கூறுகையில், தமிழகத்தில் கடந்த முறை கொரோனா தொற்று பரவியபோது இங்குள்ள மக்களிடம் நோய்எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்து காணப்பட்டது. ஆனால் தற்போது அவர்களுக்கு கொரோனாவை தடுக்கும் விதமாக, 2 தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. எனவே கொரோனா தொற்று பரவல் குறித்து பெரிய அளவில் அச்சப்பட தேவையிலை. சிங்கப்பூரில் பரவி வரும் கொரோனா தொற்றால் தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அரசு சார்பில் பிரத்யேக தகவல் வெளியாகும்பட்சத்தில் அவற்றின்படி கூடுதல் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்து உள்ளார்.

    • காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அருகே உள்ள சுகாதார மையம் மற்றும் ஆஸ்பத்திரிக்கு செல்ல அறிவுறுத்தி வருகின்றனர்.
    • பயணிகளுக்கு உதவும் வகையில் பிரத்யேகமாக மே ஐ ஹெல்ப் யூ சேவை கோவை விமான நிலையத்தில் செயல்பட்டு வருகிறது.

    கோவை:

    ஜே.என்.1 கொரோனா தொற்று பரவ தொடங்கியதில் இருந்து இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

    அண்டை மாநிலமான கேரளாவில் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

    இதையடுத்து கேரளத்தையொட்டி உள்ள தமிழக எல்லையான கோவை மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மாவட்டத்தில் சுகாதாரத்துறை மூலம 4 நடமாடும் காய்ச்சல் கண்டறியும் குழு, 36 மருத்துவ குழுக்களும் அமைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மேலும் கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் மாநகராட்சி பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் இணைந்து வீடு, வீடாக சென்று காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என பரிசோதித்து வருகின்றனர்.

    காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அருகே உள்ள சுகாதார மையம் மற்றும் ஆஸ்பத்திரிக்கு செல்ல அறிவுறுத்தி வருகின்றனர்.

    கோவை விமான நிலையத்திலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

    கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட பல நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருவதை அடுத்து, வெளிநாடுகளில் இருந்து கோவை வரும் பயணிகள் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    இதுகுறித்து விமான நிலைய இயக்குநர் செந்தில்வளவன் கூறியதாவது:-

    ஒவ்வொரு நாளும் சராசரியாக 23 முதல் 29 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    கோவையில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு உதவும் வகையில் கோவை-மும்பை இடையே தினமும் காலை 9 மணிக்கும், இரவு 9 மணிக்கும் புதிய விமானங்கள் இயக்கப்படுகின்றன.

    இதுதவிர ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு வாரத்தின் அனைத்து நாட்களும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

    உருமாறிய கொரோனா பரவலை கண்காணிக்கும் வகையில், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு காய்ச்சல் கண்டறியும் உபகரணங்கள் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதுதவிர முதியவர்கள் குழந்தைகளுடன் வரும் பெண்கள் உள்ளிட்ட பயணிகளுக்கு உதவும் வகையில் பிரத்யேகமாக மே ஐ ஹெல்ப் யூ சேவை கோவை விமான நிலையத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த சேவைக்கு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
    • சிறப்பு தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் வைரஸ் காய்ச்சல், மெட்ராஸ் ஐ மற்றும் மழைக்கால நோய்கள் வேகமாக பரவி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

    சீனாவில் பரவும் வைரஸ் ஹெச் 9 என் 1 இன்ப்ளூயன்ஸா, தமிழகத்தில் பரவி வரும் வைரஸ் தன்மையுடன் ஒத்துபோவதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வநாயகம் தெரிவித்துள்ளார். இவை நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், உடல் சோர்வு ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

    மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்கள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சிகிச்சைக்கு வரும் நிமோனியா பாதிப்பு சார்ந்த நோயாளிகளின் விபரங்களை ஒருங்கிணைந்த நோய்த்தொற்று கண்காணிப்பு தளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பொது இடங்களில் நிலவேம்பு கசாயம், ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் குழந்தைகளுக்கு அதிகளவு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் முக கவசம் அணிந்து பள்ளிக்கு வருமாறு ஒரு சில தனியார் பள்ளிகள் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இன்று முதல் மீண்டும் முக கவசம் அணிந்து பள்ளிக்கு மாணவ-மாணவிகள் சென்றனர். இந்த நடைமுறை தனியார் பள்ளிகளில் மட்டுமே பின்பற்றப்படுகிறது. எனவே இதனை அரசு பள்ளிகளிலும் நடைமுறைபடுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கேரளாவையொட்டி உள்ள தமிழகத்திலும் காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • கடந்த 3 நாட்களாக காய்ச்சல் பரிசோதனை எல்லை பகுதிகளில் நடந்து வருகிறது.

    நாகர்கோவில்:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்த மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

    கேரளாவையொட்டி உள்ள தமிழகத்திலும் காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள 5 சோதனை சாவடிகளிலும் போலீசாருடன் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கேரளாவில் இருந்து வருபவர்கள் காய்ச்சல் பரிசோதனைக்கு பிறகு குமரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 3 நாட்களாக காய்ச்சல் பரிசோதனை எல்லை பகுதிகளில் நடந்து வருகிறது. இன்று காலையில் 3-வது நாளாக சோதனை நீடித்தது. இதுவரை கேரளாவில் இருந்து வந்த 2400 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

    தெர்மல் ஸ்கேனர் கருவி மூலமாக சுகாதார பணியாளர்கள் காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 3 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததையடுத்து அந்த 3 பேரையும் சுகாதார துறை அதிகாரிகள் மீண்டும் கேரளாவுக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து காய்ச்சல் பரிசோதனை நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். நாகர்கோவில் மாநகர பகுதியில் களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு உள்ளனர். வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி உள்ளதா? கொசு உற்பத்தி உள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு உள்ளனர். மேலும் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    மாநகர பகுதியில் வழக்கத்தை விட தற்போது காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள் காய்ச்சல் பாதித்தவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்து வருகிறார்கள்.

    குமரி மாவட்டம் முழுவதும் வழக்கமாக 30 முதல் 35 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் தினசரி பாதிப்பு 40 முதல் 50 ஆக உயர்ந்துள்ளது. ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி, பத்மநாபபுரம் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு தனிவார்டு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    • 3 பேருக்கு ெகாரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
    • ஜனவரி 1-ந் தேதியில் இருந்து இதுவரை பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

    கோவை,

    சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை ெகாரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதையடுத்து நாட்டிலுள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் கண்காணிப்புகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.

    அதன்படி, கோவை பன்னாட்டு விமான நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனைகள் செய்யப்பட்டு ரேண்டம் அடிப்படையில் 2 சதவீதம் பயணிகளிடம் இருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன.

    கோவை விமான நிலையத்துக்கு சிங்கப்பூா், ஷாா்ஜா ஆகிய பகுதிகளில் இருந்து வரும் விமானப் பயணிகளுக்கு ெகாரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. ஷாா்ஜாவில் இருந்து ஜனவரி 16-ந் தேதி கோவை விமான நிலையம் வந்த பயணிகளில் ரேண்டம் அடிப்படையில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் நாமக்கல் மாவட்டம், காளப்பநாயக்கன் பட்டியைச் சோ்ந்த 38 வயது வாலிபருக்கு ெகாரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதனைத் தொடா்ந்து நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறையினருக்கு சம்பந்தப்பட்டவரின் விவரங்கள் கோவை மாவட்ட சுகாதாரத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, கோவை விமான நிலையத்தில் ஜனவரி 1-ந் தேதியில் இருந்து இதுவரை எடுக்கப்பட்ட பரிசோதனையில் 3 பேருக்கு ெகாரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    இது குறித்து கோவை சுகாதாரத் துறை துணை இயக்குநா் அருணா கூறியதாவது:-

    கோவை விமான நிலையத்தில் கடந்த ஜனவரி 1-ந் தேதியில் இருந்து இதுவரை 4,393 பேருக்கு காய்ச்சல் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், 148 பேரிடம் இருந்து ரேண்டம் அடிப்படையில் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவா்களில் கோவை, திருப்பூா் மற்றும் நாமக்கல் மாவட்டங்களை சோ்ந்த தலா ஒருவா் வீதம் 3 பேருக்கு ெகாரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் கடந்த டிசம்பா் மாதத்தில் இருந்து பரிசோதனை செய்யப்பட்டதில் 6 பேருக்கு மட்டுமே ெகாரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கோவை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் 3 போ், சேலம், நாமக்கல் மற்றும் திருப்பூா் மாவட்டங்களை சோ்ந்த தலா ஒருவா்.

    இதில் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவரைத் தவிா்த்து மற்ற அனைவருக்கும் புதிய வகை ெகாரோனா நோய்த் தொற்று பாதிப்பில்லை என்ற முடிவுகள் பெறப்பட்டுள்ளன. நாமக்கல்லை சோ்ந்தவரின் சளி மாதிரிகள் புதிய வகை ெகாரோனா நோய்த் தொற்று கண்டறிவதற்காக சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×