search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prosecution"

    • நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு 2 பேரையும் பொதுமக்கள் சடலமாக மீட்டனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 35), தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி அனிதா(32) என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    இவர் கூலி வேலை செய்வதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூருக்கு சென்றார். அங்கு சந்திரசேகருக்கு ஆந்திர மாநிலம், ஆவலங்குப்பம் பகுதியை சேர்ந்த தேவராஜ் மனைவி பூஜா (26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம், கள்ளத்தொடர்பாக மாறி தனிமையில் சந்தித்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு சந்திரசேகர், பூஜாவை தனியாக வாணியம்பாடிக்கு அழைத்து வந்தார். வாடகை வீட்டில் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

    இதனை அறிந்த பூஜாவின் உறவினர்கள் இன்று காலை வாணியம்பாடி வந்தனர். வாணியம்பாடி தேங்காய்பட்டரை பகுதியில் சந்திரசேகருடன் தங்கியிருந்த பூஜாவை காரில் அவரது உறவினர்கள் அழைத்து செல்ல முயன்றனர்.

    அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது காரின் கண்ணாடி உடைத்து, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அந்த பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது.

    அப்போது ஆத்திரமடைந்த சந்திரசேகர் ஓடிச் சென்று அருகில் இருந்த விவசாய கிணற்றில் குதித்தார். இதனைப் பார்த்த பூஜாவும் மற்றொரு விவசாய கிணற்றில் ஓடிப்போய் குதித்தார். இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.

    நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு 2 பேரையும் பொதுமக்கள் பிணமாக மீட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி தாலுகா போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விதிவிலக்காக தெலுங்கானா மாநிலத்தில் மட்டுமே 17 சதவீதம் வழக்கு பதியப்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் 1,27,178 புகாரில் 2,806 மட்டுமே வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    மும்பை:

    இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 2022 ஜனவரி முதல் 2023 மே மாதம் வரை சிறுவர் ஆபாச படங்கள், சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்கள், கற்பழிப்பு, கும்பலால் பலாத்காரம், ஆன்லைன் மோசடி போன்ற பெறப்பட்ட சைபர் குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 20,99,618 புகார்கள் பெறப்பட்டது. ஆனால் இதில் 42, 868 புகார்களுக்கு மட்டுமே வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இது 2 சதவீதமே ஆகும்.

    குறிப்பாக டெல்லியில் 2,16,739 புகார்கள் பெறப்பட்டுள்ளது. ஆனால் இதில் 1.2 சதவீதமே வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1,27,178 புகாரில் 2,806 மட்டுமே வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுபோல் பல்வேறு மாநிலங்களிலும் சைபர் கிரைமில் ஏராளமான புகார் வந்தாலும் 3 சதவீதத்துக்கும் குறைவாகவே வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கு விதிவிலக்காக தெலுங்கானா மாநிலத்தில் மட்டுமே 17 சதவீதம் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    சைபர் கிரைமில் ஏராளமான புகார்கள் தெரிவித்தாலும் குறைவாக வழக்குபதிவு செய்து காரணம் குறித்து மும்பை முன்னாள் போலீஸ் கமிஷன் சிவானந்தன் கூறியதாவது:-

    இத்துறையில் புகார்களை இன்ஸ்பெக்டர்கள் அதற்கு மேல் உள்ள அதிகாரிகள் மட்டுமே விசாரிக்க முடிவும். ஆனால் அதற்கு போதுமான அதிகாரிகள் இல்லை.

    அதே வேளையில் அனைத்து இன்ஸ்பெக்டர்களும் சைபர் குற்றங்களை விசாரணை நடத்தும் அளவுக்கு தொழில் நுட்பம் சார்ந்தவர்கள் இல்லை என்பதும் மேலும் தொழில் நுட்ப சாதனங்களும் போதிய அளவில் இல்லாததால் இந்நிலை நீடிப்பதாக அவர் தெரிவித்தார்.

    • பனையேறிகள் மீது மதுவிலக்கு தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்வதை காவல்துறை கைவிட வேண்டும்.
    • தமிழகத்திலும் கள் உணவு பொருள் என்பதை கோடிட்டு பனைமர கள்ளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் பனைமர கள் இறக்க அனுமதிக்க கோரி தமிழ்நாடு கள் மற்றும் பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று தஞ்சை ரெயிலடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் தலைமை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும், பதநீர் இறக்க உரிமை பெறும் நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்.

    பனையேறிகள் மீது மதுவிலக்கு தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வதை காவல்துறை கைவிட வேண்டும். கேரள மாநில அரசு போல் தமிழகத்திலும்கள் உணவு பொருள் என்பதை கோடிட்டு பனைமரக் கள்ளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×