என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டமன்ற தேர்தல்"

    • இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தேர்தல் முடிவுகள் ஜூன் 4 -ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

    தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு தொடங்கியது.

    அப்போது, இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலோடு சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளதால், அம்மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, ஒரே கட்டமாக 175 தொகுதிகள் கொண்ட ஆந்திரப் பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 13-ம் தேதி நடைபெறுகிறது.

    ஒடிசா மாநிலத்தில் 4 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. மே 13-ம் தேதி 28 தொகுதிகளும், மே 20-ம் தேதி 35 தொகுதிகளுக்கும், மே 25-ம் தேதி 42 தொகுதிகளுக்கும், ஜூன் 1-ம் தேதி மீதமுள்ள 42 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

    தேர்தல் முடிவுகள் ஜூன் 4 -ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது
    • கடந்த 10 ஆண்டுகளாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படாத ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

    தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு தொடங்கியது.

    அப்போது, இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் தேர்தல் ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

    மேலும், மக்களவை தேர்தலோடு சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளதால், அம்மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படாத ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படவில்லை. கடைசியாக 2104-ம் ஆண்டு தாங்க அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.

    இந்நிலையில், நாடு முழுவதும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோதும், ஜம்மு-காஷ்மீருக்கு தேதி அறிவிக்கப்படாதது குறித்து முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா காட்டமாக விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஒரே நாடு ஒரே தேர்தலுக்காக எவ்வளவோ செய்கின்றனர். ஆனால், ஜம்மு-காஷ்மீரில் நிலுவையில் உள்ள சட்டமன்ற தேர்தலை, தேர்தல் ஆணையத்தால் நடத்த முடியவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

    • 2104-ம் ஆண்டு தான் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.
    • ஜம்மு மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு தொடங்கியது.

    அப்போது, இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் தேர்தல் ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

    மேலும், மக்களவை தேர்தலோடு சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளதால், அம்மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படாத ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படவில்லை. கடைசியாக 2104-ம் ஆண்டு தான் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.


    நாடு முழுவதும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோதும், ஜம்மு-காஷ்மீருக்கு தேதி அறிவிக்கப்படவில்லை.

    ஆனால், ஜம்மு-காஷ்மீரில் பாராளுமன்றத்துக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த யூனியன் பிரதேசத்தில் 5 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. 5 தொகுதிகளுக்கும் 5 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி ஜம்மு பகுதியில் உள்ள உதம்பூர் மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஜம்மு மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    அனந்த்நாக் தொகுதியில் மே 7 -ம் தேதியும், ஸ்ரீநகர் தொகுதியில் மே 13-ம் தேதியும், பாரமுல்லா தொகுதியில் மே 20-ம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் 42.58 லட்சம் பெண்கள் மற்றும் 161 மூன்றாம் பாலினத்தவர்கள் உட்பட மொத்தம் 86.93 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தத் தகுதி பெற்றுள்ளனர்.

    • வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி கிராம மக்களிடம் அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
    • 2021-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மைலி கிராமத்தினர் ஒன்று கூடி ஓட்டு மொத்தமாக வாக்களிக்க மறுத்து தேர்தலையே புறக்கணித்தனர்.

    திருச்சுழி:

    தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 100 சத வீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் அலுவலர்கள் பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், விருதுநகர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஜெயசீலன் உத்தரவின் பேரில் இந்த நாடாளுமன்ற தேர்தலில் ஊராட்சி பகுதிகளில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் தேர்தல் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதி ளிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் நேரில் சென்று அங்குள்ள பொது மக்களை சந்தித்து வரும் தேர்தல் அலுவலர்கள், மேற்பார்வையாளர், வருவாய்த்துறை அலுவலர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் பொதுமக்களிடம் நேரில் சென்று 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியம் பள்ளிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட மைலி கிராமத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி கிராம மக்களிடம் அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    மேலும் திருச்சுழி உதவி வாக்குப்பதிவு அலுவலரான ராஜேஸ் மற்றும் திருச்சுழி தாசில்தார் பாண்டி சங்கர் ராஜா மற்றும் சரவணக் குமார் ஆகியோரும் பொது மக்களை நேரில் சந்தித்து 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விளக்கமாக எடுத்து ரைத்தனர்.

    கடந்த 2021-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மைலி கிராமத்தினர் ஒன்று கூடி ஓட்டு மொத்தமாக வாக்களிக்க மறுத்து தேர்தலையே புறக்கணித்தனர். அந்த பகுதியில் 300 வாக்குகள் இருந்த நிலையில் மதியம் வரை 4 பேர் மட்டுமே வாக்களித்து இருந்தனர். பின்னர் தேர்தல் அதிகாரிகளின் சமாதானத்திற்கு பிறகும் கூட மிக மிக குறைவான இரட்டை இலக்க எண்ணிக்கையிலான வாக்குகளே பதிவானது.

    இந்நிலையில் தற்போது நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் தவறாமல் ஜனநாயக கடமையை நிறை வேற்றி 100 சதவீத வாக்குப் பதிவை பதிவு செய்ய வேண்டுமென பொதுமக்களிடம் தேர்தல் அதிகாரிகள் வலியுறுத்தினர்.

    • முதற்கட்டமாக அவர் நகரி தொகுதியில் உள்ள கிராமங்களில் பிரசாரம் செய்து வருகிறார்.
    • வழக்கமான புன்னகையோடு வரவேற்ற ரோஜா அந்த பெண்ணுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் நகரி தொகுதியில் நடிகை ரோஜா 3-வது முறையாக போட்டியிடுகிறார்.

    கடந்த வாரம் வேட்பு மனு தாக்கல் செய்த ரோஜா தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளார். முதற்கட்டமாக அவர் நகரி தொகுதியில் உள்ள கிராமங்களில் பிரசாரம் செய்து வருகிறார்.

    தேர்தல் பிரசாரத்திற்கு வரும் ரோஜாவுக்கு கிராமங்களில் அமோகமாக வரவேற்பு அளித்து வருகின்றனர். நகரி அருகே உள்ள ஒரு கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றாக திரண்டு வந்து தங்களின் வீட்டில் உள்ள தாம்பூல தட்டில் கற்பூரம் ஏற்றி ரோஜாவை ஒரே நேரத்தில் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    11 திருஷ்டி பூசணிக்காய்களை ஒன்றாக சேர்த்து ரோஜாவை நோக்கி சுத்தியபடி அதனை தரையில் போட்டு உடைத்தனர்.

    அங்கு ரோஜா நடந்து சென்று வாக்கு கேட்டபடி இருந்தார். அப்போது வீட்டின் மாடிகளில் நின்று பெண்கள் சிறுவர்கள் ஆரவாரம் செய்தனர். பிரசாரத்தின் போது மூதாட்டி ஒருவர் ரோஜாவின் கன்னத்தைக் கிள்ளி நலம் விசாரித்தார். அவரிடம் ரோஜாவும் நலம் விசாரித்து ஆதரவு கேட்டார்.

    மேலும் ஒரு பெண் ரோஜாவை கண்டதும் நடன மாடியபடி ஆரத்தி எடுத்தார். அவரை வழக்கமான புன்னகையோடு வரவேற்ற ரோஜா அந்த பெண்ணுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    ரோஜா பிரசாரத்தால் நகரி தொகுதி தற்போது களை கட்டி வருகிறது.

    • ஆந்திர பிரதேச மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • ஒட்டுமொத்த ஆந்திர பிரதேச மாநிலமும் பிரதமர் மோடிக்கு ஆதரவு.

    இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் பாராளுமன்ற தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பல கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளன. அந்த வகையில், ஆந்திர பிரதேச மாநிலத்தில் மே 13 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதே நாளில் அம்மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற இருக்கிறது.

    ஆந்திராவில் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பரப்புரைக்காக ஆந்திர பிரதேச மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

    சுற்று பயணத்தின் அங்கமாக அம்மாநிலத்தின் தர்மவரம் பகுதியில் அமித் ஷா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த பகுதியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியுள்ளனர். இதுவே ஒட்டுமொத்த ஆந்திர பிரதேச மாநிலமும் பிரதமர் மோடி மற்றும் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக இருப்பதை எடுத்துரைக்கிறது."

    "இங்கு தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றியை பெறப்போகிறது. ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் இந்தியா கூட்டணி ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியாது..," என்று தெரிவித்தார். 

    • 13-ந்தேதி பாராளுமன்ற தேர்தலுடன் சட்ட மன்றத்திற்கும் வாக்குபதிவு .
    • ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 25 கிராம் வெள்ளி காசு வழங்கினர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் வருகிற 13-ந்தேதி பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் வாக்குபதிவு நடக்கிறது. தற்போது அங்கு முதியோர், மாற்றுத்திறனாளிகள் அரசு ஊழியர்கள் தபால் வாக்குகள் பதிவு செய்து வருகின்றனர். இதற்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது.

    கோணசீமா மாவட்டத்தில் தபால் ஓட்டு வாங்கும் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் 25 கிராம் வெள்ளி காசு வழங்கினர்.

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் வழங்கப்படும் வெள்ளி காசுகளை சில அதிகாரிகள், ஆசிரியர்கள் வாங்க மறுப்பு தெரிவித்தனர்.

    இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் தேர்தல் விதியை மீறி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் செயல்படுவதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

    • ஒடிசாவில் நடந்த 6 ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவின் போது பாஜக வேட்பாளர் EVM இயந்திரத்தை உடைத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • ஒருகட்டத்தில் பொறுமை இழந்த பிரசாந்த் மேசையில் இருந்த EVM இயந்திரத்தைக் கீழே இழுத்துள்ளார்.

    ஒடிசாவின் குர்த்தா மாவட்டத்தில் நேற்று (மே 25) நடந்த 6 ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவின் போது பாஜக வேட்பாளர் EVM இயந்திரத்தை உடைத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஒடிசாவில் பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் நேற்று நடந்த நிலையில், குர்தா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக எம்எல்ஏவான பிரசாந்த் ஜக்தேவ், நேற்று பிரசாந்த் ஜக்தேவ் தனது மனைவியுடன் வாக்குச்சாவடிக்கு வந்துள்ளார்.

     

    வாக்களிக்க நீண்ட வரிசையில் அவர் காத்திருந்த நிலையில் EVM இயந்திரம் பழுதடைந்ததால் வாக்குப்பதிவு மேலும் தாமதமானது. இதனால் பொறுமை இழந்த அவர், தேர்தல் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

     

    ஒருகட்டத்தில் பொறுமை இழந்த பிரசாந்த் மேசையில் இருந்த EVM இயந்திரத்தைக் கீழே இழுத்துள்ளார். இதனால் EVM இயந்திர விழுந்து உடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் பிரசாந்த் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை இன்று (மே 26) கைது செய்துள்ளனர். அப்பகுதியில் செல்லாக்கு மிக்க பாஜக வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருப்பது பெரும் மகிழ்வைத் தருகிறது.
    • நாம் தமிழர் கட்சி பெற்றிருக்கும் வாக்குகளென்பது பெரும் சனநாயக மறுமலர்ச்சியாகும்.

    மக்களவைத் தேர்தலில் பெற்ற மாநிலக்கட்சி அங்கீகாரத்தை ஊக்கமாக கொண்டு 2026ம் ஆண்டு தேர்தலில் ஆட்சியை பிடிக்க உறுதியேற்போம் என்றும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நாம் தமிழர் கட்சிக்கு மாநிலக்கட்சி அங்கீகாரம்! தமிழின அரசியல் வரலாற்றில் ஒரு புத்தெழுச்சிப்பாய்ச்சல்!

    அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, 8.2 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருக்கிறது.

    இத்தேர்தலில் வெற்றி எனும் இலக்கை அடையாவிட்டாலும், கணிசமான வாக்குகளைப் பெற்று, மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருப்பது பெரும் மகிழ்வைத் தருகிறது.

    'தமிழ்த்தேசியம்' எனும் உயரிய தத்துவ முழக்கத்தை எம் முன்னோர்களும், மூத்தோர்களும் பன்னெடுங்காலத்திற்கு முன்பே தூக்கிச் சுமந்தபோதும், அக்கருத்தியல் முழக்கம் வெகுமக்கள் வடிவம் பெறாமலேயே இருந்தது.

    அந்தப் போதாமையையும், குறைபாட்டையும் முற்றிலும் போக்கி, தமிழ்த்தேசியத்தை வெகுமக்கள் அரசியலாக்கி, தேர்தலிலே களம் கண்டது நாம் தமிழர் கட்சி.

    2016ஆம் ஆண்டு முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, எட்டே ஆண்டுகளில் மாநிலக் கட்சியாகப் பரிணமித்திருப்பது தமிழின அரசியல் வரலாற்றில் ஒரு புத்தெழுச்சிப்பாய்ச்சல்!

    சின்னம் பறிப்பு, அதிகார முறைகேடு, அரசியல் நெருக்கடி எனப் பல அடக்கு முறைகளைத் தாண்டியும், சாதி, மதம், மது, பணம் எனப் புரையோடிப்போன சமூகத்தீங்குகளைக் கடந்தும் நாம் தமிழர் கட்சி பெற்றிருக்கும் வாக்குகளென்பது பெரும் சனநாயக மறுமலர்ச்சியாகும்.

    இத்தேர்தலில் பெற்ற மாநிலக்கட்சி அங்கீகாரத்தை ஊக்கமாகக் கொண்டு, 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க உறுதியேற்கிறோம்.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 35,60,485 மதிப்புமிக்க வாக்குகளைத் தந்து, நாம் தமிழர் கட்சியைப் பெரும் அரசியல் ஆற்றலாக உருவெடுக்கச் செய்த தாய்த்தமிழ்ச் சொந்தங்கள், போற்றுதற்குரிய பெருமக்கள், வேட்பாளர்களாகக் களத்தில் நின்ற எம் உடன்பிறந்தார்கள், எல்லாவுமாகத் துணைநின்ற அன்பிற்கினிய உறவுகள், உயிரைக் கொடுத்து உழைத்த உயிருக்கினிய தம்பி, தங்கைகள் என அனைவருக்கும் என்னுடைய புரட்சிகரமான வாழ்த்துகளையும், உளப்பூர்வமான அன்பினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இலக்கு ஒன்றுதான்! இனத்தின் விடுதலை! இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்! நாம் தமிழர் !

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சட்டமன்ற தேர்தல் 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது.
    • அரசியல் பணிகளை தீவிரப்படுத்தினால் தான் தேர்தல் களத்தை வலிமையோடு சந்திக்க முடியும்.

    நடிகர் விஜய் சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என்று அறிவித்தார்.

    68-வது படமான 'கோட்' படத்துக்கு பிறகு இன்னொரு படத்தில் நடித்து விட்டு முழு நேர அரசியலில் இறங்குவேன் என்றும் தெரிவித்தார்.

    எனவே விஜய்யின் கடைசி படமான 69-வது படத்தை இயக்குவது யார் அதில் யாரெல்லாம் நடிப்பார்கள். படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்றெல்லாம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது.

    69-வது படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர் கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் 69-வது படத்தை கைவிட விஜய் முடிவு செய்து இருப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அடுத்த சட்டமன்ற தேர்தல் 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது. விஜய் 69-வது படத்தில் நடிக்க தொடங்கினால் அது முடிய ஒரு வருடம் ஆகிவிடும். இதனால் அரசியல் மற்றும் தேர்தல் பணிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்படும்.

    இப்போதே சுற்றுப்பயணம், மாநாடு, மாவட்டம் தோறும் தொண்டர்கள் ஆலோசனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் என்று அரசியல் பணிகளை தீவிரப்படுத்தினால்தான் தேர்தல் களத்தை வலிமையோடு சந்திக்க முடியும் என்று நெருக்கமானவர்கள் வற்புறுத்துவதாக கூறப்படுகிறது.

    இதனாலேயே 69-வது படத்தில் விஜய் நடிக்க மாட்டார் என்று பேசப்படுகிறது. ஆனாலும் விஜய் தரப்பில் இதனை உறுதிப்படுத்தவில்லை.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அமைச்சர் அறிவிப்பது, மீண்டும், மீண்டும் மக்களை ஏமாற்றும் செயலாகும்.
    • டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடும் அறிவிப்பினை வெளியிட வேண்டும்

    தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

    கடந்த சட்டமன்ற தேர்தல் தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து மதுவிலக்கு என்று கூறிவிட்டு இன்று சட்டமன்ற கூட்டத் தொடரில் மதுவிலக்கு சாத்தியம் இல்லை அந்த துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இது தமிழக மக்களுக்கு அளித்து மிகப் பெரிய துரோகம்.

    மதுவினாலும் மதுக்கடைகளினாலும் பிரச்சனை ஏற்படும்போதெல்லாம் மதுக்கடைகளை படிப்படியாக மூடுவோம் என்று பலமுறை அறிவித்துவிட்டு அவற்றை மூடாமல் இன்று தமிழக அரசு கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயத்தால் பல பலர் இறந்த பிறகு இன்று கள்ளச்சாராயத்தை ஒழிப்போம், மீண்டும் டாஸ்மாக் கடைகளை விரைவில் படிப்படியாக மூடுவோம் என்றும் அத்துறை

    அத்துறை அமைச்சர் அறிவிப்பது, மீண்டும், மீண்டும் மக்களை ஏமாற்றும் செயலாகும்.

    தேர்தல் அறிக்கையில் கொடுத்த பல வாக்குறிதிகளை நிறைவேற்றாத, நடைமுறைப்படுத்தாத தமிழக அரசு, இனிமேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக பூர்ண மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். மக்கள் நலன் கருதி அதற்கு முதல்படியாக டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடும் அறிவிப்பினை வெளியிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    • தேர்தல் களம் ஒவ்வொருவருக்கும் சமமாக இருக்க வேண்டும்.
    • மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால் மற்ற கட்சிகளை விட அதற்கு அனைத்து வகையான பாதுகாப்பும் உள்ளது.

    ஜம்மு-காஷ்மீரில் 90 சட்டமன்ற இடங்களுக்கு செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1-ந்தேதி என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தெரிவித்தார்.

    இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரான பரூக் அப்துல்லா தேர்தல் ஆணையத்தின் முடிவை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பரூக் அப்துல்லா கூறுகையில் "இன்று, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு தேர்தல் நடத்தப்படும் என முடிவு எடுக்கப்பட்டதற்கு நான் கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முன்னதாக, ஆகஸ்ட் 20 முதல் 25-ந்தேதிக்குள் முடிவு எடுக்கப்படும் என பேசிக்கொண்டிருந்தார்கள். அதற்கு முன்னதாகவே முடிவு எடுக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

    நாட்டின் சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் மத்திய அரசின் ஆட்சி அகற்றப்படும் என்று அவர்கள் நம்புகிறார்கள். நாங்கள் தேர்தலுக்கு தயாராக இருக்கிறோம். நாங்கள் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகும்போது ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தலை சேர்த்து நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தோம். அவர்கள் சில மாநில தேர்தல்களை சேர்த்து நடத்தினார்கள். எனினும் இங்கே தேர்தல் நடத்தவில்லை. இந்த தேர்தலில் மக்கள் அதிக அளவில் திரண்டு வந்து வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன்.

    தேர்தல் களம் ஒவ்வொருவருக்கும் சமமாக இருக்க வேண்டும். மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால் மற்ற கட்சிகளை விட அதற்கு அனைத்து வகையான பாதுகாப்பும் உள்ளது. இது நடக்கக் கூடாது, நாங்கள் விரும்பும் சமநிலையை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்" என பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    ×