என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஐபிஎல் டி20 போட்டி"
- சென்னை அணி ஏற்கனவே 12 ரன் வித்தியாசத்தில் லக்னோவை தோற்கடித்து இருப்பதால், அதிக நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள்.
- லக்னோ அணியும் 5 வெற்றி, 4 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது.
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று (புதன்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. லக்னோவில் மாலை 3.30 மணிக்கு நடக்கும் 45-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை எதிர்கொள்கிறது.
சென்னை அணி இதுவரை 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்விகளுடன் 10 புள்ளிகளை பெற்றிருக்கிறது. எஞ்சிய 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி தேவை என்பதால் இனி ஒவ்வொரு ஆட்டமும் சென்னைக்கு முக்கியத்துவம் பெறுகிறது.
சென்னை அணி ஏற்கனவே 12 ரன் வித்தியாசத்தில் லக்னோவை தோற்கடித்து இருப்பதால், அதிக நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள்.
லக்னோ அணியும் 5 வெற்றி, 4 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் தொடையில் தசைப்பிடிப்பு காயத்தில் சிக்கியிருப்பது நிச்சயம் பின்னடைவாகும். அவருக்கு பதிலாக குருணல் பாண்ட்யா அணியை வழிநடத்துகிறார்.
போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:- சென்னை: கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், ரஹானே, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, டோனி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, தீக்ஷனா அல்லது மிட்செல் சான்ட்னெர், துஷர் தேஷ்பாண்டே, பதிரானா, ஆகாஷ் சிங்.
லக்னோ: கைல் மேயர்ஸ், மனன் வோரா அல்லது பிரேராக் மன்கட், ஆயுஷ் பதோனி, தீபக் ஹூடா, குருணல் பாண்ட்யா (கேப்டன்), நிகோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோனிஸ், கிருஷ்ணப்பா கவுதம், அமித் மிஸ்ரா, அவேஷ்கான் அல்லது யாஷ் தாக்குர், ரவி பிஷ்னோய், நவீன் உல்-ஹக் அல்லது மார்க்வுட்.
- டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் சேர்த்தது.
- குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 44வது ஆட்டம் இன்று அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் உள்ளூர் அணியான குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடின.
டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. முகமது ஷமியின் வேகப்பந்தில் டெல்லி அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல் சரிந்தன.
துவக்க வீரர் பில் சால்ட், முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அவரைத்தொடர்ந்து வார்னர் 2 ரன், ரிலி ரூசோ 8 ரன், மணீஷ் பாண்டே ஒரு ரன், பிரியம் கார்க் 10 ரன்னில் அவுட் ஆகினர்.
23 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகள் சரிந்தன. நெருக்கடியான சூழ்நிலையில், அக்சர் பட்டேல் 27 ரன்களும், அதிரடியாக ஆடிய அமான் ஹக்கிம் கான் 51 ரன்களும் எடுத்து நம்பிக்கை அளித்தனர்.
கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ரிப்பல் பட்டேல் 23 ரன்கள் விளாசினார். இதனால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் சேர்த்தது.
குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். மோகித் சர்மா 2 விக்கெட், ரஷித் கான் ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியது. இதில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா அரை சதம் எடுத்து 59 ரன்களில் ஆட்டமிழக்காமல் கடைசி வரை விளையாடினார்.
தொடர்ந்து, அபிநவ் மனோகர் 26 ரன்களும், ராகுல் திவாடியா 20 ரன்களும், சுப்மன் கில் 6 ரன்களும் எடுத்தனர். ரஷித் கான் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த ஆட்டத்தின் முடிவில், குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.
இதன்மூலம், டெல்லி கேப்பிட்டல்ஸ் 5 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி அபாரமாக வெற்றிபெற்றுள்ளது.
- சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 235 ரன்கள் குவித்தது.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் வெறும் 186 ரன்கள் மட்டுமே எடுத்தது.
10 அணிகள் பங்கேற்றுள்ள 16வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
கொல்கத்தாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 33வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, சி.எஸ்.கே. அணி முதலில் களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே இருவரும் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.
முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்த நிலையில் ருதுராஜ் 3 சிக்சர் உள்பட 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய கான்வே மீண்டும் அரை சதமடித்து அசத்தினார். அவர் 40 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 56 ரன்கள் குவித்தார்.
அடுத்து இறங்கிய ரகானே, ஷிவம் டூபே ஜோடியும் ஈடன் கார்டன் மைதானத்தில் பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டது.
ஷிவம் டூபே 21 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஜடேஜா 18 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 235 ரன்கள் குவித்தது.
ரகானே 71 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதையடுத்து, 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.
இதில், அதிகபட்சமாக ஜாசன் ராய் அரை சதம் அடித்து 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, ரங்கு சிங் 44 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். நிதிஷ் ராணா 27 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 20 ரன்களும், ஆண்டிரே ரசல் 9 ரன்கள் எடுத்தனர். உமேஷ் யாதவ் 4 ரன்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வருண் சக்ரவர்த்தி ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்நிலையில், இந்த போட்டியின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் வெறும் 186 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அசத்தலாக வெற்றி பெற்றுள்ளது.
- நடப்பு தொடரில் இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத ஒரே அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் தான்.
- கொல்கத்தாவை பொறுத்தவரை பேட்டிங்கில் வலுவாக உள்ளது. 4 ஆட்டங்களில் 185 ரன்களுக்கு மேல் குவித்துள்ளதே அதற்கு சான்று.
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த கிரிக்கெட் திருவிழாவில் டெல்லியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 28-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது.
நடப்பு தொடரில் இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத ஒரே அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் தான். இதுவரை ஆடியுள்ள 5 ஆட்டங்களிலும் தோல்வியை தழுவியுள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் கேப்டன் டேவிட் வார்னர் (3 அரைசதத்துடன் 228 ரன்), அக்ஷர் பட்டேல் (129 ரன் மற்றும் 2 விக்கெட்) தவிர மற்றவர்கள் தடுமாறுகிறார்கள்.
குறிப்பாக பிரித்வி ஷா (5 ஆட்டத்தில் 34 ரன்), மிட்செல் மார்ஷ் (3 ஆட்டத்தில் 4 ரன்) ஆகியோரின் சொதப்பல் தான் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. எனவே இவர்கள் ரன்வேட்டை நடத்தினால் தான் சரிவில் இருந்து எழுச்சி பெற முடியும். 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்க இனி ஒவ்வொரு ஆட்டமும் டெல்லிக்கு முக்கியமானதாகும். ஒன்றில் தோற்றாலும் சிக்கல் தான்.
இதே போல் முதல் 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி கடைசி இரு ஆட்டங்களில் முறையே ஐதராபாத், மும்பையிடம் 'சரண்' அடைந்தது. கொல்கத்தாவை பொறுத்தவரை பேட்டிங்கில் வலுவாக உள்ளது. 4 ஆட்டங்களில் 185 ரன்களுக்கு மேல் குவித்துள்ளதே அதற்கு சான்று. பந்து வீச்சு தான் சீராக இல்லை. அதில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். மொத்தத்தில் தோல்வியால் துவண்டு போய் உள்ள டெல்லி அணி தனது முதல் வெற்றியை ருசிக்குமா அல்லது கொல்கத்தா மீண்டும் வெற்றியடையுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
- லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது.
- 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வியை சந்தித்தது.
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், கைல் மேயர்ஸ் ஜோடி அதிரடியாக ஆடியது. முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்த நிலையில், கே.எல்.ராகுல் 39 ரன்னில் அவுட்டானார். ஆயுஷ் பதோனி ஒரு ரன்னிலும், தீபக் ஹூடா 2 ரன்னிலும் அவுட்டாகினர்.
கைல் மேயர்ஸ் அரை சதமடித்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்டோய்னிஸ் 21 ரன்னிலும், நிகோலஸ் பூரன் 29 ரன்னிலும் வெளியேறினர். இறுதியில், லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.இதில் அதிகபட்சமாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 44 ரன்களும், ஜோஸ் பட்லர் 40 ரன்களும், தேவ்தட் படிக்கல் 26 ரன்களும், ரியான் பராங் 15 ரன்களும், அஷ்வின் 3 ரன்களும், சஞ்சு சான்சன் 2 ரன்களும் எடுத்தனர். அஷ்வின் மற்றும் ரியான் பராங் ஆகியோர் ஆட்டத்தை இழக்கவில்லை.
இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வியை சந்தித்தது.இதனால், 10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.
- நடப்பு தொடரில் முதல் முறையாக சொந்த ஊரான ஜெய்ப்பூரில் கால்பதிப்பதால் கூடுதல் உற்சாகத்துடன் விளையாடுவார்கள்.
- கடந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் தோற்ற லக்னோ அணி வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்புடன் வியூகங்களை தீட்டி வருகிறது.
10 அணிகள் பங்கேற்றுள்ள 16வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த கிரிக்கெட் திருவிழாவில் ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோதுகிறது.
நடப்பு தொடரில் முதல் முறையாக சொந்த ஊரான ஜெய்ப்பூரில் கால்பதிப்பதால் கூடுதல் உற்சாகத்துடன் விளையாடுவார்கள்.
லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 3 வெற்றி (டெல்லி, ஐதராபாத், பெங்களூருவுக்கு எதிராக), 2 தோல்விகளுடன் (சென்னை, பஞ்சாப்புக்கு எதிராக) 6 புள்ளிகள் எடுத்து 2-வது இடத்தில் இருக்கிறது. பஞ்சாப்புக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் தோற்ற லக்னோ அணி வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்புடன் வியூகங்களை தீட்டி வருகிறது.
சவால்மிக்க ராஜஸ்தான் அணியின் வெற்றிப்பயணத்துக்கு முட்டுக்கட்டை போட வேண்டும் என்றால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் லக்னோ ஒருங்கிணைந்து மிரட்ட வேண்டியது அவசியமாகும். லக்னோ அணியில் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் இன்னும் களம் இறக்கப்படவில்லை. இன்றைய ஆட்டத்தில் கைல் மேயர்சை நீக்கிவிட்டு டி காக்கை சேர்ப்பது குறித்து அந்த அணி நிர்வாகம் பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஷூப்மன் கில் 49 பந்துகளுக்கு 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- சாஹா 30 ரன்களும், சாய் சுதர்ஷன் 19 ரன்களும், ஹர்திக் பாண்டியா 8 ரன்களும் எடுத்தனர்.
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று நடக்கும் 18-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வுசெய்தார்.
அதன்படி, பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் டக் அவுட்டானார். கெப்டன் ஷிகர் தவான் 8 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து இறங்கிய மேத்யூ ஸ்காட் 24 பந்தில் 36 ரன்கள் எடுத்தார். பானுகா ராஜபக்ச 20 ரன்னும், ஜிதேஷ் சர்மா 25 ரன்னும், சாம் கர்ரன் 22 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் ஷாருக் கான் 2 சிக்சர் உள்பட 22 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 154 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது.
இதில், ஷூப்மன் கில் 49 பந்துகளுக்கு 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, சாஹா 30 ரன்களும், சாய் சுதர்ஷன் 19 ரன்களும், ஹர்திக் பாண்டியா 8 ரன்களும் எடுத்தனர். டேவிட் மில்லர் 16 ரன்களும், ராகுல் 5 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இறுதியில் 19.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து குஜராத் அணி அசத்தலாக வெற்றி பெற்றுள்ளது.
- உள்ளூர் ரசிகர்களின் மத்தியில் விளையாடுவது சென்னை அணிக்கு கூடுதல் உற்சாகம் அளிக்கும்.
- இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆர்வத்தில் எதிர்நோக்கிக் கொண்டிக்கின்றன.
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 17-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதுகின்றன.
தொடக்க ஆட்டத்தில் குஜராத்திடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த சென்னை அணி, அதன் பிறகு லக்னோவை 12 ரன் வித்தியாசத்திலும், மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்கடித்தது. முந்தைய மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ரஹானேவின் மின்னல்வேக அரைசதமும், ரவீந்திர ஜடேஜாவின் சுழல் ஜாலமும் வெற்றிக்கு உதவின.
உள்ளூர் ரசிகர்களின் மத்தியில் விளையாடுவது சென்னை அணிக்கு கூடுதல் உற்சாகம் அளிக்கும். ஏற்கனவே சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்திய சென்னை அணி இப்போது 'ஹாட்ரிக்' வெற்றிக்கு குறி வைத்துள்ளது.
தசைப்பிடிப்பால் கடந்த ஆட்டத்தில் பாதியில் வெளியேறிய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் இன்றைய ஆட்டத்தில் விளையாட வாய்ப்பில்லை. இதே போல் பெருவிரலில் காயமடைந்த ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இன்னும் முழு உடல்தகுதியை எட்டவில்லை என்று சென்னை வீரர் ஜடேஜா நேற்று கூறினார்.
அதனால் உள்ளூர் ஆட்டத்தை ஸ்டோக்சும் தவற விடுகிறார். மற்றபடி ருதுராஜ் கெய்க்வாட், டிவான் கான்வே, ஜடேஜா, ரஹானே, அம்பத்தி ராயுடு, மொயீன் அலி, கேப்டன் டோனி உள்ளிட்டோர் நல்ல நிலையில் உள்ளனர்.
ராஜஸ்தான் எப்படி? சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 2 வெற்றி (ஐதராபாத், டெல்லிக்கு எதிராக), ஒரு தோல்வியுடன் (பஞ்சாப்புக்கு எதிராக) 4 புள்ளிகள் பெற்றுள்ளது.
இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறும் முனைப்புடன் ராஜஸ்தான் வியூகங்களை தீட்டியுள்ளது. ஏறக்குறைய இரு அணிகளும் சரிசம பலத்துடன் மோதுவதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.
இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆர்வத்தில் எதிர்நோக்கிக் கொண்டிக்கின்றன.
- ஐதராபாத் சார்பில் மயங்க் மார்கண்டே 4 விக்கெட்டும், உம்ரான் மாலிக், ஜேன்சன், ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- ராகுல் திரிபாதி பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டார்.
16வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அதன்படி இன்று இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெற்ற 14-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற ஐதராபாத் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் மட்டும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 66 பந்தில் 5 சிக்சர், 12 பவுண்டரி உள்பட 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சாம் கர்ரன் 22 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. ஐதராபாத் சார்பில் மயங்க் மார்கண்டே 4 விக்கெட்டும், உம்ரான் மாலிக், ஜேன்சன், ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இறுதியில், பஞ்சாப் அணி 9 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் விளையாடியது. தொடக்கத்தில் ஹார்ரி புரூக் 13 ரன்களும், மயங்க் அகர்வால் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் ராகுல் திரிபாதி , மார்க்ரம் இணைந்து சிறப்பாக விளையாடினர். ராகுல் திரிபாதி பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டார்.
தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில்17.1 ஓவர்கள் முடிவில் 2விக்கெட் இழப்பிற்கு 145ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. திரிபாதி 74ரன்கள் , மார்க்ரம்37 ரன்கள் எடுத்து அட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற செய்தனர்.
- மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது.
- சென்னை அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டும், சாண்ட்னர், துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
16-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இன்று மும்பையில் நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, மும்பை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, இஷான் கிஷன் அதிரடியாக ஆடினர்.
அணியின் எண்ணிக்கை 38ஆக இருந்தபோது ரோகித் சர்மா 21 ரன்னில் அவுட்டானார். இஷான் கிஷன் 31 ரன்னில் வெளியேறினார். கேமரூன் கிரீன் 12 ரன்னும், சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
திலக் வர்மா 21 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய டிம் டேவிட் 31 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது. சென்னை அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டும், சாண்ட்னர், துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி தனது ஆட்டத்தை தொடங்கியது.
தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், கான்வே களமிறங்கினர்.தொடக்கத்தில் சென்னை அணியின் டேவான் கான்வே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ரஹானே அதிரடி காட்டினார். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட அவர் மைதானத்தில் இருந்த சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
குறிப்பாக மும்பை அணியின் அர்சத் கான் வீசிய ஓவரில் 1 சிக்ஸ்ர், 4 பவுண்டரி பறக்கவிட்டார். தொடர்ந்து அவர் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார்.மறுபுறம் ருதுராஜ் கெய்க்வாட் நிலைத்து ஆடினார்.
தொடர்ந்து ஆடிய ரஹானே 27 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஷிவம் துபே , ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர்.
சிறப்பாக விளையாடிய துபே 28 ரன்களில் வெளியேறினார். அடுத்து ராயுடு களமிறங்கி பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார்.
இறுதியில் சென்னை அணி 18.2 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. ருதுராஜ் 40ரன்களும், ராயுடு 20 ரன்களும் எடுத்தனர்.
இந்நிலையில், மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி அபாரமாக வெற்றிபெற்றது.
- டிக்கெட் விற்பனை நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
- சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள இரு கவுண்ட்டர்களில் ரூ.1,500-க்கான (சி,டி, இ கீழ்தளம்) டிக்கெட் விற்கப்படுகிறது.
ஐபிஎல் தொடர் வருகிற 31ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மொத்தம் 7 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளூரில் கடந்த 3ம் தேதி நடந்த லக்னோவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏறக்குறைய 35 ஆயிரம் ரசிகர்கள் போட்டியை நேரில் கண்டுகளித்தனர்.
அடுத்ததாக சென்னையில் வருகிற 12-ந்தேதி சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (இரவு 7.30 மணி) நடக்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள இரு கவுண்ட்டர்களில் ரூ.1,500-க்கான (சி,டி, இ கீழ்தளம்) டிக்கெட் விற்கப்படுகிறது.
ரூ.2,000, ரூ.2,500 விலைக்கான டிக்கெட்டுகள் கவுண்ட்டரிலும், PAYTM மற்றும் www.insider.in ஆகிய இணையதளங்களிலும் ஆன்லைன் மூலம் வாங்கிக் கொள்ளலாம்.
ரூ,3,000 விலைக்குரிய டிக்கெட் (டி, இ மேல்தளம்) ஆன்லைன் மூலமே விற்கப்படும். ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட்டுக்கு மேல் வழங்கப்படாது. இந்த தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- ஷிகர் தவான் 56 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 86 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- ஷிம்ரான் ஹெட்மியர் 36 ரன்கள், துருவ் ஜூரல் 32 ரன்களும் எடுத்தனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 8வது லீக் ஆட்டம் கவுகாத்தியில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின.
இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், வென்ற ராஜஸ்தான் அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங், கேப்டன் ஷிகர் தவான் இருவரும் அபாரமாக ஆடி வலுவான அடித்தளம் அமைத்தனர்.
இந்த ஜோடி 90 ரன் சேர்த்த நிலையில் பிரிந்தது. பிரப்சிம்ரன் சிங் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய பனுகா ராஜபக்சே ஒரு ரன் எடுத்திருந்த நிலையில் காயமடைந்து வெளியேறினார்.
இதையடுத்து ஷிகர் தவானுடன் ஜிதேஷ் சர்மா இணைய, மீண்டும் ஆட்டம் விறுவிறுப்படைந்தது. ஜிதேஷ் 27 ரன்கள் சேர்த்த நிலையில், விக்கெட்டை இழந்தார்.
அடுத்து வந்த சிக்கந்தர் ரசா ஒரு ரன்னிலும், ஷாருக் கான் 11 ரன்னிலும் அவுட் ஆக, பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது.
ஷிகர் தவான் 56 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 86 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட் கைப்பற்றினார். அஷ்வின், சாகல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.
இதில், அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, ஷிம்ரான் ஹெட்மியர் 36 ரன்கள், துருவ் ஜூரல் 32 ரன்களும், தேவ்தத் படிக்கல் 21 ரன்கள், ரியான் பராக் 20, ஜோஸ் பட்லர் 19 ரன்கள், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 11 ரன்களும் எடுத்தனர்.
இதில், ஷிம்ரான் ஹெட்மியர் மற்றும் துருவ் ஆட்டமிழக்கவில்லை. இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
இதன்மூலம் பஞ்சாப் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்