என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கோமியம்"
- உண்மையான இந்து இதை மறுக்க மாட்டார்கள்.
- பந்தலுக்குள் நுழையும் முன் நிச்சயம் கோமியம் குடிப்பார்கள்.
மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூரை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி, நவராத்திரி பண்டிகையின் போது கர்பா நடன கொண்டாட்டத்தில் அனுமதிக்கும் முன் இந்துக்களுக்கு கோமியம் கொடுக்க வேண்டும் என்று அமைப்பாளர்களை வலியுறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோமியம் குடிக்க செய்யும் முறை "ஆச்மான்" என்று அழைக்கப்படுகிறது. இந்த நடைமுறையை அறிவித்த பாஜக மாவட்டத் தலைவர் சிந்து வர்மா செய்தியாளர்களிடம் பேசும் போது, "சனாதன கலாச்சாரத்தில் ஆச்மன் நடைமுறைக்கு பெரும் முக்கியத்துவம் உண்டு. இதனால் அமைப்பாளர்களிடம் கர்பா பந்தல் கொண்டாட்டத்திற்கு அனுமதிக்கும் முன் பக்தர்களுக்கு கோமியம் கொடுக்க அமைப்பாளர்களை கேட்டுக் கொண்டுள்ளோம்," என்று தெரிவித்தார்.
மேலும், "ஆதார் கார்டை எடிட் செய்யலாம். எனினும், ஒருவர் இந்து என்றால், அவர் கர்பா நடன பந்தலுக்குள் நுழையும் முன் நிச்சயம் கோமியம் குடிப்பார்கள். உண்மையான இந்து இதை மறுக்க மாட்டார்கள்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பசுக் காப்பகங்களின் அவலநிலை குறித்து பாஜக தலைவர்கள் மௌனம் சாதிப்பதாகவும், இந்த விவகாரத்தை அரசியலாக்குவதில் மட்டுமே ஆர்வம் காட்டுவதாகவும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நீலப் சுக்லா குற்றம் சாட்டியுள்ளார்.
"கோமியம் ஆச்சர்ய கோரிக்கையை எழுப்புவதன் மூலம் பா.ஜ.க. பிளவுப்படுத்தும் அரசியல் செய்வதற்கு புதிய தந்திரமாக கையில் எடுத்துள்ளது," என்று அவர் கூறியுள்ளார். மேலும் பா.ஜ.க. தலைவர்கள் பந்தல்களுக்குள் நுழைவதற்கு முன்பு கோமியத்தை உறிஞ்சி சமூக ஊடகங்களில் வீடியோக்களை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
- பாஜக எம்எல்ஏ பால்முகுந்த் ஆச்சார்யா கோமியம் தெளித்து சடங்கு நடத்தியுள்ளார்.
- காங்கிரஸ் கவுன்சிலர்களை நிற்கவைத்து கோமியத்தை அவர்களை குடிக்கவும் வைத்துள்ளார்.
ராஜாஸ்தானில் காங்கிரசில் இருந்து பாஜகவுக்கு தாவிய கவுன்சிலர்களுக்கு பாஜக எம்எல்ஏ கோமியம் [மாட்டின் சிறுநீர்] தெளித்து அதை குடிக்க வைத்து நடத்திய [சுத்தப்படுத்தும்] சடங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டால் காங்கிரசை சேர்ந்த ஜெய்ப்பூர் முனிசிபல் கவுன்சிலர் பதவி விலகிய நிலையில் அந்த பதவிக்கு பாஜகவை சேர்ந்த குசும் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மேயராக பதவியேற்றுக்கொள்ளும் விழா சமீபத்தில் நடந்துள்ளது.
இந்த அரசு விழாவுக்கு தலைமை தாங்கிய பாஜக எம்எல்ஏ பால்முகுந்த் ஆச்சார்யா கோமியத்தையும் கங்கை நீரையும் தெளித்து சடங்கு நடத்தியுள்ளார். அந்த சடங்கில், சமீபத்தில் பாஜக பக்கம் வந்த காங்கிரஸ் கவுன்சிலர்களை நிற்கவைத்து கோமியத்தையும், கங்கை நீரையும் தெளித்து அதை அவர்களை குடிக்கவும் வைத்துள்ளார். இந்த நிகழ்வு சர்ச்சையான நிலையில் அங்கு நடந்த ஊழலை சுத்தப்படுத்தவே இந்த சடங்கை மேற்கொண்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
This is from RajasthanBJP MLA Balamukundacharya sprinkled Gaumutra (Cow urine) on Turncoat Congress Councillor to purify her from Corruption & welcomed her in BJPYou no need to search for Comedy in India when ?s are our elected leaders ? pic.twitter.com/RXNZEXMkTE
— Veena Jain (@DrJain21) September 27, 2024
- கோவில்களில் ஹோமம் வளர்க்கும் போது பசு கோமியம் கிருமி நாசினியாக பயன்படுத்தப்படுகிறது.
- பசு மோமியத்தில் நல்ல பாக்டீரியா மற்றும் நல்ல பூஞ்சைகள் இருப்பதாக சித்த மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
புதுடெல்லி:
சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பசு மாட்டின் கோமியம் நோய் எதிர்ப்பு சக்தி தரும் துணை மருந்தாகவும், அரு மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பஞ்சகவ்யம் என சொல்லப்படும் மருந்தில் பிரதானமாக பசு கோமியம், தயிர், வெண்ணெய் ஆகிய மூலப்பொருட்கள் இடம்பெறுகின்றன. மேலும் பதப்படுத்தப்பட்ட கோமியமும் தனியாக மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
அதேபோன்று கோவில்களில் ஹோமம் வளர்க்கும் போது பசு கோமியம் கிருமி நாசினியாக பயன்படுத்தப்படுகிறது. அதில் நல்ல பாக்டீரியா மற்றும் நல்ல பூஞ்சைகள் இருப்பதாக சித்த மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
பண்டைக் காலத்தில் பசுக்களின் கோமியத்தை பதப்படுத்தாமல் மக்கள் நேரடியாக குடித்தனர். ஆனால் இப்போது அந்த முறை இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நாட்டின் உயர்ந்த விலங்கு ஆராய்ச்சி அமைப்பான இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் (ஐவிஆர்ஐ) போஜ் ராஜ் சிங் தலைமையில் ஒரு ஆய்வினை நடத்தியது. இந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
அதில், பசு கோமியம் மனிதர்களுக்கு தகுதியற்றது. சில பாக்டீரியாக்களுக்கு பயனுள்ளதாக இருந்தாலும், ஆரோக்கியமான பசுக்கள் மற்றும் காளைகளின் சிறுநீர் மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில் 14 வகையான தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் எருமையின் சிறுநீரில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு செயல்பாடு பசுக்களை விட மிக உயர்ந்தது எனவும் தெரிவித்துள்ளனர். பசு, எருமைகள் மற்றும் மனிதர்களின் 73 சிறுநீர் மாதிரிகளின் பகுப்பாய்வில், எருமையின் சிறுநீரில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு நடவடிக்கை பசுக்களை விட மிக உயர்ந்தது என்று கூறுகிறது.
இந்த ஆய்வு முடிவுகள் தொடர்பாக திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி டாக்டர் எஸ்.காமராஜ் கூறும்போது, ஆரோக்கியமான பசுக்களின் கோமியத்தை நேரடியாக அருந்துவதால் எந்த பக்க விளைவும் ஏற்படுவதில்லை. மனம் ஒப்புக்கொள்ளாதவர்களுக்கு வாந்தி மட்டுமே வரும். வேறு எந்த பிரச்சினையும் ஏற்படாது. ஒருவரால் 15 மில்லி அல்லது 30 மில்லி அளவுக்கு மட்டுமே நேரடியாக கோமியத்தை அருந்த முடியும் என்றனர்.
ஆயுர்வேத மருத்துவ அதிகாரி ஒருவர் கூறுகையில், இன்றளவும் கிராமப் புறங்களில் வீட்டு முற்றத்தில் சாணம் தெளிப்பதும், கோமியம் கலந்த சாணம் கொண்டு வீட்டை மொழுகவும் செய்கிறார்கள்.
கிருமிகளை கொல்லும் பாக்டீரியாக்கள் இதில் இருக்கின்றன. இந்தியாவின் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் சுத்திகரிப்பு செய்த பசு மாட்டின் கோமியத்தை தினமும் அருந்தி வந்ததாக அவரே தெரிவித்துள்ளார். 99 வயது வரை அவர் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்.
ஒவ்வொரு கால கட்டத்திலும் இவ்வாறான ஆய்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. இதனை மக்கள் நம்ப தயாராக இல்லை என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்