search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருப்பு கொடி போராட்டம்"

    • கவர்னர் 2 நாள் சுற்றுப்பயணமாக நாகைக்கு வருகை தந்துள்ளார்.
    • உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபிக்கு மலர் தூவி மரியாதை.

    நாகப்பட்டினம்:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் சுற்றுப்பயணமாக நாகை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார்.

    சென்னையில் இருந்து நேற்று தனி விமானம் மூலம் திருச்சி வந்து இறங்கியவர் சாலை மார்க்கமாக வேதாரண்யம் வருகை தந்தார்.

    வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன் பள்ளியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபிக்கு வருகை தந்த கவர்னர் ஆர்.என்.ரவி உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


    பின்னர் அருகில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாறு புகைப்படங்களை பார்வையிட்டார். பின்னர் வேதாரண்யத்தில் இருந்து புறப்பட்டு வேளாங்கண்ணிக்கு சென்ற கவர்னர் இரவு அங்குள்ள தனியார் விடுதியில் தங்கினார்.

    இன்று காலை நாகை மீன்வள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னர் கலந்து கொள்கிறார்.இந்நிலையில் நாகையில் பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தரும் தமிழக கவர்னர் ஆர்.என். ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் அமிர்த ராஜா தலைமையில் கட்சியினர் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் நாகை புத்தூர் மேம்பாலம் அருகே கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து பேராட்டத்தில் ஈடுப்பட்ட காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் அவர்களை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

    • தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடியை கண்டித்து ஒவ்வொரு முறையும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஈடுபட்டு வருகிறோம்.
    • கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம்.

    தக்கலை:

    பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தக்கலையில் இன்று காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தக்கலை தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் விஜய்வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினு லால்சிங், பொருளாளர் ஐ.ஜி.பி.லாரன்ஸ், மாநில துணை தலைவர் வக்கீல் ராபரட் புரூஸ், குமாரபுரம் பேரூராட்சி தலைவர் ஜான் கிறிஸ்டோபர், திருவட்டார் வட்டார தலைவர் வக்கீல் ஜெபா, மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜான் விக்னேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் தாரகை கட்பர்ட், நிர்வாகிகள் குமார், செல்வின்ராஜ் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட 160 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து விஜய் வசந்த் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் மக்களை பிரித்தாள நினைக்கும் மோடி தமிழகத்திற்கு வரக்கூடாது என்ற நோக்கத்துடன் இன்றைக்கு கோ பேக் மோடி எனும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறோம் என்றார்.

    அவரை தொடர்ந்து சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் கூறுகையில், தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடியை கண்டித்து ஒவ்வொரு முறையும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஈடுபட்டு வருகிறோம். அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடியை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம்.

    சி.ஏ.ஏ. எனும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தி மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் பிரதமர் மோடியை கண்டிக்கின்றோம் என்றார். ஆர்ப்பாட்டத்தில் ராதா கிருஷ்ணன், ராபர்ட் புரூஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 10 ஆண்டுகால மக்கள் விரோத பா.ஐ.க. ஆட்சியினால் பொருளாதார போழிவு ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது
    • மோடி ஆட்சியில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது

    பிரதமர் மோடி கன்னியாகுமரி பாஜக பொதுக்கூட்டத்திற்கு வரும் போது கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "10 ஆண்டுகால மக்கள் விரோத பா.ஐ.க. ஆட்சியினால் பொருளாதார போழிவு ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. மோடி ஆட்சியில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட பகுதிகள் மழை வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட போது தமிழகம் வராத பிரதமர் மோடி, தமிழகத்திற்கு ஐந்தாவது முறையாக வர இருக்கிறார்.

    தமிழக அரசு கேட்ட நிவாரணத் தொகை ரூபாய் 37,000 கோடியில் ஒரு சல்லிக் காசு கூட தராத நிலையில், சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த நினைக்கும் பிரதமர் மோடியை கண்டித்து கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வாம் அருகே நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு அவர் வரும் போது எதிர்ப்பு தெரிவிக்கிற வகையில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜோக்குமார் அவர்கள் தலைமையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இதில் மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஜே.ஜி. பிரின்ஸ் மற்றும் வட்டார, நகர, பேரூர், கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள் துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று மோடி அரசுக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேரளாவில் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும், ஆளும் இடதுசாரி கூட்டணி அரசுக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.
    • ஆளுநர் செல்லும் இடங்களில் இந்திய மாணவர் கூட்டமைப்பு கருப்பு கொடி போராட்டங்களை நடத்தி வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும், ஆளும் இடதுசாரி கூட்டணி அரசுக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. ஆளுநர் செல்லும் இடங்களில் அவருக்கு எதிராக இந்திய மாணவர் கூட்டமைப்பு கருப்பு கொடி போராட்டங்களை நடத்தி வருகிறது.

    பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ள ஆளுநர், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். வேட்பாளர்களை கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு தள்ளுவதாக இந்திய மாணவர் அமைப்பு குற்றம் சாட்டி வருகிறது.

    இந்நிலையில், ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறுகையில், எனக்கு எதிராக கருப்பு கொடி போராட்டத்தை நடத்துமாறு இந்திய மாணவர் சங்கத்தை முதல் மந்திரி பினராயி விஜயன்தான் கூறுகிறார்.

    அவர்கள் என் அருகில் வராமல் இருக்க காவல்துறையைப் பயன்படுத்துகிறார். என்னை தொட்டால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று அவருக்கு தெரியும். இனி நான் பயப்பட மாட்டேன் என்பதை பினராயி விஜயன் உணரவேண்டும். அவர் அனைவரையும் பலி கொடுக்க விரும்புகிறார். காவல்துறையினரை துன்புறுத்துவதும், இளைஞர்களை சுரண்டுவதும் எனக்கு வருத்தம் அளிக்கிறது என தெரிவித்தார்.

    • அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை அரசு பள்ளிக்கல்வி துறையோடு இணைப்பதை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி பிரமலைக்கள்ளர் வீடுகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே பிள்ளையார் நத்தம் ஊராட்சியில் உள்ள கொக்கு பிள்ளை பட்டி, ராமராஜபுரம், அணைப்பட்டி, எம். குரும்பபட்டி, என். ஊத்துப்பட்டி, எஸ். மேட்டுப்பட்டி, மட்டப்பாறை, சிலுக்குவார்பட்டி, சென்னஞ்செட்டிபட்டி, ஜி.தும்மலப்பட்டி, கெங்குவார்பட்டி, திண்டுக்கல், காமு பிள்ளை சத்திரம், குளத்துபட்டி ,என். கோயில்பட்டி, தெப்பத்துப்பட்டி, தருமத்துப்பட்டி, விராலி மாயன்பட்டி, விருவீடு , தாதபட்டி உள்ளிட்ட 30க்கு மேற்பட்ட கிராமங்களில் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை அரசு பள்ளிக்கல்வி துறையோடு இணைப்பதை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி பிரமலைக்கள்ளர் வீடுகளில் தொடர்ந்து 5 நாளாக கருப்புக்கொடி ஏந்தி தங்களது போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    ×