என் மலர்
நீங்கள் தேடியது "Vulnerability"
- ஓதவந்தான்குடி கிராமத்தில் குடியிருப்புகள தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது.
- மணல்மூட்டைகள் கொண்டு அடுக்கி தற்காலிகமாக சீரமைத்து தண்ணீர் புகுவதை தடுத்தனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே ஓதவந்தான்குடி கிராமத்தில் புதுமண்ணியாறு உள்ளது. ஓதவந்தான்குடி, செருகுடி,வட்டாரம்,மாதானம்,பழையபாளையம்,தாண்டவன்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை பல்வேறு கிராமங்களுக்கு பாசனவசதி தரும் பிரதான பாசன ஆறாக உள்ளது.
இதனிடையே கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் புதுமண்ணியாற்றில் கரைகள் வழிந்து தண்ணீர் செல்கிறது.
இதனால் புதுமண்ணியாற்றில் கரையில் உடைப்பு ஏற்பட்டு ஓதவந்தான்குடி கிராமத்தில் குடியிருப்புகள தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் சாலையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனஓட்டிகளும் அவதியடைந்தனர்.
இதனிடையே உடைப்பு ஏற்பட்ட கரைகளை பொதுமக்களே மணல்மூட்டைகள் கொண்டு அடுக்கி தற்காலிகமாக சீரமைத்து தண்ணீர் புகுவதை தடுத்தனர்.
இந்த புதுமண்ணியாற்றில் அதிகளவு தண்ணீர் செல்லும்போது இவ்வாறு கரைகள் உடைப்பு ஏற்பட்டு பாதிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளதாகவும், இதனால் வரும் காலத்தில் உடைப்பு ஏற்படுவதை தடுக்க கான்கிரிட் தடுப்பு சுவர் அமைத்து கரைகளை பலப்படுத்திட வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரு 30 ஆயிரம் வழங்க வேண்டும்.
- மழையால் பாதிக்கபட்ட வீடுகளுக்கு தலா ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளான, நெல்லூர், சூரக்காடு, வேட்டங்குடி, நெப்பத்தூர், திருவாளி ஏரி, கருவி ஆகிய இடங்களை, மழையால் பாதிக்கப்பட்ட, மக்களையும், நெற்பயிர்களையும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டார். சீர்காழி தரங்கம்பாடி பகுதிகளில், சம்பா தாளடி 87000 ஏக்கர் நிலங்கள், மழையால் பாதிக்கபட்டும்,
257 கிராமங்கள் மழைநீரால் சூழப்பட்டும் பாதிக்கபட்டு இருந்தது.
இந்த பாதிப்புகளை பார்வையிட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆக்கூர் அருகே தலையுடையவர் கோயில் பத்து கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சேதமடைந்த நெற்பயி ர்களை பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயி களிடம் கேட்டறிந்தார் பின்னர் கிராமத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்க ளுக்கு நிவாரன உதவி பொருட்கள் வழங்கினார்.
அவருடன், முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இருந்தனர்
பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது.
மயிலாடுதுறை மாவட்டம் சிறிய மாவட்டம். தற்போது, தரங்கம்பாடி, சீர்காழி பகுதிக்கு மட்டும் நிவாரணம் வழங்கபட்டுள்ளது. அதை, மயிலாடுதுறை குத்தாலம் பகுதிக்கும் அதிகரிக்க வேண்டும், நெற்பயிர் பாதிக்கபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரு 30, ஆயிரம் வழங்க வேண்டும். மழையால் பாதிக்கபட்ட வீடுகளுக்கு தலா ரூ.3. ஆயிரம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- மாணவர்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தகூடிய நிலையில் பழைமையான கட்டிடங்கள் உள்ளன.
- புதிய கட்டிடங்கள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மெலட்டூர்:
அம்மாபேட்டை ஒன்றியம், ராராமு த்திரகோட்டை கிராம த்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இங்கு 1 முதல் 8ம் வகுப்பு வரை என 200 க்கும் மேறாபட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர் இங்குள்ள பள்ளி வகுப்பறை கட்டி டங்கள் அனைத்தும் பழுதடைந்த நிலையில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்த நிலையில் மாணவர்களின் உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தகூடிய நிலையில் பழைமையான கட்டிடங்களாக உள்ளன. மேலும் மழை காலங்களில் மழைநீர் வகுப்பறை முழுவதும் ஒழுகுவதாகவும் கூறப்படுகிறது. அதனால் மாணவர்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.
பழுதடைந்த நிலை யில் உள்ள பழைய பள்ளி கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் அமைத்துதர வேண்டுமென இங்குள்ள மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் நீண்ட நாட்களாக அரசை வலியுறு த்தி வருகின்றனர். உயிர்பலி ஏற்படும் முன்பு பள்ளிக்கு புதிய கட்டிடங்கள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரியூட்டுவதற்கு.
- முதிர் கொசுக்களை அழிக்கும் புகை அடிக்கும் எந்திரம்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு ஈசானிய தெருவில் அமைந்துள்ளது.
இந்த குப்பை கிடங்கில் விற்பனை செய்ய இயலாத பிளாஸ்டிக் கழிவுகளை பேக்கிங் செய்து எரிபொருளாக பயன்படுத்த அரியலூர் சிமெண்ட் ஆலைக்கு அனுப்புவதற்கும் அபாயகரமான கழிவுகளை முறையான பாதுகாப்பாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரியூட்டுவதற்கும் குப்பைகளை அரைத்து உரமாக்கி விவசாயிகளுக்கு வழங்குவதற்கும் முதிர் கொசுக்களை அழிக்கும் புகை அடிக்கும் எந்திரம் ஆகிய எந்திரங்கள் நகராட்சி மூலம் வாங்கப்பட்டு அதன் தொடக்க விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் வாசுதேவன் தலைமை வகித்தார்.
நகர மன்ற துணைத் தலைவர் சுப்பராயன், நகராட்சி சுகாதார அலுவலர் செந்தில்ராம்குமார், இளநிலை உதவியாளர் ராஜகணேஷ் முன்னிலை வகித்தனர்.
சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் புதிய எந்திரங்களை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் பாஸ்கரன், பாலமுருகன், முபாரக் அலி, ராமு, ரமாமணி, ராஜசேகர், ஜெயந்தி பாபு, கிருஷ்ணமூர்த்தி ராஜேஷ், நிர்வாகிகள் பந்தல்முத்து, திருச்செல்வன், மதியழகன், வெற்றி, செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- சீர்காழி வட்டாரத்தில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி வரலாறு காணாத வகையில் மழை பெய்தது.
- வயல்களில் தண்ணீர் வடிந்த பிறகு கணக்கெடுப்பு செய்து பாதிக்கப்பட்ட பெயர்களுக்கு ஹெட்ருக்கு ரூ. 13 500 நிவாரணத்தொகை தமிழக அரசு அறிவித்தது.
சீர்காழி:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
சீர்காழி வட்டாரத்தில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி வரலாறு காணாத வகையில் மழை பெய்தது.
இதனால் சீர்காழி, தரங்கம்பாடி தாலுக்காவில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் சேதம் ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
பாதிப்பு குறித்து தமிழகம் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் வருகை புரிந்து பார்வையிட்டு ஆய்வு செய்து இரண்டு வட்டங்களிலும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கினார்.
வயல்களில் தண்ணீர் வடிந்த பிறகு கணக்கெடுப்பு செய்து பாதிக்கப்பட்ட பெயர்களுக்கு ஹெட்ருக்கு ரூ. 13 500 நிவாரணத்தொகை தமிழக அரசு அறிவித்தது.
இந்தத் தொகை பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு எந்த வகையிலும் போதாது.
தமிழக முதல்வர் நடப்பு ஆண்டுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்குவதற்கு அரசாணை வெளியிட்டு தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியத்தில் 29 வருவாய் கிராமங்களுக்கும் செம்பனார்கோயில் ஒன்றியத்தில் 15 வருவாய் கிராமங்களுக்கும், கொள்ளிடம் ஒன்றியத்தில் 43 வருவாய் கிராமங்களக்கும் பயிர் காப்பீடு வழங்கப்படவுள்ளது சீர்காழி, தரங்கம்பாடி வட்டத்தில் 153 வருவாய் கிராமங்களில் 87 வருவாய் கிராமங்களுக்கு மட்டுமே நடப்பு ஆண்டு பயிர் காப்பீடு வழங்கப்படுகிறது.
இதனால் மீதமுள்ள 65 வருவாய் கிராம விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவர் ஆகையால் மீதமுள்ள 65 கிராமங்களுக்கும் பாரபட்சமின்றி நடப்பாண்டு பயிர் காப்பீடு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரூ. 2 ஆயிரம் செலவு செய்து குளத்தில் மையத்தில் உள்ள தண்ணீரை இறைத்து விட்டால் பாதிப்பு இருக்காது.
- கூட்டத்தில் வைத்துள்ள 4 தீர்மானங்களை அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஏற்கவில்லை.
கும்பகோணம்:
கும்பகோணம் மாந கராட்சி கூட்டம் நடந்தது. மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் சு.ப.தமிழழகன், ஆணையர் செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதன் விவரம் வருமாறு:-
குடிநீர் கட்டணத்துக்கு 2 முறை பில்போடப்படுவது ஏன் ?, மாநகரின் பைராகி தோப்பில் உள்ள குளத்தில் மழைநீர், கழிவுநீர் தேங்கி தெருக்களில் தண்ணீர் ஓடுகிறது.
மழைக்காலத்தில் குளத்தில் இருந்து மெயின் ரோட்டை கடந்து மோட்டார் மூலம் தண்ணீர் இறைக்கப்பட்டது.
இதைப்போல ரூ.2 ஆயிரம் செலவு செய்து குளத்தில் மையத்தில் உள்ள தண்ணீரை இறைத்து விட்டால் பாதிப்பு இருக்காது. ரூ.2 ஆயிரம் கூடசெலவு செய்ய மாநகராட்சியில் நிதி இல்லையா.
புதிய பஸ் நிலையத்தில் இருந்த 3 கழிவறைகளில் தற்போது 2 கழிவறைகள் மூடப்பட்டுள்ளது.
இதனால் வெளியூர் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே மூடப்பட்டுள்ள கழிவறைகளை திறந்துவிட வேண்டும் என உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
மாநகராட்சி அவசரக்கூ ட்டத்தில் வைத்துள்ள 4 தீர்மானங்களை அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஏற்கவில்லை. இந்த தீர்மானங்களுக்கு மறுப்பு தெரிவித்தனர்.
மாநகராட்சி முழுவதும் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. எனவே கொசுவை கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அல்லது வீடுதோறும் கொசு வலைகள் வழங்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர் தெரிவித்தார்.
மாநகராட்சியில் போதிய வரிவசூல் கிடைத்து விட்டதால் கவுன்சிலர்களின் குறைகள் படிப்படியாக தீர்க்கப்படும் என ஆணையர் தெரிவித்தார்.
கூட்டத்தில் என்ஜினீயர் லலிதா, நகர் நல அலுவலர் பிரேமா மற்றும் மாநகரட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள், பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.
- பல ஆயிரம் ெஹக்டேர் சம்பா சாகுபடி செய்யப்பட்டு பாதிப்படைந்துள்ளது.
- பாதிக்கப்பட்ட விவசாயிகள் மத்தியில் ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
தமிழக காங்கிரஸ் கட்சி விவசாயிகள் பிரிவு பொதுச்செயலாளர் சுர்ஜீத் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்கள் பெய்த பருவம் தவறிய தொடர் கனமழையால் 80 சதவீதம் சம்பா சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உடனே அமைச்சர்கள் குழுவை ஆய்வு நடத்த கூறி நிவாரண தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழக அரசின் வேளாண்மைத் துறை இயக்குனர் அனுப்பி உள்ள கடிதத்தில், நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிக ளிலும் சம்பா சாகுபடி பயிரிடப்பட்ட அளவு, அறுவடைச் செய்யப்பட்ட அளவு மற்றும் பாதிக்கப்பட்ட அளவுகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த அளவீடுகள் எவ்வாறு எடுக்கப்பட்டதென தெரியவில்லை.
பல ஆயிரம் ெஹக்டேர் சம்பா சாகுபடி செய்யப்பட்டு பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிவுரை வழங்கப்பட்டு குறிப்பிட்ட அளவுகளுக்குள் மட்டுமே பாதிப்படைந்த விவசாயிகளைக் கணக்கெடுத்து அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது போல பாதிக்கப்பட்ட விவசாயிகள் மத்தியில் ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.
எனவே அரசு அதிகாரிகள் உண்மையாக நேரடிக் கள ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளும் பயன்பெறுவதை உறுதி செய்திட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது
- மீண்டும் பாதிப்பு தலைதூக்கி உள்ளது
பெரம்பலூர்
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கடந்த பல மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாமல் இருந்து வந்தது. தற்போது 2 மாவட்டங்களிலும் மீண்டும் கொரோனா பாதிப்பு தலை தூக்க தொடங்கியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 2 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 3 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 2 பேரும் வீட்டு தனிமையிலும், அரியலூர் மாவட்டத்தில் 3 பேரும் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.
- சிறிய ரக ஈக்கள் மலர்களை சேதப்படுத்தி வருகின்றன
- விவசாயிகளுக்கு அதிகாரிகள் அறிவுரை
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் 1,400 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மல்லிகை (குண்டுமல்லி) பயிரிட்டுள்ளனர். குறிப்பாக போசம்பட்டி, பொடவூர், புலியூர், கோப்பு, வியாழன் மேடு, அயிலாடிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு மல்லிகை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த பயிர்கள் பூக்கள் பூக்கும் பருவத்தை எட்டி உள்ளது.இந்த நிலையில் சிறிய ரக ஈக்கள் மலர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் மலர் மொட்டுகள் சிவப்பு நிறமாகி அதன் பின்னர் பூக்கள் உதிர்து விடுகின்றன. மேலும் மொட்டுகளின் தரமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.இதன் காரணமாக மகசூல் மற்றும் வருமானம் குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து, சிறுகமணியைச் சேர்ந்த கே.வி.கே. விஞ்ஞானிகள், மத்திய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மையம் (சி.ஐ.பி.எம்.சி.) மற்றும் தோட்டக்கலை மற்றும் தோட்டப் பயிர்கள் துறை அதிகாரிகளுடன் இணைந்து மேற்கண்ட கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது விவசாயிகள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை தெரிவித்தனர். இதையடுத்து பூச்சிகளை கட்டுப்படுத்த போலியார் ஸ்ப்ரேயினை வார இடைவெளியில் தெளிக்க அறிவுறுத்தினர்.
- மின் கசிவின் காரணமாக வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.
- பாதிக்கப்பட்டவர் குடும்பத்திற்கு நிதிஉதவி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
தரங்கம்பாடி:
செம்பனார்கோயில் ஒன்றியம், இனையாளூர் ஊராட்சி வடகரை புதுத்தெருவை சேர்ந்த விவசாயி எபி. இவரது வீடு மின் கசிவின் காரணமாக வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட எபி குடும்பத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட தேசிய சட்ட உரிமை கழகம் சார்பில் நிதி உதவி, மளிகை பொருட்களை மாவட்ட செயலாளர் சங்கரலிங்கம் வழங்கி ஆறுதல் கூறினார்.
அப்போது மாவட்ட இளைஞரணி செயலாளர் ஸ்டாலின், துணை செயலாளர் வெங்கட்ராமன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் சங்கீதா, மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய செயலாளர் பாரதி என்கிற பாரதிராஜா, நகர மன்ற செயலாளர் மணி கண்ட பிரபு, சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் லியாத்அலி, செம்பை ஒன்றிய செயலாளர் ஜாபர்சாதிக் , ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- திருச்சி ரெயில்வே பயிற்சிப் பள்ளியில் தங்கியிருந்தவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு
- அம்மை நோயா? மாநகராட்சியினர் ஆய்வு
திருச்சி,
திருச்சி ரெயில்வே பயிற்சி மையத்தில் தங்கியிருந்தவர்களில் சிலருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொண்டனர்.ரெயில்வே பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு திருச்சியில் அமைந்துள்ள மண்டல ரெயில்வே பயிற்சி மையத்தில் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சுமார் 400 பேர் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் அண்மையில், பயிற்சி மையத்தில் தங்கியிருந்த இருவருக்கு உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக பயிற்சி மையத்திலிருந்த சுமார் 10 பேருக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடுமையான வெயில் காரணமாக அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் பரவியது. இதனையடுத்து பாதிக்கப்பட்டோருக்கு ரெயில்வேதுறை சார்பில், முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அவரவர் விருப்பப்படி சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இதுக்குறித்த தகவலறிந்த திருச்சி மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள், நகர்நல அலுவலர் மணிவண்ணன் தலைமையில், ரெயில்வே பயிற்சி மையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பாதிக்கப்பட்டவர் களிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இதில், கடும் வெயில்தாக்கம் மற்றும் ஒவ்வாமை (அலர்ஜி) யினால் ஏற்பட்ட கொப்புளங்கள் என்பதும், அம்மை நோய் இல்லையென்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து பயிற்சி மையம் கிருமிநாசினிகள் தெளித்து தூய்மை படுத்தப்பட்டுள்ளது.
- ஜமுனாவிற்கு கடந்த சில வருடங்களாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்தது.
- மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
கடலூர்:
கடலூர் கண்டக்காட்டை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி ஜமுனா (வயது 38). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். ஜமுனாவிற்கு கடந்த சில வருடங்களாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்தது. கடந்த மே மாதம் 13-ந்தேதி மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் வீட்டில் இருந்த டீசலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண் டார். பலத்த தீக்காயங்களுடன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்த்துசை பலனின்றி ஜமுனா உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.