என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வழக்கறிஞர்கள்"
- பொதுநல மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது.
- ஓசூர் சம்பவம் தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்துள்ளது.
தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை தடுத்து நிறுத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், தமிழகத்தில் வழக்கறிஞர்கள் கொலை செய்யப்படுவது, தாக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது.
அப்போது, உள்துறை செயலாளர், டிஜிபியுடன் ஆலோசனை நடத்தி பரிந்துரைகள் அளிக்க தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் மீதான தக்குதல் சம்பவங்களை தடுக்க, மாவட்ட நீதிமன்றங்களில் சிசிடிவி பொருத்துவது தொடர்பாக பரிந்துரை கேட்கப்பட்டது.
மேலும், ஓசூர் சம்பவம் தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்துள்ளது. ஒவ்வொரு நபருக்கும் பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
- போலீசார் தாக்கியதில் பல வழக்கறிஞர்கள் காயம் அடைந்தனர்.
- போலீசார் தாக்கியதற்கு எதிராக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் கூடியிருந்த வழக்கறிஞர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்களை போலீசார் தாக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
வழக்கறிஞர்களை எதற்காக போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர் என்பதற்கான முழு விவரங்கள் தெரியவில்லை.
முதற்கட்ட தகவலின்படி ஜாமின் மனு தொடர்பாக நீதிபதிக்கும் வழக்கறிஞர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து வழக்கறிஞர்கள் பலர் நீதிமன்றத்திற்குள் கூடியுள்ளனர். இதனால் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நீதிபதி போலீசாரை அழைத்துள்ளார். இதனையடுத்து நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்களை தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர் என்று சொல்லப்படுகிறது.
போலீசார் தாக்கியதில் பல வழக்கறிஞர்கள் காயம் அடைந்தனர். போலீசார் தாக்கியதற்கு எதிராக வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
गाजियाबाद, यूपी कोर्ट में वकीलों और जज में झड़प। जज ने पुलिस बुलाई। पुलिस ने वकीलों को कोर्ट रूम से बाहर खदेड़ा। कोर्ट रूम के अंदर लाठियां चली, कुर्सियां फेंकी गईं। एक केस की सुनवाई के दौरान ये झड़प हुई थी। pic.twitter.com/cALfOMl2bI
— Sachin Gupta (@SachinGuptaUP) October 29, 2024
- உச்ச நீதிமன்ற கேண்டீனில் வெங்காயம், பூண்டு சேர்க்காத சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்படும்.
- இந்த அறிவிப்புக்கு வழக்கறிஞர்கள் அதிருப்தி தெரிவித்து உச்ச நீதிமன்ற பார் கவுன்சிலுக்கு கடிதம்
நவராத்திரி தொடங்கியதால் உச்ச நீதிமன்ற கேண்டீனில் இறைச்சி உணவுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெங்காயம், பூண்டு சேர்க்காத சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு வழக்கறிஞர்கள் அதிருப்தி தெரிவித்து உச்ச நீதிமன்ற பார் கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் நவராத்திரி பண்டிகையை ஒட்டி காலம் காலமாக விரதம் கடைப்பிடித்து வருகின்றனர். வழக்கமாக, 9 நாட்களுக்கு விரதம் கடைப்பிடிக்கும் வழக்கறிஞர்கள் வீட்டில் இருந்தே உணவு எடுத்து வரும் நிலையில், முதல் முறையாக உச்ச நீதிமன்றத்தில் இந்நடைமுறையைப் பின்பற்றுவது தவறான முன்னுதாரணம் என அதிருப்தி தெரிவித்த வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
- ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- சுமார் ½ மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது.
மன்னார்குடி:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் பணியை புறக்கணித்து சாலை மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் சங்க தலைவர் இளஞ்சேரன் தலைமையில் வழக்கறிஞர்கள் மன்னார்குடி- மயிலாடுதுறை பயணிகள் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
தகவல்அறிந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். அதன் பின்னர், சுமார் ½ மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- பொதுமக்களை போலவே வழக்கறிஞர்களுக்கும் சொந்த அரசியல் விருப்பங்களும் நம்பிக்கைகளும் இருக்கும்.
- வழக்கறிஞர்களின் உண்மையான விசுவாசம் நீதிமன்றங்களுக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு மட்டுமே இருக்க வேண்டும் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
நாக்பூரின் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் நூற்றாண்டு விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கலந்து கொண்டார்.
அந்நிகழ்வில் பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், "வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தையும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் தங்கள் "அரசியல் விருப்பங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு" மேலாக வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து அண்மை காலங்களில் வழக்கறிஞர்கள் கருத்து தெரிவிக்கும் போக்கு கண்டு நான் மிகவும் கவலை அடைந்துள்ளேன்.
நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது வழக்கறிஞர்கள் பொதுமக்களிடம் இருந்து தங்களை வேறுபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
பொதுமக்களை போலவே வழக்கறிஞர்களுக்கும் சொந்த அரசியல் விருப்பங்களும் நம்பிக்கைகளும் இருக்கும். ஆனால், அவர்கள் அதற்கு மேல் சிந்திக்க வேண்டும். அவர்களின் உண்மையான விசுவாசம் நீதிமன்றங்களுக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு மட்டுமே இருக்க வேண்டும்.
செய்தித்தாள்கள், ஊடகங்கள் வழியாக நீதிமன்ற தீர்ப்புகள் பற்றிய விவரங்களை பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டிய கடமை வழக்கறிஞர்களுக்கு உள்ளது .
இந்த வகையில், நீதிமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே பாலமாகச் செயல்படும் ஆற்றல் வழக்கறிஞர்களுக்கு உள்ளது. சிக்கலான சட்ட கருத்துக்கள் மற்றும் நடைமுறைகளை பொதுமக்களுக்கு புரியும் படி எடுத்து சொல்வதன் மூலம் தான் நமது புரிதலை நாம் மேம்படுத்த முடியும்.
எவ்வாறாயினும், நீதித்துறையின் சுதந்திரத்திற்கும் வழக்கறிஞர்களின் சுதந்திரத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது" என்று தலைமை நீதிபதி எச்சரித்தார்.
- ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு முழக்கங்கள் எழுப்பிய படி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தனர்.
- பெண் வழக்கறிஞர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
திருப்பூர்:
மணிப்பூரில் மூன்று மாதங்களாக நடைபெற்று வரும் கலவரத்தை கட்டுப்படுத்தாத மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், அரசியல் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும் வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர்கள் இன்று ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு முழக்கங்கள் எழுப்பிய படி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தனர்.
பின்னர் அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பூர் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் பத்மநாபன் தலைமை வகித்தார். மூத்த வழக்கறிஞர் பி. மோகன், வழக்கறிஞர் முத்துலட்சுமி, வழக்கறிஞர் ரமணி, வழக்கறிஞர் சையது ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
பெண் வழக்கறிஞர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிறைவாக வழக்கறிஞர் கோபிநாத் நன்றி கூறினார்.
- நீதிமன்றங்களுக்கு உட்பட்ட பல்வேறு வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது.
- அட்வகேட் அசோசியேசன் லாயர் அசோசியேஷன் சார்பில் அனைத்து வழக்கறிஞர்கள் கருப்பு துணி கட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
பொன்னேரி:
பொன்னேரியில் உள்ள நீதிமன்றங்களில் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் முதன்மை சார்பு நீதிமன்றம் கூடுதல் சார்பு நீதிமன்றம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம், 1-2 உள்ளிட்ட நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.
இந்த நீதிமன்றங்களுக்கு உட்பட்ட பல்வேறு வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது. ஒவ்வொரு தாலுகாவிற்கும் ஒரு நீதிமன்றம் என்கிற அடிப்படையில் நீதிமன்றங்கள் திறக்கப்பட்டு வழக்குகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் வழக்கத்திற்கு மாறாக பொன்னேரி தாலுகாவில் உள்ள நாறவாரி குப்பம், தண்டல் காலனி, அத்திவாக்கம், பால வாயில், வடகரை,விளங்காடுபாக்கம் ரெட்டில்ஸ், உள்ளிட்ட 13 கிராமங்கள் உள்ளடக்கிய வழக்குகள் தற்போது திருவொற்றியூர் சார்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதை எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றவரைமுறையை மாற்றி பொன்னேரி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் சேர்க்கும்படி பொன்னேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பார் அசோசியேஷன், அட்வகேட் அசோசியேசன் லாயர் அசோசியேஷன் சார்பில் அனைத்து வழக்கறிஞர்கள் கருப்பு துணி கட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்