search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்விக்கி"

    • பங்குகளில் முதலீடு செய்வதற்கு பலரும் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • அமிதாப் பச்சன் நீண்ட காலமாக இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார்,

    இந்தியாவில் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களில் ஸ்விக்கி, ஜொமோட்டோ போன்றவை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதற்கு பலரும் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    அந்த வகையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் குடும்ப அலுவலகம் ஸ்விக்கியில் சிறிய பங்குகளை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



    அமிதாப் பச்சன் நீண்ட காலமாக இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார், அதிலும் குறிப்பாக டிஜிட்டல் டெக் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பல துறை நிறுவனங்களில் முதலீடு செய்வது அதிகம். அமிதாப் பச்சன் பாலிவுட் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் சினிமாவை காட்டிலும் ரியல் எஸ்டேட் மற்றும் பங்கு முதலீட்டு வாயிலாகவே அதிகளவில் சம்பாதிக்கிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஸ்விக்கி, மளிகை பொருட்களை இன்ஸ்டாமார்ட் என்ற நிறுவனத்தின் பெயரில் டெலிவரி செய்து வருகிறது.
    • சென்னையை சேர்ந்த பயனர் இன்ஸ்டாமார்ட்டில் 360 ரூபாய்க்கு நொறுக்குத்தீனிகள் ஆர்டர் செய்துள்ளார்.

    சென்னையில் 1 மாதத்திற்கு முன்பே எக்ஸ்பைரி ஆன முறுக்கு பாக்கெட் ஒன்று ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் டெலிவரி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி, மளிகை பொருட்களை இன்ஸ்டாமார்ட் என்ற நிறுவனத்தின் பெயரில் டெலிவரி செய்து வருகிறது.

     

    சென்னையை சேர்ந்த பயனர் ஒருவர் நேற்று (ஆகஸ்ட் 21) இன்ஸ்டாமார்ட்டில் 360 ரூபாய்க்கு நொறுக்குத்தீனிகள் ஆர்டர் செய்துள்ளார்.

    அன்றைய தினம் அவர் ஆர்டர் செய்த பொருட்கள் அவருக்கு டெலிவரி செய்யப்பட்டது. அதில் அவர் ஆர்டர் செய்த முறுக்கு பாக்கெட் ஒன்று ஏற்கனவே எக்ஸ்பைரி ஆனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    2024 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி தயாரிக்கப்பட்ட இந்த முறுக்கு பாக்கெட்டை 45 நாட்கள் வரை பயன்படுத்தலாம். அவ்வகையில் ஜூலை 20 ஆம் தேதி இந்த முறுக்கு பாக்கெட் எக்ஸ்பைரி ஆகியுள்ளது.

    • உணவு டெலிவரி நிறுவனங்கள் பல புதிய முயற்சிகளை இந்தியாவில் நடைமுறைப்படுத்தி வருகின்றன.
    • ஒடிசா, மேற்கு வங்காள மாநிலங்களில் மதுபானங்கள் ஹோம் டெலிவரிக்கு அனுமதி உள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியா மட்டுமின்றி உலக அளவில் ஆன்லைன் புட் ஆர்டர் மற்றும் டெலிவரி என்பது பொதுமக்கள் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறியுள்ளது. இந்தத் துறையில் இருக்கும் பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துவருகின்றன.

    இந்த நிறுவனங்கள் உணவுக் கட்டணம் போக தங்களின் சேவைக்கான கட்டணத்தையும் வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலித்துக் கொள்கின்றன.

    மேலும், உணவு டெலிவரி நிறுவனங்கள் தங்களது முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான லாபத்தையும், வருமானத்தையும் காட்ட வேண்டும் என்ற இலக்கை வைத்து செயல்பட்டு வருகின்றன. இதனால் பல்வேறு புதிய முயற்சிகளை இந்தியாவில் தற்போது இந்நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

    இதையடுத்து பீர், ஒயின் உள்ளிட்ட ஆல்கஹால் குறைவாக சேர்க்கப்பட்ட மதுபான வகைகளை ஆன்லைன் ஆர்டர் மூலம் ஹோம் டெலிவரி செய்ய சோமேட்டோ, ஸ்விக்கி மற்றும் பிக் பாஸ்கட் உள்ளிட்ட நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஏற்கனவே ஒடிசா, மேற்கு வங்காள மாநிலங்களில் மதுபானங்கள் ஹோம் டெலிவரிக்கு அனுமதி உள்ளது.

    இந்நிலையில், கர்நாடகா, அரியானா, தமிழ்நாடு, பஞ்சாப், கோவா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிள் அனுமதி பெற்று மதுபானங்கள் ஹோம் டெலிவரியை நடைமுறைப்படுத்த நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.

    • பிளாட்பாரம் கட்டணம் என்பது டெலிவரி கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்ட கட்டணங்களில் இருந்து வேறுபட்டது ஆகும்.
    • இந்த விலை உயர்வு மூலம் ஒரு நாளைக்கு ரூ.1.25 முதல் ரூ.1.5 கோடி அளவுக்கு இந்நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்ட உள்ளது

    இந்தியாவில் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களாக விளங்கும் ஸ்விக்கி மற்றும் ஸுமட்டோ நிறுவனங்கள் தங்களின் பிளாட்பாரம் கட்டணத்தை 20 சதவீதம் உயர்த்தியுள்ளது வாடிக்கையாளர்களை கலக்கமடையச் செய்துள்ளது.

    இந்த கட்டண உயர்வு முதற்கட்டமாக டெல்லி மற்றும் பெங்களூரில் நேற்று [ஜூலை 14] முதல் அமலுக்கு வந்துள்ளது. விரைவில் நாடு முழுவதும் உள்ள நகரங்களின் இந்த கட்டணம் அமலுக்கு வரும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. பிளாட்பாரம் கட்டணம் என்பது டெலிவரி கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்ட கட்டணங்களில் இருந்து வேறுபட்டது ஆகும்.

     

    ஆன்லைன் பிளாட்பார்மில் இந்த டெலிவரி சர்வீஸ் பெறுவதால் அதற்கு தனி கட்டணத்தை இந்நிறுவனங்கள் கடந்த 2023 ஆண்டு அமல்படுத்தியது. டெலிவரி, ஜிஎஸ்டி போல் அல்லாது இந்த லாபம் நேரடியாக அந்நிறுவனங்களுக்கு செல்கிறது. இதற்கு முன்னரும் பல சமயங்களில் இந்த கட்டணம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்தது.

    இதற்கு முன் குறைந்தபடச்சமாக ரூ.5 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.6 ஆகியுள்ளது. இது ரூ.7 வரை விரைவில் அதிகரிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை உயர்வு மூலம் ஒரு நாளைக்கு ரூ.1.25 முதல் ரூ.1.5 கோடி அளவுக்கு இந்நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்ட உள்ளது குறிப்பிடத்தக்கது

    • ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    • அடிக்கிற வெயிலில் பாட்டிலில் இருந்த சோடா ஆவியாகி இருக்கும்.

    சமீப காலமாக உணவு பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை அனைத்தையும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் ஸ்விக்கியில் எலுமிச்சை சோடா ஆர்டர் செய்த ஒரு பயனர், காலியான டப்பாவின் புகைப்படத்துடன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.

    அவரது பதிவில், ஸ்விக்கி இப்படி ஒரு காலியான கிளாசை எனக்கு அனுப்பி இருக்கிறீர்கள். அதற்கு நன்றி. நான் ஆர்டர் செய்த லைம் சோடா மற்றொரு ஆர்டரில் வந்து சேர்ந்து விடும் என்று நம்புகிறேன் என கிண்டலாக கூறியுள்ளார்.

    இதற்கு ஸ்விக்கி அளித்த பதிலில், உங்களது ஆர்டர் ஐடியை பகிர்ந்தால் இதுகுறித்து என்ன செய்ய முடியும் என பார்ப்பதாக கூறியிருந்தது.

    அவரது இந்த பதிவு ஆயிரக்கணக்கான பார்வைகளை பெற்றது. அதில் ஒரு பயனர், அடிக்கிற வெயிலில் பாட்டிலில் இருந்த சோடா ஆவியாகி இருக்கும் என கிண்டலாக கூறியுள்ளார்.

    மற்றொரு பயனர், இது நீராவி வடிவத்தில் திரவத்தை அனுப்பி வைக்க கூடிய ஒரு தொழில்நுட்பம் என கூறியுள்ளார். இதே போன்று பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரையிலான நேரத்தில் சுமார் 6.9 லட்சத்திற்கும் அதிகமாக ஐஸ்கிரீம்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
    • மும்பையை சேர்ந்த ஒரு நபர் 45 நாட்களில் 310 ஐஸ்கிரீம்கள் ஆர்டர் செய்துள்ளார்.

    நாட்டின் பல நகரங்களிலும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிக அளவில் பழங்கள் மற்றும் குளிர்பானங்கள், நுங்கு, இளநீர், ஐஸ்கிரீம் போன்றவற்றை சாப்பிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பிரபல ஆன்-லைன் உணவு வினியோக நிறுவனமான ஸ்விக்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மார்ச் 1-ந் தேதி முதல் ஏப்ரல் 15 வரையிலான காலகட்டத்தில் தங்களுக்கு வந்த ஆர்டர்கள் குறித்து கூறி உள்ளது. அதன்படி கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 16 சதவீதத்திற்கும் அதிகமாக ஐஸ்கிரீம்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    குறிப்பாக இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரையிலான நேரத்தில் சுமார் 6.9 லட்சத்திற்கும் அதிகமாக ஐஸ்கிரீம்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையிலான நேரத்தில் 4.6 லட்சம் ஆர்டர்களும், காலை 7 மணி முதல் 11 மணி வரையிலான நேரத்தில் சுமார் 80 ஆயிரம் ஆர்டர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் மும்பையை சேர்ந்த ஒரு நபர் 45 நாட்களில் 310 ஐஸ்கிரீம்கள் ஆர்டர் செய்துள்ளார். இது இந்திய அளவில் ஒருவர் இதுவரை மிகவும் அதிகமாக ஆர்டர் செய்த ஐஸ்கிரீம் ஆர்டர் ஆகும்.

    • வீட்டில் 3 பேர் மட்டுமே இருந்ததால் 200 கிராம் கேக் மட்டும் ஆர்டர் செய்துள்ளார்.
    • பதிவு இன்ஸ்டாகிராமில் 57 ஆயிரத்திற்கும் அதிகமான விருப்பங்களை பெற்றது.

    உணவு பொருட்கள் முதல் பிறந்தநாள் கேக் வரை பல பொருட்களையும் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகிறார்கள். அந்த வகையில் ஒரு பெண் தனது சகோதரி குழந்தையின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடுவதற்காக ஸ்விக்கியில் கேக் ஆர்டர் செய்துள்ளார்.

    அப்போது வீட்டில் 3 பேர் மட்டுமே இருந்ததால் 200 கிராம் கேக் மட்டும் ஆர்டர் செய்துள்ளார். அந்த கேக்கில் அதிக வாசகம் எதுவும் வேண்டாம் என கருதிய அவர், தனது ஆர்டருடன் 'ஹேப்பி பர்த்டே ஸ்டிக்' சேர்த்து அனுப்பவும் என குறிப்பிட்டிருந்தார். ஆனால் பேக்கரி ஊழியர்கள், இதை தவறாக புரிந்து கொண்டு அவருக்கு ஆர்டர் கேக்கில் 'ஹேப்பி பர்த்டே ஸ்டிக்' என எழுதி கொடுத்துள்ளனர்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கேக்கின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, நாங்கள் ஆச்சரியம் கொடுக்க நினைத்தோம், ஆனால் ஸ்விக்கி எங்களுக்கு ஒரு ஆச்சரியத்தை அளித்தது என்று நகைச்சுவையாக கூறியிருந்தார். அவரது இந்த பதிவு இன்ஸ்டாகிராமில் 57 ஆயிரத்திற்கும் அதிகமான விருப்பங்களை பெற்றது.



    • உணவு நிறுவனங்களின் செயலிகளை அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
    • தங்களுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து வருகின்றனர்.

    கடந்த சில வருடங்களாக உணவிற்காக வசிப்பிடத்தை விட்டு வெளியே சென்று உணவகங்களை தேடுவதற்கு பதிலாக இணையதளத்தில் உள்ள செயலிகளின் மூலம் விருப்பமான உணவகங்களிலிருந்து விலைகளை ஒப்பிட்டு பார்த்து தங்களுக்கு பிடித்தமான உணவுகளை இருக்கும் இடத்திற்கே தருவிப்பது இந்தியர்களிடையே பிரபலமாகி வருகிறது.

    சமீபகாலமாக ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்தவற்காக குறிப்பிட்ட உணவு நிறுவனங்களின் செயலிகளை அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் தங்களுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து வருகின்றனர்.


    இந்தாண்டில் அதிகபட்சமாக சென்னையை சேர்ந்த ஒருவர் ஒரே நாளில் ரூ.31748க்கு ஜூஸ், பிஸ்கட், சிப்ஸ் உள்ளிட்டவற்றை ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் வாங்கியுள்ளார்.

    இதே போல் இந்தாண்டில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் வெங்காயம், ஆணுறை, வாழைப்பழம், சிப்ஸ் உள்ளிட்டவை அதிகமாக ஆர்டர் செய்து வாங்கப்பட்டுள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சொமேட்டோ, ஸ்விக்கி உள்ளிட்ட நிறுவனங்கள் இச்சேவையில் முன்னணியில் உள்ளன
    • இந்தியா-பாகிஸ்தான் உலக கோப்பை போட்டியின் போது மிக அதிகளவில் ஆர்டர்கள் செய்துள்ளனர்

    கடந்த சில வருடங்களாக உணவிற்காக வசிப்பிடத்தை விட்டு வெளியே சென்று உணவகங்களை தேடுவதற்கு பதிலாக இணையதளத்தில் உள்ள செயலிகளின் மூலம் விருப்பமான உணவகங்களிலிருந்து விலைகளை ஒப்பிட்டு பார்த்து தங்களுக்கு பிடித்தமான உணவுகளை இருக்கும் இடத்திற்கே தருவிப்பது இந்தியர்களிடையே பிரபலமாகி வருகிறது.

    சொமேட்டோ (Zomato), ஸ்விக்கி (Swiggy) உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த சேவையில் முன்னணியில் உள்ளன.

    ஆண்டுதோறும், ஸ்விக்கி நிறுவனம் தங்கள் செயலியின் மூலம் பெரும்பான்மையானோர் தருவிக்கும் உணவு வகைகளின் பட்டியலை வெளியிடுவது வழக்கம்.

    இதில் தொடர்ச்சியாக 8-வது ஆண்டாக முதலிடத்தை "பிரியாணி" பிடித்துள்ளது.


    இந்த தரவுகளின்படி ஒவ்வொரு 2.5 வினாடிகளில் இந்தியர்களால் ஒரு பிரியாணி ஆர்டர் செய்யப்படுகிறது. அதிலும் சைவ பிரியாணியோடு ஒப்பிட்டால் சிக்கன் பிரியாணியின் விகிதாசாரம் 1 : 5.5 எனும் அளவில் உள்ளது.

    ஸ்விக்கி செயலியின் தளத்தில் 40,30,827 முறை "பிரியாணி" அதிகம் தேடப்பட்ட சொல்லாக உள்ளது. ஐதராபாத் நகரில்தான் பிரியாணி ஆர்டர்கள் அதிகளவில் செய்யப்பட்டுள்ளது. அந்நகரத்தில் ஒரே நபர் இந்த ஒரே வருடத்தில் 1633 பிரியாணிகளை ஆர்டர் செய்துள்ளார்.

    ஐசிசி 2023 ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது சண்டிகர் நகரில் ஒரு குடும்பம் ஒரே முறையில் 70 பிரியாணிகளை ஆர்டர் செய்துள்ளது. விறுவிறுப்பான அப்போட்டி நடைபெற்ற தினத்தன்று ஒரு நிமிடத்திற்கு 250 ஆர்டர்கள் எனும் விகிதத்தில் மக்கள் ஸ்விக்கியில் பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர்.

    ஸ்விக்கியின் தரவுகளின்படி கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரூ மக்கள்தான் அதிகளவில் கேக் ஆர்டர் செய்துள்ளனர். 8.5 மில்லியன் ஆர்டர்கள் செய்ததால் இந்நகர் "கேக் தலைநகரம்" (cake capital) என அழைக்கப்படுகிறது.

    பிப்ரவரி 14, வேலண்டைன் தினத்தன்று ஒரு நிமிடத்திற்கு 271 கேக்குகள் எனும் விகிதத்தில் ஆர்டர்கள் குவிந்தன. நாக்பூர் நகரில் ஒரு உணவு விரும்பி, ஒரே நாளில் 92 கேக்குகளை ஆர்டர் செய்துள்ளார்.


    பிரியாணியையும், கேக்குகளையும் தவிர, மும்பை நகரை சேர்ந்த ஒருவர் 42.3 லட்சம் பெருமான உணவு ஆர்டர்களை செய்திருந்தது இந்த தரவுகளில் உள்ள வியக்க வைக்கும் மற்றொரு தகவல்.

    அதே போல் ஒடிஸா மாநில தலைநகர் புபனேஸ்வரில் ஒரு வீட்டில் ஒரே நாளில் 207 பீஸாக்களை ஆர்டர் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிய ஆட்டத்தின் போது ரசிகர் ஒருவர் ஸ்விக்கியில் 240 ஊதுபத்திகளை ஆர்டர் செய்தது இணையத்தில் பேசு பொருளாகி இருக்கிறது.
    • டி.வி.முன்பு ஒரு தட்டில் உருளைக்கிழங்கில் ஊதுபத்திகளை கொலுத்தி வைத்துள்ள காட்சி பயனர்களை கவர்ந்தது.

    இந்திய கிரிக்கெட் அணி 3-வது முறையாக உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என நாடு முழுவதும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்ற இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிய ஆட்டத்தின் போது ரசிகர் ஒருவர் ஸ்விக்கியில் 240 ஊதுபத்திகளை ஆர்டர் செய்தது இணையத்தில் பேசு பொருளாகி இருக்கிறது.

    தானேயை சேர்ந்த அந்த ரசிகர் ஸ்விக்கியில் 240 ஊதுபத்திகளை ஆர்டர் செய்துள்ளார். ஆர்டரை வழங்கிய நபர் இதுதொடர்பாக ஒரு படத்தை ஸ்விக்கி தளத்தில் பதிவிட்டார். அதில் இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட் போட்டியின் போது டி.வி.முன்பு ஒரு தட்டில் உருளைக்கிழங்கில் ஊதுபத்திகளை கொலுத்தி வைத்துள்ள காட்சி பயனர்களை கவர்ந்தது.

    அதனுடான பதிவில், நாங்கள் உங்களுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். இந்த போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

    • ஸ்விக்கி செயலியில் உணவு ஆர்டர் செய்யும் போது ஒரு ஆர்டருக்கு 3 ரூபாய் கூடுதல் கட்டணமாக வசூலிப்பதாக சில வாடிக்கையாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
    • பயனர்கள் சிலர் தங்களது ஆர்டருக்கான பில் தொகையை பதிவிட்டு அதில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டினர்.

    சமீபகாலமாக ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்தவற்காக குறிப்பிட்ட உணவு நிறுவனங்களின் செயலிகளை அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் தங்களுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஸ்விக்கி செயலியில் உணவு ஆர்டர் செய்யும் போது ஒரு ஆர்டருக்கு 3 ரூபாய் கூடுதல் கட்டணமாக வசூலிப்பதாக சில வாடிக்கையாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது 'எக்ஸ்' தளத்தில் ஒரு விவாதமாகவே மாறியது. பயனர்கள் சிலர் தங்களது ஆர்டருக்கான பில் தொகையை பதிவிட்டு அதில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டினர்.

    உணவு தொகையுடன் ஆர்டர் பேக்கிங் கட்டணம், டெலிவரி கட்டணம் மற்றும் வரிகள் அனைத்தையும் சேர்த்த பிறகும் இறுதி பில் தொகையில் ரூ.3 கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்பட்டதாக கிங்ஸ்லி என்ற பயனர் குறிப்பிட்டிருந்தார். இதே போல மேலும் சில வாடிக்கையாளர்களும் வலைதள பக்கங்களில் புகார் கூறியதை தொடர்ந்து ஸ்விக்கி நிறுவனம் இந்த புகார் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. அதில், இது ஒரு காட்சி பிழையாக இருக்கலாம். பயனர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது என கூறி உள்ளது.

    • செல்போனில் பேசிக் கொண்டே வேகமாக செல்லக்கூடாது.
    • விதிமுறைகளை மீறினால் கண்டிப்பாக கடும் நடவடிக்கை பாயும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 6 மாதங்களில் வாகன விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துள்ளது.

    இருப்பினும் சென்னை போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

    இதன்படி முக்கிய இடங்களில் போக்குவரத்து உதவி கமிஷனர்களின் தலைமையில் உணவு விநியோகம் செய்யும் ஸ்விக்கி, சுமோட்டா, டன்சோ போன்றவை ஓட்டுனர்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

    600 உணவு விநியோக ஓட்டுனர்களுக்கு முறையற்ற வகையில் வாகனத்தை இயக்குவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    அப்போது உணவு டெலிவரி ஊழியர்கள் ஒரு வழிபாதையில் பயணம் செய்யக்கூடாது, செல்போனில் பேசிக் கொண்டே வேகமாக செல்லக்கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகளை விதித்து போக்குவரத்து போலீசார் கடிவாளம் போட்டுள்ளனர்.

    இந்த விதிமுறைகளை மீறினால் கண்டிப்பாக கடும் நடவடிக்கை பாயும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

    ×