என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வக்கீல்கள் போராட்டம்"
- வெட்டுகாயம் அடைந்த கண்ணன் கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- தமிழகம் முழுவதும் இன்று வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பட்டப்பகலில் கோர்ட்டு வளாகத்தில் வக்கீல் கண்ணனை, ஆனந்தகுமார் என்பவர் சரமாரி அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் வெட்டுகாயம் அடைந்த கண்ணன் கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் 10 மணி நேரத்திற்கு மேலாக அறுவை சிகிச்சை அளித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து ஓசூரில் இன்று வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோர்ட்டு முன்பு வக்கீல்கள் சங்க தலைவர் ஆனந்தகுமார் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதேபோல் தமிழகம் முழுவதும் இன்று வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக வக்கீல்கள் அறிவித்திருந்தனர்.
- போலீசாருக்கும் வக்கீல்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நாகர்கோவில்:
நாட்டில் அமலுக்கு வந்துள்ள மாற்றி அமைக்கப்பட்ட 3 குற்றவியல் வழக்குகளை வாபஸ் பெற கோரியும், மத்திய அரசை கண்டித்தும் வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குமரி மாவட்டத்திலும் நாகர்கோ வில், பூதப்பாண்டி, குழித்துறை, தக்கலை, இரணியல் கோர்ட்டுகளில் வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று நாகர்கோவிலில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக வக்கீல்கள் அறிவித்திருந்தனர். இதையடுத்து நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நாகர்கோவில் கோர்ட்டில் இன்று காலை வக்கீல்கள் திரண்டனர்.
சங்கத் தலைவர் அசோக் குமார் மற்றும் மூத்த வக்கீல் பால ஜனாதிபதி, வெற்றி வேல், மரியஸ்டீபன், குழித்துறை வக்கீல்கள் சங்கத் தலைவர் சுரேஷ், பூதப்பாண்டி வக்கீல்கள் சங்க தலைவர் ரெஜினால்டு, இரணியல் வக்கீல்கள் சங்க தலைவர் பெஸ்லி பத்மநாபபுரம் வக்கீல்கள் சங்க தலைவர் பொன்ராஜ் உட்பட 300-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் ரெயில் நிலையம் நோக்கி புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
ஆனால் கோர்ட்டில் இருந்து வக்கீல்கள், ஊர்வலமாக வேப்பமூடு வழியாக அண்ணா பஸ் நிலையம் வந்தனர். அவர்க ளை போலீசார் ரோட்டின் நடுவே பேரிகார்டுகள் வைத்து தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாரின் தடுப்புகளை மீறி வக்கீல்கள் செல்ல முயன்றனர்.
போலீசார் அவர்களை தடுத்ததால் நடுரோட்டில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். அதை தொடர்ந்து மீண்டும் வக்கீல்கள் தடுப்புகளை மீறி ரெயில் நிலையம் நோக்கி செல்ல முயன்றனர். போலீ சார் அவர்களை தடுத்து நிறுத்திய போது போலீசாருக்கும் வக்கீல்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ரோட்டில் வைக்கப்பட்டி ருந்த பேரிகார்டுகளை தூக்கி வீசிவிட்டு வக்கீல்கள் மீண்டும் அங்கிருந்து தடையை மீறி ஊர்வலமாக சென்றனர். கோட்டாறு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் முன்பகுதியில் மீண்டும் போலீசார் பேரிகார்டுகளை சாலையின் நடுவே வைத்து தடுத்து நிறுத்தினார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கு மேற்பட்ட வக்கீல்களை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தில் நாகர்கோவில் வழக்கறிஞர்கள் மட்டுமின்றி பூதப்பாண்டி, இரணியல், குழித்துறை, தக்கலை பகுதிகளை சேர்ந்த வக்கீல்கள்களும் கலந்து கொண்டனர். வக்கீல்கள் போராட்டம் காரணமாக நாகர்கோவில் மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் தவிப்பிற்கு ஆளானார்கள்.
- புதிய சட்டங்கள் நடைமுறைக்கு கடினமானவை.
- 3 சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெறவேண்டும்.
சென்னை:
இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறைச்சட்டம், இந்திய சாட்சிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷிய அதினியம் என்ற பெயரில் மூன்று புதிய சட்டங்கள் மத்திய அரசு நிறைவேற்றி, கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
இந்த சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் வக்கீல்கள் போராட்டம் நடந்து வருகிறது. சென்னை ஐகோர்ட்டிலும் வக்கீல்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தி.மு.க., வக்கீல்கள் இன்று காலையில் இந்த 3 புதிய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
தி.மு.க., ராஜ்ய சபா எம்.பி.யும் மூத்த வக்கீலுமான என்.ஆர்.இளங்கோ தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தி.மு.க. வக்கீல்கள் கலந்துக் கொண்டனர். அப்போது, இந்த 3 சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என்று வக்கீல்கள் கோஷம் போட்டனர்.
அப்போது என்.ஆர்.இளங்கோ கூறுகையில், "பாராளுமன்றத்தில் எவ்வித விவாதங்களும் இல்லாமல், இந்த 3 சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இந்த சட்டங்கள் நடைமுறைக்கு கடினமானவை. நீதி பரிபாலனத்திற்கு இந்த சட்டம் மிகவும் எதிரான வையாக உள்ளது. எனவே, இந்த சட்டங்களை அரசு திரும்ப பெறவேண்டும். இதை வலியுறுத்தி நாளை (சனிக்கிழமை) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே தி.மு.க. சட்டத்துறை சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்'' என்று கூறினார்.
இந்த நிலையில், இந்த போராட்டத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமையில் இன்று காலையில் நடந்தது. இந்த கூட்டத்தில் போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர், இந்த 3 சட்டங்களையும் திரும்ப பெறக்கோரி வருகிற 8-ந்தேதி (திங்கட்கிழமை) ஒரு நாள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
பின்னர், இதுகுறித்து ஜி.மோகன கிருஷ்ணன் கூறும்போது, `3 சட்டங்களும் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது. அதனால், இந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, ஒரு நாள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்'' என்றார்.
- தேனி வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் தேனி மாவட்ட கோர்ட்டு வக்கீல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தேனி:
தேனி வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் தேனி மாவட்ட கோர்ட்டு முன்பு நாமக்கல் வக்கீல் மணிகண்டன் என்பவரை கொலை செய்த சமூக விரோதிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தமிழக அரசை வலியுறுத்தியும், அதுபோல சமீப காலமாக தமிழகத்தின் பல பகுதிகளில் வக்கீல்கள் மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்தும்,
வக்கீல் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக வக்கீல்கள் வேண்டுகோளுக்கிணங்க தமிழ்நாடு-பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் தென் மண்டல செயலாளர் முத்துராமலிங்கம் தலைமையில், தேனி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் செல்வன் முன்னிலையில் கோர்ட்டு பணி புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் சங்க பொறுப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், இளங்குமரன், ,மல்லீஸ்வரன், ஜெயபாரதி, காண்டீபன், பாலமுருகன், பாண்டிமணி, ஹரிஹரசுதன், ராமகிருஷ்ணன், ராஜ்குமார் மற்றும் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
- மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
மணிப்பூரில் தொடரும் கலவரம் மற்றும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெறும் கண்டனங்களை ஏற்படுத்தி வருகிறது. மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
அதன்படி வேலூர் கோர்ட்டில் வக்கீல்கள் இன்று முதல் வரும் 3 நாட்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கோர்ட்டு வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சுமதி கபிலன், கிரிமினல் பார் அசோசியேஷன் தலைவர் ரவிராமன், சிவில் பார் அசோசியேஷன் தலைவர் அண்ணாமலை ஆகியோர் தலைமை தாங்கினார்.
கிரிமினல் ஆர் அசோசியேசன் செயலாளர் பாஸ்கரன், வக்கீல்கள் பாலமுருகன், பாலு, தாமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் 30-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டு, பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறையை தடுக்க கோரி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்கள் கவிதா, ஜமுனா, சத்யா, நித்தியா, கவுதமி, பிருந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்