என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா கூட்டணி கட்சிகள்"

    • வாக்கு வங்கியை திருப்திப்படுத்த எதிா்க்கட்சிகள் எல்லை மீறி செல்கின்றன.
    • மக்களுக்காக இரவு-பகல் பாராமல் தொடா்ந்து பணியாற்றுவேன்.

    உத்தரபிரதேசம்:

    உத்தரபிரதேச மாநிலத் தின் ஜான்பூா், பதோஹி, பிரதாப்கா் ஆகிய இடங்களில் நடைபெற்ற பாரதீய ஜனதா பிரசார பொதுக் கூட்டங்களில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அப்போது அவா் பேசியதாவது:-

    பாராளுமன்ற தோ்தல் என்பது நாட்டின் பிரதமரை தோ்வு செய்யும் வாய்ப்பா கும். அந்தப் பிரதமா், உலக நாடுகளால் ஆதிக்கம் செலுத்த முடியாத அளவில் வலுவான அரசை நடத்துபவராக இருக்க வேண்டும். அப்போதுதான், இந்தியா வின் வலிமையை உலகுக்குப் பறைசாற்ற முடியும்.

    கடந்த 500 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு அயோத்தியில் ஸ்ரீராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒட்டுமொத்த நாடும் மகிழ்ச்சியில் திளைக்கிறது. ஆனால், குடும்ப அரசியல்வாதிகளோ என் மீது அவதூறுகளை வாரி இறைக்கின்றனா்.

    சமாஜ்வாடியின் 'இளவரசா்' (அகிலேஷை குறிப்பிடு கிறாா்), ராமா் கோவிலால் பயனில்லை என்கிறாா். காசி குறித்தும் அவா் கேலி பேசுகிறாா். தங்களின் வாக்கு வங்கியைத் திருப்திப்படுத்த எதிா்க்கட்சிகள் எல்லை மீறி செல்கின்றன.

    மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க அவா்கள் விரும்புகின்றனா். இதற்காக அரசமைப்புச் சட்டத்தை மாற்றவும், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் உரிமை களைப் பறிக்கவும் திட்ட மிட்டுள்ளனா். நான் உயி ரோடு இருக்கும் வரை, அவா்களின் திட்டம் நிறை வேற அனுமதிக்க மாட்டேன்.

    வலிமையான பா.ஜ.க. அரசுக்குப் பதிலாக, '5 ஆண்டுகளுக்கு 5 பிரதமா்கள்' என்ற திட்டத்துடன் ஆட்சியைப் பிடிக்க விரும்புகிறது 'இந்தியா' கூட்டணி. ஆனால், ஜூன் 4-ந்தேதிக்குப் பிறகு பல விஷயங்கள் நிகழப் போகின்றன.

    'இந்தியா' கூட்டணி சித றுண்டு போவதுடன், தோ்தல் தோல்விக்கு பலிகடாவை தேடி அலை வா். எதிா்க்கட்சிகள் விலகி யோட, நாங்கள் மட்டுமே நிலைத்திருப்போம். கூடுதல் பலத்துடன் மீண்டும் எனது அரசு அமையும். மக்க ளுக்காக இரவு-பகல் பாராமல் தொடா்ந்து பணியாற்று வேன்.

    சமாஜ்வாடி, காங்கிரசின் 'இளவரசா்கள்' (அகிலேஷ், ராகுல் காந்தி) கோடை விடுமுறையைக் கழிக்க வெளிநாடு செல்வா். அமேதியில் இருந்து வெளியேறியவா் (ராகுல்), இம்முறை ரேபரேலியில் இருந்தும் வெளியேறுவாா்.

    மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இல்லாததால், எதிா்க்கட்சிகளின் கஜா னாக்களில் கருப்புப் பணம் காலியாகிவிட்டது. எனவே, நாட்டின் கருவூலத்தின் மீது அவா்கள் கண் வைத்து உள்ளனா். மக்களின் சொத்துகளைப் பறித்து, தங்களின் வாக்கு வங்கிக்கு வழங்குவதே அவா்களின் திட்டம்.

    குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ.) குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களைப் பரப்பு கின்றன. அந்த சட்டத்தை ரத்து செய்வோம் என்று கூறுகின்றனர். ஆனால் அந்தச் சட்டத்தை யாராலும் நீக்க முடியாது.

    பதோஹி மக்களவைத் தொகுதியில் எதிா்க்கட்சிகள் சாா்பில் திரிணாமுல் காங்கி ரஸ் வேட்பாளா் களம் இறக்கப்பட்டுள்ளாா். இதன்மூலம் மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் பின்பற்றும் அர சியலை, உத்தரபிரதேசத்தில் முயற்சிக்க அக்கட்சிகள் விரும்புகின்றன.

    இந்துக்கள், தலித் சமூ கத்தினா் மற்றும் பெண் களைத் துன்புறுத்துவதும் ஒரு தரப்பினரை திருப்திப்படுத்துவதுமே திரிணாமுல் காங்கிரசின் அரசியலாகும்.

    ராமா் கோவிலை புனித மற்றது என்று அக்கட்சி குறிப்பிடுகிறது. இந்துக்களை கங்கையில் மூழ்கடிக்க வேண்டுமென அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பேசுகின்றனா்.

    தற்போதைய தேர்தலில் நீங்கள் 2 விதமான மாடல் களை பார்க்கிறீர்கள். ஒன்று மோடி மாடல், மற்றொன்று எதிர்க்கட்சிக ளின் ஆணவ மாடல். காங்கிரஸ், சமாஜ் வாடி இரண்டும் இங்கு கூட்டணி அமைத்து அந்த ஆணவத்தில் ஈடுபட்டு உள்ளன.

    அவர்களது கூட்டணியில் உள்ள தென்மாநில கட்சி ஒன்று சனாதன தர்மத்தை இழிப்படுத்தி பேசியது. அப்போது காங்கிரசும், சமாஜ்வாடி கட்சியினரும் மவுனமாக இருந்தது ஏன்?

    கூட்டணிக்காக அவர்கள் கொள்கைகளை தியாகம் செய்து விட்டனர். இத்தகைய அரசியலை விதைக்க முயற்சிக்க நினைக்கும் காங்கிரஸ்-சமாஜ்வாடிக்கு படுதோல்வியே மிஞ்சும்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • கூட்டம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்தது.
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்தது.

    மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமை தாங்கினார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, எதிர்கட்சி தலைவர் சிவா, இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் தேவ.பொழிலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    விலைவாசி குறைப்பு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, நீட் தேர்வு ரத்து, புதுச்சேரிக்கு மாநில தகுதி கிடைக்க உறுதி அளித்த இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளித்து பா.ஜனதாவிற்கு தோல்வியை அளித்தனர்.

    புதுவையில் கடந்த 3 ஆண்டுகளாக மக்களுக்கு துன்பம் அளித்த என். ஆர். காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி ஆட்சிக்கு எதிராக இந்திய கூட்டணி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து மக்களின் நம்பிக்கையை பெற்றதனால் புதுச்சேரி மக்கள் இந்தியா கூட்டணி வேட்பாளர் காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கத்தை வெற்றியடைய செய்தனர். வெற்றியை அளித்த புதுச்சேரி மாநில மக்களுக்கு இந்தியா கூட்டணி நன்றியை தெரிவிக்கிறது.

    தொடர்ந்து போராட்டங்களை நடத்தி மக்கள் நம்பிக்கையை இழந்த என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி ஆட்சியை அகற்றி, எதிர்காலத்தில் மக்கள் நலம் காக்கும் அரசை அமைக்க இந்திய கூட்டணி பணியாற்றும். புதுச்சேரி மாநில மக்கள் நலனுக்காக தொடர்ந்து செயல்படும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

    • கோவை டாடாபாத் பவர் ஹவுஸ் அருகில் இன்று மாலை 4 மணிக்கு போராட்டம்.
    • இந்தியா கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் பங்கேற்பு.

    கோவை:

    கோவையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் முன்பு அண்ணாபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் ஜி.எஸ்.டி. தொடர்பாக நகைச்சுவையாக பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மறுநாளே ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து தான் அப்படி பேசியதற்காக வருத்தம் தெரிவித்தார். நிர்மலா சீதாராமனிடம் அவர் மன்னிப்பு கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

    ஜி.எஸ்.டி வரி தொடர்பாக கேள்வி எழுப்பிய ஓட்டல் உரிமையாளர் மிரட்டி மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டுள்ளார் என தகவல் பரவியது.

    இந்த விவகாரத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை கண்டித்து கோவையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்தநிலையில் தி.மு.க. கூட்டணியான இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று நிர்மலா சீதாராமனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கோவை டாடாபாத் பவர் ஹவுஸ் அருகில் இன்று மாலை 4 மணிக்கு போராட்டம் நடக்க உள்ளது.

    ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விடுதலைசிறுத்தைகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

    • தமிழக அரசு பஸ்கள் புதுச்சேரி எல்லையில் நிறுத்தப்படும்.
    • தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஆண்டுதோறும் மின்கட்டணம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் உயர்த்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான மின் கட்டண உயர்வு தொடர்பாக இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஜனவரி மாதம் பொதுமக்களிடம் கருத்து கேட்டது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் கட்டண உயர்வு அறிவிக்கப்பட தாமதமானது.

    இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி முதல் மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. அதன்படி வீட்டு உபயோக மின்சாரத்துக்கு யூனிட்டுக்கு 40 காசுகள் முதல் 75 காசுகள் வரை உயர்த்தப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினரும், சமூக அமைப்புகளும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

    இந்த நிலையில் மின் கட்டண உயர்வினை ரத்து செய்ய வேண்டும், பிரிபெய்டு திட்டத்தை கைவிட வேண்டும், மின்துறையை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் 'இந்தியா' கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ் டுகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் புதுச்சேரி மாநிலத்தில் நாளை (புதன்கிழமை) 'பந்த்' போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

    இந்த போராட்டம் புதுவை, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் என 4 பிராந்தியங்களிலும் நடைபெற உள்ளது.

    இதற்காக இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் தனியார் பஸ் உரிமையாளர்கள், டெம்போ, ஆட்டோ மற்றும் கடை உரிமையாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    தமிழக அரசு பஸ்கள் புதுச்சேரி எல்லையில் நிறுத்தப்படும். இதே போல் கடைகளும் அடைக்கப்படுகிறது.

    தற்போது தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டததிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதால் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு நாளை (புதன்கிழமை) விடுமுறை விடப்பட்டு அன்று நடைபெறும் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

    • எந்த நேரத்திலும் இந்தியா கூட்டணி உடைந்து சிதறும் என்று கருதுகிறார்கள்.
    • இந்தியா கூட்டணியை வழி நடத்தும் தலைவராக ராகுலை ஏற்க இயலாது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு கடந்த மே மாதம் தேர்தல் நடந்தபோது பா.ஜ.க.வை தோற்கடிக்கும் நோக்கத்துடன் காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, ராஷ்டிரிய ஜனதா தளம், தேசிய மாநாட்டு கட்சி, சமாஜ்வாடி, கம்யூனிஸ்டுகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின.

    இந்த கூட்டணியில் தொடக்கத்தில் இருந்தே கட்சிகளிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

    இந்த நிலையில் மராட்டியம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சிறப்பாக செயல்படவில்லை என்ற அதிருப்தி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களிடையே ஏற்பட்டுள்ளது.


    மராட்டியத்தில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் செய்தபோது கையில் ஒரு சிறிய சட்டப் புத்தகத்தை வைத்துக் கொண்டு, 'மோடி இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அழிக்க திட்ட மிடுகிறார்' என்று பிரசாரம் செய்தார்.

    மேலும் அதானிக்கும் மோடிக்கும் ரகசிய தொடர்பு இருப்பதாகவும், அதானிக்கு நாட்டை மோடி தாரைவார்த்து விட்டதாகவும் பிரசாரம் செய்தார். என்றாலும் மராட்டிய தேர்தலில் காங்கிரசுக்கு படு தோல்வியே மிஞ்சியது.

    என்றாலும் ராகுல் காந்தி சட்டப் புத்தகத்தையும், அதானி மீது குற்றம் சுமத்துவதையும் கைவிடவில்லை. கடந்த 25-ந்தேதி முதல் பாராளுமன்றம் கூடிய நாளில் இருந்து தினமும் அவர் பாராளுமன்றத்தில் அதானி பிரச்சனையை எழுப்பி சபையை நடத்த விடாமல் செய்கிறார்.

    அதோடு பாராளுமன்றத்துக்கு வெளியே வந்து தினமும் ஒவ்வொரு விதமான போராட்டத்தை நடத்துகிறார். இதனால் முக்கிய பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் பேச இயலவில்லை என்று இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களிடம் ராகுல் மீது மேலும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

    தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் மழை சேதத்திற்கு கூடுதல் நிதி கேட்டு திட்டமிட்டு இருந்தனர். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மேற்கு வங்காள பிரச்சனையை எழுப்ப ஆர்வமாக இருந்தனர்.

    சமாஜ்வாடி எம்.பி.க்கள் சம்பல் கலவரத்தை பாராளுமன்றத்தில் எழுப்ப திட்டமிட்டு இருந்தனர்.

    ஆனால் ராகுல் தொடர்ந்து அதானி பிரச்சனையை மட்டும் பேசியதால் இந்த கட்சிகள் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் செயல்பாடுகளில் இருந்து சற்று ஒதுங்கத் தொடங்கி உள்ளன.

    இந்த நிலையில் மேற்கு வங்காள முதல்-மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இந்தியா கூட்ட ணிக்கு தலைமையேற்று வழி நடத்த தயார் என்று அறிவித்துள்ளார். இது இந்தியா கூட்டணியில் மிகப்பெரிய சலசலப்பை உருவாக்கி இருக்கிறது.

    மம்தா பானர்ஜிக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டீரிய ஜனதா தளம் லல்லு பிரசாத் யாதவ் ஆகியோர் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.


    அதுபோல இந்தியா கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளும் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். சமாஜ்வாடி கட்சித் தலைவர்கள் நேரடியாகவே ராகுலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இந்தியா கூட்டணியை வழி நடத்தும் தலைவராக ராகுலை ஏற்க இயலாது என்று கூறி உள்ளனர்.

    பா.ஜ.க. கூட்டணி, இந்தியா கூட்டணி என இரண்டிலும் இடம் பெறாத ஆந்திர மாநில கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் மம்தா பானர்ஜிக்கு ஆதரவை தெரிவித்துள்ளது. அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மம்தா திறமையானவர். அவரால் நிச்சயமாக எதிர்க்கட்சிகள் அணியை திறம்பட வழிநடத்த முடியும்" என்று கூறியுள்ளது.

    இந்தியா கூட்டணியில் ஏற்பட்டுள்ள இந்த குழப்ப நிலை காரணமாக அந்த கூட்டணிக்கு தலைமை ஏற்பது யார் என்பதில் சர்ச்சை மேலும் விரிவடைந்துள்ளது. ராகுலின் தனிச்சசையான முடிவு காரணமாக இந்தியா கூட்டணியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருவதாக சரத்பவார், லல்லுபிரசாத் யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகியோர் கருதுகிறார்கள்.

    இது இந்தியா கூட்டணியில் ஏற்பட்டுள்ள சர்ச்சையை தொடர்ந்து அதிகரிக்கச் செய்துள்ளது. இந்த விஷயத்தில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி என்ன முடிவு எடுக்கும் என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.

    இந்த நிலையில் விரைவில் டெல்லி சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் ஆம்ஆத்மி கட்சி அதற்கு தயாராகி வருகிறது. வேட்பாளர்களையும் அந்த கட்சி அறிவித்து விட்டது. டெல்லி தேர்தலில் காங்கி ரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று ஆம்ஆத்மி கூறியுள்ளது.

    இதன் மூலம் இந்தியா கூட்டணியின் நோக்கம் சிதைந்து வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். எந்த நேரத்திலும் இந்தியா கூட்டணி மிகப்பெரிய உடைந்து சிதறும் என்று கருதுகிறார்கள்.

    ஆனால் இந்தியா கூட்டணியை வழிநடத்தும் பொறுப்பை விட்டுக் கொடுப்பதற்கு காங்கிரஸ் தலைவர்கள் தயங்குகிறார்கள். தலைமை பதவியை விட்டுக் கொடுத்தால் சாதாரண கட்சி போன்ற நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம் என்று ராகுலும், கார்கேவும் கருதுவதாக தெரிய வருகிறது.

    இதற்கிடையே காங்கிரஸ் மூத்த தலைவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சி தனித்து களம் இறங்குவதுதான் கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது என்று கூறி வருகிறார்கள்.

    மாநில சட்டசபை தேர்தல்களில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு வீழ்ச்சி அடைவதாக அவர்கள் கருதுகிறார்கள்.

    குறிப்பாக 200-க்கும் மேற்பட்ட தொகுதிகள் உள்ள மாநிலங்களில் வெறும் 30 அல்லது 40 இடங்களில் மட்டும் போட்டியிடுவதன் மூலம் காங்கிரஸ் நிர்வாகிகள் மனம் தளர்ந்து போகிறார்கள். பெரும்பாலானவர்களுக்கு எம்.எல்.ஏ. ஆக முடியாத நிலை நீடிக்கிறது.

    எனவேதான் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளில் பலரும் கட்சியை விட்டு விலகிச் செல்கிறார்கள். இதை தடுத்து காங்கிரசை வலுப்படுத்த வேண்டுமானால் இந்தியா கூட்டணியில் இடம் பெறாமல் தனித்து போட்டியிடுவதுதான் நல்லது என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்த தொடங்கி உள்ளனர்.

    இதன் காரணமாக இந்தியா கூட்டணியின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறி வருகிறது.

    • ராஜ்நாத் சிங்குக்கு ராகுல் காந்தி ரோஜா பூ மற்றும் தேசியக்கொடியை பரிசளித்தார்.
    • நாட்டை விற்க வேண்டாம் என்றும், கேட்டுக் கொண்டோம்.

    புதுடெல்லி:

    அதானி விவகாரத்தை பாராளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தும் நோக்கில் பாராளுமன்றம் கூடுவதற்கு முன்பாக வாசலில் குழுமிய இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பாராளுமன்றத்துக்கு வருகை தந்த பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு ரோஜா பூ மற்றும் தேசியக்கொடியை பரிசளித்தனர்.

    பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு ராகுல் காந்தி ரோஜா பூ மற்றும் தேசியக்கொடியை பரிசளித்தார்.

    காங்கிரஸ் எம்.பி. வர்ஷா கெய்க்வாட் கூறும்போது, 'தேசியக் கொடியை விநியோகித்தோம். நாட்டை விற்க வேண்டாம் என்றும், கேட்டுக் கொண்டோம். ஏழைகளின் குரல் நசுக்கப்படுகிறது. நாட்டை விற்கும் சதிக்கு எதிராக நாங்கள் இருக்கிறோம்.' என்றார்.

    ×