என் மலர்
நீங்கள் தேடியது "slug 94334"
- ஜி ஜின்பிங் பாகிஸ்தானின் உண்மையான நண்பர் என ஆரிப் ஆல்வி வாழ்த்து.
- இது சாமர்த்தியமான பணி திறனுக்கு கிடைத்த பிரகாசமான கவுரவம்.
இஸ்லாமாபாத்:
சீன தலைநகர் பிஜீங்கில் நடைபெற்ற கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாட்டின் முடிவில் ஜி ஜின்பிங் மீண்டும் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் 3வது முறையாக அவர் சீனாவின் அதிபராகவும் தேர்வானார்.
இந்த நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு வாழ்த்து தெரிவித்து பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சீன அதிபர் ஜி ஜின்பிங் பாகிஸ்தானின் உண்மையான நண்பர் என்று குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷரீப், வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஒட்டு மொத்த பாகிஸ்தான் சார்பாக தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். சாமர்த்தியமான பணி திறனுக்கும், சீன மக்களுக்குச் சேவையாற்றுவதில் அசைக்க முடியாத பக்திக்கும் இது அவருக்கு கிடைத்த ஒரு பிரகாசமான கவுரவம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
- ஐ.சி.சி. போட்டியில் சிறப்பாக ஆடவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
- ஒவ்வொரு ஆட்டத்திலும் தேவைப்பட்டால் வீரர்கள் தேர்வில் மாற்றம் செய்ய தயார்
மெல்போர்ன்:
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுடனான ஆட்டம் குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
ஒவ்வொரு ஆட்டத்திலும் தேவைப்பட்டால் வீரர்கள் தேர்வில் மாற்றம் செய்ய தயாராக இருக்கிறோம். ஒன்று அல்லது இரண்டு மாற்றங்களை செய்ய தயங்கவில்லை. தற்போதைய ஆட்ட நிலை மற்றும் செயல்படும் தன்மையை பொறுத்து தேர்வு நடைபெறுகிறது.
ஐ.சி.சி. போட்டியில் சிறப்பாக ஆடவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். அழுத்தம் நிலையானது. பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெறுவது சவாலானது. 9 ஆண்டுகளாக ஐ.சி.சி. போட்டியில் நாங்கள் வெற்றி பெறவில்லை. இது ஏமாற்றமே.
ஆசிய கோப்பை போட்டியில் விளையாட பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்வது பற்றி பி.சி.சி.ஐ. (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) தான் முடிவு செய்யும். பாகிஸ்தான் செல்வது தொடர்பாக என்ன முடிவு எடுக்கப்பட்டாலும் எங்களுக்கு கவலை இல்லை.
நாளைய போட்டியில் பாகிஸ்தானை எதிர் கொள்வது பற்றி மட்டுமே தற்போது யோசித்து கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார்.
- எந்தவிதமான ஒருங்கிணைப்பும் இல்லாமல் அணு ஆயுதம் வைத்துக்கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு
- அமெரிக்காவுடனான உறவை மேம்படுத்துவதற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முயற்சி
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பாகிஸ்தானுக்கு எதிராக பேசியது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஜனநாயக கட்சியின் பிரச்சாரக் குழு வரவேற்பு நிகழச்சியில் ஜோ பைடன் இவ்வாறு பேசியிருக்கிறார்.
ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்படுத்தி உள்ள சவால்கள் குறித்து பேசும்போது, பாகிஸ்தான் குறித்து பைடன் பேசினார். தன்னுடைய பார்வையில் பாகிஸ்தான் நாடு, உலகத்திலேயே மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்று எனவும், எந்தவிதமான ஒருங்கிணைப்பும் இல்லாமல் அணு ஆயுதம் வைத்துக்கொண்டிருக்கும் நாடு எனவும் தெரிவித்தார்.
அமெரிக்காவுடனான உறவை மேம்படுத்துவதற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், பைடன் இவ்வாறு கூறியிருப்பது பாகிஸ்தான் அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கொள்கை வெளியிடப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு பைடனின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன. 48 பக்கங்கள் கொண்ட இந்த பாதுகாப்பு கொள்கை அறிக்கையில் பாகிஸ்தானைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- ஷரியாவுக்கு எதிராக ரிபா அடிப்படையிலான வங்கி முறையை அறிவிக்கும் முக்கிய தீர்ப்பை நீதிபதி வழங்கியுள்ளார்
- நீதிபதி மறைவுக்கு பலுசிஸ்தான் முதல்வர் அப்துல் குத்தூஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முகமது நூர் மெஸ்கன்சாய் நேற்று பலுசிஸ்தான் மாகாணத்தின் கரண் பகுதியில் உள்ள மசூதிக்கு வெளியே நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் திடீரென அவரை நோக்கி சூப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் பலத்த காயமடைந்த நீதிபதியை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார்.
நீதிபதி மறைவுக்கு பலுசிஸ்தான் முதல்வர் அப்துல் குத்தூஸ் இரங்கல் தெரிவித்துள்ளா. மேலும் நீதிபதியின் சேவை மறக்க முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற கோழைத்தனமான தாக்குதல்களால் தேசத்தை அச்சுறுத்த முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.
ஷரியாவுக்கு எதிராக ரிபா அடிப்படையிலான வங்கி முறையை அறிவிக்கும் முக்கிய தீர்ப்பை மெஸ்கன்சாய் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய நியூசிலாந்து 163 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய பாகிஸ்தான் 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கிறிஸ்ட்சர்ச்:
நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகள் முத்தரப்பு தொடரில் பங்கேற்றன. லீக் சுற்றுகளின் முடிவில் முத்ல் இரு இடம்பெற்ற பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இரு அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. கேன் வில்லியம்சன் 38 பந்தில் 59 ரன்கள் குவித்தார்.
164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. மொகமது நவாஸ் 38 ரன்னும், மொகமது ரிஸ்வான் 34 ரன்னும் எடுத்தனர். ஹைதர் அலி அதிரடியாக ஆடி 31 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், பாகிஸ்தான் 19.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி முத்தரப்பு தொடர் கோப்பையை கைப்பற்றியது.
ஆட்ட நாயகன் விருது மொகமது நவாசுக்கும், தொடர் நாயகன் விருது மைக்கேல் பிரேஸ்வெல்லுக்கும் வழங்கப்பட்டது.
- விமான நிலையத்தில், திருடன் என குரல் எழுப்பிய போராட்டக்காரர்கள்.
- வெளிநாடுகளில் பாகிஸ்தான் அமைச்சர்கள் தொடர்ந்து அவமதிப்பு
வாஷிங்டன்:
பாகிஸ்தான் புதிய நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள 72 வயதான இஷாக் தார், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்திர கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.வாஷிங்டன் விமான நிலையத்திற்கு வந்த இறங்கிய அவர், அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் மசூத் கான் மற்றும் பிற அதிகாரிகளுடன் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவரை சூழ்ந்து கொண்ட போராட்டக்காரர்கள் சிலர், கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமைச்சர் தார் ஒரு பொய்யர் என்றும், திருடன் என்றும் போராட்டக்காரர்கள் குரல் எழுப்பும் வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வைரலானது. பாகிஸ்தான் அமைச்சர்கள் வெளிநாட்டுப் பயணங்களிலும் போது, பொது இடங்களில் சிலர் அவர்களை முற்றுகையிட்டு கோஷமிடுவது தொடர்கதையாகி வருகிறது.
கடந்த மாதம், லண்டனில் உள்ள ஒரு காபி ஷாப்பில் பாகிஸ்தான் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் மரியம் ஔரங்கசீப்பை சிலர் முற்றுகையிட்டு எதிர்ப்பு குரல் எழுப்பினர். இதேபோல் பாகிஸ்தான் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அஹ்சன் இக்பால், ஒரு உணவகத்திற்கு சென்ற போது, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் ஆதரவாளர்கள் அவருக்கு எதிராக கோஷமிட்டது குறிப்பிட்டதக்கது.
- முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 122 ரன்களை எடுத்தது.
- அடுத்து ஆடிய பாகிஸ்தான் 121 ரன் எடுத்து ஒரு ரன்னில் தோற்றது.
சில்ஹெட்:
பெண்கள் ஆசிய கோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் மாதவி அதிகபட்சமாக 35 ரன்னும், அனுஷ்கா சஞ்சீவனி 26 ரன்னும் எடுத்தனர்.
பாகிஸ்தான் சார்பில் நஷ்ரா சந்து 3 விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து, 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. கேப்டன் பிஸ்மா மரூப் மட்டும் தாக்குப் பிடித்து 42 ரன்கள் எடுத்தார்.
கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 7 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஒரு ரன் வித்தியாசத்தில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன
- கவுரவ கொலைகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தின.
- கற்பழிப்பு வழக்குகள் அதிகரித்தாலும் தண்டனை விகிதம் 0.2 சதவிகிதம் என மோசமாகவே உள்ளது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் நாட்டில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துளள்து. கவுரவக் கொலைகள் அதிக அளவில் நடைபெறும் பாகிஸ்தானில், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமைகளை சர்வே எடுத்துக்காட்டுவதாக கூறப்பட்டுள்ளது. சாமா தொலைக்காட்சியின் புலனாய்வு பிரிவு நடத்திய கணக்கெடுப்பில் இந்த தகவல் வெளியாகியிருக்கிறது.
பஞ்சாப் மாகாணத்தின் உள்துறை மற்றும் மனித உரிமைகள் அமைச்சகத்திடம் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், கற்பழிப்பு வழக்குகள் அதிகரித்தாலும், தண்டனை விகிதம் 0.2 சதவிகிதம் என மோசமாகவே உள்ளது.
2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை நாட்டில் 21,900 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக, புதிதாக சேகரிக்கப்பட்டு தொகுக்கப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது, நாடு முழுவதும் தினமும் சுமார் 12 பெண்கள் அல்லது ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டுள்ளதை இந்த புள்ளிவிவரம் காட்டுகிறது.
பாகிஸ்தானில் அதிகரித்து வரும் கவுரவ கொலைகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா. சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தின.
பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையத்தின் தரவுகளின்படி, கடந்த 4 ஆண்டுகளில் 1,957 கவுரவக் கொலைகள் பதிவாகியிருப்பதாக தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
- உக்ரைன் போர் சூழலுடன் காஷ்மீர் விவகாரத்தை இணைத்து பேசினார்.
- தொடர்ந்து பொய்களை கூறும் மனபாங்குடன் இதுபோன்ற பேச்சுக்கள் உள்ளன.
ரஷியாவுக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் பேசிய பாகிஸ்தான் தூதர், காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினார். உக்ரைன் போர் சூழலுடன் காஷ்மீர் விவகாரத்தை இணைத்து பேசினார்.
இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய பிரதிநிதி ருசிரா கம்போஜ் கூறும்போது, "இந்தியாவுக்கு எதிராக அர்த்தமற்ற விஷயங்களை குறிப்பிட்டு ஐ.நா. அமைப்பை மீண்டும் ஒருமுறை தவறாக பயன்படுத்த வெளிநாட்டு குழு ஒன்று முயற்சித்து உள்ளது. தொடர்ந்து பொய்களை கூறும் மனபாங்குடன் இதுபோன்ற பேச்சுக்கள் உள்ளன. இது எந்த மதிப்புக்கும் உரியவை அல்ல.
ஜம்மு-காஷ்மீர் எப்போதும் இந்தியாவுடன் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாகும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்துமாறு பாகிஸ்தானை கேட்டு கொள்கிறோம். இதனால் எங்கள் குடிமக்கள் தங்களது வாழ்வுரிமை மற்றும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்" என்றார்.
- 2014-ம் ஆண்டு அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது.
- உலகிலேயே மிகவும் இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர்.
கராச்சி :
பாகிஸ்தானைத் சேர்ந்த மலாலா, தனது சிறுவயது முதலே பெண்களின் கல்விக்காக குரல் கொடுத்து வருகிறார்.
கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் 9-ந் தேதி மலாலா 15 வயது சிறுமியாக இருந்தபோது தலீபான் பயங்கரவாதிகள் அவரது தலையில் துப்பாக்கியால் சுட்டனர். எனினும் இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேல்சிகிச்சைக்காக லண்டன் சென்ற அவர், அங்கேயே உயர்க்கல்வி படித்து பட்டம் பெற்றார்.
கடந்த 2014-ம் ஆண்டு அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. இதன் மூலம் உலகிலேயே மிகவும் இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமைக்கு அவர் சொந்தக்காரர் ஆனார்.
இந்த நிலையில் மலாலா தலீபான்களின் கொலை முயற்சியில் உயிர் தப்பி கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்த நாளில் நேற்று அவர் பாகிஸ்தான் வந்தார்.
லண்டனில் இருந்து விமானம் மூலம் கராச்சி நகருக்கு வந்த மலாலா, அங்கிருந்து மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்தார்.
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் தாக்கத்தில் சர்வதேச கவனத்தை ஒருமுகப்படுத்தவும், முக்கியமான மனிதாபிமான உதவியின் அவசியத்தை வலுப்படுத்தவும் உதவுவதே மலாலா வருகையின் நோக்கம் என அவரது அறக்கட்டளை அமைப்பு தெரிவித்துள்ளது.
தலீபான்களின் கொலை முயற்சிக்கு பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு பாகிஸ்தான் வந்த மலாலா, 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தனது தாயகத்துக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
- தீப்பிடித்தவுடன் எஸ்கலேட்டர்களைப் பயன்படுத்தி மக்கள் தப்பித்தனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள புகழ் பெற்ற சென்டாரஸ் அடுக்குமாடி வணிக வளாகத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. அந்த கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் பிடித்த தீ மற்ற பகுதிக்குள் பரவுவதை தடுக்க தீயணைப்புத்துறை வீரர்கள் போராடினர். தீ பிடித்தவுடன் உள்ளே இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். எஸ்கலேட்டர்களைப் பயன்படுத்தி மக்கள் தப்பிக்கும் வீடியோ காட்சி சமூக வளைதளங்களில் வெளியானது. 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த தீ விபத்தை அடுத்து அந்த வணிக வளாகத்திற்கு சீல் வைக்க இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில், இஸ்லாமாபாத்தில் உள்ள நகராட்சி ஆணையம் ஒரு குழுவை அமைத்து தீபிடித்த கட்டிடத்தின் திறன் குறித்து விசாரணை நடத்த கோரப்பட்டுள்ளது.
- பாகிஸ்தான் நிதியமைச்சர் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் தேசிய இயக்குனர் சந்தித்து பேசினர்.
- வெள்ளத்தால் சுமார் 40 பில்லியன் டாலர் அளவிற்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக அரசு மதிப்பிட்டுள்ளது
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் ஜூன் மாத மத்தியில் மழை வெள்ளத்திற்கு 1600க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர், பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கடும் இழப்பை சந்தித்துள்ள பாகிஸ்தானுக்கு நிவாரணப் பணிகளுக்காக 2.3 முதல் 2.5 பில்லியன் (250 கோடி) டாலர்கள் வரை வழங்க உள்ளதாக ஆசிய வளர்ச்சி வங்கி அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தார் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் தேசிய இயக்குனர் யாங் யீ ஆகியோர் சந்தித்து பேசியபோது இந்த அறிவிப்பு வெளியிடுப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் வெள்ளப்பெருக்கில் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பொருட்சேதங்களுக்கு யாங் யீ தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார்.
வெள்ளத்தால் சுமார் 40 பில்லியன் டாலர் அளவிற்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக அரசு மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் வந்துள்ள தூதுக்குழுவை வரவேற்ற நிதியமைச்சர் இஷாக் தார், நாட்டில் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதில் ஆசிய வளர்ச்சி வங்கியின் பங்கு மற்றும் ஆதரவைப் பாராட்டினார்.
பொருளாதாரம் பெரிய சவால்களை எதிர்கொண்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார், பொருளாதார சரிவை அரசு கட்டுப்படுத்தி, நடைமுறைக்கேற்ற கொள்கை முடிவுகளால் பொருளாதாரத்தை சரியான பாதையில் அமைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.