search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94372"

    • ஸ்ரீதரை சிகிச்சைக்காக மதனப்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • மதனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து மம்தாவை கைது செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம், பூஜாரி வாரி பள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 36). ராணுவ வீரர். இவரது மனைவி மம்தா. இவர்கள் இருவரும் கல்லூரியில் படிக்கும்போதே காதலித்து வந்தனர்.

    கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    கடந்த 2019-ம் ஆண்டு ஸ்ரீதர் ராணுவ பணியில் இருந்து ஓய்வு பெற்றார். தினமும் மது குடித்து விட்டு மனைவியை அடித்து துன்புறுத்தி வந்தார்.

    இதுகுறித்து மம்தா போலீசில் புகார் செய்தார்.போலீசார் கணவன் மனைவி இருவரையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    கணவரின் தொல்லை தாங்க முடியாததால் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மம்தா தனது தாய் வீட்டிற்கு சென்றார்.

    இந்த நிலையில் நேற்று ஸ்ரீதர் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். கோடை வெப்பம் அதிகமாக இருந்ததால் அறையின் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினார்.

    நள்ளிரவில் மம்தா கணவர் வீட்டிற்கு வந்தார். வீட்டின் மாடிக்கு சென்று அங்கு அறையில் தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு சென்று விட்டார்.

    உடல் முழுவதும் தீ பற்றி எரிந்ததால் ஸ்ரீதர் வலியால் அலறி துடித்தார். ஸ்ரீதரின் அலறல் சத்தம் கேட்ட அவரது பெற்றோர் மாடிக்கு ஓடிவந்து அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஸ்ரீதரை சிகிச்சைக்காக மதனப்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஸ்ரீதர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மதனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து மம்தாவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகள் மீதான பாசத்தில் நாயை சற்று அதிகமாகவே தாக்கினார்.
    • வழக்குப்பதிவு செய்த வாழப்பாடி போலீசார், குமாரை விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    வாழப்பாடி:

    இன்றைய நவீன உலகில் மொபைல் போன் பயன்படுத்துகிற பெரும்பாலானோர் வாட்ஸ்-அப், முகநூல், இன்ஸ்டாகிராம், டுவிட்டர், யூ-டியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அன்றாட நிகழ்வுகளை யதார்த்தமாக பதிவு செய்து வருகிறார்கள். அதுபோன்று 7 மாதங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலான வீடியோவால் தொழிலாளி கைதாகி கம்பி எண்ணும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டது.

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த அத்தனூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி குமார் (வயது 46). இவர் செல்லப்பிராணியாக நாய் வளர்த்து வந்தார். குமாரின் மகள் அந்த நாயை கொஞ்சி விளையாடுவது வழக்கம்.

    7 மாதங்களுக்கு முன்பு தெருவோர வெறிநாய் ஒன்று கடித்ததில் அந்த வளர்ப்பு நாய்க்கு வெறி பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது குமாரின் மகளை நாய் கடித்தது. இதனால் ஆத்திரமடைந்த குமார் அந்த நாயை கோபத்தில் அடித்தார். மகள் மீதான பாசத்தில் நாயை சற்று அதிகமாகவே தாக்கினார். இதில் அந்த நாய் இறந்தது.

    இந்த சம்பவத்தை அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். சென்னை திருவள்ளூர் பகுதியை சேர்ந்த பிராணிகள் நல அமைப்பின் தலைவர் விக்னேஷ், இதுபற்றி வாழப்பாடி போலீசில் புகார் செய்தார்.

    இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வாழப்பாடி போலீசார், குமாரை விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்பு அவர் ஆத்தூர் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு அருண்குமார் முன்பாக ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டுவிடம் குமார் மகளை நாய் கடித்ததால் ஏற்பட்ட காயத்திற்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஆவணங்களை பார்த்தார். இதையடுத்து கூலித்தொழிலாளி குமாரை மாஜிஸ்திரேட்டு அருண்குமார் ஜாமீனில் விடுதலை செய்தார்.

    • மாணவி மரணம் தொடர்பாக தெர்மல்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • வாலிபர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி உறவினர்கள் வலியுறுத்தினர்.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி லேபர் காலனியை சேர்ந்தவர் சரவணகுமார். கட்டிட தொழிலாளி. இவரது மகள் ஹரிணி (வயது 20). இவர் தூத்துக்குடி அரசு நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று முன்தினம் ஹரிணி வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தெர்மல்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் மாணவிக்கும் விருதுநகரை சேர்ந்த ஒரு வாலிபருக்கு பழக்கம் இருந்ததாகவும், அந்த வாலிபர்தான் ஹரிணியின் சாவுக்கு காரணம் என்றும் புகார் தெரிவித்தனர்.

    அந்த வாலிபர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து அவர்களுடன் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ், இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை.

    இந்நிலையில் வாலிபரை கைது செய்ய வலியுறுத்தி இன்று 2-வது நாளாக மாணவி உடலை வாங்க மறுத்து பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாணவியின் உடல் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

    • சென்னை அயனாவரம் கே.கே.நகர் பகுதியில் வசித்து வருபவர் விஜயகுமார்.
    • வில்லிவாக்கம் மீன் மார்க்கெட்டுக்கு சென்று கோட்டை முனியசாமியிடம் ஏன் ஆபாசமாக பேசினீர்கள் என்று கேட்டுள்ளனர்.

    சென்னை:

    சென்னை அயனாவரம் கே.கே.நகர் பகுதியில் வசித்து வருபவர் விஜயகுமார். இவரது மனைவி காந்தி. இவர் வில்லிவாக்கம் மீன் மார்க்கெட்டுக்கு மீன் வாங்குவதற்காக சென்றார்.

    அங்கு கோட்டை முனியசாமி என்ற மீன் வியாபாரியிடம் காந்தி நல்ல மீன்கள் வந்தால் சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். உடனே மீன் வியாபாரி முனியசாமி காந்தியிடம் செல்போன் எண்ணை கேட்டுள்ளார். இதை தொடர்ந்து காந்தி தனது செல்போன் எண்ணை கொடுத்து விட்டு திரும்பினார்.

    இதன் பின்னர் காந்தியின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய கோட்டை முனியசாமி நல்ல மீன்கள் வந்துள்ளது என்று கூறி உள்ளார். அப்போது நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று கூறியதுடன் ஆபாசவார்த்தைகளையும் பேசி உள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த காந்தி இதுபற்றி கணவர் விஜயகுமாரிடம் முறையிட்டு உள்ளார்.

    இதையடுத்து இருவரும் வில்லிவாக்கம் மீன் மார்க்கெட்டுக்கு சென்று கோட்டை முனியசாமியிடம் ஏன் ஆபாசமாக பேசினீர்கள் என்று கேட்டுள்ளனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கோட்டை முனியசாமி, கணவன்-மனைவி இருவரிடமும் தகராறில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக 3 பேரும் வந்துள்ளனர். பின்னர் கோட்டை முனியசாமி உள்பட 4 பேரும் சேர்ந்து கொண்டு விஜயகுமாரையும், காந்தியையும் சரமாரியாக மீன் வெட்டும் கத்தியால் தாக்கியுள்ளனர். பிளாஸ்டிக் பெட்டிகளை கொண்டும் சரமாரியாக அடித்துள்ளனர்.

    இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இது பற்றி விஜயகுமார் ராஜமங்கலம் போலீசில் புகார் அளித்தார். பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மீன் மார்க்கெட்டுக்கு நேரில் சென்றும் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் கணவன்-மனைவியை தாக்கிய குற்றத்துக்காக கோட்டை முனியசாமி, திருகண்ணன், விஜய்சங்கர், காளிதாஸ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    இவர்களில் கோட்டை முனியசாமி லட்சுமிபுரத்தை சேர்ந்தவர். திருகண்ணன், விஜய்சங்கர் இருவரும் கொளத்தூரை சேர்ந்தவர்கள் ஆவர். காளிதாசின் சொந்த ஊர் கமுதி. 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வீட்டில் இருந்த பொருட்களும் நொறுக்கப்பட்டு இருந்தது.
    • மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார்.

    போரூர்:

    மதுரவாயல், பாரதிநகர், 3-வது தெருவில் வசித்து வருபவர் கருணாநிதி பாண்டே. எலக்ட்ரீசியன். இவரது சொந்த ஊர் உத்தர பிரதேச மாநிலம் ஆகும்.

    இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்று இருந்தார். இந்த நிலையில் கருணாநிதி பாண்டே திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. பீரோவும் உடைக்கபட்டு அதில் இருந்த பொருட்கள் கீழே சிதறி கிடந்தன. மேலும் வீட்டில் இருந்த பொருட்களும் நொறுக்கப்பட்டு இருந்தது.

    வீட்டில் நகை-பணம் இல்லாததால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் பொருட்களை நொறுக்கி சூறையாடிவிட்டு தப்பி சென்று இருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து கொள்ளையில் ஈடுபட்ட புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், ஆகாஷ் என்கிற விக்னேஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • லிபின் ராஜாவை பழவூர் பகுதியில் கொலை செய்து புதைத்து வைத்திருப்பது தெரிய வந்தது.
    • கொலை செய்யப்பட்டு 4 மாதங்களுக்கு பிறகு ஜோஸ் பெவின் கைது செய்யப்பட்டுள்ளார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் சீயோன் தெருவை சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 66).

    இவர், குமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராகவும், அயக்கோடு பஞ்சாயத்து தலைவராகவும் உள்ளார். இவரது மகன் லிபின் ராஜா (23) ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் 4-ந்தேதி வீட்டில் இருந்த லிபின் ராஜா திடீரென மாயமானார்.

    இதுகுறித்து அவரது தந்தை செல்லப்பன் நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் லிபின் ராஜாவை பழவூர் பகுதியில் கொலை செய்து புதைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து போலீசார் லிபின் ராஜாவின் உடலை தோண்டி எடுத்தனர். லிபின் ராஜா கொலை வழக்கில் தொடர்புடைய புதுக்குடியிருப்பைச் சேர்ந்த எபின் (27), ஸ்டீபன் ராஜ் (26) ஆகிய இருவரும் நாகர்கோவில் கோர்ட்டில் சரணடைந்தனர்.

    சரண் அடைந்த இருவரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். லிபின் ராஜாவுக்கும் எபினுக்கும் இடையே சிறு சிறு பிரச்சனை இருந்து வந்ததாகவும் அந்த பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று லிபின் ராஜாவை எபின் மற்றும் ஸ்டீபன் ராஜ் ஆகியோர் அழைத்துள்ளனர்.

    சம்பவத்தன்று வழுக்கம் பாறை பகுதியில் பேசிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட பிரச்சனையில் கட்டையால் தாக்கி லிபின் ராஜாவை கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு உடலை மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்று புதைத்ததாகவும் தெரிவித்தனர்.

    இந்த வழக்கில் நாகர்கோவில் புது குடியிருப்பு காமராஜர்புரம் சர்ச் தெருவைச் சேர்ந்த ஜோஸ் பெவின் (24) என்பவருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்ததை அடுத்து அவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் ஜோஸ் பெவினை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு ஜோஸ் பெவினை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜோஸ் பெவினிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை செய்யப்பட்டு 4 மாதங்களுக்கு பிறகு ஜோஸ் பெவின் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கைது செய்யப்பட்ட ஜோஸ் பெவின் ஆந்திராவில் சட்டக் கல்லூரியில் படித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்டீபன் ராஜ் கடந்த வாரம் குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ளார்.

    • ரூ.20 லட்சம் ஹவாலா பணம் தொடர்பாக சிவ பாலனிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை அண்ணாசாலையில் கடந்த மாதம் 27-ந்தேதி ரூ.20 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    இதுதொடர்பாக அண்ணாசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இளையான்குடியை சேர்ந்த சிவபாலன் என்பவரை அரிவாளால் வெட்டி 6 பேர் கொண்ட கும்பல் இந்த பணத்தை பறித்துச் சென்றது தெரிய வந்தது. சேப்பாக்கத்தில் தங்கி இருந்த இவர் ராயப்பேட்டையில் உள்ள தனது நண்பரை பார்க்க சென்றபோது தான் அண்ணாசாலையில் வங்கி ஒன்றின் அருகில் வைத்து 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் வழிமறித்து அரிவாளால் வெட்டி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர்.

    இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிவபாலன் போலீசில் அளித்த புகாரில் மருந்து உபகரணங்கள் வாங்குவதற்காக இந்த பணத்தை எடுத்து சென்றதாக தெரிவித்து இருந்தார். அவரது பேச்சுக்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்ததை தொடர்ந்து போலீசார் கொள்ளை சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரிலேயே விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் ரூ.20 லட்சம் ஹவாலா பணம் என்பது தெரிய வந்தது. பாரிமுனையில் இருந்து பணத்தை எடுத்து வந்தபோது பின் தொடர்ந்து கொள்ளையடித்தவர்கள் யார்? என்பதும் அடையாளம் தெரிந்தது.

    இது தொடர்பாக பூந்தமல்லியை சேர்ந்த ராஜா, கே.கே.நகரை சேர்ந்த முகமது இஸ்மாயில் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    ரூ.20 லட்சம் ஹவாலா பணம் தொடர்பாக சிவபாலனிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த பணத்தை கொடுத்து அனுப்பியது யார்? என்பதும் அடையாளம் தெரிந்துள்ளது. அவரது பின்னணி தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஹவாலா பணம் பரி மாற்றம் தொடர்பாக வருமான வரித்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ஹவாலா பண பரிமாற்றத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் தலைவன் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

    • கொரட்டூர், பாடி பஜனை கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்.
    • தீபா என்பவரது தொலைந்து போன ஏ.டி.எம்.கார்டு மூலம் ரூ.79 ஆயிரம் ரொக்கம் எடுக்கப்பட்டது.

    அம்பத்தூர்:

    கொரட்டூர், பாடி பஜனை கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த 10-ந் தேதி பாடி யாதவாள் தெருவில் உள்ள ஏ.டி.எம்.எந்திரத்தில் பணம் எடுத்துவிட்டு கார்டை அங்கேயே மறந்து விட்டு சென்றார். சிறிது நேரத்துக்கு பின்னர் அங்கு சென்று பார்த்தபோது ஏ.டி.எம் கார்டு இல்லை. இந்த நிலையில் அந்த ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கியதை தொடர்ந்து வங்கி கணக்கில் இருந்து பணம் சென்றது.

    இதேபோல் திருமுல்லைவாயல் ஜெயலட்சுமி நகரை சேர்ந்த தீபா என்பவரது தொலைந்து போன ஏ.டி.எம்.கார்டு மூலம் ரூ.79 ஆயிரம் ரொக்கம் எடுக்கப்பட்டது. மேலும் மருந்து கடை, செல்போன் கடை, மதுபான கடைகளில் பயன்படுத்தப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி மண்ணூர்பேட்டையை சேர்ந்த சுரேஷ்(31) என்பவரை கைது செய்தனர். அவர் ஏ.டி.எம்.களில் வாடிக்கையாளர்கள் மறந்து விட்டு செல்லும் வை-பை ஏ.டி.எம்.கார்டுகளை திருடி நூதன முறையில் கடைகளில் பொருட்கள் வாங்கி உல்லாசமாக செலவு செய்து வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 25-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பெட்டிக் கடை உள்ளிட்ட 3கடைகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொள்ளை நடந்தது.

    போரூர்:

    வடபழனி, ஆற்காடு சாலையில் உள்ள மளிகை கடை, பெட்டிக் கடை உள்ளிட்ட 3கடைகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொள்ளை நடந்தது. இதுகுறித்து வடபழனி உதவி கமிஷனர் பாலமுருகன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து கொள்ளையில் ஈடுபட்ட அதே பகுதி அழகர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த அப்துல் ஷெரிப்(22) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே வடபழனி, விருகம்பாக்கம் போலீஸ் நிலையங்களில் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தருமபுரி மாவட்டம், பொம்மிடி விடிவெள்ளி நகர் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன்.
    • வியாபாரி கொலை செய்த சம்பவம் பொம்மிடி பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பொம்மிடி விடிவெள்ளி நகர் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (வயது35). இவர் பேன்சி பொருட்கள் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு முனியப்பனின் உறவினரான ஈஸ்வரன் என்பவர் தான் காரணம் என்று முனியப்பன் அடிக்கடி கூறி வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று முனியப்பனும், ஈஸ்வரனும் குடிபோதையில் சந்தித்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரமடைந்த ஈஸ்வரன் அருகில் இருந்த பன்றி வெட்டும் கத்தியை எடுத்து முனியப்பனை சரமாரியாக குத்தி கொலை செய்தார்.

    இதில் சம்பவ இடத்திலேயே முனியப்பன் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து உயிரிழந்தார்.

    இது குறித்து பொம்மிடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த முனியப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் ஈஸ்வரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    வியாபாரி கொலை செய்த சம்பவம் பொம்மிடி பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வீட்டை சுற்றி வளைத்து அதிரடியாக புகுந்தனர்.
    • சரியான நேரத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டதால் கொலை திட்டம் தடுக்கப்பட்டு உள்ளது.

    அம்பத்தூர்:

    கொரட்டூர், கங்கை அம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பயங்கர ஆயுதங்களுடன் மர்மகும்பல் பதுங்கி இருப்பதாக இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்திக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்துபோலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்து அதிரடியாக புகுந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் வீட்டில் இருந்த 3 வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர். அங்கிருந்த மேலும் 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    அவர்கள் கொரட்டூர் பகுதியை சேர்ந்த ஆகாஷ், கல்லூரி மாணவரான அஜய் மற்றும் பட்டரைவாக்கம் பகுதியை சேர்ந்த நிஷாந்த் என்பது தெரிய வந்தது.

    அவர்கள் சிறையில் இருக்கும் ஒரு ரவுடியின் திட்டப்படி அதேபகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை தீர்த்து கட்ட திட்டமிட்டு பதுங்கி இருந்தது தெரிந்தது. சரியான நேரத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டதால் கொலை திட்டம் தடுக்கப்பட்டு உள்ளது.

    கைதானவர்களிடம் இருந்து அரிவாள், பட்டாக் கத்தி மற்றும் அதனை கூர்மைப்படுத்த பயன் படுத்தும் எந்திரம், இரும்பு கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய 3 பேர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இளம்பெண் பயணம் செய்த பெட்டியில் அவருடைய இருக்கை அருகே இருந்த நபர் கல்லூரி மாணவியிடம் ’செக்ஸ்’ சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
    • இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் திருப்பூர் ரெயில் நிலையம் வந்ததும், ரெயில்வே போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 19 வயதுஇளம்பெண் கர்நாடகாவில் கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று கர்நாடகாவில் இருந்து கோழிக்கோட்டுக்கு யஷ்வந்த்பூர்-கண்ணூர் விரைவு ரெயிலில் சென்று கொண்டிருந்தார். அந்த ரெயில் சம்பவத்தன்று நள்ளிரவு 2மணிக்கு ஈரோட்டில் இருந்து திருப்பூர் வந்து கொண்டிருந்தது.

    அப்போது இளம்பெண் பயணம் செய்த பெட்டியில் அவருடைய இருக்கை அருகே இருந்த நபர் கல்லூரி மாணவியிடம் 'செக்ஸ்' சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் திருப்பூர் ரெயில் நிலையம் வந்ததும், ரெயில்வே போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

    அதன் பேரில் போலீசார் கல்லூரி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் புலக்காட்டுக்காரா பகுதியை சேர்ந்த ஜியோ ஜார்ஜ் (வயது 39) என்பது தெரியவந்தது. பெங்களூரில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

    மேலும் அவர் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து திருப்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×